….
….
….
நான் பலமுறை இந்த கோட்டையின் வாசலையொட்டி
போகும் நெடுஞ்சாலையில் பயணித்திருக்கிறேன்.
ஆனால், இதுவரை ஒருமுறை கூட இறங்கி உள்ளேசென்று
சுற்றிப்பார்த்ததில்லை;
இந்த வீடியோவைப் பார்த்த பிறகு எனக்கே வெட்கமாகத்தான்
இருக்கிறது.
ஆனால், அதற்கான முக்கிய காரணம், ஒவ்வொருமுறை
நான் பயணிக்கும்போதும் என்னுடன் இன்னும் சிலர்
இருந்தார்கள்; எனக்கு குறைந்தபட்சம் 3 மணிநேரமாவது
தேவைபடும். இந்த மாதிரி விஷயங்களில்
ஆர்வம் இல்லாதவர்களை எனக்காக காத்திருக்கச் செய்வதில்
எனக்கு விருப்பமில்லை;
இந்த வீடியோவை பார்த்தபிறகு, ஒரு தடவை இதற்காகவும்,
இதுபோன்ற இன்னும் சில இடங்களுக்காகவும் –
தனியே பயணிக்க வேண்டுமென்று தோன்றுகிறது.
முடியுமா….? பார்ப்போம்….!!!
….
….
.
——————————————————————————————————-
டிசம்பர் 2019ல், கோட்டையின் கீழே அமைந்திருக்கும் சத்தியமூர்த்தி பெருமாள் கோவிலுக்குச் சென்றிருக்கிறேன். குடவரைக்கோவில் போல் இருக்கும். கோவினிலுள்ளும் பாறைகளுக்கிடையிலான குகை போன்ற அமைப்புகள் இருக்கும். கோட்டையை வெளியிலிருந்து பார்த்தேனே தவிர, அதற்கு என்று மெனெக்கெட்டுச் செல்லவில்லை. தீரர் சத்தியமூர்த்திக்கான நினைவுச் சின்னங்கள் ஊரில் இருக்கிறது.
நீங்கள் கோல்கொண்டா கோட்டையைப் பார்த்திருக்கிறீர்களா?
புதியவன்,
கோல்கொண்டா கோட்டைக்கு போயிருக்கிறேன்.
ஆனால் 30 வருடங்களுக்கு மேல் ஆகி இருக்கும்.
அற்புதமான இடம். நல்ல உயரத்தில்
நீண்ட தூரம் வரை கண்காணிக்க வசதியாக
மிக அற்புதமாக அமைக்கப்பட்டிருக்கிறது.
தமிழ்நாட்டில் தான் பெரிய கோட்டைகள்
அதிகம் இல்லை.
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
நான் பார்த்த வரையில், ஆக்ரா கோட்டை மிக மிக அழகாக இருந்தது. கோல்கொண்ட கோட்டையும், நல்ல அழகு. ஔரங்கசீப் படையெடுப்புக்குப் பிறகு நிறைய சேதங்கள். இருந்தாலும் அந்தக் கோட்டை என்னை மிகவும் கவர்ந்தது, அதிலும் இராமதாசரைச் சிறைவைத்திருந்த இடமும். அங்கு water managementம் நன்றாக இருந்தது-கட்டிய சமயத்தில்.