….
….
….
திருப்பூரில், கமலின் ம.நீ.மய்யம் கட்சியின் பொருளாளரும்,
தொழிலதிபருமான ஆறுமுகம் சந்திரசேகரன் சம்பந்தப்பட்ட
இடங்களிலிருந்து –
சுமார் 11.50 கோடி ரூபாய் ரொக்கம் மற்றும்
சுமார் 80 கோடி ரூபாய்க்கு கருப்புப்பணம் தொடர்பான
ஆவணங்கள் –
வருமான வரித்துறை நடத்திய ரெய்டில் கைப்பற்றப்பட்டு
உள்ளதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன.
சந்திரசேகரன் ம.நீ.ம. கட்சியின் பொருளாளர் என்கிற
முறையில் மட்டுமே கமல் ஹாசனுடன் தொடர்பில்
இருப்பவர் என்று எல்லாரும் நினைத்திருக்கும் வேளையில்,
கமல்ஹாசன் – இந்த சந்திரசேகரனுடன் சேர்ந்து
வர்த்தகத்திலும் தொழில்முறை கூட்டாளியாக
செயல்பட்டுக்கொண்டிருக்கிறார் என்கிற புதிய உண்மை
வெளிவந்திருக்கிறது….( தமிழக மீடியாக்களில் இந்த தகவல்
இன்னமும் வெளிவரவில்லை…)
சினிமாவைத் தவிர தனக்கு வேறு எந்த தொழிலும் இல்லை
என்று கமல் சொல்லி வந்த நேரத்தில் textile துறையில்
சந்திரசேகரனுடன் சேர்ந்து கமல்
RAAJKAMAL FRONTIERS PRIVATE LIMITED என்கிற பெயரில்
கம்பெனி ஒன்றை புதிதாகத் துவங்கி நடத்தி வருவதாக
கீழ்க்கண்ட செய்திகள் சொல்லுகின்றன.
கட்சியோடு நில்லாமல், பிசினஸிலும்
மிகவும் நெருங்கியகூட்டாளி என்பது தெரிய வருவதால் –
ஒருவேளை பிடிபட்ட பணம் “நேர்மையாளர்” தனது
தொகுதியில் தேர்தல் செலவிற்காக வைத்திருந்த
கணக்கில் வராத பணமாக இருக்குமா என்கிற சந்தேகம்
எழுவதை தவிர்க்க முடியவில்லை;
இந்தப் பணம் தொடர்பாக, சந்திரசேகரனோ, கமல்ஹாசனோ
இதுவரை விளக்கம் ஏதும் கொடுக்கவில்லை;
கமல்ஹாசன்-சந்திரசேகரன் கம்பெனி சம்பந்தமாக
கிடைத்த தகவல்கள் கீழே –
———————————————————————————
…
…
.
———————————————————————————
எப்போதுமே கடத்தலில் அல்லது மற்ற தகிடுதத்தங்களில் பிடிபடுவது பத்து சதவிகிதம்கூட இல்லை. அதனால் வெறும் 10 கோடிகளை மனதில் கொண்டு, இவ்வளவுதானா என்று யாருக்கும் எண்ணம் வந்துவிடக்கூடாது. பாவம், தன்னிடம் பணமே இல்லை என்று சில வருடங்களுக்கு முன்புதான் சொல்லிக்கொண்டிருந்தவர், எத்தனை எத்தனை கம்பெனிகளில் டைரக்டராக, பங்குதாரராக இருக்கிறார் என்பதை எப்போது தெரிந்துகொள்ளப்போகிறோமோ. இன்னொருபுறம், இந்தியாவிற்காக ரொம்பவே கவலைப்படும் ராகுல், இங்கிலாந்தில் உள்ள கம்பெனிகளுக்கெல்லாம் டைரக்டராக இருக்கிறார். ஒருவேளை அரசியல் தலைவராவதற்கு அடிப்படைத் தகுதி, பல்வேறு நிழல் கம்பெனிகளில் டைரக்டராக ஆவதுதானோ?