கமல்ஹாசன் லேடஸ்ட் பேட்டி -இவர் யாருடைய ஓட்டுகளை பிரிக்கப் போகிறார்….?

….
….

….

கமல்ஹாசன் தொலைக்காட்சி ஒன்றுக்கு கொடுத்த
லேடஸ்ட் பேட்டியின் காணொலி வடிவம் கீழே ….

இந்தப்பேட்டியில் கமல் கூறுகிறார் –
நான் தோற்றுப்போனால், நேர்மை செத்துப்போனதாக
அர்த்தம் என்று….

மேலும் சொல்கிறார் – ஊழல் செய்யும் எவரும்
எனது விரோதி தான் என்று….

இன்று வெளியாகி இருக்கும் செய்தியொன்று கூறுகிறது,
திருப்பூரில், கமலின் மக்கள் நீதி மையம் கட்சியின்
மாநில பொருளாளருக்கு சொந்தமான இடங்களில்
வருமான வரித்துறையினர் நிகழ்த்திய ரெய்டி’ல்
எட்டு கோடி ரூபாய் கணக்கில் வராத ரொக்கம்
கைப்பற்றப்பட்டது என்று…..

கைப்பற்றப்பட்ட பணம் பொருளாளரின் சொந்தப்பணமா
அல்லது ம.நீ.மை. கட்சியின் பணமா என்பது குறித்து
இன்னமும் செய்தி வரவில்லை….

அதற்குள்ளாக கமல் கூறுகிறார் இது அரசியல் நோக்கில்
நடத்தப்பட்ட ரெய்டாக இருக்கலாமென்று….

கமலின், நடை, உடை, பாவனை, பேச்சு எல்லாமே
செயற்கையாக இருக்கிறது. எவ்வளவு தேடினாலும் –
இயல்பான ஒரு மனிதரை அவரிடம் காணவே முடியவில்லை;

இதனாலோ என்னவோ, இன்னமும் அவரிடம்
நமக்கு நம்பகத்தன்மை ஏற்பட மாட்டேனென்கிறது.

அதெல்லாம் சரி –
கமல் யாருடைய ஓட்டை பிரிக்கப்போகிறார்….?

அவரால் அதிகம் பாதிக்கப்படப்போவது
எந்தக் கட்சி…. அதிமுகவா அல்லது திமுகவா….?

……………..

………………

மேட்டுப்பாளையத்தில் கமல் பிரச்சாரக் கூட்டம்…..

இந்த வீடியோவையும், இந்தக் கூட்டம்,
அது நடக்கும் இடம் மற்றும் பின்னணிகளையும்
பார்க்கும்போது,
உங்களுக்கு என்ன தோன்றுகிறது …?

….

….

.
——————————————————————————————————–

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

27 Responses to கமல்ஹாசன் லேடஸ்ட் பேட்டி -இவர் யாருடைய ஓட்டுகளை பிரிக்கப் போகிறார்….?

 1. புதியவன் சொல்கிறார்:

  உங்களுக்கு எங்க மேல என்ன கோபம்னு தெரியலை. கமலஹாசன் பேட்டியைப் பார்க்கச் சொல்றீங்க. நிஜமாவே மண்டை காஞ்சு போகும், அவர் என்ன சொல்ல வர்றார், ஏன் போலியாப் பேசுகிறார் என்று தெரிந்துகொள்வதற்குள்.

  //நான் தோற்றுப்போனால், நேர்மை செத்துப்போனதாக அர்த்தம் // – அடடா… வசனம் நல்லா இருக்கே… ஆனால் ரொம்பப் பழசு. புதுசா ஏதேனும் யோசிக்கட்டும்.

  Just as a comparison..விஜயகாந்த்… வெகு எளிதாகப் பேசுவார், அவர் பேசுவதில் நிஜம் தெரியும், மக்களோடு உள்ள நெருக்கம் தெரியும். அதனால்தான் அவர் பிரம்மாண்ட வெற்றியை ஆரம்பத்தில் பெற்றார். அவருடைய பேச்சு மாதிரி கமலஹாசனால் பேச முடிந்தால்தான் பொதுமக்களை ஈர்க்க முடியும். இல்லைனா இவர், அடுத்த கௌதமி, சிம்ரன், வடிவேலு போன்று மாறிவிடுவார் (ஆளைப் பார்க்கத்தான் கூட்டம் சேரும், வாக்குகள் விழாது-means அரசியல் தலைமையை நோக்கிச் செலுத்தும் அளவு)

  ஆளும் அதிமுக வரவேண்டாம் என்று நினைப்பவர்களில், ‘தீயசக்தி திமுக’ என்று பல்வேறு தலைவர்களால் மனதில் பதியவைக்கப்பட்டுள்ளதால் திமுகவுக்கு வாக்களிக்க விரும்பாமல் இவருக்கு வாக்களிக்கலாம். இரு கழகங்களும் வேண்டாம் என்று நினைப்பவர்கள் இவருக்கு வாக்களிக்கலாம். திரைப்படம் போலத்தான், கமல் A Class, கொஞ்சம் B Class, சீமான் அதிக B Class and முழு C Class (திரைப்பட மொழியில்) இளம் மக்களை ஈர்ப்பார்கள்.

 2. tamilmani சொல்கிறார்:

  From where he is getting the money? To fight an assembly election you need a lot of money.
  I dont think he is investing his personal money in this. so my question is who is financing him?
  THE GREATEST PUNISHMENT IS LISTENING TO HIS INTERVIEW.

  • புதியவன் சொல்கிறார்:

   எந்த தேசத்தின் மூலமாக வெளிநாட்டுப் பணம் கமலஹாசனுக்கு வந்திருக்கிறது என்பதைப் பற்றிப் படித்தேன். கமலஹாசனின் பேச்சுக்கள் சிலவற்றையும் படித்தேன். காலம் செய்த கோலம், கமலஹாசன் நமக்கு ‘நேர்மை, நியாயம்’ போன்றவற்றைப்பற்றிப் பாடம் எடுப்பது. முதலில் ராயப்பேட்டை பெனெஃபிட் பண்ட், கௌதமி போன்றவர்களுக்கு நியாயம் செய்யட்டும் கமல். என்னிடம் சொத்தே இல்லை, நான் நாட்டைவிட்டு வெளியேறுவது ஒன்றுதான் வழி என்று சில வருடங்களுக்கு முன்பு நம்மிடம் புலம்பியவரிடம் கணக்கில் காண்பிக்க 250 கோடி ரூபாய் இருக்கு என்றால், ஒன்று அவர் அப்போது தொலைக்காட்சியில் புளுகியிருக்கணும், இல்லையென்றால் இப்போது நம்மை அறிவிலிகள் என்று நினைத்திருக்கணும்.

 3. Ravi Kumar சொல்கிறார்:

  தமிழகத்தில் பாஜகவின் திட்டம் என்னவாக இருக்கமுடியும்?

  என்னுடைய கணிப்பின்படி, ஆளுங்கட்சிக்கான வாக்குகளை அதிகரிப்பதற்கு பதிலாக, ஆளுங்கட்சிக்கு எதிரான வாக்குகளை திமுக கூட்டணிக்கு விழாமல் பல திசைகளில் அப்படியே சிதறடித்துவிடுவது தான் பாஜகவின் மிக முக்கியமான திட்டமாக எனக்குப் படுகிறது.

  ஜெயலலிதாவுக்கு துரோகம் செய்துவிட்டதாகக் கருதி, அதிமுகவுக்கு எதிரான மனநிலையில் இருக்கும் அதிமுகவினர், மறந்தும்கூட திமுகவிற்கு ஓட்டுப்போட்டுவிடக்கூடாது என்பதற்காக #அமமுக.

  “இங்க எவனுமே சரியில்லை. அரசியல் ஒரு சாக்கடை. ஆனா என்ன பண்றது, இந்த அதிமுகவை தோற்கடிக்கனும்னா, வேற வழியே இல்ல திமுகவுக்கு தான் ஓட்டுப் போடனும்” என்று நினைக்கிற வாக்காளர்களுக்காக #மக்கள்நீதிமையம்.

  தென்தமிழகத்தில் சாதிய ஒடுக்குமுறையால் பாதிக்கப்படுகிற ஒடுக்கப்பட்ட மக்கள், இந்த ஆட்சிக்கு எதிராக வாக்களிப்பதற்காகவே திமுக கூட்டணிக்கு வாக்களித்துவிடக்கூடாது என்பதற்காக தெரிந்தோ தெரியாமலோ தனித்துப் போட்டியிடுவதற்கு விடப்பட்ட #கிருஷ்ணசாமி.

  “ஊழலை ஒழித்தால் எல்லாமே சரியாகிவிடும்” என்று ஊழலின் ஊற்றுக்கண்ணையே அடையாளம் காணமுடியாமல் அப்பாவிகளாகக் குரலெழுப்பும் சிலருடைய வாக்குகளையும் கிறிஸ்தவர்களையும் திமுக கூட்டணிக்கு விழாமல் பார்த்துக்கொள்வதற்காக #சகாயம்

  தங்கள் உயிருக்கும் உரிமைக்கும் உலை வைக்கும் பாஜக வுக்கு ஆதரவளிக்கும் அதிமுகவின் மீது கோபம் கொண்ட இஸ்லாமியர்களின் வாக்குளை பிரிக்க #எஸ்டிபிஐ #உவைஸி.

  தமிழகத்தை கடந்த 10 ஆண்டுகளாக ஆண்ட அதிமுகவின் மீது மக்களுக்கு மிகப்பெரிய கோபம் இருப்பதால், அதற்கு எதிராகத்தான் பெரும்பான்மையான மக்கள் வாக்களிப்பார்கள் என்பதை பாஜக நன்றாகப் புரிந்துவைத்திருக்கிறது. அந்த எதிர்ப்பு வாக்குகளை பாஜகவினால் நிச்சயமாகத் தடுக்கவே முடியாது. அதனால், அந்த எதிர்ப்பு வாக்குகள் அனைத்தும் ஒன்றாக ஒரே இடத்திற்குப் போய்ச்சேருவதைத் தடுத்து, பல கட்சிகளுக்கும் பல கூட்டணிகளுக்கும் சிதறடித்துவிட்டாலே அதிமுக கூட்டணியை வெல்ல வைத்துவிடலாம் என்பதே பாஜகவின் திட்டமாக இருக்கமுடியும். இதனால் அதிமுக பெரும்பான்மையான இடங்களில் வெல்லவில்லை என்றாலும் கூட, திமுக கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைக்காமல் தடுத்துவிட்டாலே பாஜகவிற்கு போதுமானதாக இருக்கும். தொங்கு சட்டசபை அமைந்தாலே, எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கப்படுவார்கள். ஆட்சி யார் கையில் போகும் என்பதை நாம் எளிதாகப் புரிந்துகொள்ளமுடியும்.

  அதனால், இந்தத் தேர்தலைப் பொறுத்தவரையில் பாஜகவை வீழ்த்தவேண்டுமென்றால், திமுக கூட்டணியில் இருந்து மிக அதிகமான எம்எல்ஏக்கள் சட்டமன்றத்திற்கு சென்று ஆட்சியைப் பிடிப்பது தான் ஒரே வழி… அதனால் பாஜகவால் நேரடியாகவோ மறைமுகமாகவோ உருவாக்கப்பட்டிருக்கும் எந்தவொரு பாஜகவின் பி அணிக்கும் வாக்களித்து, உத்தரப்பிரதேசத்தைப் போன்றதொரு மாநிலமாக தமிழகம் 50 ஆண்டுகள் பின்னோக்கித் தள்ளப்பட்டுவிடாமல் காப்பதே இன்றைய முக்கியமான கடமையாகும்.

  எனக்கு திமுகவின் லோக்கல் ரவ்டியிசமும் லஞ்ச லாவண்யமும் பிடிக்காதுதான் ஆனால் அதைவிட, வாழ்வுரிமையே பெரிது என்று சகித்துக்கொண்டு திமுகவிற்கு வாக்களித்து விடுவதே சரி என படுகிறது.

  வெற்றி பெற்ற பின்னர் திமுக பிஜேபி பக்கம் சாயாமலிருக்கும் என உத்திரவாதம் இல்லைதான். ஆனால் அப்படி நடந்தால் திராவிட சிந்தனை கொண்ட இந்த மண்ணில் திமுகவிற்கு எதிராக பல சக்திகளும் களமிறங்கும். அந்த சக்திகளுக்கு ஆதரவாக ஒடுக்கப்பட்ட மற்றும் ஜனநாயக சக்திகளை திரட்டி ஸ்டாலினின் வரலாறே காணாமல் போகும்படி செய்ய தயங்க மாட்டோம் என்று சூளுரைத்து இன்றைக்கு என்ன செய்ய வேண்டுமோ அதை செய்ய வேண்டும் என்பதே எனது கருத்து.

  இந்த சாதாரண லாஜிக்கை புரிந்து கொள்ளாமல் வீரவசனம் பேசுபவர்கள், பிஜேபியுடன் எத்தனை உரசல்கள் இருந்தாலும் அதற்கு பங்கம் விளைவிக்க கூடாது என தனியாக நிற்காத “அர்ஜுன் சம்பத்”, “அர்ஜுன மூர்த்தி”, “விராட் சு சாமி” வகையறாக்களை விட ஆபத்தானவர்கள்.

  • புதியவன் சொல்கிறார்:

   //கடந்த 10 ஆண்டுகளாக ஆண்ட அதிமுகவின் மீது மக்களுக்கு மிகப்பெரிய கோபம் இருப்பதால்// – வரலாற்றிலேயே இரண்டாவது முறை, தனித்துப் போட்டியிட்டு கூட்டணியோடு போட்டியிட்டவர்களைத் தோற்கடித்தது அதிமுக.

   //வாழ்வுரிமையே பெரிது என்று சகித்துக்கொண்டு // – யாருடைய வாழ்வுரிமை?

   //தேர்தலைப் பொறுத்தவரையில் பாஜகவை வீழ்த்தவேண்டுமென்றால்// – எத்ற்கு தமிழக சட்டமன்றத் தேர்தலில் பாஜகவை வீழ்த்தவேண்டும்?

   //தங்கள் உயிருக்கும் உரிமைக்கும் உலை வைக்கும்// – இதற்கு என்ன அர்த்தம்?

   என்னவோ அர்த்தமில்லாமல் எழுதிவிட்டு திமுக வரணும் என்ற உங்கள் ஆசையைச் சொல்கிறீர்கள். இதே தமிழக பொதுமக்கள் ஒரு காலத்திலும் திரும்ப திமுக அரசை வரவிட்டதில்லை என்பதே, திமுக எந்த லட்சணத்தில் ஆட்சி புரியும் என்பது உங்களுக்குத் தெரியவில்லை என்பது தெரிகிறது.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   Ravi Kumar,

   //தமிழகத்தை கடந்த 10 ஆண்டுகளாக ஆண்ட
   அதிமுகவின் மீது மக்களுக்கு மிகப்பெரிய
   கோபம் இருப்பதால் ……//

   இது சரியான மதிப்பல்ல.
   தமிழ்நாட்டில் ஆளும் கட்சிக்கோ,
   அரசாங்கத்திற்கோ எதிராக எந்தவித
   எதிர்ப்பு அலையும் நிலவுவதாக
   தெரியவில்லை;

   .
   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

   • Ravi Kumar சொல்கிறார்:

    காமை அய்யா.

    விவாதத்திற்கென்று சொல்லவில்லை. தினமும் குறைந்தது பத்து நபர்களுடனாவது பேசுகிறேன். கடும் கோபம் மோடி அரசின் மேல் உள்ளது. அதன் பிரதிபலிப்பு அதிமுகவின் மேலும் இருக்கும் என்பது யதார்த்தம்.

    பிஜேபி ஆதரவு சானல்களான டைம்ஸ், ஜீ போன்றவை கூட திமுகவிற்கே வாய்ப்பு என உறுதிப்படுத்தியுள்ளன. பிஜேபி ஆதரவாளரானான புதியவனுக்கு நெஞ்செரிச்சல் வந்தாலும் தமிழ் நாட்டில் அவர் கட்சி செருப்படி வாங்கப்போவது கண்கூடு. அதை பூசிமொழுகாமல் ஏன் தமிழர்கள் வெறுக்கிறார்கள் என சிந்திக்க வேண்டும்.

    • புதியவன் சொல்கிறார்:

     ஹா ஹா… பாஜக என் கட்சியா? அது சரி… திமுக பாஜகவுடன் கூட்டணி சேர்ந்து ஆட்சியில் பங்கு என்று ஓசிக்கு மாறனுக்கு 2 வருடங்கள் வைத்தியச் செலவை மக்கள் தலையில் கட்டியபோது ரவிக்குமார் பிறந்ததே இல்லை போலிருக்கு.

     மோடி அரசு மீது மக்களுக்கு கடும் கோபம் வந்ததற்கு 4 காரணங்கள் சொன்னால் தேவலை. லட்சம் கோடி திமுக கொள்ளையடிக்க வாய்ப்பு கொடுக்கவில்லை, சேது சமுத்திரத்திற்கு மணல் அள்ளும் காண்டிராக்ட் டிஆர் பாலு வகையறாவுக்குக் கொடுக்கவில்லை என்பதெல்லாம் காரணமாக்க வேண்டாம். மீத்தேனுக்கு அனுமதி கொடுத்தது, ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி கொடுத்தது திமுக என்பதால் மக்கள் அவர்கள்மீது ரொம்ப பாசமாக இருக்கிறார்கள் என்றும் சொல்லவேண்டாம். பாஜகவின் மீது நான் கோபமாக இருப்பதற்கு ஒரே ஒரு காரணம்தான். 8 வருடங்களில் மாறன், ராசா, கனிமொழி வகையறாக்களுக்கு திகாரில் பெர்மனெண்டாக அறை ஒதுக்கவில்லை, தொலைக்காட்சி காரணமாக 200 கோடி லஞ்சம் வாங்கியவருக்கும் சேர்த்து தனியறை ஒதுக்கவில்லை என்ற ஒரே ஒரு காரணம்தான்.

     தமிழகத்தில் பாஜகவுக்கு உள்ள எதிர்ப்பு கிறிஸ்துவ மற்றும் இஸ்லாமியர்களிடம் மட்டும்தான். அதன் காரணம் உலகறிந்த உண்மை. அவ்ளோதான்.

     • Ravi Kumar சொல்கிறார்:

      திமுக திருடன் என்றால் பிஜேபி பயங்கரவாதி அவ்வளவுதான்.

      ஆக மொத்தம் நீங்கள் தமிழ்நாட்டிலேயே இல்லை அல்லது துக்ளக், தினமலர் மட்டுமே படிக்கிற அறிவாளி என்பது விளங்குகிறது.

      தேர்தல் முடிவுகள் அன்று பேசுவோம் அய்யா

     • புதியவன் சொல்கிறார்:

      எனக்கு தேர்தல் முடிவு பற்றி சந்தேகம் இல்லை. திமுகதான் 150+ வெல்லும் என்பது என் கணிப்பு. ஆனால் ‘பயங்கரவாதி’ யார் என்று சின்னக் குழந்தைகளிடம்கூட நீங்க கேட்டுப்பார்த்துக்கொள்ளுங்கள். நீங்க உங்களை தேர்தலுக்கு அப்புறம் கேட்டுக்கொள்ளவேண்டியது,
      1. நோட்டா நோட்டா என்று சொன்னோமே.. அப்புறம் பாஜகவுக்கு இவ்வளவு வாக்குகள் எங்கிருந்து விழுந்திருக்கிறது?
      2. திமுக, அதிமுகவை விரும்பாத இத்தனை பேர், தமிழகத்தில் இருக்காங்களா? அதிலும் ஆளும் கட்சிக்கு எதிரான மக்கள் முழுமையாக ஏன் திமுகவுக்கு வாக்களிக்கவில்லை?
      3. எப்போதுமே ஒன்று நினைவில் வையுங்கள். மதத்தை வைத்து தங்கள் பள்ளிவாசல்கள், ஆலயங்களில் வாக்களிக்கச் சொல்பவர்கள், தங்களை மதச்சார்பற்றவர்கள் என்று கூறிக்கொள்வது எவ்வளவு போலித்தனமானது, நாட்டிற்கு எவ்வளவு விரோதமானது என்பதை யோசியுங்கள். மதத்தை அரசியலில் கொண்டுவந்தவர்கள் யார் என்பதும் உங்களுக்குப் புரியும், ஆனால் ஒத்துக்கொள்ளத் தயக்கம். அவ்வளவுதான்.
      4. பங்களாதேஷிகளுக்குப் புகலிடம் கொடுப்பவர்கள், ரோஹிங்க்யா முஸ்லீம்களுக்கு ஆதரவு கொடுப்பவர்கள், இன்னொரு நாட்டின் குடிமகனுக்கு அரசியலமைப்புச் சட்டத்திற்கு விரோதமாக புகலிடம் கொடுப்பவர்கள் தேசவிரோதிகள் என்ற அடிப்படை எண்ணம்கூட நமக்கு இல்லை என்றால், நாம் இந்தியன் என்று கூறும் தகுதியே நமக்கு இல்லை என்பது என் எண்ணம்

  • ஸ்ரீதர் சொல்கிறார்:

   200 ருபாய் செய்யும் வேலை. Today’s news how Chennai Public School is threatening parents.

   என்னுடைய வாழ்வுரிமை போனாலும் பரவாயில்லை, திமுக கொள்ளை அடிக்க விடமாட்டேன்.(இவர்கள் வந்தால் நாமெல்லாம் tissue paper என்பதை நினைவில் கொள்ளவும்)

   • Ravi Kumar சொல்கிறார்:

    ஹாஹா. வாழ்வுரிமை போனதுக்கப்பறம் எலும்புகூடுதான் இருக்கும். கொள்ளையை விடுங்கள். படுகொலைகளை கூட தடுக்க முடியாது

    • ஸ்ரீதர் சொல்கிறார்:

     ஹா..ஹா.. எலும்புகூட கூட விலை பேசும் கூட்டம் , படுகொலைக்கு கண்டனமாக “காலை உணவுக்கும், மதிய உணவுக்கும்” இடையில் உண்ணாவிரதம், துணைவியுடன் இருக்கும் கூட்டம், எந்த படுகொலையை பற்றி கவலைபடும்.

 4. Ravi Kumar சொல்கிறார்:

  புதியவன் சொல்லுகிறார்

  “திமுகவிற்கு வாக்களிப்பவர்கள் தேசவிரோதிகளாம். பாஜகவிற்கு ஆதரவளிப்போர் தேசாபிமானிகளாம் ஆனால் திமுக பெரும்பான்மை இடங்களில் வெல்லுமாம்.”

  ஆகமொத்தம் பெரும்பான்மை தமிழர்கள் தேசவிரோதிகள் என்கிறாரே!! அய்யா, இதை போய் காட்டுமிராண்டி ஆட்சி நடக்கும் இந்தி மாநிலங்களில் சொல்லுங்கள். எடுபடும்.

  தமிழர்கள் நீங்கள் யார் என்பதை தெளிவாக அறிந்தவர்கள்.
  சுதந்திர போராட்டத்திற்கு துரோகம் செய்தவர்கள், காந்தியை போட்டவர்கள், சற்றுமுன் வரை இந்திய கொடியை ஏற்றாதவர்கள், சீனாவிற்கு நம் நாட்டு நிலத்தை விட்டுக்கொடுத்துவிட்டு இன்றைக்கு வரையிலும் எதிரி நாட்டு பேரை சொல்ல கூட வக்கில்லாதவர்கள்,- நமக்கு தேசபக்தி பற்றி பாடம் எடுக்கிறார்கள்.

  இந்த திமிர்த்தனத்துக்குத்தான் செருப்படி கொடுக்க போகிறான் தமிழன். அதற்காக திருட்டு திமுகவிற்கு ஓட்டு போட்டாலும் பரவாயில்லை

  • விவேகன் சொல்கிறார்:

   ravi kumar ஐயா,
   நீங்கள் கூறுவது உங்களுக்கே வியப்பாக இலையா.
   பிரசாந்த் கிஷோர் விளம்பரத்தை இங்கு பதிவிடுவதற்கு முன், சற்று அதை படித்து பார்த்துவிட்டாவது பதிவிடலாமே
   திடீரென்று திமுகவிற்கு தேச பக்தி உள்ளதென்று அடித்து விடுகிறீர்களே .
   சிரிப்புதான் வருகிறது. நமக்கும் இந்த இக்கட்டான நேரத்தில் நகைச்சுவை தேவை படுகிறது .
   தொடரட்டும் உங்கள் பணி .
   தயவு செய்து, முரசொலியை தவிர மற்ற பத்திரிகைகளையும் படிக்கவும்.
   ஏனெனில் இந்தியா சீனாவிற்கு பயப்படுகிறது என்று காமெடி பண்ண ஆரம்பித்துவிட்டீர்களே.

   • Ravi Kumar சொல்கிறார்:

    விவேகன் (!!!) அய்யா, மோடி வகையறா என்று சொன்னதை இந்தியா என்று மாற்றி கொண்டீர்கள். பரவாயில்லை. “சீனா” நம் நாட்டை ஆக்கிரமித்தது என்று திருவாளர் மோடி சொன்னதாக ஒரு ஆதாரம் கொடுங்கள். பிஜேபிக்கு பிரச்சாரத்துக்கு வருகிறேன்.

    • விவேகன் சொல்கிறார்:

     Ravi kumar (!!!) அய்யா
     சீனாவிற்கு எதிராக இதுவரையிலும் பல ஆண்டுகளாக நமது திரு நாடு வெற்று சவடால்களை மட்டுமே விட்டு கொண்டிருந்தது என்பது தங்களுக்கு தெரியாதா ?
     முதல் முறையாக சீனாவிற்கு எதிராக சவடால்களை தவிர்த்து விட்டு, நமது வீரத்தை அதற்க்கு பதிலாக காண்பித்ததற்கு சீனாவே மிரண்டு போயிருப்பது உங்களது கண்களுக்கு தெரியவில்லை போலும்.
     டோக்லாம் எதிர்ப்பு, மற்றும் எல்லையில் நமது ராணுவத்தின் மூலம் தக்க பதிலடியை தொடந்து கொடுத்து கொண்டே, நாங்கள் போருக்கு பயப்படமாட்டோம் என்பதை அழுத்தம் திருத்தமாக பதிவு செய்து கொண்டிருக்கிறோம்.சீனா கிட்ட தட்ட தான் ஆக்கிரமித்த பகுதிகளிலிருந்து பின் வாங்கிவிட்டதை நமது தேச பக்தி மிகுந்த ஊடகங்கள் பதிவு செய்ய விரும்புவதில்லை.
     அது பிஜேபிக்கு சாதகமாக அமையும் என்பதினால் தாங்கள் கூறுவதை போல் பல செய்திகளை நமது ஊடகங்கள் முறையாக நமது வெற்றி செய்திகளை வெளியிடுவதில்லை.
     தயவு செய்து இதற்க்கு மேலும் நமது முன்னாள் பிரதமரான திரு.மன்மோகன் சிங்க் அவர்களை போன்று “சீனாவால் நமது ஒரு அங்குல நிலத்தை கூட கைப்பற்ற முடியாது” என்று வெற்று சவடால்களை விட்டு கொண்டே மறுபுறத்தில் சீனா அருணாச்சல பிரதேசத்தை ஆக்கிரமிக்க முயன்றதை வேடிக்கை பார்த்து கொண்டு இருந்த அரசாங்கம் போல் தற்பொழுது இல்லை.
     தயவு செய்து இதெற்கெல்லாம் ஆதாரம் கேட்டு கொண்டு பொழுதை கழிக்காதீர்கள்.

 5. வணக்கம் தமிழா சொல்கிறார்:

  எடப்பாடி அரசு பொலிட்டிக்கல் இளைஞர்களின் எண்ணம் என்ன? என்னுடைய சர்வே………………………
  அரசியல், சினிமா, பிசினஸ் என எனக்கு சில விருப்பங்கள் இருக்கும், ஆனால் அதையும் தாண்டி கிரவுண்ட் எப்படி இருக்கு, டிரெண்ட் என்ன என ஒரு ஸ்ட்ரேட்டஜிஸ்ட் ஆக அறிந்து கொள்வதில் எனக்கு விருப்பம் எப்போதும் உண்டு. அதற்காக இளைஞர்களுடன் எப்போதும் நான் உரையாடல்கள் நிகழ்த்துவதுண்டு. ………
  அதன் படி சில இளைஞர்களிடம் பேசினேன். அவர்களிடம் பேசும் போது என் சொந்த அரசியல் நிலைப்பாட்டை மறைத்தே பேசுவேன், ஒரு வேளை அது தெரிந்தவர்கள் என்றாலும் பிரச்சார தொனி இன்றி உண்மை நிலை தெரிந்து கொள்ள கேட்கிறேன் என்று பேசுவேன்.

  அந்த இளைஞர்கள் வயது 30ற்கும் குறைவு, அ-பொலிட்டிக்கள் இளைஞர்கள், அதாவது அரசியல் ஆர்வமோ குறிப்பிட்ட சித்தாந்தத்தின் மீது ஈடுபாடு எதுவும் இல்லாதவர்கள். அதன் மூலம் கிடைத்த தகவல்கள் ஆச்சரியப்படுத்துகின்றன.
  1. எடப்பாடி ஆட்சி மீது அதிருப்தி இல்லை
  2.கொரானா காலத்தில் எடப்பாடி அரசு சிறப்பாக செயல்பட்டதாக கருதுகிறார்கள்.
  3. பொங்கல் பணம் மற்றும் பல மாநில அரசு உதவிகள் அடிமட்டம் வரை சென்று சேர்ந்துள்ளதாக கூறுகிறார்கள்.
  4.ஸ்டாலின் மீது பெரிதாக எந்த வியப்போ, மரியாதையோ, வெறுப்போ என எதுவுமே இல்லை
  5.பாஜக மீது கொலைகாண்டாக உள்ளார்கள், குறிப்பாக வேலைவாய்ப்பு வெளிமாநிலத்தவர்களால் பறிபோவதாகவும் அதற்கு காரணம் பாஜக என கருதுகிறார்கள்.
  6.10.5% இடஒதுக்கீடு கிராமப்புறங்களில் பாமக ஆதரவை பெரும் அளவு அதிகரித்துள்ளது, ஆனால் நகர்புறங்களில் உள்ள வன்னிய இளைஞர்களுக்கு அது குறித்த எந்த ஆர்வமும் இல்லை.
  7.நீட்டை திமுக நீக்கும் என நம்பவில்லை
  8.ஒரு பிசினஸ் செய்யும் இளைஞர் மட்டும்
  திமுக ஆட்சிக்கு வந்தால் பிசினஸ் பண்ண முடியாதாமே, அடிச்சி பிடிங்கிடுவாங்களாமே என்றார்.
  9. நகர்புற இளைஞர்கள் எல்லாவற்றையும் சொல்லிவிட்டு திமுக தான் ஜெயிக்கும் என்றார்கள், காரணம் கேட்டால் அப்படி தான் எல்லோரும் சொல்றாங்க என்றார்கள், நீங்க என்ன நினைக்கிறீங்க என்ற போது பாஜக மீதுள்ள வெறுப்பால் திமுக ஜெயிக்கும் என்றார்கள்.
  10. நீதிடா, நேர்மைடா இளைஞர்கள் நகர்ப்புறத்தில் கமலை கவனிக்கிறார்கள்.
  11. கிராமப்புற இளைஞர்கள் திமுக ஜெயிக்க வாய்ப்பே இல்லை என்றார்கள், 10 வருடம் ஆட்சியில் இருந்திருக்கே, வெறுப்பு இல்லையா என்றதற்கு ஏரி,குளம் தூர்வாரி சிறப்பாக தண்ணி இருக்கு, விவசாயம் பரவாயில்லை, கொரானா சமயம் நன்றாக செய்தார்கள், பொங்கல் காசு, கடன் தள்ளுபடி எல்லாம் ப்ளஸ் என்கிறார்கள், குறிப்பாக அரியர் பாய்ஸ் ஓட்டு கண்டிப்பாக எடப்பாடிக்கு என்றார்கள்.
  12.சனாதானம், இந்து மதம், காவி பூந்துடும் என எதுவுமே கிராமப்புற இளைஞர்களை பாதிக்கவில்லை.
  13. பொலிட்டிக்கல் கிராமப்புற இளைஞர்கள் மத்தியில் ஸ்டாலின் ஒரு காமெடி. எடப்பாடி ஒரு பெரிய ஆளுமையாக இல்லை.
  பின்குறிப்பு
  இது தேர்தல் கருத்து கணிப்பு அல்ல, நான் தேர்ந்தெடுத்து பேசியது மிகச்சிறிய சாம்பிள், பொலிட்டிக்கல் இளைஞர்கள், திருச்சிக்கு வடக்கு பகுதியில் உள்ள மாவட்டத்தை சேர்ந்தவர்கள்.

  • வணக்கம் தமிழா சொல்கிறார்:

   “அ- பொலிட்டிக்கல் இளைஞர்கள்”

   • விவேகன் சொல்கிறார்:

    வணக்கம் தமிழா அய்யா ,
    உங்களது கருத்தை நானும் வழி மொழிகிறேன் .நானும் எனது கிராமத்தில் உரையாடிய வகையில் ஆளும் கட்சிக்கு எதிரான மனநிலை சிறிதளவும் மக்களிடம் இல்லை. கிராமங்களில் இங்குள்ள தேசபக்தி ஊடகங்கள் அலறுவது போல், பிஜேபிக்கு எதிரான மனநிலையையும் இது வரை நான் கண்டதில்லை.அவர்களும் மத மாற்ற கும்பல்களின் அரசியலை விமரிசைப்பதை காணுகிறேன்.அவர்களுக்கு நீட்,DEMONETIZATION குறித்த கருத்து இல்லை.இவையெல்லாம் ஆளும் கட்சிக்கு சாதகமான அம்சங்களாகவே நான் பார்க்கிறேன்.
    ஆனால் பிஜேபியின் மீது தொடர்ந்து மதவெறி குற்றச்சாட்டுக்களை அடுக்குபவர்கள் எனது கருத்தை ஏற்று கொள்ள மாட்டார்கள் என்பதை நான் அறிவேன்.ஏனெனில் அவர்கள் நமது பாரம்பரியமிக்க திராவிட கட்சிகளின் மூலம் மதசார்பினமை என்றால் , இந்து மதத்தை கேவல படுத்துவது, கிருத்துவ,முஸ்லீம் சமுதாயத்தினரின் பண்டிகைகளுக்கு வாழ்த்து தெரிவிப்பது என்ற சித்தாந்தத்தை கடை பிடிப்பவர்கள்.
    ஆனால் இதே திராவிட கட்சிகள் நமது வங்காள வீர பெண்சிங்கம் மம்தா பானர்ஜி போல் நானும் ஒரு இந்து பெண்தான் ,சிறுவயதில் கோவில்களுக்கு அடிக்கடி சென்று வழிபாடு செய்வேன் ,என்று இந்துக்களின் ஓட்டுகளுக்காக அலறும் நாள் கூடிய விரைவில் நாம் காணத்தான் போகிறோம்.

   • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    வணக்கம் தமிழா,

    ஓரளவு நன்றாகவே அலசி இருக்கிறீர்கள்.
    கொஞ்சம் உங்கள் விருப்பமாக இருந்தாலும் கூட,
    பொதுவாகவே நல்ல எடைபோடல் தான்.

    .
    -வாழ்த்துகளுடன்,
    காவிரிமைந்தன்

    • வணக்கம் தமிழா சொல்கிறார்:

     நன்றி. “எடப்பாடி ஒரு பெரிய ஆளுமையாக இல்லை”……. அதாவது எடப்பாடியை மக்கள் ஜெயலலிதா, கருணாநிதி போல பெரும் ஆளுமையாக பார்க்கவில்லை, ஆனால் அவரை ஒரு பக்கத்து வீட்டு ஒரு சாப்டான அங்கிள் போல நெருக்கமாக உணரவைத்துள்ளது.
     ஸ்டாலினோ ஒரு கரீஷ்மாட்டிக் ஆளுமையாகவும் மாற முடியாமல், எளிமையாக மக்களுக்கு நெருக்கமாகவும் மாற முடியாமல் அவருடைய பெர்சனாலிட்டியை காமெடி ஆக்கி வைத்துள்ளது பிகே கும்பல். There is no demand in market for between hot coffee and cold coffee. ஹாட் காபிக்கு டிமாண்ட் உள்ளது, கோல்ட் காபிக்கும் டிமாண்ட் உள்ளது, ஆனால் இரண்டுக்கும் நடுவில் இருக்கும் ஆறிய காபிக்கு டிமாண்ட் இல்லை. ஸ்டாலினை ஆறிய காபியாக இப்படி ஒரு அரைகுறை நிலைக்கு தள்ள வைத்து விட்டது பிகே கும்பலின் பிஆர் டீம்(Source NDTV: inside Prashant Kishor’s MK Stalin War-Room | Reality Check). ஸ்டாலின் இப்போது தன் இயல்பு நிலை மறந்த செயற்கை மனிதனை போல மாற்றி விட்டார்கள். மக்கள் தீர்ப்பையே மகேசன் தீர்ப்பு, பாக்கலாம் !!!

  • புதியவன் சொல்கிறார்:

   //குறிப்பாக வேலைவாய்ப்பு வெளிமாநிலத்தவர்களால் பறிபோவதாகவும் அதற்கு காரணம் பாஜக// – இது உண்மை என்றே நான் நினைக்கிறேன். மத்திய அரசு வேலைகள், அந்த அந்த மாநிலத்தவர்க்கு 85 சதவிகிதம் என்பது சட்டமாக்கப்படவேண்டும். மற்ற மொழி பேசுபவர்கள், இன்னொரு மாநிலத்தின் கோட்டாவில் ஏமாற்றுவதன்மூலம் நுழையக்கூடாது. மலையாளிகள் பலர், தமிழக கோட்டாவில் இடம் பிடிக்கின்றனர். அப்படி பிற்பாடு கண்டுபிடிக்கப்பட்டால் வேலையிலிருந்து டிஸ்மிஸ் என்றும் சட்டம் கொண்டுவரப்படவேண்டும். ஒரே நாடு ஒரே ரேஷன் என்பதெல்லாம் தமிழகத்துக்கு ஆபத்தான திட்டம். இதையெல்லாம் புரிந்துகொள்ளும் அளவு நம் தமிழக எம்பிக்களுக்கு படிப்பறிவு, பட்டறிவு இல்லை என்றே பலர் சொல்கின்றனர். துரதிருஷ்டவசமாக, தமிழக அரசியல்வாதிகள் இதுபற்றிக் கவலைப்படுவதில்லை. எதிர்க்கட்சி பெண் எம்பிக்கு தலை சீவுவதில்தான் திமுக எம்பிக்கள் மும்முரமாக இருக்கின்றனர், இல்லை தங்களது மின்சார உற்பத்திக்கு ஓசி டீசல், இன்னொரு சானல் துவக்குவது எப்படி போன்றவற்றில் கவனம் செலுத்துகின்றனர்.

   பாஜகவுடன் அதிமுக கூட்டுச் சேர்ந்தது சொந்த பலவீனங்களின் காரணமாக இருக்கலாம் (சசி, தினகரன்). இப்போ ஜெ. இருந்திருந்தால், கண்ணை மூடிக்கொண்டு அதிமுக வெற்றிபெற்றிருக்கும், பாஜக வை பக்கத்திலேயே சேர்த்திருக்காது. பாஜகவின் மத்தியக் கொள்கைகள் பலவும் சாமானியனுக்கு உதவிகரமாக இல்லை.

   • Mani balan சொல்கிறார்:

    புதியவன் அக்கவுண்ட்டை யாரோ ஹேக் செய்து பிஜேபியை பற்றிய பல உண்மைகளை உடைத்திருக்கிறார்கள். பாவம் மனுஷன், பாத்தால் காண்டாகி விடுவார்!!

   • புதியவன் சொல்கிறார்:

    என் இந்தக் கருத்து மாறி எங்கேனும் பார்த்திருக்கீங்களா? ஒரே ரேஷன் ஒரே நாடு – என்ன பிரச்சனைல கொண்டுபோய்விடும்னு யோசிங்க. மெது மெதுவா, ரேஷன் தருவதே மத்திய அரசு என்ற லெவலுக்குப் போகும். அதிகாரக் குவிப்பு, நாட்டிற்கு நல்லதல்ல. அடுத்த இந்திரா உருவாக வழிவகுக்கும்.

   • புதியவன் சொல்கிறார்:

    ஆனா அதுக்காக, ஊழல் சக்கரவர்த்தி, தேச நலனுக்கு எதிரான திமுகவை ஆதரிக்க வாய்ப்பே இல்லை (தேச விரோத காரியங்களுக்காக திமுக அரசு மட்டும்தான் இந்திய தேசத்தில் கலைக்கப்பட்டுள்ளதை நினைவில் வையுங்கள்)

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.