….
….
….
உலகில், நல்லவர்களை விட, கெட்டவர்கள் தானே
அதிகம் புகழ்பெறுகிறார்கள்; நினைவில் நிற்கிறார்கள்….?
எனவே ஆட்டோ சங்கரை அந்தக்காலத்து மனிதர்கள்
இன்னும் மறந்திருக்க வாய்ப்பில்லை;
1988-89 ஆண்டுகளில் வெளிவந்த சில மிகப்பெரிய திடுக்கிடும்
கிரிமினல் சம்பவங்கள் தமிழகத்தையே புரட்டிப் போட்டன.
அவற்றில் சம்பந்தப்பட்ட முக்கிய குற்றவாளி தான்
கௌரிசங்கர் என்கிற ஆட்டோ சங்கர்.
6 நபர்கள் கொடூரமாக கொலைசெய்யப்பட்டு, சங்கரின்
குடிசையிலேயே புதைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
தவிர, ஒருவர் எரித்துக்கொலை செய்யப்பட்டிருந்தார்….
ஆள் கடத்தல், பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்துதல்,
சாட்சியங்களை மறைத்தல், கலவரம் செய்தல், சதி செய்தல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் குற்றம் சாட்டப்பட்டிருந்த நிலையில்,
மிகப்பெரிய தேடுதல், புலன் விசாரணைகளுக்குப்பிறகு, இறுதியாக
சங்கர் மற்றும் அவனது கூட்டளிகள் 9 பேர் மீது வழக்கு
தொடரப்பட்டது. ஆட்டோ சங்கருக்கு 1994-ல் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.
விவரமாக இந்த வழக்குக்கு உள்ளேசெல்ல நான் விரும்பவில்லை;
எந்தவித மன உளைச்சலும் இல்லாமல், சர்வசகஜமாக,
பல கொலைகளைச் செய்து இறுதியில் தூக்கு தண்டனை
விதிக்கப்பெற்ற அந்த ஆட்டோ சங்கர் என்னும் கொலைக்
குற்றவாளி –
தூக்கில் தொங்குவதற்கு முன் கடைசி சில நாட்களில்
எப்படி, எத்தகைய மனோநிலையில் இருந்தான் என்று அவனது
தூக்கு தண்டனையை நிறைவேற்றிய சிறைத்துறை அதிகாரி ஒரு பேட்டியில் சொல்லுகிறார் – அந்த பேட்டி கீழே –
…..
…..
.
—————————————————————————–
நீங்களே இந்த வழக்குக்குள் செல்ல விரும்பவில்லை என்று சொல்லிட்டதனால நான் எதுவும் எழுதவில்லை. அவன் எழுதிய தொடர் (what he conveyed to press) நக்கீரனில் பிறகு புத்தகமாக வந்தது. குற்றச் செயல்கள் பற்றி ரொம்பவும் நாம் தெரிந்துகொள்ள ஆரம்பித்தால், நாம் வாழும் சமூகத்தின் அவலம் புரியும். அரசியல்வாதி, நடிக/நடிகையர், குற்றவாளிகள், போலீஸ் + அவர்களது வீடு – ஒவ்வொருவருக்கும் எப்படிப்பட்ட தொடர்புகள் இருக்கின்றன என்பதையெல்லாம் அறிவதனால் நமக்கு சமூகத்தின்மீது அவநம்பிக்கை எழும். எந்த அதிகாரவர்க்கத்தையும் நாம் சந்தேகக் கண் கொண்டுதான் பார்க்க முடியும்