….
….
….
பொதுக்கூட்ட மேடையில் உணர்ச்சி வெள்ளமாக
சண்டப்பிரசண்டம் செய்யும் சீமானை எல்லாரும்
பார்த்திருப்போம்…
ஆனால் – முக்கால் மணிநேரம் ஒரே இடத்தில்
அமைதியாக அமர்ந்து – நிதானமாக,
மிகத்தெளிவாக தன் கருத்துகளை எடுத்துச் சொல்லும்
சீமான் அவர்களைப் பார்க்கையில் எனக்கே கூட
மிகவும் வித்தியாசமாகத் தான் இருந்தது.
இவர் எப்போதும் இப்படியே பேசினால் என்ன என்று கூட
தோன்றியது…. ஆனால், அவர் பின்னால் சேர்ந்திருக்கும்
இளைஞர் கூட்டம் அதை விரும்பாதே…!!!
சீமான் அவர்களுக்கு
ஓட்டு போடுகிறீர்களோ -இல்லையோ,
அவரது சுவாரஸ்யமான இந்த விளக்கங்களை
அவசியம் கேட்க வேண்டும்….
மார்ச் 9-ந்தேதி கேள்விக்கென்ன பதில்
நிகழ்ச்சியில் தந்தி டிவி ஹரிஹரன் – சீமான் ….
……
…….
.
——————————————————————————————————–
ஹரிஹரன் பாவம்… ஸ்டாலினுக்கும் திமுகவுக்கும் தந்தி தொலைக்காட்சி சார்பாக ரொம்பவே பேசிப்பார்க்கிறார். இதுக்கு பேசாமல் ஆர்.எஸ்.பாரதி பேட்டி எடுத்திருக்கலாம். இரண்டும் ஒன்றாகத்தான் இருந்திருக்கும். பரிதாப நிலையில் ஹரிஹரன். இல்லாவிட்டால் முருகன் வாட்ச்மன் என்று பேசத் துணிவாரா ஹரிஹரன். சீச்சீ நாயும் இந்தப் பிழைப்பு பிழைக்கும் என்றுதான் தோன்றுகிறது.
சீமான் ஓரளவு நேர்மையாகத்தான் பொறுமையாகப் பேசுகிறார். ஹரிஹரனுக்குக் கொடுக்கப்பட்ட வேலை, நாம் தமிழர் கட்சியை பாஜகவுடன் சேர்த்து பரப்புரை செய்யவேண்டும் என்பது. அதைத்தான் ஹரிஹரன் செய்ய முயல்கிறார்.
ஆனால் பாஜக சீமானை அப்ரோச் செய்தது, வட மாநிலங்களில் அவர்களுக்காக பரப்புரை செய்யச் சொன்னது என்று சீமான் சொன்ன போர்ஷனை காணொளியில் முன்பே பார்த்தேன். அது முழுப் பொய் என்ற சீமானின் உடல் மொழியில் தெரிவதாக எனக்குத் தோன்றுகிறது.
சீமானின் பல பரப்புரைகளைக் கேட்டிருக்கிறேன். அவை ஆவேசமாக இருக்கும். உணர்வுபூர்வமாக இருக்கும். ஆனால் அர்த்தமில்லாதது என்பது என் எண்ணம்.
Seeman body language shows that he is great liar. He never shame on his lies and tried to justify it. He is the latest version of Mr. Vaiko. At least Vaiko was telling some truth. But this Seeman is same like BJB and more dangerous..He is a good Speaker …All are my opinion 🙂
அட, இங்கே பாருங்கடா..
அண்ணன் சீமான் காணொளி என்றவுடன் உடல்மொழி ஆராச்சியாளர்கள் முட்டு சந்தில் இருந்து ஒவ்வொருவராக வெளியே வந்து சீமான் பொய்யர் என்று தங்கள் ஆராட்சிமுடிவை
வெளிப்படுத்துகிறார்கள். இவர்கள் எல்லாம் ஜப்பானையும், அமெரிக்காவையும் போட்டோஷாப் செய்து இதுதான் குஜராத்
என்று விளம்பரம் செய்யும் பொது எந்த முட்டு சந்தில்
மாட்டிக்கொண்டார்கள் என்றுதான் புரியவில்லை . இவர்கள்
சீமான் மேடைதோறும் கேட்கும் ஆயிரக்கணக்கான அரசியல்
கேள்விக்கும் பதிலே சொல்லமாட்டார்கள். இதுவரை எனக்கு தெரிந்து எந்த நபரும் அவரின் ஒரேயொரு கேள்விக்கு கூட பதிலே சொல்லவில்லை.
இப்பொழுது KM சாருக்கு தமிழ் நாட்டின் முன்னேற்றத்தை மனதில்
கொண்டு ஒரேயொரு வேண்டுகோள். தமிழ் நாட்டில் உள்ள
அனைத்து தொகுதியில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களின் இரண்டு நிமிட பேச்சுகளையாவது தொகுத்து வெளியிடுங்கள். இந்த உடல்மொழி ஆராச்சியாளர்கள் நன்கு ஆராய்ந்து யார்யார் எல்லாம் சிறந்த வேட்பாளர்கள் என்ற முடிவை வெளியிடுவார்கள். மக்களும் எந்தவித குழப்பமே இல்லாமல் வாக்கு செலுத்தி சிறந்த நபரை தேர்ந்து எடுக்க மிகவும் வசதியாக இருக்கும்.
அண்ணன் சீமான் ஆட்சிக்கு வருகிறாரோ, இல்லை, அவரே சொல்வது போல அவரது சட்டமன்ற உறுப்பினர்கள் எல்லாம் ஆறாம் வகுப்பில் படிக்கிறார்களோ நமக்கு தெரியாது. காலம்தான் பதில் சொல்ல வேண்டும். ஆனால் என்னை பொறுத்தவரையில் சீமான் கீழ்கண்ட மூன்றில் வெற்றி பெற்றுவிட்டார்
1. பார்ப்பன ஆரியக்கூட்டம், திருட்டு தெலுங்கு திராவிட கூட்டம்
தலித்தியம் பேசும் தலித்தியவாதிகள், சாதியவாதம் பேசுபவர்கள்
இவர்கள் அனைவரின் தூக்கத்தை கெடுத்து அலறவிட்டது.
2. குறைந்த பட்சம் ஒரு சதவிகித மக்களுக்காவது அரசியல்
விழிப்புணர்வை ஏற்படுத்தியது.
3. குறைந்த பட்சம் சாதிய வேறுபாடு என்ற தடைக்கல்லின் ஒரு சிறிய
ஓட்டையை போட முடிந்தது..
அதிமுக, திமுக, பிஜேபி, காங்கிரஸ் என்ற எல்லா ஆண்ட கட்சிகளும் ஒருவர் மீது ஒருவர் வாரியிறைக்கும் சேற்றினைக் கண்டால் இவர்களெல்லாம் நம்மை ஆள அனுமதித்தது வெட்கக்கேடு என்ற உணர்வே மேலிடுகிறது. இவர்களையெல்லாம் ஒப்பிடும்போது சீமான் எவ்வளவோ மேல், ஒரு கனவாவது வைத்திருக்கிறார்!!. இதுவரை ஆண்ட கயவர்களுக்கு பதிலாக ஒரு புதியவரை தேர்ந்தெடுப்பதில் என்ன குறை? சீமானிடம் குறைகள் இல்லை என்று சொல்லவில்லை. குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை. ஒரு வாய்ப்புதான் கொடுத்துப் பார்ப்போமே என்ற சிந்தனை ஏன் நம் மக்களுக்கு இல்லை. கள நிலவரத்தில் எந்த பாதிப்பும் ஏற்பட வாய்ப்பில்லை என்கின்ற இடைத்தேர்தல்களில் கூட நம் மக்களுக்கு இந்த சிந்தனை இல்லை என்பது மிகவும் வருத்தத்தற்குரியது. வாக்குறுதிகளையும் பணத்தையும் அள்ளிவிட்டு ஆட்சியைப் பிடித்து நம்மையெல்லாம் முட்டாளாக்கி பதவியை அனுபவித்த இத்தகைய அரசியல் கட்சிகளுக்கு பின் எப்படித்தான் பாடம் புகட்டுவது? ஆலமரம் போல வளர்ந்துவிட்ட இவர்களை இனியும் தொடர்ந்து ஆளவிட்டால் பின்பு மீண்டும் இவர்களை கீழே இறக்குவது நடவாத காரியம். சீமான் போன்றோர்கள் தவறுகள் செய்தாலும் ஐந்து வருடங்களில் ஒன்றும் ஆகிவிடப்போவது இல்லை. பிரயோஜனம் இல்லை என்று கருதினால் அடுத்த தேர்தலில் இலகுவாக வீட்டுக்கு அனுப்பிவிடலாம். ஆனால் ஏற்கனவே அனுபவித்து உண்டு கொழுத்தவர்களை இறக்குவது என்பது இலேசான காரியம் இல்லை!!!! களத்தில் நிற்பவர்களில் ஓரளவாவது விவரமாக சிந்திக்கக் கூடியவர் சீமான் மட்டுமே என்பது என் கருத்து!!
சிந்திப்பவர்கள், அதனை வெளிப்படுத்துபவர்கள் என்று பார்த்தால் எனக்குத் தெரிந்து 2011க்கு முந்தைய விஜயகாந்த், 2016 அன்புமணி போன்றவர்கள்தாம் நினைவுக்கு வருகிறார்கள். அவர்கள் எடுத்துவைத்த திட்டங்கள் நடக்கக்கூடியவை, practicalஆனவை. அவர்கள் இருவரில், மக்கள் ஓரளவுக்கு விஜயகாந்தை ஏற்றுக்கொண்டனர். மற்றபடி சீமான் சொல்பவை எதுவுமே நடைமுறைக்கு சாத்தியமற்றவை. முன்னுக்குப்பின் முரணானவை. அவரது பேட்டிகளிலும் பேச்சுக்களிலும் அதீதமான கற்பனையான பொய்களைச் சொல்லுகிறார் என்றே நினைக்கிறேன். அதனால் அவருக்கான ஆதரவுத்தளம் குறையுமே தவிர கூடாது என்பது என் அனுமானம். இந்தத் தேர்தல் முடிந்த பிறகு வாக்கு எண்ணிக்கையை வைத்துப் பாருங்கள். நான் சொல்வது சரி என்று புரியும்.
புதியவன்,
நீங்கள் என்னதான் சொன்னாலும்,
சீமான் பின்னால் ஒரு தமிழ் இளைஞர் கூட்டம்
திரண்டு, வளர்ந்து வருகிறது -என்கிற
உண்மையை மறுக்க முடியாது….!!!
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
இருக்கலாம் கா.மை. சார்… தேர்தல் முடிந்த பிறகு வாக்கு எண்ணிக்கை அதனைக் காட்டிக்கொடுத்துவிடும். கமலஹாசனுக்கும் 2 சதத்துக்கு மேல் ஆதரவு இருக்காது என்றே நான் நினைக்கிறேன். விஜயகாந்தைப் போல (2011க்கு முன் இருந்த) ஒரு மூன்றாவது ஆப்ஷன் தமிழக மக்களுக்கு இல்லை என்பது வருத்தத்துக்குரியது. ஆதரவைப் பெறக்கூடியவர்களும், என்ன நடந்தால் நமக்கு என்ன என்று ஒதுங்கிவிட்டனர்.
விஜயகாந்த் எதையோ சிந்தித்து அந்த சிந்தனையை வெளிப்படுத்தியவர் என்று நினைக்கும் நண்பர் புதியவனை நோக்கும்போது எனக்கு சிரிப்புத்தான் வருகிறது. திரு கருணாநிதியின் அரசு அவருக்கு எதிராக தனிப்பட்ட முறையில் செய்த சில காரியங்களுக்கு எதிர்வினையாகவே அவர் ஒரு கட்சி ஆரம்பித்தார். கருணாநிதிக்கு எதிராக மக்களிடையே இருந்த அதிருப்தி காரணமாக அவர் வளர்ந்தார். பின்பு ஜெயலலிதாவின் துணையோடு எதிர்கட்சித் தலைவரானார். அவரைப்பகைத்தபின்பு அவரது உடல்நிலையும் ஒத்துழைக்க இயலாத சூழ்நிலையில் குழப்பமான செயல்களால் செல்லாக்காசாகிப் போனார். சிந்தனை மற்றும் அதனை வெளிப்படுத்தியவர் போன்ற உயரிய சொற்கள் அவருக்கு பொருந்தாது. அன்புமணியை பொறுத்தவரை அவரது சிந்தனை வெளிப்பாடுகள் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் என்ற எண்ணம் நான் உள்பட பலருக்கு ஏற்பட்டது உண்மை. ஆனால் 2016 தேர்தலில் ஏற்பட்ட தோல்வி அவரை நிலைகுலையச் செய்துவிட்டதோ என்னவோ அவரது சிந்தனை அதலபாதாளத்துக்குப் பாய்ந்து சின்னாபின்னமானார். அவர் இனி எழுந்திரிக்க வாய்ப்பில்லை. இந்த சந்தர்ப்பத்தில்தான் நாம் சீமானின் மன உறுதியை பாராட்ட வேண்டும். எத்தனை தோல்விகள் வந்தாலும் யார் என்ன விமரிசித்தாலும் அவரது கொள்கையில் உறுதியாக நிற்கிறார். அவரது மன வலிமை அவருக்கு நிச்சயம் வெற்றியை இன்றில்லாவிடினும் என்றாவது பெற்றுத்தரும். இவரைப்போன்றவர்களை ஆதரிப்பதே மக்களுக்கு நன்மை பயக்கும் என்பது எனது கருத்து.