மிக ரம்மியமான திருமலை நம்பி மலைக்கோயிலும் -திருக்குருங்குடி திவ்ய தேசமும்….!!!

….
….

….

மிக ரம்மியமான சூழ்நிலையில் அமைந்துள்ள
திருமலை நம்பி மலைக்கோயிலும்,
திருக்குருங்குடி திவ்ய தேசமும் கூடிய அழகிய
2 காணொலிகள் ….

முதலில் நம்பி மலைக்கோயிலுக்கு பயணம் –

அடுத்து வேளுக்குடியாரின் அழகிய தமிழோடு சேர்த்து,
திருக்குருங்குடி திவ்யதேச தரிசனம் –

…..

…..

…..

.
———————————————————————————————————-

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

2 Responses to மிக ரம்மியமான திருமலை நம்பி மலைக்கோயிலும் -திருக்குருங்குடி திவ்ய தேசமும்….!!!

  1. புதியவன் சொல்கிறார்:

    எப்படி திடுமென திருக்குறுங்குடி பற்றிய பதிவு என்று யோசிக்கிறேன்.

    நான் இந்தத் திவ்யதேசத்திற்கு இரு முறை (ஜஸ்ட் கோவிட் பிரச்சனைக்கு முன்பும்) சென்றிருக்கிறேன். மிகப் பிரம்மாண்டமான கோவில். அதில் உள்ள ஒரு மண்டபத்தில் உள்ள சிற்பங்கள் மிக மிக அருமையானவை. ஒரே சிற்பிதான் இந்தக் கோவிலிலும் நெல்லையில் கிருஷ்ணாபுரம் கோவிலிலும் செதுக்கியிருக்கணும். அவ்வளவு புகழ் பெற்றவை. இங்கிருந்து மலைமேல் நம்பி கோவிலுக்கு ஜீப்பில்தான் செல்லணும். கொஞ்சம் கஷ்டமான கடமுடா மலைப்பகுதி (ஆனால் இதைவிட மிகச் சிரமமானது அஹோபிலம் கோவில்களுக்குச் செல்லும் பாதை). மலையில் நம்பி ஆற்றில் குளித்திருக்கிறோம்.

    மலைக்குப் போகும் பாதையின் ஒரு புறம் ‘தினகரனுக்குச்’ சொந்தமான பண்ணை நிலங்கள் இருக்கின்றன (அல்லது அவரது நெருங்கிய நபருடையது). அதில் அருமையான நெல்லி மரங்கள், தென்னை, வாழை, பலா, மாமரங்கள் உண்டு.

    மிக அருமையான ஊர். செழிப்பான வயல்கள் தோட்டங்கள் நிறைந்த ஊர். இந்த ஊரில்தான் திருமங்கை ஆழ்வாரின் திருவரசு இருக்கிறது.

    • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      புதியவன்,

      //எப்படி திடுமென திருக்குறுங்குடி பற்றிய
      பதிவு என்று யோசிக்கிறேன்.//

      இன்னமும் என்னால் அதிக நேரம் கணிணி முன்
      உட்காரவோ, எழுதவோ முடியாத நிலை தான்
      தொடர்கிறது. பெரும்பாலும் படுக்கை
      தான். பயிற்சிகள் மேற்கொண்டு வருகிறேன்.
      இயல்புக்கு வர இன்னும் சிறிது காலம் பிடிக்குமென்று
      தோன்றுகிறது.

      ஆனால், வலியை திசைதிருப்ப,
      கிடைக்கும் நேரத்தை
      உருப்படியாக பயன்படுத்திக்கொள்ள

      சாய்ந்து படுத்தபடியே -நிறைய படிக்கிறேன்;
      பார்க்கிறேன்; கேட்கிறேன். அவற்றில்
      எனக்குப் பிடித்த சிலவற்றை கொஞ்சம் மெனக்கெட்டு,
      இங்கே கொண்டு வந்து நண்பர்களுடன் பகிர்ந்து
      கொள்ள முயல்கிறேன்… அவ்வளவே…!!!

      .
      -வாழ்த்துகளுடன்,
      காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.