பெண்களை ஏமாற்றும் அரசியல்வாதிகள்…..!!!

….
….

….

பெண்களை ஏமாற்றும் அரசியல்வாதிகள்…..!!!

தமிழக வாக்காளர்களில் ஆண் வாக்காளர்களின் நிலைப்பாடு
ஓரளவு வெளிப்படையாகவே தெரியும். அவர்கள் கலந்து
கொள்ளும் கூட்டங்கள், பார்க்கும் நிகழ்ச்சிகள், மற்றவர்களுடன்
உரையாடும்போது சொல்லும் கருத்துகள் – ஆகியவை மூலம்
அவர்கள் எந்த கட்சி /தலைவரின் பக்கம் இருக்கிறார்கள்
என்பது ஓரளவு தெரிய வரும்.

ஆனால், பெண்களின் நிலைப்பாடு என்ன….?
பெரும்பாலான பெண்கள் என்ன நினைக்கிறார்கள்… யாரை
ஆதரிப்பார்கள் என்பது யாருக்கும் தெரியாது. எம்.ஜி.ஆர்,
மற்றும் ஜெயலலிதா ஆகியோர் இருந்தபோது,
பெரும்பாலான பெண்கள் அவர்களுக்குத்தான் தொடர்ந்து
ஆதரவு அளித்தார்கள்.

இப்போது ஜெயலலிதா
மறைந்த பிறகு நடக்கும் முதல் சட்டமன்ற தேர்தல்….

இந்த தேர்தலில் பெண்களின் ஆதரவு யாருக்கு இருக்கும்….?
இந்த தேர்தலில் பெண்களின் ஆதரவை பெற வேண்டும் என்று
பல அரசியல் தலைவர்களும் முயற்சிக்கிறார்கள். முயற்சிப்பதில்
எந்த தவறும் இல்லை; ஆனால், பெண்களை ஏமாற்றி
தங்கள் பக்கம் இழுக்க முயற்சிப்பது அயோக்கியத்தனம்.

முதலில் கமல் துவக்கினார்… ” இல்லத்தரசிகளுக்கு எனது அரசு
மாதாந்திர ஊதியம் கொடுக்கும் “….!!!

இந்த தேர்தலில், தான் நிச்சயமாக ஆட்சிக்கு வரப்போவதில்லை
என்பது கமலுக்கு நன்றாகவே தெரியும்… எனவே அவர்
போகிற போக்கில் நிறைய வாக்குறுதிகளை அள்ளி வீசுகிறார்.
ஏனென்றால், அவற்றை நிறைவேற்ற வேண்டிய அவசியம்
அவருக்கு வரப்போவதில்லை (என்பது அவருக்கு தெரியும்.)

ஆனால், இப்போது திருவாளர் ஸ்டாலின் அவர்கள் கமலையும்
தாண்டிப்போய் பெண்களைக் கவர நினைக்கிறார்.
” நான் ஆட்சிக்கு வந்தால், ரேஷன் கார்டு வைத்திருக்கும்
பெண்கள் அனைவருக்கும் மாதம் 1000 ரூபாய் ‘உரிமைத்தொகை’
கொடுக்கப்படும்…..”

கமலுக்கும், ஸ்டாலினுக்கும் பெரிய வித்தியாசம் இருக்கிறது.

வரவிருக்கும் தேர்தலில் வெற்றி பெற்று, ஆட்சியை கைப்பற்றக்
கூடிய சாத்தியக்கூறு ஸ்டாலினுக்கு இருக்கிறது. எனவே,
அவர் கமலைப்போல் பொறுப்பற்ற வாக்குறுதிகளை
அள்ளி வீச முடியாது.

தமிழ் நாட்டில் சுமார் 2 கோடி பேர் ரேஷன் கார்டு
வைத்திருக்கிறார்கள். ஒரு கார்டுக்கு 1000 ரூபாய் என்றால்,
மாதம் 2000 கோடி ரூபாய் தேவை. ஒரு ஆண்டுக்கு
24,000 கோடி ரூபாய் தேவைப்படும்.

ஆண்டுக்கு புதிதாக 24,000 கோடி ரூபாய்க்கான நிதி தேவையை
ஸ்டாலின் / திமுக அரசு எப்படி எதிர்கொள்ளும்….?

ஏற்கெனவே ஆட்சியில் இருக்கின்ற எடப்பாடி அரசு
5.8 லட்சம் கோடி கடன் வாங்கி தமிழகத்தை கடனில்
மூழ்கடித்து விட்டது என்று ஸ்டாலின் மேடைதோறும்
பேசி வருகிறார். எனவே, குறைந்த பட்சம் இவர் பங்கிற்கு
புதிதாக கடன் சுமையை கூட்ட மாட்டார் என்றாவது
எதிர்பார்க்கலாம்.

அப்படியானால் இந்த 24,000 கோடி ரூபாய்க்கு பொறுப்பேற்க
விருக்கும் திமுக அரசு புதிதாக வரி விதிக்கப்போகிறதா…?

24,000 கோடி ரூபாய்க்கான வரிச்சுமையை மக்கள் தலையில்
அவரால் சுமத்த முடியுமா…?

இதில் வேறு சில முக்கிய விஷயங்களும் இருக்கின்றன –

கிராமத்தளவில் பெண்கள் அரசியலை கூர்ந்து கவனிப்பதில்லை;
உள்ளார்ந்த விவரங்களை எல்லாம் அவர்கள் அறிய
மாட்டார்கள். விளம்பரங்களைப் பார்க்கும் பெண்கள் எல்லாம்
ஸ்டாலின் சி.எம். ஆனால், ரேஷன் கார்டுக்கு மாசா மாசம்
1000 ரூபாய் கொடுக்கப் போகிறாராமே…..என்று தான்
பேசிக்கொள்வார்கள்.

ஸ்டாலினுக்கு ஆதரவாக ஓட்டும் போடுவார்கள்.

ஆனால் – ஸ்டாலினால், தான் கொடுக்கும் இந்த
வாக்குறுதியை நிறைவேற்ற முடியுமா…?

நிச்சயம் நிறைவேற்ற முடியாது என்று தெரிந்துகொண்டே
வாக்குறுதி கொடுப்பது யோக்கியமான அரசியலா….?

ஜனநாயகத்தில், மீடியாக்களுக்கு முக்கிய பொறுப்பு
இருக்கிறது….. ஸ்டாலின் செய்தியாளர்களைச் சந்திக்கும்போது
கீழ்க்கண்ட கேள்விகளுக்கு அவரிடமிருந்து விடை பெற
வேண்டும்…..

1) ரேஷன் கார்டு வைத்திருக்கும் பெண்களுக்கு மாதம்
1000 ரூபாய் கொடுக்கும் திட்டம் திமுக ஆட்சிக்கு வந்தவுடன்

உடனடியாக துவங்கப்படுமா…?

இல்லையென்றால் -குறைந்த பட்சம் எப்போதிருந்து
எதிர்பார்க்கலாம்…?

2) இதற்கான நிதி ஆதாரங்களை ஸ்டாலின் அரசு எப்படி
திரட்டும்…?

கடன் மூலமாகவா…? அல்லது
புதிய வரிகள் மூலமாகவா…?

மகளிர் தினத்தில், அவர்களுக்கு வாழ்த்து கூறுவதோடு,
இந்த கட்டுரையை எழுதுவதும் மிகவும் அவசியம் என்று நினைக்கிறேன்.

.
—————————————————————————————————

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

6 Responses to பெண்களை ஏமாற்றும் அரசியல்வாதிகள்…..!!!

 1. Karthikeyan சொல்கிறார்:

  TASMAC இருக்கும் வரை கவலை என்ன .. கேக்குறவன் கேனையனா கேப்பையில நெய் வடியுதுன்னு சொல்லுவாங்கலாம்

 2. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  நான் இந்த இடுகையை எழுதிய பிறகு – இப்போது
  அதிமுக-வும் இதே போன்ற ஒரு அறிவிப்பை
  வெளியிட்டிருப்பது தெரிய வருகிறது.

  திமுக-வை விட, அதிமுக-வுக்கு
  நம்பகத்தன்மை அதிகம் என்றாலும் கூட –

  திமுகவுக்கு நான் எழுப்பிய கேள்விகள்,
  அதிமுக-வுக்கும் பொருந்தும். இத்தனை பெரிய
  செலவினத்திற்கான, நிதி ஆதாரத்தை எப்படி
  திரட்டப்போகிறார்கள் என்பதை தெரிவிக்க வேண்டிய
  அவசியம் அவர்களுக்கும் உள்ளது.

  • tamilmani சொல்கிறார்:

   It is just an empty promise like 2 acres of free land, loan waivers, and somehow they grab power and loot more for their families.
   The saddest part is the gullible voters who believe them and vote for them in every election in Tamilnadu.

 3. புதியவன் சொல்கிறார்:

  ரூபாய்க்கு 3 படி அரிசி என்று சொல்லி பித்தலாட்டத்தில் பதவிக்கு வந்த கட்சிக்கு, சொன்னதை நிறைவேற்றணும் என்ற நிர்ப்பந்தம் எப்படி இருக்கும்? அனைவருக்கும் வீடு, ஒரு ஏக்கர் நிலம் என்று ஏராளமான வாக்குறுதிகள். ஒரே ஒரு வீட்டை கட் அவுட் மாதிரி வைத்து, கருணாநிதிக்கு பாராட்டுவிழா, அதில் திமுக கட்சிக்காரர் திருமா பேச்சு என்று எத்தனையோ காட்சிகளைப் பார்த்துவிட்டது இந்தத் தமிழகம். இப்போது வரும் கருத்துக் கணிப்புகள், நான் நினைத்தபடியே திமுகவுக்கு 150+ இடங்கள் வரும் என்று சொல்கின்றன. அதனைக் கட்டுப்படுத்தவே அதிமுக 1500 ரூபாய் தரும் என்று சொல்கின்றனர். திமுக யாருக்கு 1000 ரூபாய் கொடுக்கும், எப்படி கொடுக்கும் என்றெல்லாம் விலாவாரியாகச் சொல்லவில்லை. ஸ்டாலினுக்கு தான் கொடுக்கும் எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றணும் என்ற கட்டாயம் இல்லை. தொலைக்காட்சிச் சேனல்கள், பத்திரிகைகள் பலவும் விலை போனவையே. இரண்டு பேருக்கு 1000 ரூபாய் கொடுத்தால், அல்லக்கை திருமா, மானமில்லாத வைகோ வீரமணி போன்ற அல்லக்கைகள் பாராட்டுவிழா நடத்திப் பேச இருக்கும்போது, ஸ்டாலினுக்கு சொல்வதை நிறைவேற்றணும் என்ற நிர்பந்தம் இல்லவே இல்லை. ஏற்கனவே சென்னையை சிங்கப்பூராக மாற்றுவோம் என்று சொல்லி பதவியில் அமர்ந்து ஸ்டாலின் என்ன செய்தார் என்பது வாக்களிக்கும் மக்களுக்கு நினைவிலிருக்கவா போகிறது?

  நீங்கள் முக்கியமான நிகழ்வுகளை நிறைய மிஸ் செய்திருக்கிறீர்கள். திமுகவிடம் பணம் பெற்றுக்கொண்டு அல்லது திமுக நிர்வாகிகளால் அல்லது சிறுபான்மையினரின் influenceஆல் நடத்தப்படும் மின்னம்பலம், ThatisTamil போன்ற ஊடகங்கள் உண்மையை எழுதுவதில்லை. (நீங்களே சுட்டிக்காட்டிய ஜெயச்சந்திரன், திமுக மேடையில் பேசினதை கவனித்திருப்பீர்கள். நடுநிலை என்று காசுக்காக விலைபோனவர்கள்தான் இப்போதெல்லாம் இணைய தளப் பத்திரிகைகளில் எழுதுகிறார்கள்)

  திமுக கட்சிப் பொதுச் செயலாளர் துரைமுருகனை, அவர் திமுகவைச் சேர்ந்தவர் இல்லை என்று ஆர்.எஸ்.பாரதி போன்றவர்கள் சில நாட்களுக்கு முன்பு கோர்ட்டில் அஃபிடவிட் தாக்கல் செய்திருக்கிறார்கள். காரணம், சென்ற தேர்தலில் கைப்பற்றப்பட்ட பணம், திமுக அறக்கட்டளையை நோக்கித் திரும்புவதால். இதுபோன்ற பல செய்திகளை அப்பட்டமாக இணையச் செய்தித் தளங்கள் மறைக்கின்றன.

 4. shiva சொல்கிறார்:

  இதில் வருத்தப்பட வேண்டிய விஷயம் எந்த ஊடகமும் இப்படிப்பட்ட விஷயத்தை அரசியல் தலைவர்களிடம் கேட்பதில்லை

 5. nellai palani சொல்கிறார்:

  எலெக்சன் முடிந்த பின் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு மட்டும் ஆயிரம் ரூபாய் என அறிவிப்பார்கள். ஆறுசிலிண்டர் இலவசமும் அப்படி தான்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.