….
….
….
அது ஒரு கனாக் காலம்……
ஒரு துக்ளக் ஆண்டுவிழாவில் ஆசிரியர் “சோ” அவர்களால்
அறிமுகப்படுத்தப்பட்டு, துக்ளக் மேடையில்
பேச அழைக்கப்பட்ட பழ.கருப்பையா அவர்களைப் பார்த்து
நான் வியந்ததும்,
வெள்ளையும் சள்ளையுமாக ஜென்டில்மேனாக
தோற்றமளித்த அவரையும், தூய தமிழில் மிகச்சிறப்பாக
பேசிய அவரது பாங்கையும் பார்த்து நான் அவரை உத்தமர் என்று
நினைத்த காலம்….!!!
அதன் பின்னர் – பல அனுபவங்கள்…பல செய்திகள்…!!!
இப்போது மஹாத்மா காந்தியே வந்து
சத்தியம் செய்தாலும் கூட –
இவரை கொஞ்சமும் நம்புவதற்கில்லை என்பது தான் நிஜம்….!!!
கமலுக்கு கருப்பையாவைப்பற்றி எவ்வளவு தூரம் தெரியும்
என்பது நமக்குத் தெரியவில்லை; இருந்தாலும் அவரது கட்சி,
இப்போதைக்கு “வந்ததை யெல்லாம் கொள்ளும் மகராசன் கப்பல்”
என்பதால் –
யார் வந்தாலும், கட்டியணைத்து (…!!!) வரவேற்கிறார்.
எனவே, பழ.கருப்பையாவிற்கு தற்போது கமல்ஹாசனின்
மேடையில் பேச ஒரு வாய்ப்பு கிடைத்து பேசுகிறார்
கடைந்தெடுத்த சுயநலவாதி ஒருவர்,
எப்படி பரம யோக்கியர் போல், உத்தமர் போல் –
பேசுகிறார் என்று பார்க்க வேண்டாமா…?
கருப்பையாவின் சுயரூபம் நமக்கு நன்றாகவே தெரியும்
என்றாலும், அவர் ஆற்றிய உரை -கொஞ்சம் ரசிக்கும்படி
இருந்ததால், நண்பர்களும் ரசிக்க கீழே தருகிறேன்.
…….
…….
பின் குறிப்பு –
பழ.கருப்பையா அவர்கள் விலாவாரியாக வர்ணிக்கும் இதே திமுகவுடன்,
இதே ஸ்டாலினுடன் தான்-
– JUST ஒரு வாரம் முன்னதாக கூட, கூட்டணி வைத்துக் கொள்ளும்
முயற்சியில் கமல்ஹாசன் இருந்தார் என்பதை கருப்பையாவும்,
கமலும் வசதியாக மறந்து விட்டார்கள் பாருங்களேன்…!!!
அரசியலில் இதெல்லாம் …………………..!!!
.
—————————————————————————————————–
பழ.கருப்பையா ரொம்ப நல்லா பேசுவார். கேட்பதற்கு நல்லா இருக்கும். நாஞ்சில் சம்பத் போன்று இவர் ‘நாவை’ விற்பனை செய்ய ஆரம்பித்து பல வருடங்கள் ஆகிவிட்டது. அரசியலில் அனேகமாக எல்லோருமே நேர்மை, நியாயம், நீதி என்பதற்கு exact opposite. அதனால் அரசியலில் ஒருவர் காலம் தள்ளணும் என்று நினைத்துவிட்டால், தனக்குத் தோதுவான கட்சியில் சேர்ந்து அதற்குப் பாடுபட்டு, நமக்கு நல்ல நேரம் இருந்தால் பதவியும் இல்லையென்றால் பதவி வருவதற்கு என்ன செய்யணும் என்று சிந்தித்து அதனைச் செய்துகொண்டே இருப்பதுதான் நல்லது. ஆனால் பழ.கருப்பையா, சீசனுக்கு சீசன் கட்சியை மாற்றிக்கொள்வதால் இவர் பேசுவதில் பொழுதுபோகுமே தவிர, அதனால் இவருக்கு எந்த பிரயோசனமும் கிடைக்காது. இப்போ குணசித்திர நடிகர் வை.கோ எதையேனும் பேசி உணர்ச்சி வசப்பட்டு அழுதால், நம் மனதில் என்ன நினைக்கிறோம் (போதும்பா.. சிவாஜி மாதிரி முயற்சிக்காதே என்று சிரித்துக்கொள்கிறோம்). அதுபோல, நடிகர் வை.கோ, வடிவேலு, திருமா, நாஞ்சில் சம்பத் போன்று பழ.கருப்பையாவும் நிறைய மீம்ஸுக்கு உபயோகமாக இருப்பார்.
ஆனால் ஒன்று மட்டும் சொல்லணும். கமலை நம்பி அந்தக் கூட்டத்திற்கு வந்திருக்கும் 500 பேர்கள், கமலின் பேச்சைக் கேட்டு மண்டை காஞ்சு இருந்திருப்பார்கள் (என்ன புரிந்திருக்கப்போகிறது). அவர்களுக்கு நகைச்சுவையை வழங்கி ரிலாக்ஸ் செய்ய வைக்கிறார் பழ.கருப்பையா.
புதியவன்,
கருப்பையாவை விட கேவலமான ஒரு மனிதர்
அரசியலில் இருக்க முடியாது என்பதற்கு
சான்றாக பல காட்சிகளைப் பார்த்து விட்டேன்…..
கமலின் ‘மண்டை காயவைக்கும் பேச்சு’ குறித்து
சொல்லி இருக்கிறீர்கள். நிஜமாகவே அப்படிப்பட்ட
ஒரு வீடியோவை பார்த்தேன். முதலில் அதை
இங்கே எடுத்துப்போடலாமா என்று நினைத்தேன்.
பிறகு வாசக நண்பர்களை நானே வதைப்பது
சரியல்ல என்பதால் விட்டு விட்டேன்.
சின்னதாக எதாவது காட்சி கிடைக்கும்போது
அவசியம் இங்கே போடுகிறேன்.
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்