….
….
….
சட்டமன்ற தேர்தலுக்கு, பாஜக-வுடன் கூட்டணி என்று
அதிமுக அறிவித்தபோது –
அதிமுக வேண்டாத சுமையை ஏற்றுக்கொள்கிறது.
பாஜக-வால் அதிமுகவுக்கு எந்த லாபமும் கிடையாது.
மாறாக அதிமுக பெறக்கூடிய சிறுபான்மையினரின்
வாக்குகளை இந்தக்கூட்டணி இழக்கச் செய்யும் என்பதே
தமிழக அரசியல் பார்வையாளர்களின் ஒருமித்த கருத்தாக
இருந்தது.
மத்திய அரசு மற்றும், பாஜக தலைமையின் அழுத்தத்திற்கு
(மிரட்டலுக்கு….?) பயந்து தனக்கு பாதகமான இந்த
உறவை அதிமுக தலைமை ஏற்கிறது என்றே
எல்லாருக்கும் தோன்றியது… சொல்லவும் செய்தார்கள்.
போகப் போக பலவித யூகங்களும்,
செய்திகளும் வெளியாயின.
முதலில் – எடப்பாடியாரின் சுதந்திரமான போக்கு
பாஜக தலைமைக்கு பிடிக்காததால்,
அதிமுகவைப் பிளந்து, எடப்பாடி அவர்களை தனிமைப்படுத்தி,
ஓபிஎஸ் தலைமையில் ஒரு பிரிவை உருவாக்கி – அதனை
திருமதி சசிகலா, தினகரன் ஆகியோருடன் இணைய வைத்து,
தமிழகத்தில் பாஜக ஆதிக்கம் செலுத்தக்கூடிய ஒரு கூட்டணியை
உருவாக்க செயல்படுவதாக செய்திகள் வெளியாயின.
சசிகலா அதிமுகவுக்கு போட்டியாக களத்தில் இறங்கினால்,
முக்குலத்தோர் வாக்குகள் அவர் பக்கம் சென்று விடும்
என்றும் அதனால், மதுரையை ஒட்டிய தென் மாவட்டங்களில்
அதிமுக- கூட்டணியின் தோல்வி தவிர்க்க முடியாததாகி
விடுமென்றும் நினைத்தது பாஜக.
ஆனால், தாங்கள் நினைத்தபடி எடப்பாடியாரை
தனிமைப்படுத்துவது நடக்காத காரியம் என்பதை பின்னர்
உணர்ந்து – திருமதி சசிகலா, தினகரன் ஆகியோரை
உள்ளடக்கிய ஒருங்கிணைந்த அதிமுக-வை உருவாக்கி
அதனுடன் கூட்டணியை உறுதி செய்ய முனைந்தது.
இரண்டு முறை அமீத்ஜீ அவர்கள் தமிழகத்திற்கு வந்ததும்
இதனை செயல்படுத்தும் முயற்சியில் தான் என்றும்
சொல்லப்பட்டது.
இது குறித்து அமீத்ஜி எடப்பாடியாரை மிரட்டியதாக கூட
வதந்திகள் வெளிவந்தன.
அத்தனையையும் தாண்டி, எடப்பாடியார் சசிகலாவையோ,
தினகரனையோ அதிமுகவில் சேர்க்கவும் மாட்டோம்,
அவர்களுடன் கூட்டணி என்கிற பேச்சுக்கும் இடமில்லை
என்பதை பாஜக தலைமையிடம் உறுதியாக சொன்னதோடு
மட்டுமல்லாமல், அதை அமைச்சர் ஜெயகுமார் மூலம்
மீடியாவுக்கும் சொல்லச் செய்தார்.
இவரால் பாஜக தலைமை சொல்வதை மீறி எப்படி
செயல்பட முடியும் என்றே எல்லாரும் நினைத்தனர்.
நேற்றிரவு வெளிவந்த செய்தி, அனைவரையுமே வியக்க
வைத்தது… ” நான் அரசியலில் இருந்து விலகுகிறேன்.
அதிமுக ஆட்சி மீண்டும் மலர வேண்டும். அதற்காக
அனைவரும் ஒற்றுமையாக பாடுபட வேண்டும்”
என்கிற திருமதி சசிகலாவில் அறிக்கை தான் அது….
இப்படி ஒரு முடிவை சசிகலா எடுப்பார் என்பதை
யாருமே எதிர்பார்க்கவில்லை;
திருமதி சசிகலாவின் இந்த முடிவிற்கு, அறிவிப்பிற்கு –
பாஜக தலைமையின் அழுத்தம் தான் காரணம் என்பதை
யாரும் புரிந்து கொள்ளலாம்.
எடப்பாடியாருக்கு மிக மிக சாதகமான நிலை இது.
சசிகலா, தினகரனை சேர்க்கச் சொல்லி,
தனக்கு எக்கச்சக்கமான அழுத்தம் கொடுத்த
பாஜக தலைமையை,
அவர்களது திட்டத்தை – மாற்றி,
பாஜக தலைமையை வைத்தே, சசிகலாவை
விலகச்செய்து, தனக்கு சாதகமான ஒரு
சூழ்நிலையை உருவாக்கிக்கொண்ட எடப்பாடியாரின்
சாமர்த்தியத்தைப் பார்க்கையில் மிகுந்த வியப்பு
ஏற்படுகிறது.
தாங்கள் சொல்வதை ஏற்று செயல்பட மறுக்கும்
ஒரு மாநில கட்சித்தலைவரை பொறுத்துக் கொள்வதும் –
அவருக்காக தங்களது அணுகுமுறைகளை மாற்றிக்கொண்டு
செயல்படுவதும், பாஜகவைப் பொறுத்தவரை
நினைத்துக்கூட பார்க்க முடியாத விஷயம்.
தன் வழிக்கு பாஜகவை கொண்டுவந்த எடப்பாடியாரின்
சாமர்த்தியம் உண்மையிலேயே வியக்க வைக்கிறது.
இன்றைய தேதியில், மீடியாக்களும், சர்வேக்களும்
திமுக தான் தேர்தலில் வென்று ஆட்சியை
பிடிக்கப்போகிறது என்று சொல்கின்றன.
கடந்த சில மாதங்களாகவே, தமிழக அரசு பல நெருக்கடியான
சூழ்நிலைகளை சந்தித்தது…
அத்தகைய நெருக்கடியான சூழ்நிலைகளில்,
எடப்பாடியார் செயல்பட்ட விதங்களைப் பார்த்தபோதும்,
எதிர்க்கட்சித்தலைவரை மடக்க, அவர் அறிவிக்கும்
ஒவ்வொரு எதிர்காலத் திட்டத்தையும்,
இவர் கொஞ்சமும் ஈகோ பார்க்காமல், உடனடியாக
அரசின் உத்திரவுகளின் மூலம் சாமர்த்தியமாக
நடைமுறைப்படுத்தியதையும்,
தேர்தல் அறிவிப்பிற்கு ஒரு மணி நேரத்திற்கு
முன்னதாக கூட இவர் சலுகைகளை அறிவித்துக்கொண்டே
போனதையும் –
பார்த்தபோது, முதலில் சிரிப்பு வந்தாலும்,
பின்னர் – அவை ஏற்படுத்தப்போகும் விளைவுகளை எண்ணி,
இவரது புத்திசாலித்தனத்தை மனதிற்குள் பாராட்டாமல்
இருக்க முடியவில்லை.
இன்றைய சூழ்நிலையில் ….?
முடிவு எப்படி வேண்டுமானாலும்
இருக்கலாம் என்று தோன்றுகிறது.
.
———————————————————————————————————–
திமுக தங்கள் கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு அள்ளி
கொடுக்காமல் கிள்ளி கொடுக்கிறது . விசிக குறைந்த தொகுதிகளையே
பெற்றுள்ளது , விசிக உறுப்பினர்களை ஏமாற்றம் அடைய வைத்துள்ளது .
தேர்தலில் இது திமுகவுக்கு பாதகம். காங்கிரஸ், மக்கள் நீதி மையத்தில்
இணைய கூட வாய்ப்புள்ளது. கம்யூனிஸ்ட்கள் “பெட்டி ” கிடைத்தால்
குறைந்த தொகுதிகளுக்கு ஒத்து கொள்ளுவார்கள். முதல்வர் என்ற மணப்பெண்ணை
நோக்கி மாப்பிள்ளை ஸ்டாலின் காத்திருக்கிறார். எடப்பாடி கழுத்தில் திடீர் மாலை
விழ நேரிடலாம்.
Communists will definitely accept money from DMK and வெளில பாட்டாளி, பூட்டாளி கொள்கைன்னு பேசுவாங்க. காங்கிரஸுக்கு வேறு வழி கிடையாது. அவங்களுக்கு கன்யாகுமரி எம்.பி. தேர்தல், தமிழகத்தில் வெற்றி பெற்றால்தான் ராகுலுக்கு கட்சில கொஞ்சமாவது பிடிமானம் இருக்கும், தென்னகத்துல மட்டும்தான் காங்கிரஸ் வளர வாய்ப்பு-அதிலும் கிறிஸ்தவர்கள் அதிகமுள்ள கேரளா, தமிழகம். விசிக வுக்கு, 6 சீட்டுக்களே அதிகம், they don’t have any option in politics except being திமுக அடிமைகள். இவங்க எல்லோரையும் ஒன்றிணைப்பது பாஜக எதிர்ப்புணர்வு ஒன்றே.
Unlike OPS, எடப்பாடி அவர்கள் ரொம்பவே சாமர்த்தியமாகவும் கத்தி மீது நடப்பது போலவும் ஆட்சியைக் கொண்டுசென்றிருக்கிறார். தேர்தல் கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் அனைத்தையும் இவங்க இருவரும் ஜெ. காலத்தில் செய்துவந்திருக்கிறார்கள். ஜெ.வின் எண்ணவோட்டம் நிச்சயம் இவங்களுக்குத் தெரிந்திருக்கும். ‘ஆட்டுவித்தால் ஆடாத தன்மை’ எடப்பாடி அவர்களுக்கு மட்டும்தான் இருக்கிறது. நிச்சயம் அந்த ஆண்மை, அரசியல் சாமர்த்தியம் பாராட்டப்படவேண்டும்.
எடப்பாடியார், நிறைய சலுகைகளை (அதில் பல, தேவையில்லாதவை, அதீத பணிந்துபோவது போன்றவை-சிறுபான்மையினருக்கு) அள்ளிவிட்டிருந்தாலும், அதிமுக அனுதாபி என்ற வகையில், நிச்சயம் பாஜகவுடன் அதிமுக கூட்டு வைத்திருக்கக் கூடாது. பாஜக எப்போதுமே நம்பிக்கைக்குரியவர்கள் அல்லர் (காங்கிராஸும்தான்… அவங்க, எப்படி அவங்க கட்சியை வளர்க்கலாம் என்பதில் மட்டும் கவனம் செலுத்துவாங்க, அடுத்த கட்சியைப் பிளந்தும் இதனைச் சாதிப்பார்கள்).
இப்போ சமீபத்துல புதுச்சேரில, காங்கிரஸ் காரங்க பத்து பேரை கட்சி மாற வைத்து, பாஜக தனக்கு பெரிய ஆதரவு புதுச்சேரில இருப்பது போலக் காண்பிக்கறாங்க. நான் ஜெ. இடத்தில் இருந்தால், தைரியமாக ரங்கசாமியுடன் மட்டும் கூட்டுச் சேர்ந்து, பாஜகவை கழற்றிவிடுவேன். மக்கள் நமச்சிவாயத்துக்கு வாக்களிக்கலை, காங்கிரஸுக்கு + திமுகவுக்கு வாக்களித்தார்கள் என்பது தேர்தலின்போது தெரியும். அங்க, பாஜக 18, அதிமுக 12, பாஜகவின் பங்கில் 8 ரங்கசாமிக்கு + பாமக என்று ஒரு தகவல் உலா வருகிறது. இதை ஒரு பாடமாக அதிமுக எடுத்துக்கொள்ளவேண்டும். இதற்கு முன்பு, பாஜக தலைவர், எடப்பாடி முதலமைச்சர் வேட்பாளர் என்று பாஜக தலைமை முடிவு செய்யும் என்று ஆணவமாகப் பேசியிருந்தார். உமி வைத்துக்கொண்டு ஒரு கட்சி, அரிசி வியாபாரியிடம் ஆணவமாகப் பேசுவதைப் போன்றது அது. இவற்றையெல்லாம் மிக சாமர்த்தியமாக எடப்பாடி சமாளித்திருக்கிறார். தேர்தல் தோல்விக்குப் பிறகும், நிச்சயம் தேவையென்றால் சசிகலாவைச் சேர்த்துக்கொள்ளலாமே தவிர புல்லுருவியான தினகரனைச் சேர்க்கவே கூடாது.
இந்தத் தேர்தலில் நான் கவனித்தது, கிறித்துவர்கள், சர்ச்சுகள் மூலமாக திமுகவுக்கு வாக்களிக்கும்படி தமிழகத்தின் எல்லா இடங்களிலும் நடந்திருப்பது. இது பாஜகவின் வளர்ச்சியில் கொண்டுபோய் முடியும். அரசியலில் வாக்குகளுக்காக சிறுபான்மையினர், தங்கள் மதத்தை முன்னிறுத்தியது, இந்து உணர்வை தமிழகத்தில் அதிகமாக்கும்.
//முடிவு எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம் என்று தோன்றுகிறது.// நான் அப்படி நினைக்கவில்லை. அதிமுக 30-50 towards lower side, திமுக 150+ என்றே நான் கணிக்கிறேன். தினகரன் ஒருவேளை களத்தில் இல்லை என்றால் அல்லது சசிகலா அதிமுகவுக்கு ஆதரவாக வெளிப்படையாகப் பேசினால், அதிமுகவுக்கு 55 கிடைக்கலாம். பாஜவுக்கு grass root level அதிகமாயிருக்கு. அவங்களோட வாக்கு சதவிகிதத்தைக் கணிக்க முடியவில்லை. இந்தத் தேர்தலில் கமல், நாம் தமிழர் போன்றவர்கள் காணாமல் போகப்போவது உறுதி.
சசிகலா கணக்கு எல்லாம் அரசியலோ அதிகாரமோ எதுவுமே இல்லை.
கட்சி பணத்தை எடப்பாடி கிட்ட இருந்து கைப்பற்ற வேண்டும் என்ற அவசரத்தில் செய்த விளையாட்டு மட்டுமே.
எப்படியோ சும்மா வந்தது ல இருந்து கண்டெய்னர அருண் ஜெட்லி கிட்ட கொடுத்தது முதல் எடப்பாடி கிட்ட தான் பிஜேபி சரண்டர்………………
பண விஷயத்தில் எடப்பாடி ஓபிஸ் ஸ விட ரொம்பவே தாராளமயம் தான்.
இதே விஷயத்தில் தினகரன் மட்டி என்று இப்போது தான் சசிகலாவுக்கு புரிந்து இருக்கு……..
கட்சியை விட்டு ஒதுங்கி இருந்தா கண்டெய்னர் பணமாவது செலவுக்கு எடப்பாடி கிட்ட இருந்து கிடைக்கும் என்ற நம்பிக்கை தான்.
டிடிவியை மீது நம்பிக்கை இல்லாமல் தானே பணத்தை மொத்தமாக எடப்பாடி கிட்ட கொடுத்த சசிகலா.
இன்னும் 15ம் தேதி வழக்கு ல பொதுச்செயளாலர் , தேர்தல் முடிவு வந்ததும் ஆட்டம் என்று கதை எழுதாமல் இருக்கணும் . மத்தியில் பிஜேபி இருக்கும் வரை சசிகலா அமைதியாக சென்று தான் ஆகனும்.
இது மெயினா இந்த சங்கரு, லெட்சுமணன், ஷ்யாம் இன்னும் வாடகைக்கு வாய் விடுபவர்கள் இனி அடக்கி வாசிக்கணும்……..கடைசியா நான் சொல்லி தான் எடப்பாடி பழனிச்சாமி எல்லாம் செய்வது என்ற உளரல் பைத்தியம் அரசியல் ஆலோசகர் ரவீந்திரன் துரைசாமிக்கும் இது பொருந்தும்.
இப்போது உள்ள அரசியல் சூழ்நிலையில் அதிமுகவும் திமுகவுக்கு சற்றும் குறைவில்லாமல் சம பலத்துடன் இருக்கிறது……………………….
2019 ஆண்டில் அதிமுக வுக்கு பொள்ளாச்சி சம்பவம் எதிர்ப்பும், பாஜகக்கு எதிராக இஸ்லாமியர்களின் குடியுரிமை மாசொடோவும் திமுகவுக்கு சாதகமாக அமைந்தது.
இந்த நான்கு ஆண்டு எடப்பாடி தலைமையில் அதிமுக ஆட்சியில் விமர்சனங்கள் இருந்தாலும் அவருடைய நிறைவாக திறன் எதிர்ப்புகளை மறக்க பல திட்டங்கள்(பொங்கல் பரிசு, விவசாயக்கடன், நகை கடன், ஆல் பாஸ், நீட் 7.5%, MBC (2.5%/9.5%/10.5%), கொராணா தடுப்பு, பட்டதாரி பெண்கள் திருமண உதவிததொகை, 60 வயதுக்கு மேலே இலவச பஸ் பாஸ், இசுலமயர்களுக்காக மெக்கா சென்றுவர உதவி சலுகை …..) சலுகைகல் அறிவித்தது காரியம் சாதித்த விஷயம் கவனிக்க வேண்டியவை தான்.இது எளிய மக்களிடம் மிக சாதாரணமாக சென்று விடும் என்பதில் ஐயமில்லை.(ஓட்டுக்கு பணத்தையும் சேர்த்து)
ஸ்டாலின் இது போல ஒரு சூழ்நிலையில் நான்கு அல்ல நான்கு மாதம் கடந்தாலே பெரிய விஷயம்.
2016 தேர்தலில் போட்டியிட்ட கட்சிகளில், டெபாசிட் தொகையை திரும்ப பெற்ற கட்சிகளும், தொகுதிகளின் எண்ணிக்கையும்…!
அதிமுக = 230
திமுக = 178
காங்கிரஸ் = 41
பாமக = 20
பாஜக = 8
முஸ்லிம் லீக் = 5
மமக = 4
புதக = 4
விசிக = 3
கம்யூனிஸ்ட் = 2
மதிமுக = 2
தேமுதிக = 1
2001 இல் தமிழகத்தில் பாஜக எங்கே என தேடிய காலத்திலே 21 தொகுதிகளை வாரி வழங்கிய கருணாநிதியை விட,
20 வருடங்களுக்கு பிறகு, 7 வருடங்களாக ஆளுங்கட்சியாக இருக்கும் பாஜகவை இப்போது 20 தொகுதியை மட்டும் கொடுத்து சமாளித்த ஓபிஎஸ் இபிஎஸ் சாமர்த்தியமானவர்களே!!!!!!
ஆனால் தற்சமயம் பாஜகவை தமிழகத்தில் வளர்த்ததில் மிக முக்கிய பங்கு திமுகவையே சாரும். பாஜக உள்ளே வந்துடும் என பூச்சாண்டி காட்டி, காட்டி அதோடு இல்லாமல், திமுகவில் ஒதுக்கப்பட்டவர்களை அங்கே தஞ்சம் அடையவும் வழி வகுத்துவிட்டார்கள்.
திமுகவின் இந்த செயலால் அதிமுகவிற்கு மட்டுமல்ல, தமிழகத்திற்கே நெருக்கடியை உண்டாக்கி வரலாற்று பிழையை செய்துவிட்டனர்.