கடவுள் இருப்பதை அறிவியல் ஏற்கிறதா….?

….
….

….

வெகு சுவாரஸ்யமான, அறிவுபூர்வமான
வாதம் ஒன்றை இங்கே கேட்கலாம்.

கடவுள் இருக்கிறார் என்பதை அறிவியல்
ஒப்புக் கொள்ளும் தருணம் இது என்கிறார் –
திருமதி பாரதி பாஸ்கர்….

எதை வைத்து சொல்கிறார்…..? கேட்போமே…!!!

….

….

.
——————————————————————————————————

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

2 Responses to கடவுள் இருப்பதை அறிவியல் ஏற்கிறதா….?

 1. Sithalapakam Velan சொல்கிறார்:

  Ayya Kavirimainthan Sir,

  Could you publish this article please?

  திரு. ஸ்டாலின் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் சொல்லிக்கொள்வதோடு, ஒரு சாமானியனாக ஒரு வேண்டுகோளுடன் இந்த திறந்த கடிதம் :

  ஸ்டாலின் அவர்களே,
  தமிழக தேர்தல் தொடர்பாக வரும் கிட்டத்தட்ட எல்லா யூகங்களிலும் உங்களுக்கே வெற்றி வாய்ப்பு சற்று அதிகம் என்பதாக வந்து கொண்டிருக்கின்றன. ஆனால் அதை சற்று உற்று ஆராய்ந்தால் கழக மற்றும் கூட்டணிகளின் நிரந்தர வாக்குகளாக 26% சதமும் சிறுபான்மை மற்றும் ஒடுக்கப்பட்டோரின் 14% சதம் வாக்குகளும் ஆக மொத்தம் 40% சதம் வாக்குகள் வரலாம் என கணித்திருக்கிறார்கள்.

  ஆனாலும் வெற்றி உறுதி என அமர்ந்துகொள்ள,
  இது ஒன்றும் அலை அல்ல!!. இரண்டு அல்லது மூன்று சதம் வாக்குகள் சற்றே திரும்பினாலும் மொத்த வாய்ப்பும் கவிழ்ந்து விட கூடும். தேர்தல் டெக்னலாஜியில் பி.எச்.டி பட்டம் பெற்ற பிஜேபி எதிரணியில் இருக்கையில் இது சுலபமாக நடக்கலாம்.

  இங்கேதான் எங்களை போன்ற சாமானியர்கள் உங்களுக்கு தோள் கொடுக்க தயாராக உள்ளோம். ஆனால் அதில் ஒரு பிரச்சினை உள்ளது. என்னதான் நாங்கள் கடந்த சில வருடங்களாக மத்திய மாநில அரசின் மேல் சொல்லிலடங்கா அதிருப்தியில் இருந்தாலும், உங்களுக்கு ஒட்டு போடுவதில் ஒரு தயக்கம் உள்ளது.

  அது என்னவென்றால் நீங்கள் ஜெயித்து வந்தால் உங்கள் கழக உடன்பிறப்புகளின் கரைவேட்டி அட்டகாசங்கள் மீண்டும் துவங்கிவிடும் என்பதுதான்.

  நகரம், ஒன்றியம், கிளை என்று ஒவ்வொரு ஏரியாவிலும் உள்ள உங்கள் அடிப்பொடிகள் அடித்த அடாவடிகள் திரும்ப யாபகத்திற்கு வந்து தொலைக்கிறது.

  அடுத்தவன் இடத்தை ஆக்கிரமிப்பது; புறம்போக்கு இடத்தை ஆட்டையை போடுவது; அரசு அலுவகங்களில் அடாவடி செய்வது; ரவுடிகள் கூட்டத்தோடு வந்து கட்டப்பஞ்சாயத்து செய்வது; சொந்த தெரு மக்களுக்கே கட்டிங் கொடுத்தால் மட்டும் வேலை செய்து கொடுப்பது, என பல..!

  கஞ்சி போட்ட சொக்காயை அணிந்து, பாக்கெட்டில் உங்கள் படத்தை போட்டு கொண்டு உங்களின் உடன்பிறப்புகள் இவர்கள் விதைத்த இந்த துன்பங்கள்தான், மக்களிடையே வெறுப்பாக மாறி, கடந்த இரண்டு தேர்தல்களிலும் எங்களை போன்ற சாமானியர்களின் ஓட்டு உங்களுக்கு கிடைக்காமல் செய்தது. எனக்கு தெரிந்த நிறைய பேர் இதனாலேயே உங்கள் கட்சிக்கு ஓட்டு போடுவதில்லை. என்னுடைய கணக்குப்படி சுமார் 10% சதம் வாக்காளர்கள் என்னை போன்று உள்ளனர். இங்கேதான் என்னுடைய வேண்டுகோள்.

  நீங்கள் பின்வருவனவற்றை செய்வீர்கள் என உறுதியளித்தால், நான் உங்களுக்கு ஒட்டு போட ரெடி! நீங்கள் இதை செய்தால் இந்த பத்து சதத்தில் குறைந்தது மூன்றாவது உங்களுக்கு உறுதியாகும். அது கிடைக்கும் பட்சத்தில் உங்கள் வெற்றியை அமித்ஷா வேலைகளையும் தாண்டி உறுதிப்படுத்தும்.

  அப்படி என்ன கேட்கிறோம்?

  1. உங்களின் உள்ளூர் நிர்வாகிகள் உங்கள் போட்டோவை பாக்கெட்டிலும், வண்டியிலும் வைப்பதை தடை செய்யுங்கள்.

  2. கட்சி நிர்வாகிகள் மீது பொதுமக்கள் புகாரளிக்க தனிப்பிரிவு ஒன்றை ஏற்படுத்துங்கள்.

  3. மக்கள் பிரதிநிதியாக பதவி கிடைப்பவர்கள் வருடம் ஒருமுறை தங்களின் சொத்துப்பட்டியலை தலைமையிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்று ஏற்பாடு செய்யுங்கள்.

  4. புறம்போக்கு நிலங்களை வளைத்தவர்களை உடனடியாக நீக்குவோம் என விதி கொண்டு வாருங்கள்.

  5. அரசு அலுவலகத்திற்கோ பொது இடங்களுக்கோ கூட்டத்தை திரட்டி கொண்டு போக கூடாது என விதி கொண்டு வாருங்கள்.

  6. காவல்துறைக்கும் கட்சி நபர்களுக்கும் மறைமுக கூட்டணி இருக்கும் உண்மை தெரிந்தால் இருவர் மீதும் கடும் நடவடிக்கை உடனே எடுக்கப்படும் என உத்தரவாதம் கொடுங்கள்.

  என்னதான் குறைகள் இருந்தாலும், ஜெயலலிதா அம்மையாரை மக்கள் ஆதரிக்க ஒரு பெரிய காரணம்- உள்ளூர் நிர்வாகிகள் ஆடாமல் அவர் கட்டுப்படுத்தியதுதான். கெஜ்ரிவால் அலையாக ஜெயிக்க காரணமும் உள்ளூர் நிர்வாகிகளை கஞ்சி போட்ட கழிசடைகளாக இல்லாமல், பந்தா இல்லாத மக்கள் சேவர்களாக அறிமுகப்படுத்தியதுதான்.

  இந்த தேர்தலிலும் தோற்றால் உங்கள் கட்சியையும், தலைமையும் சின்னாபின்னமாக்கி கடைசி அத்தியாயம் எழுதிவிடுவார்கள் என்பது உங்களுக்கே தெரியும். ஆகவே உங்கள் வெற்றிக்கு எதிரி உங்களின் கரைவேட்டி கலாச்சாரம் என்பதை மனதில்கொண்டு கடும் சீர்திருத்தத்தில் இறங்குங்கள். முதலில்
  இதை செய்வோம் என பகிரங்கமாக சொல்லுங்கள். தேர்தல் அறிக்கையில் குறிப்பிடுங்கள்.

  நாங்கள் ஆதரவளிக்க தயார்!! செய்வீர்களா??

  – சாமானியன்

  • புதியவன் சொல்கிறார்:

   1. உங்களின் உள்ளூர் நிர்வாகிகள் உங்கள் போட்டோவை பாக்கெட்டிலும், வண்டியிலும் வைப்பதை தடை செய்யுங்கள். – இது பலகாலமாக இருக்கிறதே… இதைத் தடை செய்வதால் என்ன உபயோகம்? பாக்கெட்ல ஜெ. படம் இருந்தால் அதிமுக என்றும் ஸ்டாலின் படமோ உதயநிதி படமோ இருந்தால் திமுக என்றும் தெரியும். அவ்ளோதான்.

   2. கட்சி நிர்வாகிகள் மீது பொதுமக்கள் புகாரளிக்க தனிப்பிரிவு ஒன்றை ஏற்படுத்துங்கள். – இது சாத்தியமே இல்லாதது. திமுக நிர்வாகிகளில் 90 சதத்திற்கும் மேலே, பொதுமக்களுக்கு இடைஞ்சல் செய்பவர்கள்தாம்.

   3. மக்கள் பிரதிநிதியாக பதவி கிடைப்பவர்கள் வருடம் ஒருமுறை தங்களின் சொத்துப்பட்டியலை தலைமையிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்று ஏற்பாடு செய்யுங்கள். – ஹா ஹா ஹா. தலைமையிலிருந்து எல்லாருமே ஊழல் செய்து சொத்து சேர்ப்பவர்கள்தாம்.

   4. புறம்போக்கு நிலங்களை வளைத்தவர்களை உடனடியாக நீக்குவோம் என விதி கொண்டு வாருங்கள். – கருணாநிதியிலிருந்து ஆரம்பித்து அனைவருமே திமுகவில் இதனைத்தான் செய்துகொண்டிருக்கிறார்கள்.

   5. அரசு அலுவலகத்திற்கோ பொது இடங்களுக்கோ கூட்டத்தை திரட்டி கொண்டு போக கூடாது என விதி கொண்டு வாருங்கள். – பொழுது போகாமலா, திமுக காரங்க பணத்தைச் செலவழித்து தேர்தல் வேலை பார்க்கிறார்கள்? கு.க.செல்வத்திற்குப் பதிலாக, தன் அல்லக்கை என்று ஒருவருக்கு உதயநிதி மாவட்டச் செயலாளர் பதவி கொடுத்த உடன், அவர் சொந்த ஊருக்கு (ஊரடங்கு நேரத்தில்) ஏகப்பட்ட கார்களோடு சென்று ஊர்வலம் நடத்தியதைத்தான் பார்த்தோமே.

   6. காவல்துறைக்கும் கட்சி நபர்களுக்கும் மறைமுக கூட்டணி இருக்கும் உண்மை தெரிந்தால் இருவர் மீதும் கடும் நடவடிக்கை உடனே எடுக்கப்படும் என உத்தரவாதம் கொடுங்கள். – இந்த மாதிரி கூட்டணி இருப்பதால்தானே அடுத்தவன் சொத்துக்களை திமுகவால் ஆக்கிரமிக்க முடிகிறது.

   திமுக கொள்கைகளுக்கு பங்கம் வருவதுபோல உங்கள் எதிர்பார்ப்புகள் இருக்கிறதே.. இதெல்லாம் நடக்கக்கூடியதா?

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s