3-வது அணியில் பல கட்சிகள் சேர்ந்தால்,அது யாரை அதிகம் பாதிக்கும்….?திமுக-வையா அல்லது அதிமுக-வையா… ?

….
….

….

சரத்குமார் கெட்டிக்காரர்.
அதிமுக- கூட்டணியில் அவருக்கு டிமாண்ட் இல்லை;
2 சீட்டுகள் கிடைக்கக்கூடும்; ஆனால் “பணம்” கொடுக்க
மாட்டார்கள்.

ஒரு புளியங்கொம்பு கிடைத்தது. பிடித்துக்கொண்டு விட்டார்.
பாரிவேந்தர் கட்சிக்கு பணத்திற்கு பஞ்சமே இல்லை;
(எஞ்சினீரிங் கல்லூரிகள்…!!!) அவர்களுக்குத் தேவை –
Recognition; அதாவது ஜெயிக்கா விட்டாலும் பரவாயில்லை;
அந்த IJK கட்சியின் ஓட்டு சதவீதத்தை அதிகரித்துக் கொள்ள
வேண்டும். அது அடுத்த தேர்தலின்போது, அவர்களின்
பேரம் பேசும் திறனை அது கூட்டிக் கொடுக்கும்…

ஆயிற்று; கமல் கட்சி, ஆம் ஆத்மி கட்சி ( தமிழ்நாட்டில்
ரொம்ப பலமான கட்சி ), சரத்குமார் கட்சி, பாரிவேந்தர் கட்சி
எனறு இப்போதே 4 கட்சிகள் ஆகி விட்டன. இன்னும் சில
சிறிய கட்சிகளும் இவர்களோடு சேர்ந்து கொள்ள
வாய்ப்பு இருக்கிறது. யார் வந்தாலும் சேர்த்துக்கொள்கிறோம்
என்று வெளிப்படையாகவே அறிவித்து விட்டார்களே.

தேமுதிக இங்கே வர வாய்ப்பில்லை;
காசு கொடுப்பவர்களுடன் தான் திருமதி விஜய்காந்த்
கூட்டணி வைத்துக்கொள்வார்; கடைசியாக அவர்
பாஜக சிபாரிசுடன் அதிமுக-வுடன் சேர்வதற்கே
வாய்ப்புகள் அதிகம்.

ஒருவேளை தினகரனின் அமமுக கட்சியும்
இவர்களுடன் 3-வது அணியில் சேரக்கூடும். அவர்களிடம்
ஏற்கெனவே இத்தகைய ஒரு திட்டம் உள்ளூர இருக்கலாம்.

இப்படி அதிகம் கட்சிகள் சேர்வதால், 3-வது அணி
ஒரு பெரிய அணி என்கிற தோற்றத்தைக் கொடுக்கலாம்.
ஆனால், பெரிய அணி என்பது வேறு; பலமான அணி
என்பது வேறு அல்லவா…?

இப்படி ஒரு பெரிய 3-வது அணி உருவானால்,
அது யாருக்கு பாதகம்….?
திமுக-வுக்கா அல்லது அதிமுக-வுக்கா…?

யோசிக்க வேண்டிய விஷயம்.

ஒருவேளை திமுக கூட்டணி பேச்சுவார்த்தையில்
சீட்டு பிரச்சினை காரணமாக காங்கிரஸ் கட்சி வெளியேறி
3-வது அணியுடன் சேர்ந்தால் –

அப்போது நிலை எப்படி இருக்கும்….?

பின்னூட்டங்களின் மூலம் நண்பர்களின் கருத்தை
வரவேற்கிறேன்….!!!

.
——————————————————————————————————

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

5 Responses to 3-வது அணியில் பல கட்சிகள் சேர்ந்தால்,அது யாரை அதிகம் பாதிக்கும்….?திமுக-வையா அல்லது அதிமுக-வையா… ?

 1. புதியவன் சொல்கிறார்:

  1. காங்கிரஸுக்கு இப்போது போக்கிடம் இல்லை. அதனால் அவங்க 23-25 தொகுதிகள் திமுகவிடம் வாங்கிக்கொண்டு அமைதியாகிவிடுவார்கள். (அவங்க தேதிமுக மாதிரி) ஒருவேளை அவங்க, இங்க 25, புதுச்சேரில பாதிக்குப் பாதி என்ற திட்டத்துக்கு ஒத்துக்கொள்ளலாம். பாஜகவுக்கு 20 சீட்டுகள் என்றால், தங்களுக்கு அவங்களைவிட 5 சீட்டுகள் அதிகம் என்று சொல்லி அமைதியாயிடுவாங்க என்று நினைக்கிறேன். ஆனால் நிச்சயம் ராகுல், நிறைய தடவை பிரச்சாரத்துக்கு தமிழகம் வந்து, திமுகவின் வெற்றியை, காங்கிரஸுக்கும் ஆன வெற்றியாகக் காட்டுவார்.
  2. கமலஹாசன் கட்சி 3 சதவிகித வாக்கு வாங்கினாலே அதிகம்னு நான் நினைக்கிறேன். ஒட்டுமொத்தமாக இந்த மூன்றாவது அணி, 5 சதவிகிதத்தைத் தாண்டாது.
  3. நாலாவது அணியான அமுமுக (என்ன பேருன்னே பிடிபடலை) தினகரன் கட்சி நிச்சயம் 6-8 சதவிகித வாக்குகள் வாங்கலாம். இது அதிமுகவின் வாக்குகள்.
  4. அதிமுக, என்னதான் நல்லது செய்திருந்தாலும், அதன் வாக்கு வங்கி 30 சதவிகிதம்கூட அடையாது, 25 ஆகலாம் என்பது என் எண்ணம்.
  5. திமுக 40-45 சதவிகித வாக்குகள் வாங்கும் என நினைக்கிறேன். அதாவது 150+ தொகுதிகள் வெற்றிபெறும் என்று நினைக்கிறேன். இதற்குக் காரணம், திமுகவின் வாக்குகள் 25, காங்கிரஸ் 5, கிறிஸ்துவ வாக்குகள் 8, இஸ்லாமியர்களின் வாக்குகள் 5 என்ற விகிதமாக இருக்கும். அதிகமானாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. Misc கட்சிகளான கம்யூனிஸ்ட், விசிக, மதிமுக…. போன்றவை மொத்தமாக 3-4 சதவிகிதம்
  6. ஐந்தாவது அணியாக சீமான் நாம் தமிழர் கட்சி – 5 சதம்.

  இப்படித்தான் நான் கணிக்கிறேன். ஆனாலும் சிலர், அப்படி இருக்கமுடியாது என்று சொல்கின்றனர். பார்ப்போம்.

  உங்க கேள்வி 3வது அணி அமைந்தால் யாருக்கு பாதகம்? வாக்காளர்கள், திமுக, அதிமுக என்று மட்டும் பார்ப்பார்கள். அதன் அடிப்படையில் 3, 4, 5வது அணிகள் (தினகரன் கட்சி தவிர. அந்தக் கட்சி அதிமுக வாக்குகளைத்தான் வாங்கப் போகிறது) காணாமல் போகவே வாய்ப்பு இருக்கிறது. இஸ்லாமிய கிறிஸ்துவ வாக்குகள் மொத்தமாக திமுகவுக்கு மட்டும்தான் போகும்.

 2. Raghuraman சொல்கிறார்:

  Sir, my views.

  There is no trend for vote for power. It is only vote for change. That is why most of the parties are trying to get all non-ruling parties into alliance.

  By looking at this scenario, adding multiple alliance group benefits the ruling party.

  This is what happened in 2016. However, during 2016, there was JJ. Since she is not alive now, there may be an issue in admk camp. The last minute change of cadres may bring out lot of corruption issues into public and this may impact Admk.

  For DMK – split of Admk loyalties may benefit them, but split of anti incumbence is against their hope.

  For ADMK – split of loyalty and closeness to BJP is against them. But will be happy for getting vote split due to muti-point election.

  There is alos a process called post election alliance. This will decide fate of people.

  Sorry not able to type fortune.

 3. sankar .b சொல்கிறார்:

  admk bjp alliance 120 to 130 dmk alliance 100 to 110 rest of single nos kamal hasan will never spent money so sarath kumar will join to admk or dmk another wave dmk will retain largest single party dmk will get below 100 there will chance coalition government and owasi will contest in tamil Nadu there will be interesting to watch

 4. N.Rathna Vel சொல்கிறார்:

  ஆண்டிகள் கூடி கட்டும் மடம்

 5. tamilmani சொல்கிறார்:

  உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.
  வான்கள் , டாடா சுமோக்கள் ,பேருந்துகள் மூலம் மக்களை கூட்டி வந்து
  அவர்களுக்கு உணவு தேநீர் வழங்கப்படுறது. பிறகு
  ஏற்கனவே தேர்நதெடுக்கப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்ட “பொதுமக்கள் ”
  கேள்விகளையும் பிரச்னைகளையம் மைக்கின் மூலம் கேட்கிறார்கள்.
  உடனே ஸ்டாலின் எழுந்து ஒரு துண்டு சீட்டை எடுத்து ஏற்கனவே எழுதி
  கொடுக்கப்பட்ட பதிலை வாசிக்கிறார். உடன்பிறப்புகள் அடுத்து நம் ஆட்சிதான் உங்கள் குறைகள் 100 நாட்களில் தீர்க்கப்டும் என்கிறார்கள். ஏகப்பட்ட பொருட்ச்செலவில் இந்த stage managed show நடத்தப்படுகிறது .
  தேர்தல் நிபுணருக்கு 370 கோடி கொடுப்பவர்கள் இந்த தடவை நிறைய பணத்தை
  இறக்கி இருக்கிறார்கள் . பலன் தருமா ? காங்கிரெஸ்ஸை கழட்டி விட கூட தயாராக
  இருக்கிறார்கள். இந்த overconfidence கருணாநிதி அவர்களுக்கு கூட இல்லை.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.