முகூர்த்த நாள் முடிவானது….!!!


….

கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக தமிழகத்தை
ஆட்டிப்படைக்கும் அரசியல் அபத்தங்கள் எல்லாம்
ஒருவழியாக முடிவுக்கு வருகின்றன.

தமிழ் நாட்டில் ஏப்ரல் 6-ந்தேதி சட்டமன்ற தேர்தல்
நடைபெறும் என்று இன்று மாலை தேர்தல் கமிஷன்
அறிவித்து விட்டது.

தமிழக மக்கள் தான் எத்தனை அதிருஷ்டசாலிகள்…!!

கடந்த சில மாதங்களாக, ஏகப்பட்ட முதலமைச்சர்
வேட்பாளர்கள் இங்கே உலவி வந்தனர். 3%, 4% ஓட்டு
வைத்திருப்பவர்கள் கூட தான் தான் முதல்வர் என்று
சொல்லி வந்த அபத்தங்களை எல்லாம் பார்த்தோம்..

எத்தனையெத்தனை முதல்வர் வேட்பாளர்கள் -!!!

– மிகவும் பலமான 3-வது அணி ம.நீ.ம. கட்சியின்
தலைமையில் அமைக்கப்படும். கமல்ஹாசன் தான்
எங்கள் முதல்வர் வேட்பாளர் என்றும் சொல்லும் மநீம.

– தமிழ் நாட்டின் 234 தொகுதிகளிலும் தனியாக களம்
கண்டு வெற்றி பெறுவோம்….என்று சொல்லிய
நாம் தமிழர் இயக்க அண்ணன் சீமான்…!!!

– தேமுதிக தயவு இல்லாமல் யாரும் ஆட்சியமைக்க
முடியாது என்று சவால் விட்ட திருமதி பிரேமலதா
விஜய்காந்த்…!!!

– எங்கள் தயவு இல்லாமல் யார் ஆட்சி
அமைக்கிறார்கள் பார்த்து விடுவோம் என்று
புதிதாக சவால் விட்ட சித்தீ ராதிகா சரத்குமார்.

– எந்தப்பக்கம் என்று சொல்லமல் சஸ்பென்ஸ்
காத்து, காரியம் சாதித்துக்கொள்ள முயன்ற பா.ம.க.
(அவர்கள் எந்தப்பக்கம் போவார்கள் என்பது,
அவர்களைத் தவிர மற்ற எல்லாருக்கும் தெரியும்
என்பது தான் தமாஷ்…!!!)

– அனைவரும் ஒற்றுமையாக இருந்து
மீண்டும் அம்மா ஆட்சி ( ??? ) அமைய உழைக்க வேண்டும்
என்று ஒரு பக்கம் அறிக்கை மூலம் வேண்டுகோள்
விடுத்த – வீரத்தமிழச்சி சசிகலா அம்மையார்.

அதே நாளில் அமமுக சார்பாக அடுத்த முதல்வர்
வேட்பாளராக டிடிவி தினகரன் நிறுத்தப்படுகிறார்
என்று அறிவித்த அமமுக…???

எந்த மீடியாவுக்கு சென்றாலும்
“நான் ரெடி…. நீங்க ரெடியா” என்று
பயமுறுத்தி அழைப்பு விடுக்கும்,

ஏற்கெனவெ தமிழக மக்கள் தன்னை முதலமைச்சராக
தேர்ந்தெடுத்து விட்டார்கள் என்று நம்பிக் கொண்டிருக்கும்
திருவாளர் மு.க.ஸ்டாலின்.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு
திமுக தேர்தல் அறிக்கையில் சொல்ல வேண்டிய
கவர்ச்சிகரமான திட்டங்களை எல்லாம் –

ஸ்டாலின், அசட்டு அவசரத்துடன் பொதுமேடைகளில்
நான் ஆட்சிக்கு வரும்போது நிறைவேற்றுவேன்
என்று முன் கூட்டியே அறிவிக்க –

அவற்றை, ஒவ்வொன்றாக,

(கடைசியாக இன்று தேர்தல் அறிவிப்பு வரும் சில மணி
நேரங்களுக்கு முன் அறிவித்த -)

கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய 6 சவரன்
வரையிலான நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும்,

கூட்டுறவு வங்கிகளில் மகளிர் சுய உதவிக்குழு வாங்கிய
கடன்கள் ரத்து செய்யப்படும்,

விவசாயிகளுக்கு 24 மணிநேரமும் மும்முனை மின்சாரம்
ஏப்ரல் 1 முதல் – இலவசமாக வழங்கப்படும்…

உட்பட அரசு ஆணைகளை, மசோதாக்களை – நிறைவேற்றி,

ஸ்டாலின் தான் ஆட்சிக்கு வரும்போது செய்யப்போவதாக
சொல்லும் திட்டங்கள் எல்லாம் நாங்கள் ஏற்கெனவே
தீர்மானித்தது தான். அவற்றைத்தான் இப்போது
நிறைவேற்றிக்கொண்டிருக்கிறோம்.

அரசாங்கத்தில் இருக்கும் அவர்களது
ஆட்கள் மூலம் அவற்றை முன் கூட்டியே அறிந்து கொண்டு
ஏதோ தனது திட்டத்தைத் தான் நாங்கள் நிறைவேற்றுவதாக்
சொல்லிக்கொண்டு திரிகிறார் …..

-என்று சொல்லும் புத்திசாலி எடப்பாடி அவர்கள் ஒருபுறம்.

————————————-

– ஆனால் தமிழக மக்களை அதிகம் சோதனை செய்யாமல்,
பல முதலமைச்சர் வேட்பாளர்கள் பெரிய கட்சிகளிடமிருந்து
கிடைக்கும் சீட்டுகளை வாங்கிகொண்டு, தங்கள்
முதலமைச்சர் ஆசையை தியாகம் செய்து விடுவார்களென்று
நம்பலாம். அநேகமாக இன்னும் ஒரு வாரத்தில் தெரிந்துவிடும் –
இறுதியாக களத்தில் எத்தனை முதலமைச்சர் வேட்பாளர்கள்
என்று….

தமிழக மக்கள் பார்த்து ரசிக்க –
அடுத்த சில வாரங்களுக்கு,
நிறைய வேடிக்கைகள் காத்திருக்கின்றன.

.
————————————————————————————————–

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

7 Responses to முகூர்த்த நாள் முடிவானது….!!!

 1. சைதை அஜீஸ் சொல்கிறார்:

  6-4-2021 தேர்தல் நடக்குமாம்
  2-5-2021 முடிவு அறிவிப்பாங்கலாம்.
  அதாவது ப்ளான் பண்ணியாசு, யார் ஜெயிப்பாங்க என்று.

  • புதியவன் சொல்கிறார்:

   @சைதை அஜீஸ் – அவசரப்பட்டு இப்படி எழுதக்கூடாது. திமுக 150 தொகுதிகளுக்குமேல் வெற்றி பெற்றால், நீங்க எழுதினதை எப்படி வாபஸ் வாங்குவீங்க? எப்போதும் சாதனங்களை ஒவ்வொரு கட்சியினரும் காவல் காப்பார்கள். நீங்க நினைத்த முடிவு வரலைனா சாக்குகளை இப்போ தயார் செய்யறீங்களா? உடனேயே எண்ணியபோது ப.சி. நியாயமாகத்தான் வெற்றிபெற்றார் என்று ஏகப்பட்ட வருடங்கள் ஆராய்ச்சி செய்து நீதிமன்றம் தீர்ப்பு தந்தது. அதையும் கவனத்துல வைத்துக்கொள்ளுங்கள்.

   • சைதை அஜீஸ் சொல்கிறார்:

    அது எப்படி புதியவன், அஜீஸ் என்று பெயர் உள்ளவன் எல்லாம் திமுக-வாகத்தான் இருப்பாங்க என்று முடிவெடுத்துவிட்டீங்க?(காமை ஐயாவும் இதில் சேர்த்தி)
    உங்களின் அபிப்பிராயத்தை மாற்ற என்னால் முடியாது.
    நான் சொல்ல வந்தது EVM பயன்படுத்தியதே fast & accurate with lowcost எனபதால்தான்.
    ஆனால் fast-ம் இல்லை
    accurate-ம் இல்லை
    low cost-ஆகவாவது இருக்குமா என்றால் வாங்கிய பல மெஷின்கள் (லட்சக்கணக்கில்) காணாமல் போய்விட்டன என்று RTI-ல் சொல்றாங்க.
    திமுக ஜெயிச்சாலும் தப்பு நடந்தா தப்புதான் புதியவன்.
    PK வந்து திமுக-வோடு சேரந்தப்பவே எல்லாம் மாறிவிட்டது. பொருத்திருந்து பாருங்கள.

  • புதியவன் சொல்கிறார்:

   ஒரு மாத இடைவெளி எதற்குன்னு நான் படிக்கலை. ஆனால் மிஷின்ல, இவங்கதான் வெற்றி பெறணும்னு மாத்திடுவாங்க என்ற கான்சப்டையே நான் நம்பவில்லை. அப்படி ஒரு வாய்ப்பு இருந்திருந்தால், காங்கிரஸ் பரிதாபமாக ஆட்சியைப் பறிகொடுத்திருக்காது, மத்தியில் பாஜக இருக்கும்போது வெற்றியும் பெற்றிருக்காது. அதனால மிஷின்ல குறை சொல்வதை நாம நிறுத்திக்கணும். இரண்டாவது, தமிழகத்தில் வெற்றி வாய்ப்பு உள்ள கட்சி (என் அனுமானத்தில், இன்றைய தினத்தில்) திமுகதான். அதிமுக+பாஜக இல்லை என்று நினைக்கிறேன். அதனால, நீங்க ‘ப்ளான் பண்ணியாச்சு’ என்று எழுதியதும், திமுக வெற்றி பெறாது என்ற கவலையில் எழுதறீங்க என்று நினைத்தேன்.

   பேப்பர் பேலட்டில் (சென்னை மாநகராட்சித் தேர்தலின்போது) திமுக கள்ளத்தனம் செய்து, மற்ற முகவர்களை ஓட ஓட விரட்டி வெற்றி பெற்றதை, வாக்குகள் எத்தனை என்று எண்ணி, எழுதும்போது மாற்றி எழுதி வெற்றி பெற்று அமைச்சரான சம்பவத்தை நீங்க மறந்திருக்க மாட்டீங்கன்னு நினைக்கிறேன்.

 2. tamilmani சொல்கிறார்:

  chennai public due to bus strike called for by DMK and communists are not able to go to hospitals, offices, factories and suffer a lot. During corona time, transport workers were paid full wages without doing any work.
  This is election time and if middle class people
  suffer by these strikes, then it will definitely reflect in the election results and dmk may suffer defeat.,

  • புதியவன் சொல்கிறார்:

   இந்த ஸ்டிரைக், திமுகவால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்று எத்தனை வாக்காளர்களுக்குப் புரியும்? ஸ்டாலின், 20,000 கிராம சபைக் கூட்டங்கள் நடத்தியுள்ளோ என்று சொல்லும்போதே ‘ஆ’ என்று வாய்பிளக்கும் மக்கள், எத்தனை கிராமங்கள் தமிழகத்தில் இருக்கு, ஒரு நாளைக்கு இரண்டு தயாரிக்கப்பட்ட கூட்டங்கள் (நாடகங்கள்) நடத்தினாலும், 20.000 கூட்டங்கள் நடத்த 20 வருடங்களாவது ஆகுமே என்று யோசிக்கத்தெரியாதவர்களுக்கு இது மட்டும் புரியுமா என்ன? நான் அரசு அலுவலர்களின் ஸ்டிரைக்கை எதிர்பார்த்தேன் (பெரும்பாலும் அவங்கதான் திமுக சார்பா ஆளும் கட்சிக்குக் குடைச்சல் கொடுப்பாங்க)

 3. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  ஓட்டு எண்ணிக்கை ஒரு மாதத்திற்குப் பிறகு தான்
  என்று தேர்தல் கமிஷன் அறிவித்ததன் பின்னால்,
  அவர்களுக்கென்று ஒரு காரணம் இருந்தாலும் கூட –
  அது அபத்தமானதாகவே தெரிகிறது.

  4, 5 மாநிலங்களுக்கு ஒரே சமயத்தில் தேர்தல்கள்
  நடக்கும்போது, ஒன்றின் ரிசல்ட் வெளிவந்து விட்டால்,
  அந்த ட்ரெண்டப் பார்த்து மற்ற மாநில மக்கள்
  மனம் மாறி விடுவார்கள்; அந்த மாநில தேர்தல் முடிவுகளை
  அது பாதிக்கும் என்று தேர்தல் கமிஷன் காரணம்
  கூறுவது வடிகட்டிய முட்டாள் தனம்.

  வங்காளத்திலோ, அஸ்ஸாமிலோ நடக்கும் தேர்தல்களின்
  முடிவை, தமிழ்நாடு அல்லது கேரளாவின் முடிவுகள்
  எந்த விதத்தில் பாதிக்கும்….?

  இந்த விஷயத்தில் அனைத்து கட்சிகளும் ஒன்று சேர்ந்து
  தேர்தல் கமிஷனிடம் பேச வேண்டும்.

  அநாவசியமாக, டென்ஷன், பணச்செலவு,
  நிர்வாகத்தில் செயலற்றதன்மை நீடிப்பு
  ஆகியவற்றை தவிர்க்க இது மிக மிக அவசியம்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.