கமல்ஹாசனின் ஆசைகள்….!!!!

….
….

….

…..

ஆசைகள்…. பலவிதம்….!
தனி மனித ஆசை வேறு…
பொது வாழ்வில் இருக்கின்றவர்களின் ஆசை வேறுவிதம்…!

சிலரின் ஆசைகளை நினைத்தால் தமாஷாக இருக்கிறது…
சிலரதோ… விசித்திரமாகவும் அபூர்வமாகவும் இருக்கும்.

நடிகர், அரசியல்வாதி, மக்கள் நீதிமன்றத்தின்
நிரந்தரத் தலவர்

( இதற்காக தனியே bye-law நிறைவேற்றி
இருக்கிறார்களே- அவரே தலமை தாங்கிய கூட்டத்தில் …!)

திருவாளர் கமல்ஹாசனின் ஆசைகளை
கொஞ்சம் ஒருங்கிணைத்துப் பார்த்தேன்….

1) தமிழக முதலமைச்சராக கோட்டையில் அமர்ந்து
கோலோச்ச வேண்டும்.
( அண்மைய எதிர்காலத்தில் அது சாத்தியம் இல்லாதது
என்பது அவருக்கே தெரியும் என்பதால், தனது
கட்சிக்காரர்களையும், ரசிகர்களையும் – போகின்ற
இடத்திலெல்லாம் “வருங்கால முதல்வரே” என்று
கோஷமிட வைது கேட்பதன் மூலம் கொஞ்சமாகவாவது
இந்த ஆசையை நிறைவேற்றிக் கொள்ள முயற்சி .. ? )

2) பலமான 3-வது அணி ஒன்றின் தலைவராக
உருவெடுக்க வேண்டும்.

3) திமுக கூட்டணியிலிருந்து எப்படியாவது காங்கிரசை
பிய்த்தெடுத்து, தன்னோடு கூட்டணி சேர வைக்க வேண்டும்.

4) அண்ணன் சீமான் போன்றவர்களின் கட்சிகளை எல்லாம்
தன் தலைமைக்கு கீழே 3-வது அணியில் கொண்டு
வர வேண்டும்.

5) ஒருபக்கம் அதிமுக, திமுக இரண்டுக்குமே எந்தவித
வித்தியாசமும் இல்லை; ஒரே மாதிரி தான் செயல்படுகிறார்கள்
என்று சொல்லிக்கொண்டே,

பலமான 3-வது அணியை உருவாக்கப்போவதாக
ஸ்டாலினை பயமுறுத்தி, திமுகவுடன் கூட்டு சேரும்
முயற்சியை வலுப்படுத்தி, எப்படியாவது
திமுக கூட்டணிக்குள் நுழைந்து இடம்
பிடித்து விட வேண்டும்.

6) தமிழக பாஜகவை கிண்டலடித்து – விமரிசித்து,
பேசினாலும் கூட, தப்பித்தவறியும் மோடிஜியை பகைத்துக்
கொண்டு விடக்கூடாது.

7) எவ்வளவு முயன்றாலும், ரஜினியிடமிருந்து
ரெஸ்பான்ஸ் கிடைக்கவில்லை யென்றாலும் கூட,
குறைந்த பட்சம், அவரிடமிருந்து எப்படியாவது
“உங்கள் முயற்சி வெற்றிபெற வாழ்த்துகிறேன்”
என்கிற ஒரு வாழ்த்துச்செய்தியை பெற்றுவிட்டாலும் கூட
போதும்; அதை வைத்துக்கொண்டே ரஜினி ஆதரவு
என்று ஓட்டி விடலாம்.

8) வருகிற மே மாதம் எப்படியாவது,
ஒரு 10 மக்கள் நீதி மன்ற எம்.எல்.ஏ.க்கள் புடைசூழ
தமிழக சட்டமன்றத்திற்குள் நுழைந்துவிட வேண்டும்.

9) திரைப்படங்களிலும், நிஜ வாழ்க்கையிலும் தன்னுடன்
இருந்த பெண்களுக்கு செய்த பாவத்திற்கு ஏற்கெனவே
பிராயச்சித்தம் செய்தாகி விட்டது….

” அத்தனை இல்லத்தரசிகளுக்கும் மாத ஊதியம்”…அறிவிப்பு…!!!

———-

– ஆனால் இந்த ஆசைகள் எதுவுமே, தமிழக மக்களின்
எதிர்காலத்திற்காகவோ, அவர்களின் நன்மைக்காகவோ
உருவானவை அல்ல….

கமலின் அத்தனை ஆசைகளும், முற்றிலும்
சுயநலம் சார்ந்தவை. அவரது சொந்த நலன்கள்,
அரசியல் வளர்ச்சி மற்றும் எதிர்காலத்திற்கானவை.

——-

பார்க்கலாம்…

“இருந்தால் தேவலை” என்று கமல்ஹாசனால் கூறப்படும்
அந்த ஆண்டவன் – இத்தனை மாறுபட்ட ஆசைகளில்
எதைத்தான் நிறைவேற்றி வைக்கப்போகிறானோ…!!!!

-மே மாதம் வரை காத்திருக்க வேண்டும்….!!!

.
—————————————————————————————————-

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

4 Responses to கமல்ஹாசனின் ஆசைகள்….!!!!

 1. arul சொல்கிறார்:

  absolutely correct. 100% Selfish person..I do not know how come Rajini Sir maintain the friendship ..very tough

  • புதியவன் சொல்கிறார்:

   Every human being is selfish (let us not consider exceptions)., including Rajini. However, I dont think Rajini is acting in front of public (on political matters or his opinion about political leaders/decisions etc.). He talks what his conscience says. That is the difference between these two. That doesn’t mean, one can’t have friendship with the other person. I am sure, RajiniKanth will keep quiet. His focus is on acting another two films.

 2. புதியவன் சொல்கிறார்:

  அரசியலில் நுழைய முற்படும் எல்லோருக்கும் முதலமைச்சர் ஆகவேண்டும் என்ற ஒரே நோக்கம்தான். கமலஹாசன் மட்டும் விதிவிலக்காக இருக்க முடியுமா? சீமானும் (வாக்குவங்கி இருக்கு என்று நிரூபித்தவர்), தேய்ந்துவிட்ட தேதிமுக விஜயகாந்த் (அவருக்கு இருக்கோ இல்லையோ..அவர் மனைவிக்கு ஆசைகள் அதீதம்) என்று பலருக்கும் அதே சிம்மாசனத்தில் ஆசை. ஆசை வைப்பது தவறில்லை. இப்போ புதுசா, சகாயம் அவர்களும் தொபுக்கடீர் என்று அரசியலில் குதித்திருக்கிறார். அவரும் நேர்மையான ஆட்சி தரப்போகிறாராம். (இவருக்கு பில்டப் இந்த இணைய புளுகுச் செய்தித்தளங்கள். ஒரு கோடி இளைஞர்கள் சகாயம் அரசியலுக்கு வரணும்னு ஆதரவு தராங்களாம் என்று நேரில் பார்த்ததுபோல எழுதியிருக்காங்க)

  ஆனால் இவங்க எல்லாம், நேர்மையின் சிகரம் போலவும், இப்போது இருக்கும் அரசு ஊழல் என்றும் இவங்க ஆட்சிக்கு வந்துவிட்டால் நேர்மையாக ஆட்சி நடத்துவார்கள் என்று காதில் பூமாலை சுற்ற முயல்கின்றனர். இதுவரை இவங்க சொந்த வாழ்விலும், சொந்தத் தொழிலிலும், அலுவலகத்திலும் எவ்வளவு நேர்மையாக இருந்தாங்க என்பதைத்தான் நாம பார்த்துக்கொண்டிருக்கிறோமே.

  அந்த சைடுல, திமுக அவ்வப்போது பி.கே சொல்லும் கட்டளைகளுக்கு ஏற்ப, தங்கள் முடிவை அடிக்கடி மாற்றி, சந்தர்ப்பத்துக்குத் தகுந்த மாதிரி மாற்றிக்கொண்டே இருக்கிறது. சபரீசன் அவர்கள், 21 தந்துடலாம்னு கமலஹாசனுக்கு ஆஃபர் பண்ணியிருக்காராம், மீதி 20ஐ காங்கிரஸுக்குக் கொடுக்கலாம்னு ஐடியாவாம். ஆனால் பி.கே எடுத்த கணிப்பு பிரகாரம் 2 சதவிகிதம்கூட கமலஹாசனுக்கு வாக்குகள் வராதாம். கமலஹாசன் திமுக தலைவர் வெளிப்படையாக தன்னை கூட்டணிக்கு வரச்சொல்லுவார் என்று எதிர்பார்க்கிறார். ஆனால் திமுக நிச்சயம் காங்கிரசை கழற்றிவிடாது என்று தோன்றுகிறது. 25 சீட்டுகள் கொடுக்கும் என நம்புகிறேன். (அதுக்குப் பதிலா, பாதிப் பாதி இடங்களில் பாண்டிச்சேரில போட்டிபோடலாம்) திருமா, வைகோ, கம்யூனிஸ்டுகள், முஸ்லீம் கட்சிகள் போன்றவைகளுக்கு வேறு வழியிருக்காது. ‘நம்பிக்கைக்குரியவரல்லாத’ திருமா, திமுக சின்னத்தில் நிற்பார் எனத் தோன்றுகிறது. வைகோ நிச்சயம் உதயசூரியன் சின்னத்தில் நின்று, தேர்தலுக்குப் பிறகு மதிமுகவை கலைத்துவிட்டு திமுகவில் சேர்த்துவிடுவார் என்று நான் நம்புகிறேன். (இதையெல்லாம் பல்வேறு செய்திகள் காணொளிகளைக் கண்டு நான் அனுமானிக்கிறேன்)

  அதனால கமலஹாசன், அனேகமா ஓவைசி கட்சியுடன் கூட்டுச் சேர வாய்ப்பு இருக்கும் என்று நினைக்கிறேன். அதனால உங்க அனுமானமான, கமலஹாசன் பத்து எம்.எல்.ஏக்கள் புடைசூழ சட்டமன்றத்துக்குச் செல்வது 2021ல் நடக்காதுன்னு தோணுது.

 3. E.n.Babu சொல்கிறார்:

  இதில் ஒன்று கூட உண்மை இல்லை.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.