ஒன்றும் தெரியாத அப்பாவியா குமாரசாமி ….!!!

….

….

 

….

கர்னாடகா முன்னாள் முதல்வர் குமாரசாமி கூறியதாக
ஒரு செய்தி வெளியாகி இருக்கிறது….

———————————————————————-

http://www.puthiyathalaimurai.com/newsview/93758/Threatened-For-Money-
For-Ram-Temple-Donation–HD-Kumaraswamy-Alleges

ராமர் கோயில் கட்ட நன்கொடை பெற வந்தவர்களால்
அச்சுறுத்தப்பட்டேன் என்று கர்நாடகா முன்னாள் முதல்வர்
குமாரசாமி குற்றம் சாட்டியிருக்கிறார்.

ஆர்.எஸ்.எஸ் அமைப்பை நாஜிக்களுடன் ஒப்பிட்ட தனது
கருத்துகளால் பரபரப்பை ஏற்படுத்திய எச்.டி. குமாரசாமி இன்று
புதிய குற்றச்சாட்டை எழுப்பினார். ராமர் கோயில்
நன்கொடைகளுக்காக தன்னிடம் வந்த நபர்களால்
“அச்சுறுத்தப்பட்டேன்” என்று குற்றம்சாட்டினார். ராமர் கோயில்
நன்கொடை இயக்கத்தில் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறல் இல்லை என்றும் குற்றம் சாட்டிய குமாரசாமி,
“நானும் ஒரு பாதிக்கப்பட்டவன்” என்றார்.

நன்கொடைகள் பெற 15 நாட்களுக்கு முன்பு ஒரு குழு தன்னை
சந்தித்து மிரட்டியதாக அவர் கூறினார். மக்களும் ராமர்
கோயிலுக்கு நன்கொடை கேட்டு மிரட்டப்படுகிறார்கள். ராமர்
கோயிலுக்கு நன்கொடை அளித்தவர்களையும்,
அளிக்காதவர்களையும் குறிக்க வீடுகளில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருப்பது  குறித்து தெளிவுபடுத்துமாறும் அவர் கேட்டுக்கொண்டார். இது நாஜிக்கள்   செய்ததைப் போன்றது
என்றும், ஜெர்மனியில் நாஜி கட்சி நிறுவப்பட்ட நேரத்தில்
ஆர்.எஸ்.எஸ் இந்தியாவில் பிறந்தது என்றும் கூறினார்.

ராமரின் பெயரில், அங்கீகரிக்கப்படாத நபர்கள் பணம்
சேகரிக்கின்றனர்.
அவர்களுக்கு யார் அங்கீகாரம்
அளித்துள்ளனர்?
யார் இதற்குக் கணக்குக் கொடுக்கப்
போகிறார்கள்?
யார் நன்கொடை தருகிறார்கள். யார் கொடுக்கவில்லை?
என்று குறிக்கும் பிரச்னை நடந்து கொண்டிருக்கிறது. இது ஏன்
நடக்கிறது? என்ன நோக்கம்? ” என்றும்
குமாரசாமி கேள்வி எழுப்பினார்.

———————————————————————————–

திருவாளர் குமாரசாமி சாதாரண மனிதரல்ல.
ஒன்றும் தெரியாத அப்பாவியல்ல.
35 ஆண்டுகளுக்கும் மேலாக அரசியலில் இருப்பவர்.
பல விதங்களிலும், பல சமயங்களிலும்,
நேர்மையற்ற முறையில் பதவியைப் பிடித்தவர்.
மக்களின் உண்மையான அதிகாரத்தை பெறாமலே
சில முறைகள் கர்நாடக முதலமைச்சராக கூட
பதவி வகித்தவர்.

அப்படிப்பட்ட குமாரசாமி இப்படி பட்டிக்காட்டான் போல்
குற்றச்சாட்டுகளை கூறுவது வியப்பாக இருக்கிறது.

தன்னை இது சம்பந்தமாக சந்தித்தவர்கள் யார்…?
மிரட்டியவர்கள் யார்…?
என்ன சொல்லி மிரட்டினார்கள்…?
அவர் வீட்டில் சிசிடிவி காமிரா இல்லையா…?
அவருடன் கூட உதவியாளர்கள் யாரும் இல்லையா …?
பாதுகாவலர்கள் யாரும் இல்லையா ?
அவர் வீட்டிற்குள் வந்தவர்கள், தங்களைப்பற்றிய
விவரங்களை தெரிவிக்காமல் வந்திருக்க முடியுமா …?

இருந்தும், இப்படி ஆதாரம் இல்லாமல் குற்றச்சாட்டை
செய்தியாளர்களிடையே கூறுவதன் நோக்கம் என்ன ?

ராமர் கோவில் கட்ட நன்கொடை வசூல் செய்வது
தவறு அல்ல. ஆனால், அதற்கு எதாவது ஒரு
ஸ்தாபனம் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும்.
யார் வசூல் செய்வார்கள் என்று உரிய முறையில்
அறிவிக்கப்பட வேண்டும். அதில் கட்டாயம் ஏதுமில்லை
விரும்பி நன்கொடை அளிப்பவர்களிடமிருந்து
மட்டுமே நன்கொடை பெறப்படும் என்றும் அறிவிக்கப்பட
வேண்டும். அப்படி வசூல் செய்யப்படும் பணத்திற்கு
உரிய முறையில் கணக்கு வைக்கப்பட வேண்டும்.
அவ்வப்போது பொதுவெளியில் அவை பற்றிய விவரங்கள்
தெரிவிக்கப்பட வேண்டும்.

இவற்றை மீறி, குமாரசாமி கூறுவது போல் மிரட்டி
வசூல் செய்யப்பட்டால், நிச்சயமாக அது சட்டப்படி குற்றம்.
கிரிமினல் குற்றம்.

இவை நிச்சயமாக தடுக்கப்பட வேண்டும். இத்தகைய
நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை
எடுக்கப்பட வேண்டும்.

இதற்கு குமாரசாமி என்ன செய்திருக்க வேண்டும்….?

உரிய ஆதாரங்களுடன், சம்பந்தப்பட்டவர்களின் பெயர்,
மற்ற விவரங்களுடன் சட்டப்படி நடவடிக்கை எடுக்க
காவல் துறையில் புகார் கொடுத்திருக்க வேண்டும்.

ஒரு முன்னாள் முதல்வரான குமாரசாமியையே
மிரட்டத் துணிந்தவர்கள் சாதாரண பொதுமக்களையும்
எந்த அளவிற்கு மிரட்டத்துணிவார்கள் என்பது
புரிந்துகொள்ளக்கூடிய விஷயமே. எனவே போலீசில்
புகார் கொடுத்திருக்க வேண்டியது, ஒரு சாதாரண
குடிமகன் என்கிற முறையில் குமாரசாமியின்
அடிப்படைக் கடமை.

இதைச் செய்யாமல், செய்தியாளர்களிடம்
பொத்தாம் பொதுவாக குறை கூறுவதன் மூலம்
குமாரசாமி என்ன சாதிக்க விரும்புகிறார்….?

உண்மையிலேயே மிரட்டப்பட்டிருந்தால்,
போலீசில் புகார் கொடுத்திருக்கலாமே…?
ஏன் செய்யவில்லை…?

நடந்தது உண்மையாகவே இருக்கலாம் –

ஆனாலும் கூட, குமாரசாமியின் நடத்தை அவரது
கூற்றுக்கு உள்நோக்கம் இருப்பதாக, இந்த சம்பவத்தை
வைத்து அவர் அரசியல் லாபம் பெற முயல்வதாக
சந்தேகம் ஏற்படுத்துவதை தவிர்க்க முடியவில்லையே ..!!!

 

 

.
————————————————————————————————————————————————-

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

9 Responses to ஒன்றும் தெரியாத அப்பாவியா குமாரசாமி ….!!!

  1. புதியவன் சொல்கிறார்:

    ஆங்காங்கு ராமர் கோவில் கட்ட தங்களுடைய பங்கும் இருக்கவேண்டும் என்று சிலர் முன்னெடுத்து பணம் சேகரித்து உரிய இடங்களுக்கு அனுப்புகிறார்கள். இதில் ‘நம்பிக்கை’தான் முதன்மையாக இருக்கு. அதாவது இவங்க, பொறுப்பா பணத்தை சேர்த்துவிடுவார்கள் என்ற நம்பிக்கை. அவ்ளோதான். இராமர் கோவில் கட்டும் authority, Onlineல பணத்தை அனுப்பலாம் என்று வைப்பது நல்லது என்று எனக்குத் தோன்றுகிறது. இந்த மாதிரி பணத்தைச் சேகரிப்பவர்களும் (அந்த அந்த லோகல் நம்பிக்கைக்குரிய ஆட்கள்) சேகரித்ததை ஆன்லைனில் அனுப்பி அதற்கான proof வைத்துக்கொள்ளவேண்டியதுதான்.

    குமாரசாமி செய்வது வெற்று அரசியல். அதற்கு மதிப்பு கொடுக்கத் தேவையில்லை. இந்தக் குற்றச்சாட்டுகளினால் சிறுபான்மையினர் அவருக்கு வாக்களிக்கப்போவதில்லை.

  2. mrs.kiruba soundara rajan சொல்கிறார்:

    welcome sir. happy to see you again. 🙂

    • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


      நன்றி திருமதி கிருபா சௌந்திரரஜன்.
      உங்களைப் போன்ற நல்ல உள்ளங்களின் வாழ்த்துக்கள்
      தான் எனக்கு மருந்தாக இருந்தன.

      -வாழ்த்துகளுடன்,
      காவிரிமைந்தன்

  3. R.Gopalakrishnan சொல்கிறார்:

    Leave alone the article.I am very happy that U have come back. Don’t strain too much Sir.
    All the best.
    ”,

  4. bandhu சொல்கிறார்:

    welcome back, Sir! Take adequate rest. These kumarasamys are always there!

    • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


      bandhu,

      உங்கள் அன்புக்கு நன்றி.

      நான் இன்னும் முழுவதுமாக குணம் பெறவில்லை;
      ஒரு நாளைக்கு காலை அரை மணி நேரமும்,
      மாலை அரை மணி நேரமும் மட்டும் எப்படியோ
      சமாளித்துக்கொண்டு, கணிணி முன் உட்கார்ந்து
      விடுகிறேன்.

      முக்கிய காரணம், வாசக நண்பர்களின் விடாத
      அன்பு பின்னூட்டங்களும்,

      என்னாலும் கூட தொடர்ந்து ஒரு மாதத்திற்கும்
      மேலாக எழுத முடியாமல் இருப்பது
      மிகவும் வேதனையாக இருக்கிறது என்பதும் தான்.

      எனவே இப்போது கூட என்னால் அதிகம்
      எழுத முடியாது. இயல்புக்கு வர இன்னும்
      நாட்கள் பிடிக்கலாம்.

      இருந்தாலும் கூட, வாசக நண்பர்களின்
      தொடர்பு எனக்கு தெம்பைத் தருகிறது
      எழுதுவது ஒருவித தன்னம்பிக்கையை
      தருகிறது என்பதாலும் தான் எழுதுகிறேன்.

      இப்போதைக்கு அதிகம் எழுதவில்லை;
      எழுத முடியவில்லை; தினமும் ஒரு
      இடுகையாவது எழுதிவிட முயற்சிக்கிறேன்.
      சில நாட்கள் இயலாமல் போகலாம்.

      இருந்தாலும், விரைவில் பழைய நிலைக்கு திரும்ப
      வர முடியும் என்று நம்பிக்கையோடு
      இருக்கிறேன்.

      மீண்டும் நண்பர்கள் அனைவரின் அன்பிற்கும்
      நன்றி செலுத்துகிறேன்.

      -வாழ்த்துகளுடன்,
      காவிரிமைந்தன்

      • புதியவன் சொல்கிறார்:

        அவசரமில்லை கா.மை. சார்… ஒரு பதிவுக்கு அடுத்த பதிவுக்கும் ஒரு வார இடைவெளி இருந்தாலும் கவலையில்லை. முதலில் உங்கள் உடல் நலம்தான் முக்கியம்.

        • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

          நன்றி புதியவன்.

          நீங்கள் சொல்வதும் ஒரு வகையில் சரி தான்.

          தினமும் ஒரு இடுகை என்று commitment
          வைத்துக்கொண்டு எழுதுவது இப்போதைக்கு
          இயலாத காரியம் என்றே தோன்றுகிறது.

          எந்தவித commitment- உம் இல்லாமல்,
          இயன்றபோதெல்லாம் எழுதுவது என்று
          வைத்துக்கொண்டால், சவுகரியம் என்றே
          தோன்றுகிறது.

          இனி, இடைவெளிகளைப்பற்றி எல்லாம்
          யோசிக்காமல், என்னால் முடிந்தபோதெல்லாம்
          எழுதுகிறேன்.

          -வாழ்த்துகளுடன்,
          காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.