வாழ்க்கையே ஒரு கனவா ……?

….

….

 

அன்பு நண்பர்களுக்கு,

வணக்கம். உங்கள் அனைவருக்கும் என் அன்பு, நன்றி, நல்வாழ்த்துக்கள்.

நீண்ட நாட்களுக்குப் பிறகு இன்று கணிணியின் முன்
எழுத உட்கார்ந்திருக்கிறேன். ஒரு அரை மணி நேரமாவது
உட்கார முடியும் என்று நம்புகிறேன்.

இறைவன் துணையோடு அவ்வப்போது கொஞ்சம் கொஞ்சமாக
கூடுதல் நேரம் உட்கார முயற்சிக்கிறேன். பழைய வேகத்திற்கு
வர இன்னும் கொஞ்ச நாட்கள் ஆகலாம்.

உங்கள் அன்பும், ஆதரவும், நல்லெண்ணங்களும் தான்
நான் மீண்டு வர பெரிதும் உதவியிருக்கிறது.

நான் எழுதாத கடந்த ஒரு மாதத்தில் கூட, தினமும்
பல நூறு நண்பர்கள் இந்த வலைத்தளத்திற்கு வந்து
பழைய இடுகைகளை பார்த்து விட்டுச் சென்றிருக்கிறார்கள்.
அவர்கள் ஆதரவிற்கு மிக்க நன்றி.

படுக்கையில் இருந்த காலத்தில் நிறைய படிக்க அவகாசம்
இருந்தாலும், வலியும், வேதனையும் என்னை படிக்க விடவில்லை;
அதையும் மீறி கொஞ்சம் படித்துக் கொண்டிருந்தேன்.

அதன் விளைவாக, இன்றைய துவக்க இடுகை ஒரு
“ஜென் கதை”யுடன்.

-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
17/02/2021

 

 

———————————————————————————————–

“வாழ்க்கையே ஒரு கனவா….? “

 

 

 

நாம் இப்போது வாழும் வாழ்க்கையே கூட, ஒரு பெரிய தூக்கத்தில்    காணும் தொடர் கனவாக ஏன் இருக்கக் கூடாது….?

மரணமே, அதன் விழிப்பாக அமையக்கூடுமே….!!!

(என்ன ஆயிற்று காவிரிமைந்தனுக்கு என்று யோசிக்கத்
துவங்கி விடாதீர்கள்….. Just ஒரு “ஜென்” சிந்தனை அவ்வளவு தான்…! )

 

.
——————————————————————————————————————————

 

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

7 Responses to வாழ்க்கையே ஒரு கனவா ……?

 1. Karthikeyan Palanisamy சொல்கிறார்:

  Welcome back sir

 2. புதியவன் சொல்கிறார்:

  உறங்கு வதுபோலும் சாக்காடு உறங்கி
  விழிப்பது போலும் பிறப்பு

  என்ற குறள்தான் என் நினைவுக்கு வந்தது, இந்த இடுகையைப் படித்தபிறகு.

  உடலின் இறப்பு, புதிய உடலின் பிறப்பு இதற்கு இடையிலான நேரம்தான் ஆன்மா அமைதியுறும் நேரமோ? அப்படி இருக்குமானால் எதற்காக பிறர் கனவில் வந்து செய்திகள் சொல்லணும்? என்றெல்லாம் யோசிக்கிறேன்.

  பொதுவாக கனவில், இந்தப் பிறவிக்கான செய்திகளும், படித்த/தொலைக்காட்சியில் பார்த்தவற்றின் தாக்கம் காரணமான மன ஆசைகளும், முந்தைய கனவின் எச்சங்களும் வரும். அவற்றில் அதிகாலை 4 மணிக்கு வரும் கனவு, நமக்கான செய்தியாக அமையும்.

 3. Raghuraman சொல்கிறார்:

  Sir.

  Nice to see your post. Welcome back.

 4. PK சொல்கிறார்:

  KM Sir, Great to see your post!
  Very nice perspective.. but as the article says there is no conclusion.
  Get well soon !

 5. Manivannan Kamaraj சொல்கிறார்:

  Welcome back……..

 6. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  Dear friend Paiya,

  Wonderful.
  You have quoted a very relevant
  And meaningful version.

  Thank you.
  With all best wishes,
  Kavirimainthan

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.