….
….
….
போகும்போது எது நம் கூட வரும்…?
யார் என்ன சொன்னால் என்ன…
நம் புத்தி அவ்வளவு எளிதில் மாறிவிடுமா என்ன ?
………
………
2500 ஆண்டுகளுக்கு முன்னரே
“திராவிட சிசு” சொன்ன அதே தத்துவம் தான்…
—————
முட்டாள் மனிதனே,
நீ கடைசியாக இந்த உலகை விட்டு போகும்போது
உன் கூட எது வரப்போகிறது .. ?
நீ வாழ்நாள் முழுதும் விழுந்து விழுந்து
சேர்த்து வைத்த வீடு, மனை, செல்வமா…?
இறுதியில் யார் உன்னுடன் கூட வரப்போகிறார்கள்…?
மனைவியா, மகனா, உறவினர்களா, நண்பர்களா..?
இவை எதுவுமே உன்னுடன் கூட வராது என்பதை
புரிந்து கொள்….
ஏ மூடனே அளவற்ற செல்வம் சேர்க்கும் உன்
தணியாத தாகத்தை விட்டுவிடு.
———-
………….
.
—————————————————————————————————–
வாதுற்ற திண் புயர் அண்ணாமலையார் மலர்ப் பதத்தைப்
போதுற்ற போதும் புகலும் நெஞ்சே இந்தப் பூதலத்தில்
தீதுற்ற செல்வம் என்? தேடிப் புதைத்த திரவியம் என்?
காதற்ற ஊசியும் வாராது காண் உன் கடைவழிக்கே.
இது பட்டினத்தார் பாடல். அவர்தான், காதற்ற ஊசியையும் நாம் எடுத்துச் செல்ல முடியாது என்று பாடினவர்.
அதுவாக, நம் பூர்வ ஜென்ம புண்ணியத்தால், நல்வழியில் வரும் பணத்தை வேண்டாம் என்று சொல்ல வேண்டியதில்லை. ஆனால் பணத்தின் பின்னே செல்லவும் வேண்டியதில்லை. ஓய்வு பெற்ற பிறகு, சாதாரண வாழ்க்கையில், பிறருக்கும் உதவி அதில் மகிழ்வு காண்பது சரியாக இருக்கும்.
எப்போதுமே எனக்குத் தோன்றும்…வாழ்க்கைக்கு (ஒவ்வொரு நிலையில் இருப்பவருக்கும் இந்த அளவீடு மாறுபடும்) ஒரு வீடு, மாதம் நாம் யாரிடமும் எதிர்பார்க்காமல் சாப்பிட, ரிலாக்ஸ் செய்துகொள்ளத் தேவையான பணம், எதிர்பாரா எமெர்ஜென்சிக்குத் தேவையான பணம் வங்கியில் இருந்தாலே போதும், ஓய்வு பெற்றவர்களுக்கு. அதற்கு மேல் எத்தனை பணம் இருந்தாலும் அவை வீண். என் அப்பா சொல்லுவார், நான் கஷ்டப்பட்டுச் சேர்த்த 100 ரூபாய், உன் கணிப்பில் 10 ரூபாய் மதிப்பு கூடப் பெறாது, அதாவது டக் என்று அந்த 100 ரூபாயைச் செலவழிக்க அஞ்ச மாட்டாய், ஆனால் நீ சம்பாதித்த 10 ரூபாய், உன் கணிப்பில் நூறு ரூபாயகத் தோன்றும் என்பார். அதனால் பெற்றோரிடமிருந்து வரும் செல்வத்திற்கு நம்மிடம் மதிப்பு குறைவு. No need to save money for our children’s life.
அப்படி இருக்கும்போது, எதற்கு அரசியல்வாதிகள் கோடிக்கணக்காக ஊழல் செய்து பணம் சேர்க்கிறார்கள் என்பதுதான் புரிவதில்லை. சாதாரண டீக்கடை வைத்திருந்த ஓபிஎஸ் புதல்வன் 500+ கோடிக்கு மேல் அதிபதி. ஓசி டிக்கெட்டில் பயணித்த கருணாநிதி வாரிசுகள் லட்சம் கோடிக்குமேல் அதிபதிகள்.