….
….
….
உறைந்து கிடக்கும் லே(லடாக்) பனி மைதானத்தில் –
இந்திய ராணுவத்தின் Band வாசிக்கும் குழுவினர்,
அமர்க்களமாக சறுக்கி விளையாடிக்கொண்டே
பாண்டு வாசிக்கும் ஒரு அருமையான காணொலி
கிடைத்தது. கீழே பகிர்ந்து கொள்கிறேன்.
லடாக்’கில் இப்போதைய டெம்பரேச்சர் -11 டிகிரி.
எப்படி இருக்கும் ? சற்று நினைத்துப் பாருங்கள்…!
முடிந்தால் (உறுதியாக தீர்மானித்துச் செல்லவில்லை…))
தொடர்ந்து லடாக் வரை செல்ல வேண்டுமென்ற உத்தேசத்துடன்,
சில வருடங்களுக்கு முன் ஒரு அக்டோபர் மாதத்தில்
மணாலி சென்றேன்.
அதற்கும் மேலே செல்ல முயற்சித்தபோது, ரோதங்க் பாசில்
(Rohtang pass ) மோசமான பருவநிலை காரணமாக,
இந்திய ராணுவம் லடாக் பாதையை மூடிவிட்டதாக
சொன்னார்கள். (நல்லதாகப் போயிற்று என்று நினைத்து…? )
ரோதங்க் பாசுடன் திரும்பிவிட்டேன். திரும்ப வரும்போதே,
பாதையில், பல மண் சரிவுகளை பார்த்துக்கொண்டே
மிகவும் மெதுவாகத்தான் வந்தோம்..
( மணாலி முதல் லடாக் வரையிலான பாதை இந்திய ராணுவத்தின்
கட்டுப்பாட்டில் தான் இருக்கிறது.)
பனிபடர்ந்த இமயமலை பிரதேசங்களுக்குச் செல்லும்போது
தான், நமது ராணுவத்தினர் ஆற்றி வரும் அரும்பணி
நமக்கு உறைக்கிறது….
கீழே காணொலி –
…..
Indian Army Band, Leh. The Only Skating Band in the World –
Ladakh Scout Pipe band performing on Ice Skates –
……
……
.
————————————————————————————————————
வாழ்க்கையில் பனி உறைந்து இருக்கும் இடங்களுக்குச் செல்லணும், ஒரு மாதமாவது தங்கி இருக்கணும்னு எனக்கு ரொம்ப ஆசை அது எப்போது நிறைவேறும் என்று தெரியலை……. பலர், அப்படிப்பட்ட சூழல் கடுமையானது எப்படா காலநிலை மாறும்னு இருக்கும் என்றெல்லாம் எழுதுகிறார்கள்.
பனிச்சறுக்கு விளையாட்டுக்காக செயற்கை முறையில் அமைக்கப்பட்ட தளங்களை பல மால்களில், பல தேசங்களில் பார்த்திருக்கிறேன். முயற்சி செய்தால் வழுக்கி காலை உடைத்துக்கொள்ளப்போகிறோமே என்ற பயத்தில் முயன்றதில்லை.
எனக்கு பத்ரிநாத்திலிருந்து அதற்கு மேல் நோக்கி மலைப்பாதையில் ஏறி பல தலங்களை தரிசிக்கணும் என்று ஆவல். இந்த வாழ்க்கையில் முடியும் என்று தோன்றவில்லை. சென்ற மே மாதம் பத்ரிநாத் ல்லவேண்டியது…கொரோனாவால் பயணம் கேன்சல் ஆகிவிட்டது, டிரிப் ஆர்கனைசர் பணத்தைத் திருப்பிவிட்டார்.. இனி எப்போது வாய்ப்பு அமையும் என்று தெரியவில்லை.
புதியவன்,
டூரிஸ்டாக, சில நாட்களுக்கு மட்டும் என்றால்
நம்மால் நிச்சயம் ரசிக்க முடிகிறது;
அந்த வித்தியாசமான சூழ்நிலைகளை
அனுபவிக்க முடிகிறது. அந்த அனுபவங்கள்
எல்லாம் வாழ்நாளில் அவசியம் தேவைதான்.
ஆனால் – நீண்ட நாட்களுக்கு இங்கே தங்க வேண்டி
இருந்தால், அது மிக மிகக் கடினம். அங்கேயே
பிறந்து வளர்ந்தவர்களால் மட்டுமே அது சாத்தியம்.
மேலும், அதற்குத் தகுந்த பாதுகாப்பு உடைகள்,
ஷூ, போன்றவையுடன், மனதில் ஒருவித
preparation -உடன் போக வேண்டும்.
நான் போனபோது, வேண்டுமென்றே,
டிசம்பர் கடைசியில் உறைபனியில் ஸ்ரீநகர், குல்மார்க்
போன்றவை எப்படி இருக்கின்றன என்று ஒரு
அனுபவம் பெறுவதற்காகவே உரிய தயாரிப்புகளுடன்
சென்றேன்.
இருந்தாலும் கூட, சற்றும் எதிர்பாராமல்
தொடர்ந்து 2 நாட்களுக்கு ஸ்ரீநகரில் மின்வெட்டு
ஏற்பட்டு விட்டது. இது நான் சற்றும் எதிர்பார்க்காதது.
ஹீட்டர் எதுவும் வேலை
செய்யவில்லை; 4 ஸ்டார் ஓட்டல்களில் கூட
அங்கே ஜெனரேட்டர்கள் இருப்பதில்லை;
தவித்து விட்டோம். செயற்கையாக,
LPG சிலிண்டர் மூலம் சில வசதிகள் ஏற்படுத்தித்
தந்தார்கள்… இருந்தாலும் -தாக்குப் பிடிக்க
முடியவில்லை;
எனவே, இந்தமாதிரி இடங்களுக்கு பயணம் போவதாக
இருந்தால், மனதளவில், உடலளவில் – இதற்கெல்லாம்
தயாராக இருக்க வேண்டும்.
உங்கள் பத்ரிநாத்’திற்கு மேலே -பயணம் செய்யும்
ஆசை நிறைவேறக்கூடியது தான்… 2 ஆண்டுகளுக்கு
பின்னர் முயற்சி செய்யுங்கள். நிலவரம் சரியாக
இருக்கும்….
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
Super video Sir.