….
….
….
நையாண்டி மேடை – அரசியல்….!!!
ஒருவர் உணர்ச்சிக் குவியல் – ஓட்டுப்போடாவிட்டாலும்,
பேச்சை மட்டுமாவது கேட்டுக்கொண்டே இருக்கலாம்…!
இன்னொருவர் அபத்தப் பிதற்றல் –
அவர் உளறுவதை கேளுங்கள் –
இவருக்கு சுத்தி சுத்தி பெண்களை பார்த்துக்கொண்டே
இருக்க வேண்டும் போலிருக்கிறதாம்…!!!
….
….
.
———————————————————————————————————–
சென்ற தேர்தலில் தோல்வியுற்றோம், அதற்காக கவலைப்படலை என்று இசுடாலின் சொல்கிறார் – அப்புறம் எதற்கு தினம் தினம், அடுத்த வாரம் எடப்பாடி ஆட்சியை விட்டுப் போய்விடுவார், திமுக ஆட்சிக் கட்டிலில் அமரும் என்று உளறிக்கொண்டிருந்தீர்கள்? எதற்கு சட்டையைக் கிழித்துக்கொண்டு படம் காட்டினீர்கள்? மக்கள் எப்போது அதிமுக ஆட்சியைவிட்டுப் போகும் என்று காத்துக்கொண்டிருக்கிறார்கள் என்று, எல்லா இடைத்தேர்தல்களிலும் அதிமுக அதிக வாக்கு வாங்கியபோதும் எதற்குப் பினாத்திக்கொண்டிருந்தீர்கள்?
சீமான் – நூறு நாள் வேலைவாய்ப்புத் திட்டம் மத்திய அரசினுடையது. அதில் இப்போது 250 ரூபாய் ஒரு நாள் கூலியாக வழங்கப்படுகிறது. இந்த 250 ரூபாய் முழுவதுமாக பயனாளிகளுக்குப் போய்ச் சேருதா என்று யாருமே குரல் கொடுப்பதில்லை?
நூறு நாள் வேலைவாய்ப்புத் திட்டம் – பேசிவச்சுக்கிட்டு ஆட்களைக் கூப்பிட்டு கேள்வி கேட்டால், அதற்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் (எது மாநில அரசுத் திட்டம், எது மத்திய அரசு என்று சொல்ல ஒரு துண்டுச் சீட்டு இல்லாததால்), சுற்றிவர பெண்களைப் பார்த்து, ‘ஆஹா பெண்களைப் பார்த்துக்கொண்டே இருக்கலாம் போலிருக்கு’ என்று இசுடாலின் பேசுகிறார். மனதில் உள்ளதுதான் வார்த்தைகளில் வெளிவருகிறதோ?