“சட்டினியில் விஷம்…” கலந்து என்னைக் கொல்லச் சதி…!!! இதில் யாரு “லூசு” …?

….
….

….

….

ஒரு ஆசாமி. இஸ்ரோ’வில் சீனியர் சைண்டிஸ்ட் என்று
சொல்கிறார்கள் – பெயர் தபன் மிஸ்ரா…

இவர் சொல்வதைக்கேட்ட பிறகு நமக்கு ஒரு கேள்வி பிறக்கும்…
இதில் ” லூசு “… யாரு ? சொல்பவரா… கேட்பவர்களா…?

முதலில் வந்த செய்தியைப்படித்து விடுவோமே…

———-

‘சட்னியில் விஷம் கலந்து என்னை கொல்ல சதி’
பெங்களூரு: ஜன 07, 2021
( https://www.dinamalar.com/news_detail.asp?id=2684785#comment )

”தோசை மற்றும் சட்னியில் விஷம் கலந்து,
என்னை கொலை செய்ய முயற்சி நடந்தது,” என, இஸ்ரோவின்
மூத்த விஞ்ஞானி தபன் மிஸ்ரா, குற்றஞ்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக, அவர் கூறியதாவது:

கடந்த, 1979ல் விக்ரம் நாராயண், 1994-ல் நம்பியார்,
1999ல் சீனிவாசன் மர்மமாக இறந்ததை தொடர்ந்து, என்னையும்
கொலை செய்ய முயற்சி நடந்தது. கடந்த, 2017 மே 23ல்,
இஸ்ரோ தலைமை அலுவலகத்தில், கூட்டம் நடந்த பின்,
தோசை, சட்னி வழங்கப்பட்டது. சட்னியில், ‘ஆர்செனிக்
டிரயாக்சைடு’ என்ற விஷம் கலந்து இருந்தது.

அதிசயம் –

அதை அறியாமல் சாப்பிட்ட நான், உயிர் பிழைத்ததே பெரிய
அதிசயம் என, டாக்டர்கள் கூறினர். அதிலிருந்து மீள சரியாக,
இரண்டு ஆண்டுகள் ஆகின. அதன் பிறகும், மூச்சுத்திணறல்
பிரச்னை, சரும தொற்று போன்ற பிரச்னைகள் ஏற்பட்டன.
கடந்த, 2017 ஜூலையில், என்னை சந்தித்த உள்துறை உயர்
அதிகாரி, ‘உங்களுக்கு விஷம் கொடுக்க வாய்ப்புள்ளது;
கவனமாக இருங்கள்’ என, எச்சரித்தார்.

அதுபோல, 2019ல் திடீரென, என் அலுவலகத்துக்கு வந்த
அமெரிக்க மூத்த விஞ்ஞானி ஒருவர், ‘உங்களுக்கு நடந்த
கொலை முயற்சி குறித்து, வாய் திறக்கக்கூடாது. ‘வாயை

மூடிக்கொண்டிருந்தால், உங்கள் மகனுக்கு, அமெரிக்க
பல்கலைக்கழகத்தில், உயர் பதவி வழங்குவோம்’ என,
ஆசை காண்பித்தார். அதை நான் மறுத்தேன். ‘இ — மெயில்’
மூலமும், எனக்கு பல முறை மிரட்டல் வந்துள்ளது.

சில மாதத்துக்கு முன், என் வீட்டு வளாகத்தில், பல முறை,
விஷப் பாம்புகள் தென்பட்டன. அதிர்ஷ்டவசமாக என் வளர்ப்பு
நாய்கள், பாதுகாப்பு ஊழியர்களின் உதவியால், உயிர் தப்பினேன்.

அதுகுறித்து ஆராய்ந்ததில், வீட்டின் சுற்றுச்சுவர் வெளிப்பகுதி
யிலிருந்து, உட்பகுதிக்கு பாம்புகளை அனுப்ப, சுரங்கம்
தோண்டியது கண்டுபிடிக்கப்பட்டது. அதை மூடிய பின், பாம்புகள்
வருவது குறைந்தது.

விசாரணை –

என்னை கொலை செய்ய, முயற்சி நடந்தது
தொடர்பாக, மத்திய அரசு உயர்மட்ட விசாரணை நடத்த
வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

———————————————————

இஸ்ரோ என்கிற இந்தியாவின் அதிமுக்கிய விண்வெளி
ஆராய்ச்சி நிலையத்தில் வேலை பார்க்கும் இந்த விஞ்ஞானி –

2017, மே மாதத்தில் நடந்த திடுக்கிட வைக்கும் கொலை முயற்சி
மற்றும் அந்நிய நாட்டின் சதி பற்றி மெதுவாக மூன்றரை வருடம்
கழித்து செய்தி சொல்கிறார்….!!!

உண்மையிலேயே அப்படி எதாவது நடந்திருந்தால், இவர்
மெதுவாக 3 ஆண்டுகள் கழித்து வேண்டுகோள் விடுக்கும் வரை
மத்திய அரசு காத்திருந்திருக்குமா…? ஒரு மூத்த விஞ்ஞானியை
கொலை செய்ய நடந்த முயற்சி /சதி குறித்து அப்போதே
உடனடியாக தீவிரமாக புலன் விசாரணை நடந்திருக்காதா…?

இன்னும் கொஞ்சம் பொறுத்து, நிதானமாக உள்ளே நுழைந்து
பின்னணிகளைப் பார்த்தால், இவர் லூசா அல்லது இவர் பேச்சை
கேட்பவர்கள் லூசா என்பது புரிய வரலாம்.

இப்படிப்பட்ட ஒரு லூசு விஞ்ஞானியை (?) இஸ்ரோ இத்தனை
நாட்கள் எப்படி வேலையில் தொடர அனுமதித்தது …?

இப்போதைக்கு இவர் இந்த மாதக்கடைசியில் ரிடையர்
ஆகிறார் என்பது மட்டும் தெரிகிறது. ஓய்வு பெறும் சமயத்தில்
இவர் இப்படி அபத்தமாக விளம்பரம் பெற முயற்சிப்பதன்
பின்னணி என்ன …? இதை மத்திய அரசு அவசியம்
“உரிய முறையில்” விசாரிக்க வேண்டும்.

வட இந்திய டிவி-க்களிலும், செய்தித்தாள்களிலும் இவருக்கு
பலத்த விளம்பரம்… இந்த உளறுவாயருக்கு எப்படி அவர்கள்
முக்கியத்துவம் கொடுத்து இந்த செய்தியை நம்பி போடுகிறார்கள்
என்பது தான் புரியவில்லை.

இதில் காமெடி என்னவென்றால், இஸ்ரோ நிறுவனம்
இவர் “ரிலீஸ்” செய்த பரபரப்பான தகவல் குறித்து
கொஞ்சம்கூட கண்டுகொள்ளவே இல்லை;

.
———————————————————————————————————

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

7 Responses to “சட்டினியில் விஷம்…” கலந்து என்னைக் கொல்லச் சதி…!!! இதில் யாரு “லூசு” …?

 1. M.Subramanian சொல்கிறார்:

  ஒரு முட்டாள்தனமான உளரலுக்கு
  PTI, ANI போன்ற பெரிய செய்தி நிறுவனங்கள்
  முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்டிருப்பது
  ஆச்சரியமளிக்கிறது.
  இந்த ஆசாமியின் statement -க்கு பின்னால்
  எதாவது திட்டம் hidden agenda இருக்கலாமென்று
  நினைக்கிறேன்.

 2. bandhu சொல்கிறார்:

  இதில் எவ்வளவு உண்மை இருக்கிறதென்று தெரியவில்லை. ஆனாலும், விஞ்சானிகள் மர்மமான முறையில் மறைவது, isro வாகட்டும், கல்பாக்கம் ஆகட்டும், நாட்டுக்கு நல்லதல்ல.

 3. புதியவன் சொல்கிறார்:

  முன்னாள் அமைச்சர் ராஜாராம் அவர்கள், அவருடைய புத்தகத்தில் எழுதியிருந்த நிகழ்வு இது. அவர் எம்.பி.யாக இருந்தபோது, ஹோமி பாபா அவர்கள் அணுவைப் பிளக்கும் ஆராய்ச்சியை வெற்றிகரமாக நிகழ்த்தினார். செறிவூட்டப்பட்ட யுரேனியத் தயாரிப்பில் இருந்தபோது, பாராளுமன்றத்தில் அவரைக் கூப்பிட்டு எம்பிக்கள் விளக்கம் கேட்டனர். நாட்டு ரகசியமாக இருக்க வேண்டிய ஒன்றை, எம்.பிக்கள் தங்கள் அறிவின்மையாலும் பொறுப்பின்மையாலும், வெளிப்படையாக ஹோமிபாபாவை அணு ஆராய்வில் எந்த நிலையில் இருக்கிறோம் என்றெல்லாம் நெருக்கி, ஹோமி பாபா வாயால், ‘ஆம் …அணுகுண்டு தயாரிக்கும் நிலையில் நாம் இருக்கிறோம்’ என்று சொல்லவைத்துவிட்டனர். ஹோமிபாபா விமானவிபத்தில் இறந்ததற்கு வெளிநாட்டு சதிதான் காரணம், இந்தியா அணுகுண்டு தயாரிக்கும் நிலைக்குச் செல்லக்கூடாது என்று எண்ணிய உலக வல்லரசு ஒன்றினால்தான் அவர் விபத்தில் அகால மரணமடைந்திருக்கவேண்டும் என்று ராஜாராம் எழுதியிருந்தார்.

  இந்த இடுகையைப் படித்தபோது எனக்கு அதுதான் நினைவுக்கு வந்தது

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   பந்து,
   புதியவன் –

   இந்த மாதிரி முக்கியமான விஞ்ஞானிகளை
   கொல்ல பல்வேறு நாடுகளிலும் சதி வேலைகள்
   நடப்பது சகஜம் தான். அது போன்ற பல
   சதிகளைப்பற்றி நாம் கேள்விப்பட்டிருக்கிறோம்.
   அண்மையில் நடந்த ஈரானின் முக்கிய
   விஞ்ஞானி ஒருவரின் மர்மச் சாவு கூட
   அத்தகையது தான்.

   ஆனால் இந்த ஆசாமி ஒரு லூசு என்று
   அவர் ஸ்டேட்மெண்டிலேயே தெரியவில்லையா ?
   3 வருடங்களாக இவர் தூங்கிக் கொண்டிருந்தாரா ?
   காம்பவுண்டு சுவருக்கு கீழே சுரங்கம் தோண்டி,
   பாம்பு, தேளை அனுப்பினார்களாம்.. இதுவா
   அந்நியச்சதி….? உண்மையிலேயே இந்த மாதிரி
   முயற்சிகள் நடந்திருந்தால், மத்திய அரசு
   எப்போதோ நடவடிக்கை எடுத்திருக்கும்.

   ஓய்வு பெறும் நேரத்தில், இவர் ஏதோ ஒரு
   வகையில் விளம்பரம் பெற விரும்புகிறார்.

   இப்போது கூட, அரசாங்கம் இதைப்பற்றி
   கண்டுகொள்ளவே இல்லையே…?

   .
   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

   • புதியவன் சொல்கிறார்:

    நான் எழுதினதுக்கும் இவருக்கும் சம்பந்தமில்லை கா.மை. சார்… நீங்க வேற… நான் இந்தச் செய்தியையே எந்தத் தளத்திலும் படிக்கலை. படத்தைப் பார்த்து ஏதோ இத்துப்போன பழைய நடிகர் என்று நினைத்து செய்தியைப் படிக்கவே இல்லை.

 4. மெய்ப்பொருள் சொல்கிறார்:

  இவர் சொல்வதை நம்ப முடியவில்லை .
  May be something else is cooking !
  But we have this following case too .
  1994 ல் திரு நம்பி நாராயணன் என்ற விஞ்ஞானி உளவு
  பார்த்தாக கைது செய்யப்பட்டார் . இவர் திரு அப்துல் கலாம்
  உடன் வேலை பார்த்தவர் .
  ஐ பி / கேரளா போலீஸ் அவரை 2 ஆண்டுகளாக அடித்து
  சித்ரவதை செய்தார்கள் .கடைசியில் ஆதாரம் இல்லை
  என்று விடுதலை செய்யப்பட்டார் .

  எதற்காக கைது ? யார் சொல்லி செய்தது ? என்பன
  இன்று வரை வெளிவரவில்லை . சம்பந்தப்பட்ட
  போலீஸ் அதிகாரிகள் மீதும் எந்த நடவடிக்கையும் இல்லை.

  • புதியவன் சொல்கிறார்:

   நம்பி நாராயணனை arrest செய்தது சதியில் ஒரு பகுதி. அவருடைய bossஐ சதி வழக்கில் உள்ளே தள்ளுவதற்காக நடந்த சதி அது. இரண்டு உளவுத்துறை அதிகாரிகள், வேறு யார் சொல்லியோ இதனைச் செய்தனர். இந்தியாவின் கிரயோஜனிக் ப்ராஜக்ட் வெற்றிகரமாக ஆகக்கூடாது என்பதற்காகத்தான் இது நடந்தது என்று நம்புகிறேன். நம்பி நாராயணன் இரு மாதங்களுக்கு மேல் சித்திரவதை செய்யப்பட்டார். சிறையில் இரண்டு வருடங்கள் இருந்தார். இரண்டு வருடங்கள் கழித்து சிபிஐ, அவர் மீது குற்றமில்லை என்று சொன்னது. அதற்கு இரண்டு வருடங்கள் கழித்து சுப்ரீம் கோர்ட் நம்பி நாராயணன் குற்றமற்றவர் என்று தீர்ப்பு சொல்லியது. ஆனால் நாட்டுக்காக உழைத்த நம்பிநாராயணன் பெயரை முழுமையாக ‘தேச விரோத சக்திகள்’ இந்த இரண்டு ஆண்டுகளில் கெடுத்துவிட்டன. பத்திரிகைகள் தங்கள் மனம்போல் செய்திகளைத் திரித்தன.

   மனதால் காயப்பட்ட நம்பி நாராயணன், பிறகு 2000களில் தனக்கு இழப்பீடு வழங்க கோர்ட்டை அணுகினார் (அதாவது அடையாள இழப்பீடு). பல்வேறு சட்ட முறைகளுக்குப் பிறகு, சுப்ரீம் கோர்ட் நம்பி நாராயணன் அவர்களுக்கு 50 லட்சம் நஷ்ட ஈடு வழங்கச் சொல்லித் தீர்ப்பளித்தது.

   இதில் நாம் தெரிந்துகொள்ள வேண்டியது, நம்பி நாராயணன் arrestக்குக் காரணமானது காங்கிரஸ் அரசு (கருணாகரன்). மனித உரிமை கமிஷன் அவருக்கு 1 கோடி நஷ்ட ஈடு வழங்கணும் என்று சொன்னபோது கேரள ஹை கோர்ட் 10 லட்சம் வழங்கச் சொன்னது. அதைக்கூட வழங்க மாட்டேன் என்று 2012ல் சொன்னது காங்கிரஸ் அரசு (ஊமன் சாண்டி). இதிலிருந்தே இந்த கேஸில் காங்கிரஸின் பங்கு புரியும். கேரள கம்யூனிஸ்ட் அரசு, சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்த 50 லட்சத்துக்குப் பதில் 1.2 கோடிக்குமேல் நஷ்ட ஈடு வழங்கியது. அத்தனை பெரிய இடத்தில் தன் அறிவுத் திறமையால் முன்னுக்கு வந்த நம்பி நாராயணன் அவர்களுக்கு நீதி கிடைக்க 20 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது.

   பாஜக அரசு, நம்பி நாராயணன் சேவைகளுக்காக அவருக்கு பத்ம விபூஷண் பட்டம் கொடுத்து, மத்திய அரசு செய்த தவறுகளுக்கு பிராயச்சித்தம் தேடிக்கொண்டது.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.