….
….
….
பொதுவாகவே அக்ஷர்தாம் கோவில்கள்…
புராதன சிற்பக்கலைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும்
அதே வேளையில் சிறப்பான நவீன கட்டிடக்கலையை
அடிப்படையாக கொண்டிருக்கும்.
டெல்லியில் அமைந்திருக்கும் அக்ஷர்தாம் கோவிலுக்கு
சென்றபோது ஆச்சரியத்தில் உறைந்தேன் ..
அழகு, அமைதி, புராதனம், நவீனம் -சேர்ந்த
மொத்த கலை வடிவம்…
….
….
அண்மையில் அபுதாபி’யில் அடித்தளம்
அமைக்கும் நிகழ்ச்சியை ஒரு காணொலியில் கண்டேன்.
அவர்கள் அதை உருவாக்க நினைத்திருக்கும் விதமே
ஒரு அற்புதம்.
முற்றிலுமாக இரும்பை தவிர்த்த ஒரு மிகப்பெரிய கட்டிடம்…
கீழே 2 காணொலிகள்…
முதலாவது – அடித்தளம் அமைப்பதை துவக்கி வைக்கும்
நிகழ்ச்சி.
2-வது – கட்டி முடிக்கப்பட்ட பிறகு இந்த அக்ஷர்தாம் கோயில்
எப்படி இருக்கும் என்பதை காட்டும் ஒரு சித்திரம்…
கட்டி முடிக்கப்பட்ட பிறகு இந்த இடத்திற்கு போய்வர
வேண்டும் என்கிற ஆவலைத்தூண்டுகிறது.
…..
…..
……
.
————————————————————————————————————–
மிகப் ப்ரம்மாண்டமாக, நவீனமயமாக இருக்கும் அக்ஷர்தாம் கோவில்கள். (நான் தமிழகக் கோவில்களையே நிறைய பார்த்திருப்பதால், வட இந்தியக் கோவில்கள் அவ்வளவாக என்னை ஈர்ப்பதில்லை, பல விதிவிலக்குகள் இருந்தபோதிலும். சிற்பக்கலையில் தென் இந்தியக் கோவில்களை விஞ்ச முடியாது என்று நான் நினைக்கிறேன்)
ஐக்கிய அரபு தேசம், அதிலும் துபாய், இப்போது அபுதாபி போன்றவை வெளிநாட்டுப் பயணிகளை ஈர்க்கும் வகையில் பல ப்ராஜக்ட்களைக் கொண்டுள்ளது. அதில் இதுவும் நிச்சயம் ஒன்றாக இருக்கும்.
துபாயில் கிருஷ்ணன் கோவில் மற்றும் சிவன் கோவில் உண்டு. அதைச் சுற்றி நம்ம ஊரில் இருப்பதுபோல பூக்கடைகளும் உண்டு. வெள்ளி அன்று மாலை பிரசாதம் (ரொட்டி, சப்ஜி போன்று) வழங்கப்படும். ரொம்ப வெளியில் கோவில் போன்ற தோற்றம் கொண்டிருக்காவிட்டாலும் உள்ளே நுழைந்த உடன், கோவிலின் உட் சூழல் இருக்கும். As long as the devotees respect Arab sentiments, outside the temple, வழிபாட்டுக்கு வரும் பக்தர்களுக்கு ஒரு பிரச்சனையும் இல்லை. இப்போது அதில் அபுதாபியும் சேர்ந்திருக்கிறது. கோவிலின் பாணியில் ஐக்கிய அரபு தேசத்தில் கோபுரங்களோடு கட்டப்படும் முதல் கோவில் இது.