அனைவரும் அவசியம் பார்க்க வேண்டிய -ஒரு வீடியோ –

…..
…..

…..

அனைவரும் பார்க்கவேண்டிய –
ஒரு அவசியமான வீடியோ –

…………..

………….

செல்போனை பயன்படுத்துவதில் நமக்கு நாமே சில
கட்டுப்பாடுகளை ஏற்படுத்திக் கொள்ளவில்லையென்றால்,
இழக்கப்போவது நல்ல நேரங்களையும், உறவுகளையும்
மட்டுமல்ல; நமது உடல் நலத்தையும் கூடத்தான்.

இது குறித்து கொஞ்சம் கூடுதல் தகவல் –

ஸ்மார்ட்போனை எப்போதும் கையில் வைத்துக் கொண்டு
அலைவது ஏதோ ஒரு பழக்கம் என்று நினைத்தால்
அது தவறு. மற்ற போதைப் பழக்கம் போல அதுவும்
ஒரு நோய்தான் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

செல்போனில் ஒரு குறுந்தகவலோ, புகைப்படமோ, செய்தியோ
வந்திருக்கிறது என்று ஒரு பீப் ஒலித்த அடுத்த நிமிடம்
அதைப் பார்க்காமல் இருக்க முடியவில்லையா?
அப்படியானால் அது போதைப் பழக்கத்துக்கு ஈடானது தான்.

மற்ற போதைப் பழக்கங்களைப் போலவேதான் ஸ்மார்ட்போனை
அதிகம் பயன்படுத்துவதும்.

ஒரு போதை வஸ்துவைப் பயன்படுத்தும் போது, அது நரம்புகள்
வழியாக மூளைக்கு எத்தகைய விளைவுகளை ஏற்படுத்துகிறதோ
அதேபோன்ற ஒரு விளைவைத்தான் ஸ்மார்ட்போன்
விஷயத்திலும் மூளை சந்திக்கிறது என்கிறார்கள் நரம்பியல்
மருத்துவர்கள்.

படித்துக்கொண்டிருக்கும்போதும், சாப்பிடும்போதும்,
டிவி பார்த்துக்கொண்டிருக்கும்போதும் –
செல்போனையும் பயன்படுத்துவது –

மூளைச் சோர்வை ஏற்படுத்துவதோடு,
ஸ்மார்ட்போன் பயன்பாட்டால் மூளைக்குத் தேவையான ஓய்வு
கிடைப்பதிலும் தடை ஏற்படுகிறது;

தொழில்நுட்ப உக்திகளைப் பயன்படுத்தி லாபம் பார்க்கும்
நிறுவனங்களின் வலையில் தெரியாமல் விழுந்து
நம்மில் பெரும்பாலானவர்கள் மாட்டிக் கொள்கிறார்கள்.

துவக்கத்தில் இளைஞர்களை மட்டுமே பீடித்த இந்த வியாதி,
இப்போதெல்லாம் எல்லா வயதினரையும் தொற்றிக்கொள்வதை
பார்க்கிறோம்….

இந்த பழக்கத்திலிருந்து, போதையிலிருந்து – வெளிவர
மற்றவர்களால் எந்தவித உதவியையும் செய்ய முடியாது.

நாம் அனைவருமே, நாமாகவே தீர்மானித்துக்கொண்டு –
செல்போன் பயன்பாட்டை குறைத்துக் கொள்ளவேண்டியது அவசியம்.

அவசியம் ஃபுல் ஸ்டாப் வைக்க வேண்டிய
ஒரு கொடுமையான போதைப் பழக்கம்……!!!

.
———————————————————————————————————————————-

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

2 Responses to அனைவரும் அவசியம் பார்க்க வேண்டிய -ஒரு வீடியோ –

 1. புதியவன் சொல்கிறார்:

  அதீதமாக செல்ஃபோன் உபயோகப்படுத்துவது என்பது டாஸ்மாக், டிரக்ஸ், கம்ப்யூட்டர் கேம்ஸ் விளையாடுவது, எப்போதும் தொலைக்காட்சி நியூஸ் சேனலையே பார்த்துக்கொண்டிருப்பது போன்று ஒரு போதைப் பழக்கம்தான். கணிணித் துறையில் இருந்தாலும், இன்றளவும் 99.99% கணிணி விளையாட்டுகள் நான் விளையாடுவதே இல்லை. பசங்களையும் ஆரம்பத்திலிருந்தே இதனைச் சொல்லி முடிந்த அளவு கட்டுப்படுத்திவைத்திருக்கிறேன். இவ்வளவு கட்டுப்பாடுகளை வைத்துக்கொண்டிருந்தாலும், நானும் ஏதோ அர்ஜெண்ட் செய்திகள் போன்று வாட்சப்பில் பிறர் அனுப்பும் தகவல்களைப் படிக்கிறேன். வாட்சப் பார்ப்பது, வந்திருக்கும் குப்பையை அடுத்தவர்களுக்கு ஃபார்வர்ட் செய்வது இதெல்லாமே பெரிய வியாதிகள்தாம். சிலர் இதில் இன்னும் படுபயங்கர வியாதியஸ்தர்களாக இருக்கிறார்கள். தாங்கள் ஃபார்வர்ட் செய்தவற்றையே மீண்டும் ஃபார்வர்ட் செய்வது, மற்றவர்கள் ஃபார்வர்ட் செய்ததை மீண்டும் உடனேயே அதே குழுவிற்கு ஃபார்வர்ட் செய்வது என்று இருக்கின்றனர். எந்த சப்ஜெக்டுக்கு ஒரு வாட்சப் குழு ஆரம்பித்தாலும் (அது எந்த வகையான குழு என்பதைப் பற்றிக் கவலைப்படாமல்), எல்லாக் குப்பைகளையும் ஃபார்வர்ட் செய்கிறார்கள்.

  என்னுடைய செல்ஃபோன் பேட்டரி, 4 நாளைக்கு வந்துகொண்டிருந்தது நான்கு வருடங்களுக்கு முன்னால். அதிக வாட்சப் குழுக்களில் இணைந்தபிறகு, ஒரு நாளைக்கே வருவதில்லை.

  நிறைய தகவல்கள் வாட்சப் மூலம் பரிமாறப்படுகின்றன (குடும்பத்துக்குள்ளேயே). உதாரணமா ஒரு கடைக்குப் போனால், இது வேண்டுமா என்றெல்லாம் போட்டோவை அனுப்பிக் கேட்பேன். ஆனாலும் அந்தச் சமயங்களில் நான் கூப்பிட்டு வாட்சப் பாரு என்று சொல்வேன். மற்றபடி, அர்ஜண்ட் விஷயம் என்று இருந்தால் பிறர் என்னைக் கூப்பிடட்டும், அவ்வப்போது வாட்சப் பார்ப்பதில்லை என்று வைத்துக்கொண்டிருக்கிறேன். அனைவரும் நிச்சயம் கடைபிடிக்கவேண்டிய பழக்கம், 1. அடிக்கடி லேடஸ்ட் நியூஸ் பார்க்கிறேன் என்று செல்ஃபோனை நோண்டுவதைத் தவிர்ப்பது 2. வாட்சப் போன்றவற்றை ஒரு நாளைக்கு அரை மணி நேரம்தான் உபயோகிப்பது 3. கம்ப்யூட்டர் கேம்ஸ் பக்கமே போகாமல் இருப்பது 4. சும்மா எப்போதும் பாட்டு கேட்கிறேன், காணொளி பார்க்கிறேன் என்று தனித் தீவாக தங்களை ஆக்கிக்கொள்ளாமல் இருப்பது. நான் இவைகளை முடிந்த அளவு கடைபிடிக்கிறேன்.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


   புதியவன்,

   நீங்கள் சொல்வது மிகச்சரி.
   வாட்சப்’பில் குப்பைகள் தான்
   அதிகம் வருகின்றன.

   நமக்கு நாமே இவற்றின் பயன்பாடு
   குறித்து – ஒரு முறை –
   வைத்துக்கொள்வது தான் சரியாக இருக்கும்.

   செஸ் எனக்கு மிகவும் பிடித்தமான
   game என்றாலும் கூட, கணிணியிலும்,
   செல்போனிலும் இதை தனியே விளையாடுவதற்கான
   -வசதி இருந்தாலும் கூட –
   இதை நான் பயன்படுத்திக்கொள்வதில்லை;
   அந்த temptations-ஐ தவிர்த்து விடுகிறேன்.

   எப்போதாவது, ஆர்வமுள்ள நெருங்கிய
   நண்பர்கள் யாராவது நேரில் வந்தால் மட்டும்
   தான் என்று பழக்கப்படுத்திக் கொண்டிருக்கிறேன்.

   .
   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.