கமல் இன்றும் அன்றும்….!!!

…..
…..

…..

கமல் அரசியலுக்கு வந்தபிறகு உணர்ந்த உண்மை –

” பெண்கள் மட்டுமே எனக்கு ஒட்டுப்போட்டால் கூட ஆட்சியை
பிடித்து விடுவேன். தமிழகத்தில், ஆண்களை விட சுமார்
90 லட்சம் பெண் வாக்காளர்கள் அதிகமாக இருக்கிறார்கள்…”

————

இதை விவரித்து சேலத்தில் இன்றைய கமல்
பேசும் காட்சி கீழே –

……

……

ஆனால், கமலுக்கு ஞானோதயம் கொஞ்சம் லேட்’டாக
வந்திருக்கிறது. எத்தனை மனைவிகள் / துணைவிகள்…?
படங்களில் தேவையே இல்லாமல் திணிக்கப்பட்ட
முத்தக்காட்சிகள்… etc. etc…?

இவர் அரசியலுக்கு வந்ததும் அவற்றையெல்லாம்
வசதியாக மறந்து விடலாம் …
அல்லது மறைத்து விடலாம்.
எனது அமைச்சரவையில் 50% பெண்களுக்கு இடம் உண்டு.
வீட்டில் பெண்கள் செய்யும் வேலைக்கெல்லாம்
எனது அரசு சம்பளம் கொடுக்கும் என்றெல்லாம்
வாக்குறுதிகளை அள்ளி வீசலாம்.

ஆனால், தமிழ்ப் பெண்கள்
அன்றைய கமலையும் பார்த்திருக்கிறார்களே –
அவற்றையெல்லம் மறந்திருக்க மாட்டார்களே…

———————————

அன்றைய கமல் என்று தேடியதும், ஒரு நல்ல காணொலி
கிடைத்தது…

பெண்களின் பாதுகாப்பு குறித்த கேள்விக்கு கமல் என்னும்
சமூக விஞ்ஞானி கொடுத்த ஒரு விளக்கம் –

பார்க்கிறீர்களா…? கீழே –

…….

https://www.savukkuonline.com/wp-content/uploads/2021/01/WhatsApp-Video-2021-01-03-at-3.54.29-PM.mp4?_=2

…….

.
——————————————————————————————————

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

3 Responses to கமல் இன்றும் அன்றும்….!!!

 1. GOPI சொல்கிறார்:

  வீட்டுப் பெண்களுக்கு ஊதியம் அளிப்போம் என்று சொன்ன
  கமல்ஹாசனுக்கு பதிலளித்துள்ள இந்தி நடிகை கங்கனா ரனாவத்,

  “எங்கள் அன்புக்குரியவர்களுடன் இணைவதற்கு
  ஒரு விலையை நிர்ணயிக்க வேண்டாம். எங்களுக்கு
  சொந்தமானவர்களை தாயைப் போல கவனித்துக்கொள்ள
  சம்பளம் தர வேண்டாம். வீடு என்னும் சிறிய மாளிகையில்
  அரசியாக இருப்பவருக்கு ஊதியம் தேவையில்லை.
  அனைத்தையும் வியாபாரமாகப் பார்க்காதீர்கள்.
  உங்களிடம் அன்பையும் மரியாதையையும் தான்
  எதிர்பார்க்கிறோம், ஊதியத்தை அல்ல”
  என்று கூறி இருக்கிறார்.

 2. புதியவன் சொல்கிறார்:

  அரசியலில் எல்லோருமே (இதில் விதிவிலக்குகள் இல்லவே இல்லை, 70களுக்குப் பிறகு) சுயநலவாதிகள், சந்தர்ப்பவாதிகள், வாக்கு அரசியல் என்பதற்காக முன்பு ஒன்று சொல்லி பிறகு அதை மாற்றி என்று மாறிக்கொண்டே இருப்பார்கள். கமலதாசன் மட்டும் ஒரு விதிவிலக்காக இருக்க முடியுமா? அரசியலில் இன்னும் மோசமான கீழ்த்தரமான அரசியல்வியாதிகள் ஸ்டாலின், திருமா, வை.கோ போன்றவர்களைப் போல இருக்கிறார்கள். அவர்கள் கூட்டத்திற்குத் தகுந்தவாறு பேசுவார்கள். வெளில மதச்சார்பின்மை என்று நீட்டி முழங்குகின்ற இந்த அ…யர்கள், அந்த அந்த மதக் கூட்டத்திற்குத் தகுந்தவாறு மற்ற மதங்களைக் குறை சொல்வார்கள், வெட்கம் எதுவுமின்றி இன்னொரு மதத்தின் வழிபாட்டுத் தலத்திற்குப் போய் வாக்கு சேகரிப்பார்கள்…. இவர்களெல்லாம் பதர்களன்றி வேறு எப்படி அழைக்கமுடியும்? கமலஹாசன் மட்டும் இதில் விதிவிலக்காக இருக்க முடியுமா?

  மகளிர் நலன் என்று நீட்டி முழக்குகின்ற ஸ்டாலினின், உதயநிதியின், கனிமொழியின் பின்புலக் கதைகளெல்லாம் நாம் எல்லோரும் அறிந்ததுதான். பெண்களின் நலன் என்று இப்போது பேசுகின்ற கமலஹாசனின் பழைய கதைகளும் எல்லோருக்கும் தெரிந்தவைகள்தாம்.

  இவங்க எல்லோரும் நிச்சயமாக நம்புவது, மக்கள் ஞாபகமறதியைத்தான். இல்லைனா, ரயில் பிரயாணியை அறைந்தவரும், கிராம சபையில் கேள்வி கேட்ட பெண்ணை ஆட்களைவிட்டு உதைத்தவரும், தனக்காக தியாகங்கள் செய்த பெண்ணுக்கு சம்பளம் கொடுக்காமல் விரட்டி அடித்தவரும் பெண்களின் நலன்களைப் பற்றி எப்படி நம்பிக்கையாகப் பேசமுடியும்?

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


   புதியவன்,

   நீங்கள் சொல்வது முற்றிலும் சரியே…

   இருந்தாலும், மற்றவர்களைப்பற்றிய அனுபவங்கள்
   மக்களுக்கு ஏற்கெனவே நிறைய உண்டு.

   கமல் – அரசியல் மார்க்கெட்டுக்கு வந்திருக்கும்
   புதிய வியாபாரி.. எனவே அவரது பழைய பின்னணி,
   யோக்கியதாம்சங்கள் குறித்து அடிக்கடி
   நினைவுபடுத்த வேண்டியிருக்கிறது.

   கமல் நேற்று மீண்டும் கதை விடுகிறார்.
   தன் சொந்தக்காசை செலவழித்துக்கொண்டு தான்
   ஹெலிகாப்டரில் வருகிறாராம். தேவைப்பட்டால்
   போயிங் விமானத்தில் கூட வருவாராம்.

   எல்லாம் சரி கமல் சார். அந்த கணக்கு
   விவரங்களைத்தான் கொஞ்சம் வெளியிடுங்களேன்.
   ஹெலிகாப்டர் கம்பெனிக்கு ராஜ்கமல் நிறுவனம்
   பணம் கொடுத்த விவரம் வெளிவரட்டும்.
   அந்த ராஜ்கமல் நிறுவனத்திற்கு யார், எதற்காக
   பணம் கொடுத்தார்கள் என்பதெல்லாம் அந்த
   கம்பெனியின் லாப-நஷ்ட கணக்குகளோடு
   போய் விடுமல்லவா…?

   இவ்வளவு வக்கணையாகப்
   பேசுபவர், கட்சியின் வரவு-செலவுகளை
   வலைத்தளத்தில் வெளியிடுவது பற்றி
   பேசாமலே அமைதி காப்பது ஏன்..?

   கமல், தான் claim பண்ணுவதுபோல்
   யோக்கியமானவராக இருந்தால்,
   அதை முதலில் செய்யட்டும் பார்ப்போம்.

   .
   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.