….
….
….
மாறன் பிரதர்ஸ் பி.எஸ்.என்.எல் வழக்கு
கிட்டத்தட்ட செத்தே போயிருந்தது….
ஆனால் இப்போது கொஞ்சம் உயிர் இருப்பதாகத் தெரிகிறது –
தொடர்புடைய காணொலி கீழே –
…..
…..
இந்த செய்தியைப்பற்றிய விசேஷம் என்னவென்றால் –
பாலிமர் தொலைக்காட்சியைத் தவிர, வேறு எந்த
செய்தி தொலைக்காட்சியிலோ, செய்தித்தளங்களிலோ
இந்த செய்தி வெளிவந்ததாகத் தெரியவில்லை;
சென்னையிலேயே நடைபெற்று வரும் வழக்கைப்பற்றிய
செய்தியையே எந்த பத்திரிகையும் பிரசுரிக்கவில்லை;
அந்த அளவுக்கு அவர்களின் செல்வாக்கு வட்டம் நீடிக்கிறது;
நீதிமன்ற செய்திக்கே இவ்வளவு இருட்டடைப்பு…!!!
இந்த வழக்கில் சிபிஐ, தங்களுக்கு எதிரான ஆதாரங்கள்
எதையும் சமர்ப்பிக்கவில்லை என்று குற்றம் சாட்டப்பட்ட
சகோதரர்கள் வாதாடி இருக்கிறார்கள்….
இது… ‘அரிச்சந்திர புத்ரனி’ன் முன்னுதாரணத்தையே
நினைவுபடுத்துகிறது…. அடுத்ததாக “வெறும் கிசு-கிசு”,
வதந்தி’களின் அடிப்படையிலான வழக்கு என்று
சொல்ல வேண்டியது தான் பாக்கி…..
குற்றம் நடந்ததாகச் சொல்லப்படுவது 2007-ல்.
இப்போது நடப்பது 2021….
இப்போது தான், 14 வருடங்களுக்குப் பிறகு தான்
குற்றப்பத்திரிகையே பதிவு செய்யப்படுகிறது.
இனி செஷன்ஸ் கோர்ட்டில் வழக்கு நடந்து,
முடிந்து, தீர்ப்பு சொல்லி –
அடுத்து அப்பீலில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு நடந்து,
முடிந்து, தீர்ப்பு சொல்லி –
அதனை அடுத்த அப்பீலில் உச்சநீதிமன்றத்தில்
வழக்கு நடந்து – முடிந்து –
அநேகமாக குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு 100 வயது
ஆவதற்குள் முடிவு அவசியம் தெரிந்து விடும்…!!!
.
———————————————————————————————————
பல வருடங்களுக்கு முன்பு, இந்தத் தொலைத்தொடர்பு இணைப்புகளினால் சில கோடிகள் நஷ்டமடைந்திருந்தால் அதனைத் திருப்பித் தந்துவிடத் தயாராக இருப்பதாக தயாநிதி மாறன் தெரிவித்திருந்தது பேப்பரில் வந்திருந்தது.
1990லிருந்து அரசியல் தொடர்புகளின்மூலம் பிஸினெஸ் நடத்திவந்தாலும், சொந்தத் தகப்பனுக்கே ஐந்து பைசா செலவு செய்யத் தயாராக இல்லாதவர்கள்தாம் இந்த கேடி பிரதர்ஸ். அவருடைய ஆஸ்பத்திரிச் செலவு முழுவதையும் வருமான வரி கட்டுபவர்களிடமிருந்து செலவழிப்பதற்காக, டம்மி அமைச்சராகவும் பாஜக வுடன் கூட்டணியாகவும் இருந்தவர்கள்தாம் இந்த கேடி பிரதர்ஸும் கருணாநிதியும். ஆள் அவுட் என்றதும், காசை அரசிடமிருந்து வசூலித்துவிட்டு, கூட்டணியை முறித்துக்கொண்டவர்கள். ஐந்துபைசா ஈயாத கருமிகள் இந்த கேடி பிரதர்ஸ் என்பதை எல்லோரும் அறிவர்.
நம் இந்திய தேசத்தில் நீதி என்பது ‘ஏமாந்த ஏழைகளுக்கு மட்டும்’ என்பது மீண்டும் பதிவுசெய்யப்பட்டிருக்கிறது.
ஊழல் அரசு அலுவலரான 14 வருடங்கள் இந்த வேலுச்சாமி பென்சன் வாங்கிக்கொண்டு சுகமாக வாழ்க்கை நடத்தியது தமிழர்களுக்கு மிகப் பெரிய அவமானம். புல்லுருவிகளின் கூடாரமாக பிஎஸ் என் எல் இருப்பதால்தான் அரசு நிறுவனங்கள் என்றாலே அவை ஊழலில் ஊறிப்போனவை, தனியார் மயமாக்குவதுதான் இந்த ஊழல் அரசு அலுவலர்களின் கொட்டத்தை அடக்க ஒரே வழி என்பதை நான் முழுமையாக நம்புகிறேன்.
இருப்பதில் பரவாயில்லை ரகம்தான் இந்த பாலிமர் தொலைக்காட்சி என்பது என் எண்ணம். அதை நடத்துபவர் முன்னாள் திமுக பிரமுகர். கேடிகளின் (அதாவது கேடி பிரதர்ஸ் என்று நீட்டி முழக்கி எழுதலை. ஆனால் தவறான பொருள் தந்துவிடக்கூடாது என்பதற்காக இந்த விளக்கம்) தொலைக்காட்சியில் அதிமுக அரசு விளம்பரங்களை ஒளிபரப்பி காசு பார்ப்பதால் தீவிர திமுக காரர்கள் மிகவும் கடுப்படைந்திருக்கின்றனர். அந்தக் கோபத்தினால்தான் ஸ்டாலின் ஏதோ ஒரு குட்டி ஆட்டிடம் சொல்லி, அறிக்கை வெளியிடச்செய்திருக்கிறார். இனி, அந்தத் தொலைக்காட்சியில் நிறைய திமுக விளம்பரங்களும், தயாநிதி மாறன் மேடைகளில் ‘ஊழல் அதிமுக அரசு, நேர்மையான திமுக’ என்று முழங்குவதையும் நாம் வேடிக்கை பார்க்கலாம்.