கமல்ஹாசன், தன் மகளுடன் ஹெலிகாப்டரில் தேர்தல் பிரச்சாரம் ……!!!

….
….

….

இந்த வலைத்தளத்தில் ஏற்கெனவே, அரசியல் கட்சிகள்
தங்கள் வரவு செலவு கணக்கை, பொதுவெளியில்,
தங்கள் கட்சியின் வலைத்தளத்தில் வெளியிட வேண்டும்
என்று வேண்டுகோள் வைத்திருந்தோம்….
கமல்ஹாசன் முதலில் இந்த பழக்கத்தை துவக்குவாரா …?

” நேர்மை – தான் என் ஒரே கொள்கை ” என்று
சொல்லிக்கொண்டு தேர்தல் பிரச்சாரம் செய்து வரும்
கமலுக்கு இது மிகவும் முக்கியம்… அவசியம்.

3 நாட்களுக்கு முன்னர், கமல்ஹாசன் தன் மகளுடன்,
தேர்தல் பிரச்சாரத்திற்காக – தனி ஹெலிகாப்டர் மூலம்
திருச்சி சென்றிரங்கும் காட்சியைக் காண நேர்ந்தது…

இந்த மாதிரி செலவுகளுக்கெல்லாம் அவர் நிச்சயமாக
தன் சொந்த நிதியைத் தொட மாட்டார் என்பது
தெரிந்ததே…

தனி விமானத்தில் சென்று தேர்தல்பிரச்சாரம்
செய்யும் அளவிற்கு, அவருக்கு யார் நிதி உதவி
கொடுக்கிறார்கள் என்பதை ஓட்டுப்போடும் பொதுமக்கள்
அவசியம் தெரிந்துகொள்ள விரும்புவார்கள்….

முக்கியமாக “நேர்மை” தான் என் ஒரே கொள்கை என்று
அறிவித்திருக்கும் கமல் ஹாசன் தனது “நேர்மை” -யை –
குறைந்தபட்சம் கட்சி வரவு,செலவுகளிலாவது
வெளிப்படுத்துவாரா …?

வீடியோ கீழே….

……

……

.
—————————————————————————————————————————

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

7 Responses to கமல்ஹாசன், தன் மகளுடன் ஹெலிகாப்டரில் தேர்தல் பிரச்சாரம் ……!!!

 1. selvam சொல்கிறார்:

  ஒருத்தர் ஆறு மாத கால்ஷீட் கொடுத்துவிட்டு உடல்நலத்தை காரணம் காட்டி அதை கேன்சல் செய்துவிட்டார். இன்னொருவர் கொடுத்த கால்ஷீட்டின் படி நடித்துக்கொண்டு இருக்கிறார். போக்கு வரத்து மற்றும் தங்கும் செலவு அனைத்தும் படம் எடுப்பவர்தான் செலவு செய்தாக வேண்டும். ஆகையால் படம் எடுப்பவர்களிடம்தான் கணக்கை நாம் கேட்டாக வேண்டும்.

  அந்த கேன்சல் செய்தவருக்கு, ஒவ்வொரு ஊருக்கும் ஹெலிகாப்டரில் எடுத்து சென்று, ஹெலிகாப்டரில் இருந்து காரில் ஏற்றி நேரிடையாக மேடைமேலேயே காரில் கொண்டு இறக்கி பிரச்சாரம் செய்ய ஏற்பாடு செய்து இருந்ததாக ஒரு செய்தி உண்டு.

 2. புவியரசு சொல்கிறார்:

  அய்யா செல்வம்;
  “இன்னொருவர் கொடுத்த கால்ஷீட்டின் படி நடித்துக்கொண்டு
  இருக்கிறார். போக்கு வரத்து மற்றும் தங்கும் செலவு அனைத்தும்
  படம் எடுப்பவர்தான் செலவு செய்தாக வேண்டும். ஆகையால்
  படம் எடுப்பவர்களிடம்தான் கணக்கை நாம் கேட்டாக வேண்டும்.”

  இந்த இன்னொருவர் உங்கள் தளபதியுடன் தான் கூட்டு
  சேரப்போகிறார். ஆக உங்கள் தலைவர் ஸ்டாலின் தான்
  இவரை வைத்து படம் எடுப்பவர்.
  அப்ப ஸ்டாலினிடம் தான் கணக்கு கேட்கவேண்டும்
  என்று சொல்கிறீர்களா ?

 3. selvam சொல்கிறார்:

  ஐயா புவியரசு

  நான் திமுக என்று நீங்களாகவே முடிவு செய்துகொண்டால் போதுமா ? என்னை இழுக்காமல் உங்களால் எவ்வளவு முடியுமோ திமுகவை திட்டுங்கள். நானும் ரசிக்கிறேன் . என்னை எந்த கட்சியுடன் இணைத்து பேசுவதை அருவருப்பாக உணர்க்கிறேன். நான் ஒரு நோட்டா ரசிகன். என்னால் எல்லோரையும் விமரிசிக்கமுடியும். உங்களால் முடியுமா ?

  தேர்தல் நெருங்க நெருங்க எல்லா கட்சிகளுக்கு எதிராகவும் என்னுடைய விமரிசனம் இருக்கும். நான் எவனுக்கும் அடிமையாக இருக்க விரும்பவில்லை.

 4. புவியரசு சொல்கிறார்:

  இப்போதெல்லாம் திமுக காரர்கள் தங்களை
  திமுக காரர் என்று வெளியில் சொல்லிக்கொள்ளவே
  வெட்கப்படுகிறார்கள். கூச்சப்படுகிறார்கள்.

 5. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  கமல்ஹாசன் செல்கின்ற ஊர்களில் எல்லாம்
  செய்தியாளர்களை சந்திக்கிறார்; உரையாடுகிறார்;
  சவால்கள் விடுக்கிறார்.

  அதில் கலந்துகொள்ளும் செய்தியாளர்களுக்கு
  ஒரு வேண்டுகோள் –

  ” நான் ஆட்சியமைத்தால், யார் வேண்டுமானாலும்
  எந்த கணக்கை வேண்டுமானாலும் கேட்கலாம்.
  பதில் சொல்லப்படும்” என்று சொல்கிறீர்களே…

  அதைச் செய்வீர்கள் என்கிற நம்பிக்கையை
  ஏற்படுத்துவும் விதமாக உங்கள் கட்சியின்
  வரவு-செலவு கணக்குகளை
  பொதுவெளியில் வெளியிடுவீர்களா…?”

  -என்று கேள்வி கேட்டு, அவரது விளக்கத்தைப்பெற
  வேண்டும்.

  இது செய்தியாளர்களின் அடிப்படைக் கடமை.

  • புதியவன் சொல்கிறார்:

   கா.மை. சார்…. பிக் பாஸ், புடவைக் கடை விளம்பரம்….இதுக்கே வெளிப்படையா கணக்கு காணோம் என்று நீங்கள் முன்பு எழுதின நினைவு. அரசியல்வாதிகள் அனேகமாக எல்லோரும், ‘அடுத்தவன் வீட்டு நெய்யே என் பெண்டாட்டி கையே’ என்றுதான் நினைக்கறாங்க. ஊரில் உள்ள பெண்களுக்கெல்லாம் மாத ஊதியம் தருவாராம்..ஆனா மனைவிகளுக்கு உள்ள உரிமைப் பங்கைத் தரமாட்டாங்களாம். ஆட்சி அமைத்தால் எல்லாக் கணக்கையும் கேட்கலாமாம்…ஆனா நடிகரா, கணக்குகளை மனசாட்சியோடு வெளிப்படையா காண்பிக்க மாட்டாங்களாம்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.