….
….

PTI12-03-2020_000028B
….
திரு.ரஜினிகாந்த், புதிய கட்சி துவங்கும்
முடிவிலிருந்து – பின் வாங்குவதாக அறிவித்தது –
அவர் வெளிப்படையாகச் சொன்ன காரணங்களுக்காக
மட்டும் தானா…?
ரஜினியின் அறிவிப்புக்கு அடுத்த நாளே –
தபாஜாகா-வில் உள்ள சில முக்கிய புள்ளிகளுடன்
பழகக்கூடிய தூரத்தில் உள்ள நண்பர் ஒருவரிடமிருந்து
எனக்கு சில நம்பத்தகுந்த தகவல்கள் கிடைத்தன.
பாஜக முக்கிய புள்ளிகள் சிலர், தங்களுக்குள்
ரஜினியைப்பற்றி மிகக்கடுமையான வார்த்தைகளை
பயன்படுத்திப் கருத்துகளைப் பரிமாறிக்கொண்டதாக
தெரியவந்தது.
அவை பற்றி தெரிய வந்ததும், ரஜினி மீது எனக்கிருந்த
அன்பும், மரியாதையும் பலநூறு மடங்குகள் அதிகரித்தன.
இருந்தாலும், உறுதியான ஒரு வடிவம் கிடைக்காமல்
நான் அவற்றை வெளியிட விரும்பவில்லை;
எனக்கு கிடைத்த தகவல்களை ஓரளவு உறுதிசெய்யும்
வகையில் red pix வெளியிட்ட ஒரு காணொலி கிடைத்தது.
அதை நண்பர்களின் பார்வைக்காக கீழே பதிவிடுகிறேன்.
காணொலியில் பல செய்திகள் கூறப்படுகின்றன…
விமரிசனம் தளத்தின் வாசக நண்பர்கள் புத்திசாலிகள்;
உண்மை எது; வதந்தி எது; பொய் எது – என்று
பிரித்துப்பார்க்கக்கூடிய அளவிற்கு திறன் உடையவர்கள்.
இந்த தகவல்களின் நம்பகத்தன்மை பற்றி, அவர்களே
முடிவு செய்துகொள்ளலாம்.
“எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும்
அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு…”
தாமதமாகவேனும், நிஜம் ஒரு நாள் வெளிப்பட்டே தீரும்…
நல்லவர்கள் புரிந்துகொள்ளப்படுவார்கள்;
பாவிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள்;
……..
……..
பின் குறிப்பு – நண்பர்கள் இது குறித்த தங்கள் கருத்தை
பின்னூட்டங்களின் மூலம் தெரிவிக்கலாம்.
.
——————————————————————————————————————————
அருமை
ரஜினி என்ன பொம்மையா மூணு வருடமாக அவங்க பேச்சை கேட்டுக் கொண்டிருந்துவிட்டு திடிரென ஞானதோயம் வந்து வரவில்லை என கூற. கடந்த 10 ஆண்டுகளாக அவரது மேடைப்பேச்சுகளை கேட்டால் தெரியும் அவர் அறிவாளியா சுயசிந்தனை உடையவரா இல்லையாயென்பது… எந்த ஆதாரத்தின் அடிப்படையில் ரஜினியை பாஜக இயக்கியது என மீண்டும் மீண்டும் இந்த திராவிட ஊடகங்கள் சொல்கின்றன என்பது எனக்கு தெரியவில்லை. பாஜகவை எதிர்க்கவில்லை என்றால் அவர் பாஜகவா… அவர் இப்ப எப்ப திமுக அதிமுக கட்சிகளை எதிர்த்தார். அப்ப அவரை ஏன் திமுக அதிமுக என கூறுவதில்லை? இப்படி கூட சொல்லலாம்… படப்பிடிப்பு செல்லும் முன்பு வரை உயிரே போனாலும் கட்சி ஆரம்பிப்பேன் என கூறியவர் அ்அங்கு சென்றதும் மாறியது ஏன் மாற்றியது எது மருத்துவமனையில் நடந்தது என்ன. படப்பிடிப்பில் அவரை சுற்றியிருந்தவர்கள் திமுகவினர் தானே அவர்கள் மேல் ஏன் எந்த ஊடகமும் சந்தேகம் எழுப்பவில்லை. நீங்க சென்ற இடுகையில் கூறியமாதிரி நம்ம தலைவிதி திராவிட கட்சிகளுடன் வெறுப்பரசியலில் சாதியரசியலில் தான் என்றால் யார் என்ன செய்யமுடியும். தெய்வ நிந்தனை செய்பவர்களை ஆதரித்தால் இது தான் நடக்கும்
நான் ஒரு ரஜினி வெறியன். இந்த முடிவினால் ரஜினிக்கு மன நிம்மதியை அந்த இறைவன் கொடுத்தால் அதுவே எனது எங்களது சந்தோசம்.
Sir Red PIX channel is a biased one and that person also belongs to NAAM TAMLAR group..
தமிழக ஊடகங்கள் எதுவுமே நடுநிலையானவைகள் அல்ல.
பொய்கள் புயல்போல் வீசும் ஆனால் உண்மை மெதுவாய்ப் பேசும்…..
இன்றைய சூழ்நிலையில் மகாத்மா காந்தியே திரும்ப வந்தாலும் அவரையும் திராவிட தமிழர்கள் பாஜகன்னு தான் சொல்லுவாங்க….
Redpix is purely DMK biased and indirect DMK paid YouTube channel. Redpix “Felix Gerald” is doing this job cleverly. This channel would not give negative promotions video or interview against DMK parties. People have to aware on this kind of lobby channel before come to conclusion from any news posted on this channel.
வீடியோ சுத்த பினாத்தல். தென் தமிழகத்தில் உள்ள மாவட்ட ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளை வளைக்க திமுக பெரும் தொகை கொடுப்பதையும் , அந்த விஷயம் ரஜினிக்கு தெரியவர, பணம் பெற்றுக்கொண்டு தேர்தலுக்கு தொகுதிகளை விற்றால் கடுமயான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அறிக்கை விட்ட செய்திகளை ஏன் யாருமே பேசுவதிலை. ? ராட்சச பணபலமிக்க திமுகவை எவ்விதத்திலும் ரஜினி எதிர்க்க இயலாது என்பதே இயல்பான உண்மை.
தமிழகத்தில் யுனீக் பாலிடிக்ஸ் இருப்பதாகவும் அதனை உடைக்க ரஜினி விரும்பவில்லை என்பதே, என்று சொல்வதே இந்த காணொளியில் நோக்கம். 30 வருடங்களுக்கு வராத ஞானோதயம். அரசியலுக்கு வந்தால் மற்ற கட்சிகளுக்கு எதிராகத்தான் செயல்பட நேரிடும் என்று உடல் நிலை காரணமாக ஹைதராபாத் அப்போலோவில் சேர்ந்த பின்னர்தான் ரஜினிக்கு ஞானோதயம் வந்ததாம் இவர்கூறும் பொய்கள் மகா அபத்தம்.
Redpix also one of the several channels funded by DMK . WE DONT BELIEVE IT.
Dmk is spending crores of rupees to comeback to power, to save the 2G Looted money and
loot more in Tamilnadu , With BJP at center all its 39
mps could not do anything ,so its only source now is Tamilnadu khajana.
A
அரிச்சந்திரனுக்கு அடுத்து, தமிழ் நாட்டில், உண்மை மட்டுமே பேசக்கூடிய ஊடகவியாளர்கள் இரண்டு பேர் மட்டுமே.
1.ரங்கராஜ் பாண்டே
2.மாரிதாஸ்.
ரஜினி விஜயத்தில் அவர்கள் சொன்னால் மட்டுமே உண்மையானதாக இருக்கும்.
அய்யா செல்வம்;
உங்கள் தலைவர் அரிச்சந்திர புத்திரன் இருக்கிறாரே
மறந்து விட்டீர்களா ?
மையப்புள்ளி திரு ரஜினிகாந்த் இல்லை .
பா ஜ க தான் மையப்புள்ளி .
கே பி முனுசாமி கட்சியை உடைக்க சதி ,
இரட்டை இலையை முடக்க முயற்சி
என்றெல்லாம் சொல்ல காரணம் அதுதான் .
அ தி மு க வெளிப்படையாக சொல்ல பயப்படுகிறது .
திரு ரஜனிகாந்த் வெளியே வந்தது சரிதான் .