….
….
….
திருச்சியில் நடந்த தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில்
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்
கொடுத்த வாக்குறுதியிலிருந்து கொஞ்சம் –
———————-
தமிழகத்திற்கு தேவை ஒரு நேர்மையான அரசு
அதனை எங்களால் தான் அமைக்க முடியும்.
நாங்கள் அமைக்கும் ஆட்சியில் சி.பி.ஐ. சோதனை
நடத்த தேவை இல்லை.
மக்களே கணக்கு கேட்கலாம்.
நாங்கள் பதில் சொல்வோம்.
———————–
அரசில் ஊழல் எப்படி வருகிறது…?
தேர்தலுக்காக தாங்கள் செலவழித்த பணத்தை,
வட்டியோடு, லாபத்தோடு திரும்ப எடுக்க
அரசியல்வாதிகள், அரசியல் கட்சிகள் முனைவதிலிருந்து
தான் ஊழல் ஆட்சி துவங்குகிறது.
தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் எவ்வாறு
நிதி சேர்க்கின்றன…? யார் யார், எப்போது, எந்த தேதியில்,
எவ்வளவு நன்கொடை கொடுக்கிறார்கள் -?
அந்தப்பணம் எப்படி எப்படி – எந்தெந்த விதங்களில்
செலவழிக்கப்படுகிறது என்பதை மக்கள் கண்காணிக்கத்
துவங்கினாலே, ஊழலின் அஸ்திவாரம் பரிசோதனைக்கு
உள்ளாக்கப்படுகிறது அல்லவா…?
எனவே, தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள்
அனைத்துமே, தங்கள் கட்சிக்கணக்குகளை, வரவு-செலவு
விவரங்களை வெளிப்படையாக பொதுவெளியில்,
தங்கள் கட்சியின் வலைத்தளத்தில் வெளியிட்டு,
வாரம் ஒரு தடவை அதை புதுப்பிக்க (update) வேண்டும்.
ஊழலை ஒழிப்பதற்கான முதல் படி இது….
இதை கமல்ஹாசனின் கட்சி மட்டும் என்றில்லாமல்
அனைத்து கட்சிகளுக்கும் நடைமுறைக்கு கொண்டுவர
வேண்டும்….
” தமிழகத்திற்கு தேவை ஒரு நேர்மையான அரசு
அதனை எங்களால் தான் அமைக்க முடியும்.
நாங்கள் அமைக்கும் ஆட்சியில்
மக்களே கணக்கு கேட்கலாம்.
நாங்கள் பதில் சொல்வோம்.”
-என்று கமல்ஹாசன் வெளிப்படையாக அறிவித்திருக்கிறார்;
வாக்குறுதி கொடுத்திருக்கிறார்.
ஓகே. அவர் ஆட்சிக்கு வரும்போது,
இதை அரசில் நடைமுறைப்படுத்தலாம்.
தற்போதைக்கு அவரது மக்கள் நீதி மய்யம் கட்சியில்
இதை நடைமுறைப்படுத்துவது
அவர் கையில் தானே இருக்கிறது…?
மற்ற எல்லா கட்சிகளுக்கும் முன் மாதிரியாக
கமல் ஹாசன் தனது கட்சியின் வரவு-செலவு கணக்குகளை
பொதுவெளியில், அவரது கட்சியின் வலைத்தளத்தில் –
எல்லாரும் பார்க்கும்படியாக வெளியிட வேண்டும்…
செய்வாரா…?
செய்தால், அவர் கொடுக்கும் வாக்குறுதிகள்
காற்றோடு போகாமல், செயலுக்கு வரும் என்பதற்கான
ஒரு உறுதியான உதாரணமாக அது இருக்கும்.
கமல்ஹாசனுக்கு இது ஒரு சவால்…
போகிற போக்கில் வாக்குறுதிகளை அள்ளிவீசிவிட்டுச்
செல்வது மிகவும் எளிது –
சொல்லியவண்ணம் அவர் செய்வாரா…?
அப்படியென்றால் முதலில் தன் கட்சி அளவில்
அதை செய்து காட்டட்டும்…
.
———————————————————————————————————-
Pingback: கமல்ஹாசன், தன் மகளுடன் ஹெலிகாப்டரில் தேர்தல் பிரச்சாரம் ……!!! | வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்