….
….
….
நக்கீரனில் வெளியாகியிருக்கும் ஒரு தலைப்புச் செய்தி –
—————————————————————————-
” மக்கள் நீதி மய்யம் அலுவலகத்தைத்
தொடர்புகொண்டு பேசும் பெண்கள்..!”
…
…
“எங்கள் ஆட்சி அமைந்தால், இல்லத்தரசிகளுக்கு ஊதியம்
தருவோம்” என்று கமல் அறிவித்திருப்பது பரபரப்பை
ஏற்படுத்தியிருக்கிறது.
தேர்தல் பிரச்சாரத்தில் கமல் இப்படி சொல்ல,
ஏற்கனவே தன்னுடைய வேலைக்கான ஊதியத்தை கமல்
தரவில்லை என நடிகை கவுதமி தெரிவித்திருந்ததை எடுத்து,
சமூக வலைதளங்களில் கமலுக்கு எதிராகப் பரப்ப
ஆரம்பித்துவிட்டார்கள்.
“அவங்க கணக்கை செட்டில் பண்ணிட்டு, அப்புறமா மற்ற
வீட்டு இல்லத்தரசிகளுக்கு ஊதியம் கொடுங்கன்னு” நிறைய
கமெண்ட்ஸ் அதில் வந்திருக்கிறது. ( இதில் விமரிசனம்
இடுகைக்கும் –கமல் ஹாசனுக்கே இல்லத்தரசிகளின் ஓட்டு….!!! பங்கு உண்டா இல்லையா என்பது
தெரியவில்லை….!!! )
“அரசியல்ல இதெல்லாம் சகஜம்தானே?” என விமர்சனங்களைத்
தாண்டி, கமல் முன்வைத்த 7 அம்சத் திட்டத்தில் ஒன்றாக,
‘இல்லத்தரசிகளுக்கு ஊதியம் வழங்கும் திட்டம்’
பெண்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
கமலின் அறிவிப்புக்குப் பிறகு, மக்கள் நீதி மய்யம்
அலுவலகத்தைத் தொடர்புகொண்டு பேசும் பெண்கள்,
இல்லத்தரசிகளுக்கு ஊதியம் என்றால் –
– எப்படி அதை வழங்குவீர்கள்?
– அதைப் பெற ஏதேனும் தகுதிகள் தேவையா?
– அதற்குப் படித்திருக்க வேண்டுமா?
-என்றெல்லாம் விசாரித்து வருகிறார்கள். கூடவே,
நீங்கள் அறிவித்தது உண்மை என்றால், எங்கள் ஓட்டு
உங்களுக்குத்தான் என்றும் சொல்லி, கமல் தரப்பை
உற்சாகப்படுத்தி வருகிறார்களாம்.
———————————————————
மேற்படி செய்தியை நக்கீரன் பிரசுரம் செய்திருப்பது
கமலுக்கு உபகாரமா அல்லது உபத்திரவமா…? என்பது
நமக்குத் தெரியவில்லை….
எப்படி இருந்தாலும், நம் பங்குக்கு இன்னுமொரு
ஆலோசனையையும் நக்கீரனுக்கு சொல்ல விரும்புகிறோம்.
கமல் ஹாசன் மற்றும் அவர் அலுவலகத்தின்
டெலிபோன் நம்பரையும் பிரசுரம் செய்தால்,
– அது பெண் குலத்திற்கு செய்த பேருதவியாக இருக்கும்…!!!!
– செய்வார்களா….?
.
——————————————————————————————————
கமலஹாசன் அவர்கள், அவரது இல்லத்தரசியாக இருந்த கௌதமிக்கு ஏகப்பட்ட பணம், செய்த வேலைகளுக்கு, பாக்கி வைத்திருந்து விரட்டிவிட்டதாக கௌதமி குற்றம் சாட்டியிருந்தாரே. செய்த வேலைகளுக்கே பணம் தராதவர், ஊரான் வீட்டுப் பணம் என்றதும் ஓசியில் அள்ளிவிடத் திட்டமிடுகிறாரோ?
/- எப்படி அதை வழங்குவீர்கள்?
– அதைப் பெற ஏதேனும் தகுதிகள் தேவையா?
– அதற்குப் படித்திருக்க வேண்டுமா?//
ஹாஹா…. ஓசிக்கு பணம் வருது என்றால் நம்ம ஊர்ல உள்ளவங்களுக்குத்தான் எத்தனை ஆர்வம். கார்ல எல்லாம் வந்து கியூவில் நின்று ரேஷன் கடையில் பணம் பெற்றுச் செல்பவர்களையும் இலவசங்களை வாங்கிச் செல்பவர்களையும் நான் அடையாரில் பார்த்திருக்கிறேன்.