சபாஷ் – சரியான போட்டி …!!! ஸ்டாலினா – சீமானா … ?

….
….

….

தமிழா….? திராவிடமா …?

சீமானா – ஸ்டாலினா…?

சபாஷ் சரியான போட்டி என்று வரவேற்கத் தோன்றுகிறது
நாம் தமிழர் கட்சித்தலைவர் சீமான் அவர்களின் அறிவிப்பு –

“நான் போட்டியிடும் தொகுதியை, திரு.ஸ்டாலின் தான்
தீர்மானிக்க வேண்டும்.. ஏனென்றால் – அவர் போட்டியிடும்
தொகுதியில் தான் நானும் போட்டியிடப்போகிறேன்…”

சீமான் அவர்களின் தன்னம்பிக்கையை பாராட்டுகிறேன்…
வரவேற்கிறேன்.

இங்கே பிரச்சாரத்தில் ஈடுபடும்போது, ஒரு முக்கியமான
தலைப்பில் சீமான் நிறையப்பேச வேண்டும் என்று
எதிர்பார்க்கிறேன்.

தமிழ்நாட்டைத் தவிர,
முக்கியமாக, திமுக-வினரைத் தவிர,
கேரளாவிலோ, ஆந்திராவிலோ, தெலங்கானாவிலோ,
கர்நாடகத்திலோ – எந்த ஒரு கட்சியோ, தனிமனிதரோ
“திராவிடர்” என்கிற பேச்சையே எடுப்பதில்லை; அவரவர்
மாநிலம் தான் அவர்களுக்கு முக்கியம். இங்கு தமிழ்நாட்டில்
மட்டும் தான் திராவிடர் முழக்கமெல்லாம்.

என்னைப் பொருத்தவரையில், எனது அறிமுகம் –
இந்தியாவுக்குள் கேட்டால் “தமிழன்”
இந்தியாவுக்கு வெளியே கேட்டால் “இந்தியன்”
என்பதாகத் தான் இருக்கும்….

திராவிடன் என்பது பூகோளரீதியாக, விந்தியமலைக்கு
கீழே, தெற்கில் வசிப்பவர்களை பொதுவாகக் குறிக்கும்
ஒரு சொல்… அது ஒரு இனத்தைக் குறிக்கும் சொல் அல்ல.
திராவிடன் என்பது ஒரு இனம் என்று சொல்வது
வெறும் ஏமாற்று வேலை.

ஸ்டாலின்-சீமான் ஆகியோருக்கிடையே ஏற்படும் போட்டியில்,
“பணம்” என்கிற சொல்லைத் தவிர்த்து, “திராவிடன்-தமிழன்”
என்கிற சொல்லும் அதிகம் பேசப்படும் என்று
எதிர்பார்ப்போமாக…

திரு.ஸ்டாலின், தனது வெற்றியை உறுதி செய்துகொள்ள
வேண்டுமானால்,

2-வதாக, இன்னொரு தொகுதியிலும்
போட்டியிட்டாக வேண்டும் என்கிற அளவிற்கு இந்த தொகுதியில்
போட்டி கடுமையாக இருக்க வேண்டுமென்று விரும்புகிறேன்.

இந்த தேர்தலுக்குப்பிறகாவது, “திராவிடர்” என்கிற சொல்லுக்கு
தெளிவான அர்த்தம் எல்லாருக்கும் புரிய வேண்டும்.

.
——————————————————————————————————-

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

6 Responses to சபாஷ் – சரியான போட்டி …!!! ஸ்டாலினா – சீமானா … ?

 1. புதியவன் சொல்கிறார்:

  கா.மை.சார்… நீங்க எங்க தலைவரைப் பற்றி எத்தனை இடுகைகளானாலும் போட்டுக்கோங்க. அது உங்க சுதந்திரம். ஆனால் டோப்பா இல்லாமல் படங்களை வெளியிடுவதை நான் வன்மையாகக் கண்டிக்க வேண்டியிருக்கும். டோப்பா இல்லாமல் பார்க்கச் சகிக்கலை. (டோப்பா இருந்தாலே தாத்தா படம் சகிக்காது என்று மற்றவர் நினைப்பது அவரவர்களின் கருத்துச் சுதந்திரம்) புதுவருடம் வரப்போகுதுன்னு சந்தோஷத்தில் இருக்கும் என் மூடு இதனால் ரொம்பவே அப்செட்.

 2. புதியவன் சொல்கிறார்:

  திராவிடர் என்பதற்கு சரியான அர்த்தம், தென்னிந்தியர்கள் என்பதுதான். தமிழகத்துல, நீதிக்கட்சியை ஆரம்பித்தவர்கள் தெலுங்கர்கள். தமிழகத்தில் தெலுங்கு பேசுபவர்கள் (தாய்மொழியாகக் கொண்டவர்கள்) அதிகம். அதனால்தான் ‘தமிழர்கள்’ என்று ஆரம்பிக்காமல் ‘திராவிடர்கள்’ என்று ஆரம்பித்தது. அதே நீதிக்கட்சி திராவிடர் கழகமாக ஆனது. அதிலும் தெலுங்கு பேசும் ஈ.வெ.இராமசாமி நாயக்கர்தான் (பெரியார்) தலைவராக இருந்தார். அதிலிருந்து உருவான திமுகவிலும் தெலுங்கு பேசும் கருணாநிதிதான் தலைவராக ஆனார். அதனால்தான் ‘திராவிடர்’ என்ற சொல்லைத் தவிர்க்க முடியவில்லை. திமுக டூப் விட்டதுபோல, தெலுங்கை தாய்மொழியாகக் கொண்டவர்களும், தமிழர்களிடம் டூப் விடுவதற்காக, தமிழன் பிரசன்னா, தமிழச்சி தங்கபாண்டியன் என்று பெயர் வைத்துக்கொண்டு வலம் வருகின்றார்கள். கோவையில் தேர்தல் பரப்புரையில் சந்திரபாபு நாயுடு தெலுங்கிலேயே பேசியதும் கவனிக்கத்தக்கது.

  தமிழர்களுக்கான கட்சி என்ற லேபிளில் வலம் வரும் சீமானும் தமிழர் இல்லை.

  தமிழர்கள் என்பவர்கள் தாய்மொழியாக தமிழைப் பேசுபவர்கள் மட்டும்தான் என்பது என் அபிப்ராயம். அதில் நாம் அவர்களின் முன்னோர்கள் தெலுங்கு தேசத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர்களா, சேரர் தேசமா இல்லை கன்னட தேசமா எனக் கவனிக்கவேண்டியதில்லை. அதுபோலவே மதத்தையும் கவனிக்க வேண்டியதில்லை. தாய்மொழி தமிழ் அல்லாத மற்றவர்கள் ‘தமிழர்கள்’ கிடையாது, என்னதான் ‘தமிழன், தமிழச்சி’ என்று போலி லேபிள் வைத்துக்கொண்டாலும்.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   புதியவன்,

   //தமிழர்கள் என்பவர்கள்
   தாய்மொழியாக தமிழைப் பேசுபவர்கள்
   மட்டும்தான் என்பது என் அபிப்ராயம். //

   நான் இதை ஆமோதிக்கிறேன்.
   என்னுடைய நிலையும் இதுவே தான்.

   .
   -வாழ்த்துகளுடன்,

   காவிரிமைந்தன்

 3. GOPI சொல்கிறார்:

  வருங்கால முதலமைச்சரின் பொருளாதார சிந்த்னைச் சிறப்பு –
  ஒரு பெண்ணின் திருமணத்திற்கு 5000 -10000 இருந்தால்
  போதுமாம் :

  • புதியவன் சொல்கிறார்:

   இதெல்லாம் ஒரு விஷயமா? எழுதித் தரவங்க எண்ணில் எழுதித் தராமல் எழுத்தில் தந்திருந்தால், அது ஒரு உருப்படியான மீம்ஸுக்கு வழிவகுத்திருக்கும். ஒருவேளை இவர், அமெரிக்க டாலரைக் குறிப்பிட்டிருப்பாரோ? தகுதி இல்லாதவர்களெல்லாம் தலைமைப் பதவிக்கு வருவதால் இன்னும் என்னென்ன அனர்த்தங்கள் நடக்கப்போகுதோ.

 4. selvam சொல்கிறார்:

  இந்த மண்ணுக்கும், மக்களுக்கும் துளியும் சம்பந்தமே இல்லாத, ஆனால் அதே சமையத்தில், இந்த மண்ணையும், மக்களையும் ஆண்டாண்டு காலமாக ஆதிக்கம் செலுத்திவரும் ஆரியர்களும், திருட்டு தெலுங்கு திராவிடர்களும்தான் சீமானை மலையாளி என்று கூறி வருகிறார்கள்..

  இதை நாம் தமிழர் கட்சியினர் சாதியவாதம் என்று கருதி கடந்து செல்கிறார்கள். அனால் இந்த ஆரியவாதிகள் பிஜேபிக்கு ஆதரவாக இருக்கும் நாடார் சமூகத்தினர் ஏன் அமைதியாக கடந்து செல்கிறார்கள் என்று தான் புரியவில்லை. நாடார் சாதியினர் தமிழர் இல்லை என்றால் வேறு யார்யார் எல்லாம் தமிழர்கள் என்று இந்த ஆரியர்கள் ஒரு பட்டியல் இட்டால் மிகவும் நன்றாக இருக்கும்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.