….
….
….

(அண்ணாச்சி ஆடுறார்… ஒத்திக்கோ… ஒத்திக்கோ என்று ஒரு வீடியோ வேறு வெளியிட்டிருக்கிறார்களாம்…!)
….
திமுக மாவட்ட செயலாளர் – எம்.எல்.ஏ., மற்றும்
மாநில மாணவரணித் துணைச் செயலாளர் ஒருவர்
பற்றிய சில நல்ல செய்திகள் வெளியாகி இருக்கின்றன….
படித்து விட்டு, இது நல்ல செய்தியா சார் என்று கேட்காதீர்கள்…
தேர்தலுக்கு முன்னர் யாரைப்பற்றிய உண்மைகள்
வெளிவந்தாலும் அது மக்களைப் பொருத்தவரையில்
நல்ல செய்தி தானே…?
திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களின் உத்திரவுப்படி
நடந்துகொண்டிருக்கும் “மக்கள்” கிராம சபைக்கூட்டங்கள்
எப்படி நடந்து கொண்டிருக்கின்றன என்பது பற்றி நிறைய
செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. அவற்றில் ஒன்று –
——————————-
” சொத்து மதிப்பு 4,999 கோடியா?
அனிதாவைச் சுற்றும் அடுத்த சர்ச்சை! –
என்கிற தலைப்பில் வெளியாகியிருக்கும் ஒரு
செய்தியிலிருந்து கொஞ்சம் –
( https://www.minnambalam.com/politics/2020/12/29/53/anitha-
radhakrishnan-assets-value-4999-crore-tuticorin-gramasaba-meeting-
dmk-umari-sankar )
மீண்டும் சர்ச்சை அலைகளில் சிக்கிக் கொண்டிருக்கிறார்
திருச்செந்தூர் சட்டமன்ற உறுப்பினரும், தூத்துக்குடி தெற்கு
திமுக மாவட்டச் செயலாளருமான அனிதா ராதாகிருஷ்ணன்.
அதிமுகவை நிராகரிக்கிறோம் என்ற பொருளில் தமிழகம்
எங்கும் இருக்கிற கிராமங்களில் மக்கள் கிராம சபை கூட்டம்
என்ற பெயரில் ஊர்க் கூட்டங்களை நடத்துமாறு திமுக
தலைவர் ஸ்டாலின் உத்தரவிட்டார். அதன்படியே தமிழகம்
எங்கும் மக்கள் கிராம சபைக் கூட்டங்கள் நடந்து வருகின்றன.
இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி
கிராமத்தில் நடந்த கிராம சபைக் கூட்டத்தில் அனிதா
ராதாகிருஷ்ணனின் வலதுகரம் போன்றவரும், திமுகவின்
மாநில மாணவரணித் துணைச் செயலாளருமான
உமரி சங்கர் கடந்த 26ஆம் தேதி நடந்த கிராமசபைக்
கூட்டத்தில் பேசிய பேச்சு –
அம்மா ;பேரவை செயலாளரான கே.ஆர். எம்.ராதாகிருஷ்ணன்
என்பவரைத் தாக்கி உமரி சங்கர் பேசுகிறார்…
“மனித நேயக் காப்பாளர் அத்தான் அனிதா ராதாகிருஷ்ணனை
நீ எந்த வகையில் எதிர்ப்பாய்?
இன்னும் 120 நாளில் எங்கள் தலைவர் தளபதி தலைமையில்
ஆட்சி அமையும்போது எங்கள் அத்தான் அனிதா ராதாகிருஷ்ணன்
இந்த மாவட்டத்தின் மந்திரி. அவர் இந்த மாவட்டத்தில் எல்லா
கிராமங்களுக்கும் கோயில் கட்டிக் கொடுத்துள்ளார்.
ஆனால் நீ என்ன செய்கின்றாய்? ஊர் ஊராக கஞ்சா விற்கின்றாய்”
என்று ஆறுமுகனேரி ராதாகிருஷ்ணனை கடுமையாக தாக்கிய
உமரி சங்கர்,
“சென்னையில் உன்னால் தனியாக போய் வர முடியுமா?
வா போட்டுப் பார்ப்போம். காவல்துறை எதற்கு அவருக்கு
அஞ்சுகிறது?
நான் 96-ல் ஊராட்சி ஒன்றிய தலைவராக இருந்தபோது
ஸ்ரீ வைகுண்டம் சண்முகநாதன் – என்னிடம் – சாராயம் வாங்கி
விற்றவர்.
நான் அரசு சாராயக் கடை நடத்தியவன்.
அவருக்குத் தொடந்து கரண்ட் பில் கட்டினவன்.
என்னிடம் ஐந்து லட்சம் கடன் வாங்கினியே திரும்பிக்
கொடுத்தியா?
அமைச்சர் கடம்பூர் ராஜூ இதற்கு முன் என்ன செய்து
கொண்டிருந்தாய்? என்ன கேஸ் வேண்டுமானாலும் போட்டுக்கோ,
இன்னும் 120 நாளில் என் தலைவன்
தலைமையில் ஆட்சி அமையும். அப்ப பாத்துக்குறேன்.”
என்று தனது தனிப்பட்ட விஷயங்களையும், தனிப்பட்ட
எதிரிகளையும் பற்றி மட்டுமே பேசியவர் கடைசியில்
வைத்தார் அறிவாலயத்துக்கே ஒரு ஷாக்.
“ இந்த மாவட்டத்திலேயே நாடார் சமுதாயத்தில்
முதல் பணக்காரன் என் அம்மையுடைய சகோதரி குடும்பம்
ஜெயச்சந்திரன் டெக்ஸ்டைல்ஸ்..
இரண்டாவது பணக்காரர் 4,999 கோடி ரூபாய் சொத்து
வச்சிருக்கிற அனிதா ராதாகிருஷ்ணன் தான்
இரண்டாவது பணக்காரன். நாங்கதான் பண்ணையார்.
எதற்கும் அஞ்ச மாட்டோம்” என்று பேசியிருக்கிறார்
உமரி சங்கர்.
—————————
இது போன்ற “மக்கள் கிராம சபை” கூட்டங்கள் இன்னும் நிறைய
நடக்க வேண்டும்….!!!இத்தகைய, மக்களுக்கு தெரியாத
செய்திகள் எல்லாம் தொடர்ந்து வெளிவர வேண்டும்.
.
——————————————————————-
அவருக்குத் தெரிந்தே 5000 கோடியா? இதுபோன்ற ‘வலது கரம்’, ஸ்டாலினுக்கு இருக்காதா? அவங்களுக்கு பத்து சைபருக்குமேல் போட்டால் அது எவ்வளவு பணம் என்பதாவது தெரியுமா?
எப்படியோ… குறைந்தபட்சம் நமக்காவது தெரியுமே…எத்தனை எத்தனை எத்தர்கள் அடுத்து ஆட்சிக்கு வரப்போகிறாங்க, கல்லா கட்டப் போகிறாங்க என்பது. கருணாநிதி எவ்வழியோ…அவ்வழி அவரது கும்பல்.