தன் பர்சனாலிடியை தானே கிண்டல் செய்துகொள்ளும் ரஜினிகாந்த் ….

….
….

….

தன்னைத்தானே கேலியும், கிண்டலும் பண்ணிக்கொள்ள –
உச்சபட்ச தன்னம்பிக்கை இருப்பவர்களால்
மட்டும் தான் முடியும்….

தான் மற்றவர்களால் நேசிக்கப்படுவது, தனது வெறும்
தோற்றத்திற்காக மட்டுமல்ல – அதற்கும் அப்பாற்பட்ட
குணங்களுக்காகவே என்றுபுரிந்துகொள்பவர்கள்….
வெளித்தோற்றத்திற்காக அதிகம் மெனக்கெடவோ,
கவலைபடவோ மாட்டார்கள்.

இதற்கு சிறப்பான உதாரணமாக மறைந்த துக்ளக்
ஆசிரியர் “சோ” அவர்களை சொல்லலாம்… அவர்
தன்னைத்தானே கிண்டல் செய்துகொள்ளாத நிகழ்ச்சிகளே
கிடையாது….

ரஜினி இங்கே செய்வது – ஹீரோவாக நடித்துக் கொண்டிருக்கும்
எந்த நடிகரும் செய்யத் துணியாதது –

……

……

.
————————————————————————————————

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

7 Responses to தன் பர்சனாலிடியை தானே கிண்டல் செய்துகொள்ளும் ரஜினிகாந்த் ….

 1. புதியவன் சொல்கிறார்:

  இதை முன்னமேயே பார்த்திருக்கிறேன். ரஜினிகாந்த் எனக்குத் தெரிந்து விழாக்களுக்கு மேக்கப், டோப்பா போன்றவை வைத்துக்கொண்டு வந்தது கிடையாது. அதுபோல போலி மரியாதை காட்டியதும் கிடையாது. பேச்சும் மனதில் உள்ளதைப் பேசும் டைப். இந்த விஷயத்தில் அவர் ரொம்பவே வெளிப்படையானவர்.

  அரசியலிலோ, டோப்பாக்கள் வைத்துக்கொண்டு வந்து, சைக்கிள்களில் நின்று போஸ் கொடுத்து ‘தாத்தாக்கள்’ தங்களை இளைஞர்களாகக் காட்டிக்கொள்ளும் காலம் இது.

  • Rajs சொல்கிறார்:

   அரசியலில் சாமியார் வேசமும் போடுகிறார்கள்.

  • புதியவன் சொல்கிறார்:

   ரஜினிக்கு தமிழகத்தில் மிக உயர்ந்த இடம் உண்டு. அவருடைய வயது மட்டும்தான் அவருக்குத் தடையாகிவிட்டது. அரசியலுக்கு வருவேன் என்று உறுதியோடு சொன்னதற்கே, பிகே, திமுகவுக்கு பின்னடைவு என்று சொல்லியிருக்கு.

   அரசியலில் சாமியார் வேடம் போடுவது எனக்குத் தெரிந்து எஸ்.ரா.சற்குணம்தான். அவரைத்தான் நீங்க சொல்றீங்களோ?

   வேஷம் போடுவதெல்லாம் திமுக, திக, விசிக , பாமக, கம்யூனிஸ்டுகள் போன்ற கட்சிகள்தான். இதற்கு எடுத்துக்காட்டுகள் நிறைய கொடுக்கமுடியும், அல்லக்கை சுப.வீரபாண்டியனின் லேடஸ்ட் அறிவுரை முதல்கொண்டு.

   • Rajs சொல்கிறார்:

    வேசம் போடும் listல் AIADMK இல்லையா.

   • புதியவன் சொல்கிறார்:

    அதிமுக இந்தப் பட்டியலில் இல்லை. இதற்கு மேல் இதனை விளக்க விரும்பவில்லை. கா.மை. சார், சாதி, மதம் பற்றிய மேலே குறிப்பிட்ட கட்சியினரின் வேஷங்களை, ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு மாதிரி பேசுவதை, சிறுபான்மையினரின் ஓட்டுக்காக, அவர்கள் மத்தியில் இந்து மதத்தைப் பற்றிக் குறை கூறிப் பேசுவதை, பிறகு வாக்குகள் வேணும் என்று வரும்போது பல்லைக்காட்டுவதையெல்லாம் விளக்கமாக எழுதுவதை விரும்பமாட்டார். இங்க தேர்தல் சமயத்தில், ‘முள்ளிவாய்க்கால்’, ‘ஈழச்சொந்தங்கள்’, ‘கொடூரன் ராஜபக்‌ஷே’ என்று பேசுபவர்கள், இலங்கைக்குச் சென்று பல்லைக் காட்டி பரிசில்கள், காசு, காண்டிராக்டுகள் பெற்றுவந்ததையெல்லாம் நீங்கள் படித்ததில்லை, புகைப்படங்களைப் பார்த்ததில்லை போலிருக்கு. இல்லாவிட்டால், உள்ளூர்காரர், 28,000 கோடி ரூபாய் இலங்கையில் முதலீடு செய்யவந்தது எப்படி? நதிமூலம் ரிஷிமூலம் ஆராய்ந்தால் அது கருணாநிதியிடம் போய்த்தான் நிற்கும்.

 2. GOPI சொல்கிறார்:

  Rajs
  ” டோப்பாக்கள் வைத்துக்கொண்டு வந்து, சைக்கிள்களில்
  நின்று போஸ் கொடுத்து ‘தாத்தாக்கள்’ தங்களை இளைஞர்களாகக் காட்டிக்கொள்ளும் காலம் இது”

  இந்த உண்மையை உங்களால் மறுக்க முடியவில்லை;
  பதிலுக்கு வயிற்றேரிச்சலில் எதையோ சொல்கிறீர்கள்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.