….
….
….
( முழு பேட்டியையும் பார்க்க நேரம் இல்லாதவர்கள்,
முதல் 10-12 நிமிடங்கள் அவசியம் பாருங்கள் என்று சொல்வேன்.
நிகழ்ச்சியின் highlight/சாரம் அங்கேயே கிடைத்து விடுகிறது. )
நேர் காணல் நிகழ்த்துவதில் தந்தி டிவி ஹரி
நல்ல தேர்ச்சி பெற்று விட்டார்.
சிரித்துக்கொண்டே எதை வேண்டுமானாலும் கேட்கிறார்.
பதில் சொல்பவர்கள் வழிவதைப் பார்க்கும் அழகான
சந்தர்ப்பங்களை பார்வையாளர்களுக்கு உண்டாக்கிக் காட்டுகிறார்.
ஒரு நல்ல தமாஷான ஒரு பேட்டி –
இந்த நிகழ்ச்சியை பார்ப்பவர்கள் நம்மைப்பற்றி
என்ன நினைத்துக்கொள்வார்கள் என்கிற உணர்வே இல்லாமல்
நடந்துகொள்வது எப்படித்தான் சாத்தியமாகிறதோ … ?
இவர்கள் எல்லாரும் ஒரு விதத்தில் தியாகிகள் தான்…
கட்சிக்காக தங்களது எல்லாவற்றையும் இழக்கத்தயாராக
இருக்கிறார்களே…!!!
நிகழ்ச்சியின் துவக்கத்தில், முதலமைச்சர் வேட்பாளர்
அறிவிப்பு குறித்து, அவர் விளக்கம் சொல்வது –
“இன்னொரு வாழைப்பழம் எங்கே…?
இது தாங்க அது…” -வை நினைவுபடுத்தி
சிரிக்க வைக்கிறது.
………….
………….
.
——————————————————————————————————–
ஜெ. இல்லை என்றவுடன் பாஜக வுக்கு எவ்வளவு தைரியம்? இத்தனைக்கும் அதிமுக தலைவர்கள் (ஓபிஎஸ் தவிர) அனேகமா, பாஜக தேவையில்லை என்றே சொல்றாங்க. தமிழகத்தில் என்.டி.ஏ. கூட்டணியாம்…. சிரிப்பு சிரிப்பா வருது.
நானும் ஒரு கூடை அதிரசம் செய்து, ரிலையன்ஸ் ஸ்டோரில் ஒரு மூலையில் அவங்கள்ட கெஞ்சிக் கூத்தாடி, அவங்களும் பரிதாபப்பட்டு, போனாப் போகுதுன்னு வித்துட்டுப்போ என்று சொல்லிவிட்டால், மறுநாளே, நானும் அம்பானியும் பிஸினெஸ் பார்ட்னெர்ஸ், அவர், அவர் பையனை அடுத்த எம்.டி.யா அறிவித்திருக்கார், நானும் யோசித்து, என் மனைவியிடம் ஒரு வார்த்தை கேட்டுக்கொண்டு, அதை அங்கீகரிக்கலாம் என்று முடிவு செய்திருக்கேன் என அறிக்கை விடவேண்டியதுதான் போலிருக்கு.