கமல் ஹாசனுக்கே இல்லத்தரசிகளின் ஓட்டு….!!!

….
….

….

திருவாளர் கமல்ஹாசன் தான் ஆட்சிக்கு வந்தால்
என்னென்ன செய்வேன் என்று வரிசையாக அறிவித்து
வருகிறார்…

அவற்றில் ஒன்று –

பெண் சக்தி: .
————————————————————–

இனி இல்லத்தரசிகள் வெளியே எங்கும் வேலைக்குச்சென்று
சம்பாதிக்க முடியவில்லையே என்று கவலைப்பட வேண்டாம்…

அவரவர் தங்கள் வீட்டில் செய்யும் வேலைகளை
கமல் அல்லது அவரது பிரதிநிதிகள் மதிப்பிட்டு, அவர்களுக்கு
மாதம் எவ்வளவு ஊதியம் கொடுக்கலாம் என்று தீர்மானித்து –

……. அவர் அமைக்கப்போகும் எதிர்கால அரசிலிருந்தே
அரசு ஊதியம் கொடுக்க உத்திரவு போடுவார்….!!!

வாசக நண்பர்களுக்கு ஒரு தகவல் –

As per projection, population of Tamil Nadu in 2020 is 8.37 Crore.
பெண்களின் விகிதம் – 99.6 % (ஆயிரத்திற்கு 996 பேர்…)

ஆக, தமிழ்நாட்டில் மொத்த பெண்களின் எண்ணிக்கை
கிட்டத்தட்ட – 4.15 கோடி.

இதில் சுமார் 1.15 கோடி பெண்கள் பல்வேறு
உத்தியோகங்களுக்கு போவதாக வைத்துக்கொண்டால் கூட –

மீதி 3 கோடி பெண்களுக்கு( அரை கோடியை வேண்டுமானால்
18 வயதுக்குட்பட்டவர்கள் என்று கழித்துக் கொள்ளலாம்…)

கமல் ஹாசனின் – அரசு –
சம்பளம் கொடுக்கப்போகிறது…!!!

சப்பாஷ் …!

—————————————————————–

பின் குறிப்பு – கொஞ்ச நாட்களுக்கு முன்னர்,
திருமதி கௌதமி அவர்கள் கமல் ஹாசனுக்கு ஒரு
வக்கீல் நோட்டீஸ் அனுப்பி இருந்தார்…

அவரது படங்களில் காஸ்டியூம் டிசைனராக
பணியாற்றியதற்கு தருவதாகச் சொல்லி இருந்த
ஊதியத்தை இன்னும் ஏன் கொடுக்கவில்லை –
உடனே கொடுக்க வேண்டுமென்று சொல்லி….
…..
முதலில் திருமதி கௌதமி அவர்களின் அக்கவுண்ட்டை
செட்டில் செய்து விட்டு, அந்த acknowledgement -ஐ
காட்டிவிட்டு,

பிறகு தனது பிரச்சாரத்தை கமல் ஹாசன் தொடர்ந்தால்,
இல்லத்தரசிகளுக்கு அவர் மீது நம்பிக்கை இன்னும்
அதிகரிக்கக்கூடும்…..!!!

—————————————————————-

இதை நம்ப முடியாத வாசகர்களுக்கு நம்பிக்கை தர
இண்டியன் எக்ஸ்பிரஸ் ஆங்கில நாளிதழிலிருந்து ஆதாரம் –

https://indianexpress.com/article/entertainment/tamil/gautami-allegations-kamal-haasan-5079797/
——-

Actor Gautami on Tuesday posted a new blog, a follow up to the one
she wrote on Saturday in which she had lashed out at her former
live-in partner Kamal Haasan. In the latest blog, she has addressed
the blowback she received for holding Kamal entirely responsible
for pushing her to end the relationship with him.

In Saturday’s blog, she had alleged that she is yet to receive her
remuneration for the services rendered as the costume designer
for the films produced by Kamal’s production company
Raajkamal Films International, (RKFI).

“And this was my primary source of income –

as my working both in front of and behind the camera
in other’s projects was actively discouraged.

In addition to this, it grieves me greatly to have to say that as of
October 2016, I had salary dues pending right from earlier films
like Dasavataram, Vishwaroopam, etc,” Gautami alleged.

———–

.
——————————————————————————————————————

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

7 Responses to கமல் ஹாசனுக்கே இல்லத்தரசிகளின் ஓட்டு….!!!

 1. சைதை அஜீஸ் சொல்கிறார்:

  முதலில் திருமதி கௌதமி அவர்களின் அக்கவுண்ட்டை செட்டில் செய்து விட்டு, அந்த acknowledgement -ஐ காட்டிவிட்டு…

  இது கமலஹாசனுக்கு.
  கரெக்ட்டுதான் ஐயா!

  ஆனால் சிஸ்டத்த மாத்த வந்தவருக்கு உங்க அட்வைஸ் என்ன?

  ஒரு கண்ணுலே நெய் இன்னொரு கண்ணுலே சுண்ணாம்பு என்பது நம்ம தளத்தின் தரமில்லையே ஐயா!

  வாடக கட்ட மாட்டாரு
  வரி கட்ட மாட்டாரு
  கரோனா நோயாளிகளுக்கு காலியாக உள்ள மண்டபத்தையும் தர மாட்டாரு
  விவசாயி போராட்டத்த பத்தி இப்போ வாய் திறக்க மாட்டாரு
  ஏழு பேர் தெரியாது
  மன்ற நிரவாகிகளுக்கு பதவி தரமாட்டாரு

  இப்படி சொல்லிக்கிட்டே போகலாம்.
  மொத்தத்துலே நம்ம கெரகம் சரியில்லை. இல்லேன்னா சிஸ்டமே சரியில்லாத ஒருத்தர் சிஸ்டம் சரியில்லேன்னு சொல்லுறத பொருத்துக்கொள்ள வேண்டியிருக்குமா?

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   வருக அஜீஸ்,

   ஆ.ராசா பற்றி 13 அத்தியாயங்கள் எழுதியபோது,
   பின்னூட்டம் எழுதாத நீங்கள் –

   இப்போது ரஜினி வந்துவிட்டால்,
   ஸ்டாலினுக்கு ஆபத்தாயிற்றே என்று
   பதட்டப்படுவதிலிருந்து –
   உங்கள் அக்கறை எந்தப்பக்கம் இருக்கிறது
   என்பது எனக்கு புரிகிறது.

   பொதுவாக விளக்கம் கேட்பவர்களுடன்
   விவாதிக்கலாம். ஆனால் ஏற்கெனவே
   ஒரு தீர்மானத்துடன் வந்து இங்கே
   வேண்டுமென்றே முக்கியமற்ற கேள்விகளை
   கேட்டால் நான் என்ன செய்யட்டும்….?

   ரஜினி பற்றி நீங்கள் இங்கே கேட்டிருப்பவை
   சற்றும் பொருத்தமில்லாதவை, விதண்டாவாதமாகவே
   கேட்கப்படுகின்றன என்பது உங்களுக்கே
   தெரியும் என்பதால் – நான் மவுனம்.

   .
   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

 2. Sithalapakam Velan சொல்கிறார்:

  எடப்பாடி தன்னுடைய சம்பதிக்கு குடுத்த நாலு காண்ட்ராட்களின் ஊழல் பத்தியோ, ஓபிஎஸ் தாரைவார்த்த கவர்மண்ட் சுரங்கம் முதற்கொண்டு நிகழ்த்திய ஏழு ஊழல்களை பற்றியோ ஒரு பத்தி கூட எழுதாமல், கோர்ட்டே விடுவித்த (அதுவும் அமிட்ஷாவின் கண்ட்ரோலில் உள்ள) கோர்ட் பற்றி பதிமூணு அத்தியாயம் எழுதியது, அதுவும் கனிமொழி ராசா பற்றி ஆபாசமான எண்ணம் வரும்படி பொடி வைத்து எழுதியது காமை ஸார் எந்த பக்கம் என்பதும் எப்படி தரம் பிறழ்ந்து விட்டார் என்பதும் விளங்குகிறது

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   .

   சித்தலபாக்கம் வேலன்,

   1) “காமை ஸார் எந்த பக்கம் என்பதும்
   எப்படி தரம் பிறழ்ந்து விட்டார் என்பதும்
   விளங்குகிறது”

   நான் 13 அத்தியாயங்கள் எழுதினேனே –
   அதில் ஒரு இடத்திலாவது உண்மைக்கு
   மாறாக எழுதினேன் என்று உங்களால்
   சொல்ல முடியவில்லையே…ஏன் ?

   நடந்த உண்மைகளை அப்படியே
   எழுதி இருக்கிறேன்… இதில் தரம் தாழ்ந்து …
   என்றால் என்ன அர்த்தம்… சம்பந்தப்பட்டவர்கள்
   தரமும், நடந்த விதமும் அப்படி இருந்தது
   என்று பொருள்… அதற்கு நான் என்ன
   செய்ய முடியும்….? தரம் தாழ்ந்திருந்தால்
   நீங்கள் சம்பந்தப்பட்டவர்களை குறை
   சொல்வதாகவே அர்த்தம்…

   2) மற்றவர்களைப்பற்றி ஏன் எழுதவில்லை
   என்று கேட்கிறீர்கள் – அது நியாயம்…

   தேர்தல் வரும் வரை பொறுத்திருந்து
   பார்த்து விட்டு நீங்கள் இந்த கேள்வியை
   கேட்கலாம்.

   3) கா.மை.சார் எந்தப்பக்கம் என்பது …?

   காவிரிமைந்தன் எப்போதும் என்
   மனசாட்சியின் பக்கம் தான் இருப்பேன்.
   மனசாட்சி சொல்வதைத்தான் செய்வேன்..
   எழுதுவேன்..

   நான் சுதந்திரமானவன்..எந்த கட்சியோ,
   தலைமையோ என்னை கட்டுப்படுத்த
   முடியாது.

   உங்களைப்போன்ற கட்சிக்காரர்களுக்குத்தான்
   முட்டாளாக இருந்தாலும், மூர்க்கராக இருந்தாலும்
   லஞ்ச ஊழல் கொள்ளைக்காரராக இருந்தாலும்,
   கண்களை மூடிக்கொண்டு ஆதரிக்க வேண்டிய
   கட்டாயம் எல்லாம்.

   பகுத்தறிவுவாதிகளின் இயக்கம் என்று
   சொல்லிக்கொண்டு, பரம்பரைத் தலைமையை
   ஏற்றுக் கொள்கிறீர்களே – உங்களுக்கே
   அசிங்கமாக இல்லை…?

   இருக்கும்… மனதிற்குள் இருக்கும்…
   கட்சி கட்டுப்பாடு, விசுவாசம் -வேறு வழியில்லை.
   கண்களை மூடிக்கொண்டு ஆதரித்தே
   தீர வேண்டும்.

   நாட்டிற்கு, தமிழகத்திற்கு -எது நல்லது
   என்று என் மனதிற்கு, மனசாட்சிக்கு –
   தோன்றுகிறதோ அதைத்தான் நான் தொடர்ந்து
   எழுதிக் கொண்டு வருகிறேன்.
   உங்களைப்போன்ற மிகச்சில கட்சி அபிமானிகளைத்
   தவிர, பெரும்பாலான வாசக நண்பர்களும்
   அதே கருத்தைத்தான் கொண்டிருக்கிறார்கள்.

   காலம் உங்கள் கண்களைத் திறக்கட்டும்…!

   .
   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

 3. பிங்குபாக்: நக்கீரன் கமலுக்கு செய்வது உபகாரமா…அல்லது உபத்திரவமா…? | வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.