ஒரு முன்னாள் சப்-இன்ஸ்பெக்டர் கொடுத்த அதிசய தீர்ப்பு….!!!(அத்தியாயம் -13 ) அரிச்சந்திர புத்ரனின் ….

….
….

….

முதலில் நமக்குள்ளேயே ஒரு சின்ன கேள்வி –
சுப்ரீம் கோர்ட் முடிவை விட ஒரு செஷன்ஸ் கோர்ட்
நீதிபதியின் தீர்ப்பு பெரியதா…?

இந்தக் கேள்வியுடன் மேலே தொடர்வோம்….

ஆ.ராசா கொடுத்த 122 லைசென்சுகளை கேன்சல் செய்த சுப்ரீம் கோர்ட்… ( அத்தியாயம் -12 ) -அரிச்சந்திர புத்ரனின் …

——————

2011, மார்ச் 14 – 2ஜி வழக்குகளை பிரத்யேகமாக விசாரிக்க
சிறப்பு நீதிமன்றம் அமைக்க டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு
பிறப்பிக்கிறது.

டெல்லி மாநில அரசால் சிபிஐ விசேஷ நீதிமன்றத்திற்கான
நீதிபதியாக திரு.ஓ.பி.சைனி அவர்கள் நியமிக்கப்படுகிறார்.

2011, ஏப்ரல் 2 – முதல் குற்ற பத்திரிகையை தாக்கல்
செய்தது சிபிஐ.

2011, ஏப்ரல் 25 – திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி
உள்ளிட்ட 4 பேரின் பெயர்கள் இரண்டாவது குற்றப்பத்திரிகையில்
சேர்ப்பு..

2011, அக்டோபர் 24 – குற்றம் சாட்டப்பட்ட 17 பேருக்கு எதிராக
குற்றச்சாட்டுகள் பதிவு…

2011, நவம்பர் 11 – வழக்கு விசாரணை தொடங்கியது

2017, டிசம்பர் 21 -சிபிஐ நீதிபதி தனது தீர்ப்பை அளிக்கிறார்.
அப்பீலில் வழக்கு மேல் விசாரணைக்கு வரும் முன்னர்
பதவியிலிருந்து ஓய்வு பெற்று காட்சியிலிருந்து வெளியேறி
விடுகிறார்.

இந்த நீதிபதியால், சி.பி.ஐ. நீதிமன்றத்தில் தொடரப்பட்ட
2ஜி வழக்கிலிருந்து ஆ.ராசா, கனிமொழி, குற்றம்
சாட்டப்பட்ட தொழிலதிபர்கள் – உள்ளிட்ட அத்தனை பேரும்
விடுதலை செய்யப்படுகிறார்கள்…

விடுதலைக்கு காரணமாக கூறப்படுவது –
சிபிஐ வழக்கிற்கான உரிய ஆதாரங்களை தரத் தவறியது…!!!

எனவே, 7 ஆண்டுக்கால விசாரணைக்குப்பிறகு, வெறும் கிசு-கிசு,
வதந்திகளை வைத்து இட்டுக்கட்டப்பட்டவழக்காக வர்ணிக்கப்பட்டு,
வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது..!!!!

———————————————

( இந்த வழக்கு சிபிஐ கோர்ட்டில் நடந்துகொண்டிருக்கும்போதே
தான், இதே ஆதாரங்களை வைத்துக்கொண்டு தான், சுப்ரீம் கோர்ட்,
2012, பிப்ரவரி 2 – அன்று,

122 லைசென்சுகளை ரத்து செய்தது, 3 பெரிய கம்பெனிகளுக்கு
5 கோடி ரூபாய் வரை அபராதம் விதித்தது….

ஆ.ராசா தனது சுயலாபத்துக்காக, சில கம்பெனிகளுக்கு
அலைவரிசைகளை விற்றார் …

ஆ. ராசா தொலைத்தொடர்பு அமைச்சராக இருக்கும்போது
ஒதுக்கப்பட்ட இரண்டாம் தலைமுறை அலைக்கற்றைகள்
ஜனநாயக விரோதமானவை மற்றும் தன்னிச்சையானவை;
தவறான முறையில் வழங்கப்பட்டவை என்று சுப்ரீம்
கோர்ட்டால் அறிவிக்கப்பட்டு அந்த பின்னணியிலேயே
அவரால் ஏற்கெனவே வழங்கப்பட்ட 122 லைசென்சுகளும்
ரத்து செய்யப்பட்டன…

“அதிருஷ்டவசமாக சில பொதுநல அமைப்புகளால்.
இந்த வழக்கு மட்டும் சுப்ரீம் கோர்ட்டின் பார்வைக்கு கொண்டு
வரப்பட்டிருக்கா விட்டால் – இந்த தேசத்தின் இத்தனை
செல்வமும், வளங்களும், – யாருடைய கவனத்திற்கும் வராமலே
அதிகாரத்தில் இருக்கும் சிலரால் கொள்ளை அடிக்கப் பட்டிருக்கும்”

– என்று சுப்ரீம் கோர்ட், தனது தீர்ப்பில் மிகத்தெளிவாகக்
கூறியது நினைவில் கொள்ளத்தக்கது …..

ஆனால், சுப்ரீம் கோர்ட்டின் இந்த கருத்துகளை சிபிஐ கோர்ட்
தனது தீர்ப்பின்போது – கவனத்தில் கொள்ளாதது ஏன்…?

சுப்ரீம் கோர்ட் கொடுத்த இந்த தீர்ப்பு, சிபிஐ கோர்ட்டில்
நடந்துவந்த வழக்கில் எந்தவித impact -ஐயும்
ஏற்படுத்தவில்லை என்பது ஒரு அதிசயமே…!!!

சிபிஐ கோர்ட்டின் சிந்தையை – கண்களை – மறைத்தது எது…?
இந்த கட்டுரையை படிக்கும் மக்கள் சிந்திக்க வேண்டும்.

—————————————————–

தன் முன் வந்திருக்கும் ஒரு வழக்கில் ஒரு கீழமை
நீதிமன்ற நீதிபதி எத்தகைய தீர்ப்பை வேண்டுமானாலும் தரலாம்.
அதற்கான அதிகாரம் அவருக்கு இருக்கிறது…. ஆனால் –

அதற்கு அடுத்த உயர் நீதிமன்றத்தில், அதற்கும் அடுத்த
உச்சநீதிமன்றத்தில் இந்த தீர்ப்பு எப்படி பார்க்கப்படும்…?

மாவட்ட அளவில் தீர்ப்பு சொன்ன நீதிபதி இன்னமும் பதவியில்
தொடர்ந்திருந்தாரேயானால், அவர் மீது stricture ( a statement of
severe criticism or disapproval ) என்று சொல்லப்படும்
கண்டனங்களை உயர்நீதி/உச்சநீதி மன்றங்கள் தெரிவித்திருக்கும்…..
அது அவரது future career ஐ பாதிக்கும்..

ஆனால் இத்தனை நீதிமன்றங்களிலும் வழக்கு நடந்து முடிந்து
இன்னும் 10-15 ஆண்டுகள் கழித்து தான் இறுதித்தீர்ப்பு வரும்
என்கிற நிலை இருந்தால், அந்த நீதிபதியை இது எந்தவிதத்தில்
பாதிக்கப்போகிறது ….?

அதுவும், தீர்ப்பு சொன்ன பிறகு,
அப்பீலில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் முன்பே
அவர் ரிடையராகி இருந்தால்…???

“போய்யா-போ;
நீ என்ன வேண்டுமானாலும் சொல்லிக்கொள் ”

-என்று அவர் சுகமாக பேரன் பேத்திகளுடன் எதாவது
சொகுசுஸ்தலங்களில் -தான் சேர்த்த வசதிகளுடன்
– குஷியாக – வலம் வந்துகொண்டிருப்பார்….

நம்ம ஊர் நீதித்துறையின் அடிப்படை பிரச்சினையே இது தானே…?
வழக்குகள் என்றைக்கு விரைவாக முறைப்படி விசாரிக்கப்பட்டு
இருக்கின்றன…?

வாய்தா, வாய்தா, வாய்தா -பிறகு
அப்பீல், பின் இன்னொரு அப்பீல்….
அதற்குள் பாதி ஆவணங்கள் காணாமல் போயிருக்கும்…
பாதி சாட்சியங்கள் செத்திருப்பார்கள்.
3 முறை ஆட்சிகளும், ஆளும் கட்சிகளும் மாறி இருக்கும்.
பணம் புகுந்து விளையாடும்…!!!

————–

தீர்ப்பு தந்த புண்ணியவானைப்பற்றிய தகவல்கள் சில –

….

….

இங்கே அதிகாரபூர்வமாக ஒரு நாளேட்டில் வந்த
ஒரு செய்தியைத் தர வேண்டும்…

A report in India Today dating
November 12, 2011 states:

“Saini was handpicked to exclusively handle the 2G trial after the
Supreme Court bench comprising Justices G.S. Singhvi and
A.K. Ganguly asked the Government to set up a special court
to deal with the case. The Delhi government, on March 28,
designated him to undertake the trial of all 2G cases.

———————-

அவரைப்பற்றிய சில அடிப்படை விவரங்கள் –

நீதிபதி ஓ.பி.சைனி அவர்கள் டெல்லியை அடுத்த
ஹரியானா மாநிலத்தைச்சேர்ந்தவர்….

1981-ல் அவர் – டெல்லி போலீசில் –
ஒரு சப்-இன்ஸ்பெக்டராக நியமனம் பெறுகிறார்.
LL.B. பட்டம் பெறுகிறார்.

6 ஆண்டுக்கால சப்-இன்ஸ்பெக்டர் உத்தியோகத்திற்குப் பிறகு
டெல்லி மாநில நீதித்துறையில் – State Judiciary Service –
ஜுடிசியல் மேஜிஸ்டிரேட் (judicial magistrate ) பதவிக்காக
டெல்லி மாநில அரசால் நடத்தப்பெறும் தேர்வில் கலந்துகொண்டு –

தேர்ச்சி பெற்று, ஜுடிசியல் மேஜிஸ்டிரேட்’டாக –
டெல்லி மாநில அரசால் நியமிக்கப்படுகிறார்….

2011, மார்ச்சில் அவர் 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்குகளை விசாரிக்க
என்று தனிப்பட ஸ்பெஷல் ஜட்ஜாக டெல்லி அரசால்
நியமிக்கப்படுகிறார்….

2017, டிசம்பர் 21-ல் – 2ஜி வழக்கில் தீர்ப்பளித்து விட்டு,
சீக்கிரமாகவே பதவியிலிருந்து ஓய்வும் பெறுகிறார்.

—————————-

2011-ல் மத்தியில் திரு.மன்மோகன் சிங்கின் தலைமையில்,
காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் இருந்தது.

டெல்லி மாநிலத்தில், காங்கிரஸ் ஆட்சியில், திருமதி
ஷீலா தீட்சித் முதலமைச்சராக இருந்தார்.

அப்போது, 2-ஜி வழக்குகள்,
எதிர்க்கட்சிகள், கூட்டு பாராளுமன்ற குழுவின் அழுத்தம்,
பொதுநல வழக்குகள்… ஆகியவற்றின் காரணமாக –

– அப்போதைய ஆளும் கட்சியான காங்கிரஸ்
விரும்பாவிட்டாலும் கூட – வேறுவழியின்றி –
சிபிஐ-யால் வேண்டா வெறுப்பாக பதியப்பட்டு, தொடரப்பட்டன….

அப்போது போடப்பட்ட F.I.R., மற்றும் சார்ஜ் ஷீட் ஆகியவை
எந்த அளவிற்கு வலிமையானதாக இருந்திருக்கும்….?

கூட்டணி கட்சியின் ஒத்துழைப்பு இல்லாமல்
ஆட்சியில் நீடிக்க முடியாது என்கிற நிலையில் காங்கிரஸ்
இருக்கும்போது,

அதே கூட்டணி கட்சியின் மீது,
பல்வேறு வெளி நிர்பந்தங்கள் காரணமாக –
ஆளும் கட்சி தொடுக்க வேண்டிய வழக்கு
பலமானதாகவா இருக்கும்…?

————–

அதைத்தொடர்ந்து அதே 2011-லேயே, அந்த வழக்கிற்கான
சிபிஐ விசேஷ நீதிமன்ற நீதிபதி அதே காங்கிரஸ் கட்சி
ஆளும் டெல்லி மாநில அரசால் –
தேர்ந்தெடுக்கப்பட்டு நியமிக்கப்படுகிறார்….

இவை எல்லாம் நிகழும்போது, டெல்லி மாநிலத்திலும்,
(திருமதி ஷீலா தீட்சித் ), மத்திய அரசிலும் (திரு.ம.மோ.சிங் .. )
காங்கிரஸ் அரசே பதவியில் இருந்தன என்பதும் –

இந்த வழக்குகள் முழுக்க முழுக்க விருப்பமின்றி,
வெளி அழுத்தங்கள் காரணமாகவே காங்கிரஸ் கூட்டணி
அரசால், அதன் கூட்டணிக் கட்சியின் முக்கியஸ்தர்களுக்கு
எதிராக பதியப்பட்டு, தொடரப்பட்டன என்பதும் –

வழக்கு தொடரப்பட்ட பின், டெல்லியில் மாநிலத்திலும்,
மத்தியிலும் ஆளும் கட்சிகள் மாறியபோதிலும்,

வழக்கில் முதலில் FIR-ஐ தயாரித்த, சார்ஜ் ஷீட்டை தயாரித்த,
அதே அதிகாரிகள், அதே வக்கீல்கள் தான் தொடர்ந்தார்கள் …

வழக்கு தொடரப்பட்ட காலத்திலிருந்து, தீர்ப்பு சொல்லப்பட்ட
காலம் வரையிலான சுமார் 7-8 ஆண்டுகளில்,
அவர்கள் அனைவரும் குற்றம் சாட்டப்பட்ட
கோடீஸ்வர தொழிலதிபர்கள், அரசியல்வாதிகளுடன்
நெருங்கிப்பழகக்கூடிய நிலை ஏற்பட்டது என்பதும்,

இது அவர்களிடையே நல்ல புரிதலையும், ஒத்துழைப்பையும் ( ?)
ஏற்படுத்தி இருந்தன – என்பதும் அவசியம் நினைவில்
கொள்ளத்தக்கவை.

முடிவாக – இரண்டும் இரண்டும் நான்கு என்று நான்
சொல்லித்தான் தெரிந்துகொள்ள வேண்டும் என்கிற நிலையில்
இந்த தளத்தின் வாசகர்கள் இல்லை என்பதை நான் அறிவேன்…

சிபிஐ நீதிமன்றத்தின் தீர்ப்பு எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும்…
இந்த இடுகைத் தொடரையும், அதில் தொகுத்துத் தரப்பட்டிருக்கும்
உண்மையான, முழு தகவல்களையும் படித்த பிறகு வாசகர்களின்
மனதில் எழும் எண்ணம் எதுவோ – அது தான் உண்மையான
தீர்ப்பாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்.

இறுதியாக –

இந்த இடுகையில் நானாக எழுதியது
மிகக் கொஞ்சம். பல இடங்களில் சிதறிக்கிடந்த தகவல்களை
சுலபமாகவும், தொடர்ச்சியாகவும் புரிந்துகொள்ளும் வகையில்
ஒருங்கிணைத்து தந்ததே அதிகம்.

இந்த இடுகைக்கான பெரும்பாலான தகவல்களை நான்
இணையத்திலிருந்தேதான் தேடிப்பெற்றேன்….
– குறிப்பாக சில வலைத்தளங்கள் …
the week, wikipedia,the hindu businessline, தமிழ் இந்து, India today,
விகடன்.காம், சவுக்கு வலைத்தளம், rediff.com, scroll.in,
டெல்லி லா அகாடமி, alt.news, the print, …மற்றும்
சில பழைய விமரிசனம் வலைத்தள இடுகைகள்…

நீண்ட நாட்களுக்குப் பிறகு கடுமையான உழைப்போடு
இந்த இடுகைத்தொடரை உருவாக்கிய அனுபவம் கிடைத்தது.
உருப்படியான ஒரு பணியைச் செய்த திருப்தியை நான் பெறுகிறேன்.
இந்த இடுகைத்தொடரில் நான் சாடும் நபர்களின் மீது
தனிப்பட்ட விதத்தில் எனக்கு எந்தவித பகைமையும் இல்லை
என்பதையும், பொதுவாழ்வில் நேர்மை அவசியம் என்பதை
வலியுறுத்துவது மட்டுமே எனது நோக்கம் என்பதையும்
சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

எனக்கு -இதற்கான உந்துதல் பாரதியின் வாக்கு தான் –

“சிறுமை கண்டு பொங்குவாய்”

-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
23/12/2020
.
——————————————————————————————————————————

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

9 Responses to ஒரு முன்னாள் சப்-இன்ஸ்பெக்டர் கொடுத்த அதிசய தீர்ப்பு….!!!(அத்தியாயம் -13 ) அரிச்சந்திர புத்ரனின் ….

 1. Raghuraman சொல்கிறார்:

  Sir,

  Same Bharathi said the following

  ‘nidhi seidharai paniguvar manidar’ in Panchali sabatham – courtesy Mr Cho in thuglak while referring this case in one of his article.

  Let us pray only for justice.

  Regards.

 2. M.Subramanian சொல்கிறார்:

  கே.எம்.சார்,

  அற்புதமான ஒரு பணியைச் செய்திருக்கிறீர்கள்.
  அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள்,
  ஆதாரபூர்வமான வாதங்கள்,
  அத்தனைக்கும் ஆவணங்கள்;
  இந்த இடுகைத் தொடர் ஒன்றே போதுமே
  அவர்களது முகத்திரையை கிழித்தெறிய.
  இதை பெரிய நாளிதழ்களில் வரச்செய்ய
  வாய்ப்பிருக்கிறதா ?
  குறைந்தபட்சம் twitters, facebook forwards etc.
  மூலமாக ?
  இந்த ஊழல் கூட்டம் மீண்டும் தமிழகத்தில்
  ஆட்சிக்கு வந்தால் ?

 3. R'Gopalakrishnan சொல்கிறார்:

  Sir, What abt Neera Radia.You have mentioned that you would give some interesting information
  about her at the end of this article.

 4. R.Gopalakrishnan சொல்கிறார்:

  Thank you sir.

 5. Pala சொல்கிறார்:

  நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த ஈனமான மாந்தரை நினைக்கையிலே

 6. GOPI சொல்கிறார்:

  பண்ணுவதையெல்லாம் பண்ணிவிட்டு,
  இந்த திருட்டுக்கூட்டம் கவர்னரைப்
  பார்த்து பெட்டிஷன் வேறு கொடுக்கிறது.
  எல்லாரையும் முட்டாளாக்கப் பார்க்கிறது.

  மக்களுக்கு மறதி அதிகம் தான்.
  அந்த தைரியம் தான் இவர்களின் பலம்.
  ஆனால் நினைவுபடுத்தவும் நிறைய பேர்
  இருக்கிறார்களே.

 7. bandhu சொல்கிறார்:

  ஸார் , உங்கள் எழுத்துப்பணியில் மிகுந்த மன நிறைவை இந்த இடுகைகள் தர வேண்டும். மிகுந்த அர்ப்பணிப்போடு இதை செய்திருக்கிறீர்கள்.

  இந்த இடுகைகளை சோசியல் மீடியாவில் பெரிய அளவு கொண்டு போக வேண்டும்!

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   bandhu,

   உங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி.

   இந்த இடுகைத்தொடர்
   நீண்ட நாட்களுக்குப்பிறகு ஒரு
   உருப்படியான பணியைச் செய்திருக்கிறோம்
   என்கிற திருப்தியை உண்மையிலேயே
   எனக்கு கொடுத்திருக்கிறது.

   ஆர்வமுள்ள வாசக நண்பர்கள் தங்களுடைய
   ட்விட்டர், facebook பக்கங்கள் மூலமாக
   இதை இன்னும் பரந்த அளவிற்கு
   எடுத்துச் செல்வார்கள் என்கிற நம்பிக்கை
   எனக்கு இருக்கிறது.

   .
   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.