ஆ.ராசா கொடுத்த 122 லைசென்சுகளை கேன்சல் செய்த சுப்ரீம் கோர்ட்… ( அத்தியாயம் -12 ) -அரிச்சந்திர புத்ரனின் …

….
….

….

இடுகைத்தொடரின் இறுதிக்கட்டத்தை நெருங்கிக்
கொண்டிருக்கிறோம்.

திடீரென்று ஒரு சந்தேகம் வந்தது…
ஆ.ராசா அவர்களின் உயிர்த்தோழன், பிசினஸ் பார்ட்னர் –
சாதிக் பாட்சா’வின் இறப்பு சம்பந்தப்பட்ட தகவல்களை
விவரமாக தந்து விட்டேனா இல்லையா என்று…

‘நானிருக்க பயமேன்’ என்று துணைக்கு வந்தார் வைகோ
என்னால் நிச்சயமாகச் சொல்லியிருக்க முடியாத அளவிற்கு மிக
சுவாரஸ்யமாக சாதிக் பாட்சா சம்பந்தப்பட்ட விஷயங்களை
விவரிக்கிறார் இந்த வீடியோவில் –

……

……

இப்போது வைகோவும், ராசாவும், ஸ்டாலினும் ஒரே அணியில் தான்
இருக்கிறார்கள். எனவே, இப்போதைக்கு இதற்கு மேல்
வைகோ எதுவும் கூற மாட்டார். ஆனால், ஏற்கெனவே
சொன்னதை மறுக்கவும் மாட்டார்….

ஒருவேளை – சீட் பிரச்சினையில் கூட்டணியிலிருந்து வைகோ
வெளியேற நேர்ந்தால், வைகோ வீடியோவில் சொன்னபடி மீதி
80 % கதையையும் அவசியம் சொல்வாரென்று எதிர்பார்க்கலாம்…!!!

2ஜி-யில், நீரா ராடியா, ரத்தன் டாட்டா பங்கு என்ன …?-( அத்தியாயம் -11 ) -அரிச்சந்திர புத்ரனின் …

CAG அறிக்கையில் 2 ஜி அலைக்கற்றை விவகாரத்தால்
அரசுக்கு 1.76 லட்சம் கோடி ரூபாய் இழப்பீடு ஏற்பட்டதாகக்
காண்பிக்கப்பட்டது. அடுத்து நடந்த மூன்றாம் தலைமுறை
லைசென்சுகளுக்கு ஏலமுறையில் கட்டணம் வசூலித்ததை
ஒப்பிட்டு 2ஜி அலைக்கற்றை விவகாரத்தில் நடந்த
முறைகேடுகளே இந்த நஷ்டத்திற்கு காரணம் என்று கூறியது.

இந்த லைசென்சுகள் அனைத்தும் 2008-ஆம் ஆண்டிலேயே
கொடுக்கப்பட்டு விட்டாலும், CAG ஆய்வு அறிக்கை தாமதமாக வெளிவந்ததையொட்டியும் – வருமான வரித்துறையால்
ஒட்டுக்கேட்கப்பட்ட நீரா ராடியா ஒலிநாடாக்கள் பொதுவெளியில் கசிந்ததாலும், இது 2010 ஆம் ஆண்டின் இறுதியில் தான்
அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

2011-ல் டாக்டர் சுப்ரமணியன் சுவாமி, பிரசாந்த் பூசன் மற்றும்
சில சமூக ஆர்வலர்களால், 2ஜி அலைக்கற்றை விவகாரம்
தொடர்பான பொதுநல வழக்குகள் சுப்ரீம் கோர்ட்டில்
தாக்கல் செய்யப்பட்டன.

அதில் கோர்ட்டின் முன்பாக இரண்டு முக்கியக் கேள்விகள் முன்வைக்கப்பட்டிருந்தன.

ஒன்று – இயற்கைச் செல்வங்களை வெளிப்படை இல்லாத
தன்மையில் அரசே கையாளலாமா?

இரண்டு – அலைக்கற்றை விநியோகத்தில், அப்போதைய
தொலைத்தொடர்பு மற்றும் தகவல்தொடர்புத்துறை அமைச்சர்
ஆ.ராசா பாரபட்சமாக, சுயலாப நோக்கத்துடன் செயல்பட்டாரா?

இந்த வழக்கில் 2012, ஃபிப்ரவரி 2-ந்தேதி அன்று சுப்ரீம் கோர்ட்
தனது தீர்ப்பை வெளியிட்டது….தீர்ப்பின் முக்கியமான
சில அம்சங்கள் –

….

….

– நீதிமன்றத்தின் முன்வைக்கப்பட்ட ஆவணங்களின்படி
ஆ.ராசா தனது சுயலாபத்துக்காக, சில கம்பெனிகளுக்கு
அலைவரிசைகளை விற்றார் …

– அதன் அடிப்படையில் ஆ. ராசா தொலைத்தொடர்பு
அமைச்சராக இருக்கும் போது ஒதுக்கப்பட்ட இரண்டாம்
தலைமுறை அலைக்கற்றைகள் ஜனநாயக விரோதமானவை
மற்றும் தன்னிச்சையானவை என அறிவிக்கப்பட்டு அவரால்
தவறான முறையில் ஏற்கெனவே வழங்கப்பட்ட
122 லைசென்சுகளும் ரத்து செய்யப்படுகின்றன.

– ஏலம் மூலம் – சந்தை மதிப்பை தீர்மானித்து, அதன் மூலம்
லைசென்சு வழங்கும் புதிய முறையை தொலைபேசி
ஒழுங்குமுறை ஆணையம்(டிராய்) அடுத்த 2 மாதங்களுக்குள்
தீர்மானித்து அதன்படி அதற்கடுத்த 2 மாதங்களுக்குள்
மத்திய அரசு புதிய லைசென்சுகளை வழங்க வேண்டும்.

– தகுதி இல்லாமலே லைசென்சு பெற்ற சில கம்பெனிகளுக்கு
50 லட்சம் முதல் 5 கோடி வரை சுப்ரீம் கோர்ட்டால்
அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது.

– இந்த அபராதத் தொகையில் பாதி( 50%) சுப்ரீம் கோர்ட்டில்
டெபாசிட் செய்யப்பட்டு, வசதி இல்லாத ஏழைகளுக்கு
சட்ட உதவி செய்யும் பணிக்காகப் பயன்படுத்தப்படும்.

– மீதிப் பாதி, பாதுகாப்பு அமைச்சக்த்தின் மூலமாக –
ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களின் நலனுக்காகப் பயன்படுத்தப்
படும்.

நீதிபதிகள் இந்த தீர்ப்பில் குறிப்பிட்டிருக்கும் ஒரு வாசகம்
மிக மிக முக்கியமானது.

“அதிருஷ்டவசமாக சில பொதுநல அமைப்புகளால்.
இந்த வழக்கு மட்டும் கோர்ட்டின் பார்வைக்கு கொண்டு
வரப்பட்டிருக்கா விட்டால் – இந்த தேசத்தின்
இத்தனை செல்வமும், வளங்களும், –
யாருடைய கவனத்திற்கும் வராமலே அதிகாரத்தில்
இருக்கும் சிலரால் கொள்ளை அடிக்கப் பட்டிருக்கும்”

————————————–
இன்னும் தெளிவாகப் புரிந்துகொள்ள, அந்த தீர்ப்பு குறித்த
தகவல்கள் ஆங்கிலத்திலும் கீழே தரப்படுகின்றன…

In 2012, the Supreme Court was responding to a Public Interest
Litigation filed by a host of activists in order to answer questions
about –

whether the government had a right to distribute natural
resources in a manner that was not “fair and transparent”
in accordance with the “fundamentals of the equality clause
enshrined in the Constitution”.

It also looked closely at the method in which the 2G spectrum
was allocated. A specific question the Supreme Court looked at was
whether A Raja, then Union Minister of Communications and Information Technology, had acted in order to “favour some of the applicants”.

In its order, the court was scathing when commenting on Raja’s conduct.

“The material produced before the Court shows that the Minister of
C&IT wanted to favour some companies at the cost of the Public
Exchequer,” the order read. It also said, Raja “virtually gifted away
the important national asset at throw away prices”.

For the court, Raja’s corruption was proved by the actions of
the companies who had been given licences.
—————–
This becomes clear from the fact that soon after obtaining the licences,
some of the beneficiaries off-loaded their stakes to others, in the name
of transfer of equity or infusion of fresh capital by foreign companies,
and thereby made huge profits.”
—————–

The Supreme Court had held the first-come-first-serve policy suspect
and declared that auctioning was the only logical way to have done this.

“We have no doubt that if the method of auction had been adopted
for grant of licence which could be the only rational transparent method
or distribution of national wealth, the nation would have been enriched
by many thousand crores.”

The court also took the companies that it thought were involved to task,
fining them heavily for having “benefited at the cost of Public Exchequer
by a wholly arbitrary and unconstitutional action taken by the
DoT for grant of UAS [Unified Acccess Services] Licences [to firms
operating cell phone services] and allocation of spectrum in 2G band
and who off- loaded their stakes for many thousand crores in the
name of fresh infusion of equity or transfer of equity”.

The Supreme Court was especially scathing about the “first-come-
first serve-policy” employed by the government

and the fixing of cut-off dates.

In one case, the court says:

This arbitrary action of the Minister of C&IT though appears to be
innocuous, actually benefitted some of the real estate companies
who did not have any experience in dealing with telecom services
and who had made applications only on 24.9.2007,
i.e., just one day before the cut off date fixed by the Minister of
C&IT on his own.

———————

.
இவ்வாறு சுப்ரீம் கோர்ட்டால் கடுமையான வார்த்தைப்
பிரயோகங்களால் கண்டிக்கப்பட்டு –
122 லைசென்சுகள் (cancel) ரத்து செய்யப்பட்ட பிறகும் –

இந்த வழக்கை, கிசு-கிசு மற்றும் வதந்திகளால்
ஜோடிக்கப்பட்டது என்று ஒருவர் சொன்னாரேயானால்,

அதன் காரணம்/பின்னணி என்னவாக இருக்கும்….?

——————————

ஒருவழியாக – அடுத்த அத்தியாயத்தோடு இந்த
இடுகைத் தொடர் முடிவுக்கு வருகிறது.

கடைசி அத்தியாயத்தில் சில ஆச்சரியங்கள் காத்திருக்கின்றன.
இதுவரை பலருக்கு தெரிந்திராத சில புதிய விஷயங்கள்
வெளிவருகின்றன.

2-ஜி வழக்கின் தீர்ப்பு இப்படி அமைந்ததற்கான காரணங்கள்
கடைசி அத்தியாயத்தைப் படித்ததற்குப் பிறகு பலருக்கும்
தெளிவாகப் புரியும் என்று நம்புகிறேன்.

——————————————————————————
தொடரும்….அடுத்த அத்தியாயத்தோடு முடிவடையும்.

.
————————————————————————————————————

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

5 Responses to ஆ.ராசா கொடுத்த 122 லைசென்சுகளை கேன்சல் செய்த சுப்ரீம் கோர்ட்… ( அத்தியாயம் -12 ) -அரிச்சந்திர புத்ரனின் …

 1. Sanmath AK சொல்கிறார்:

  Dear KM Sir,

  Hope you are doing well….

  I have been reading your blogs for quite a long time. Your logical criticism combined with authentic data pulled me in to your political blogs especially during UPA-II in center, combined with DMK’s rule(2006-11) in the state. In recent times, especially when elections are around the corner, why the attack is targeted only on DMK. We all know what kind of work the present state and central governments are presenting to us. In such a scenario, an experienced person like you should not be targeting just one party. You may say DMK is more harmful than ADMK, which I too accept taking in to account 2006-11 rule. But in the past 9.5 years, the present state government has not done anything good which is benefitting the masses. I am in international trade sector; it is said in our business circles, “whatever happens business should go on”. Nothing had happened in last 9.5 years – no new industries, no new jobs. Earlier once I had asked you a similar question in a different note pointing at JJ, for which your answer showed your likeliness towards JJ, comparatively. With JJ no more in picture, at least you can present the handicapped state of TN in last 9.5 years. I am not expecting any action or reply on this (as you had already answered a similar question). I AM JUST EXPRESSING MY THOUGHTS, AS A READER, WHO HAD READ YOUR POSTS FOR ITS ERSTWHILE NON-BIASED CRITICISMS.

  Thank you.
  Sanmath AK

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


   .

   Dear Sanmath AK,

   I am glad to see you here after a very long gap…

   நீங்கள் என் நெடுநாள் நண்பர் என்பதோடு,
   ஒரு matured வாசகர் என்பதில் எனக்கு
   பெருமையும் மகிழ்ச்சியும் உண்டு.
   ஆனால், என் மன உணர்வுகள்
   உங்களுக்கு புரியாமல் போவது ஏன் என்பது
   தான் புரியவில்லை.

   உங்களுக்கு நியாயமாக நான் ஒரு நீண்ட
   விளக்கத்தை அளிக்க வேண்டும். ஆனால்,
   அதை கொஞ்ச காலம் கழித்து, அதற்குரிய
   நேரம் வரும்போது செய்கிறேன்.

   இப்போதைக்கு சுருக்கமாக –

   1) தமிழக சட்டமன்ற தேர்தலில் –
   bjp is not a relevant force – எனவே, தான்
   அதைப்பற்றி அதிகம் விமரிசிப்பதில்லை;

   2) என் பார்வையில், திமுக-அதிமுக
   இரண்டுமே ஊழல் கட்சிகள் தான்.
   ஆனால், அளவு, விதம் – ஆகியவற்றில்
   வித்தியாசமுண்டு.

   3) அதிமுக-வால் சாதாரண பொதுமக்களுக்கு
   தொல்லைகள் எதுவுமில்லை; நிர்வாகத்தில்
   கட்சிக்காரர்களின் தலையீடு இல்லை;

   4) ஆனால், திமுக ஆட்சி எப்படி இருந்தது
   என்பதை கொஞ்சம் நினைத்து பாருங்கள்…!!!
   அந்த 18 மணி நேர பவர் கட்…?
   கட்டைப் பஞ்சாயத்து, நில அபகரிப்பு,
   கலெக்டர் ஆபிசில் கரைவேட்டிக்காரர்களின்
   தலையீடுகள்…? ரவுடித்தனங்கள்…?

   இது ஒரு பக்கம் இருக்கட்டும் –

   இன்று மாலை திரு.ஸ்டாலின், கவர்னரை
   சந்தித்து ஒரு ஊழல்புகார் பட்டியலைக்
   கொடுத்து நடவடிக்கை எடுக்கக் கோரினார்.
   கவர்னர் அதன் மீது எந்த நடவடிக்கையும்
   எடுக்க மாட்டார் என்பதை ஸ்டாலினும்
   அறிவார்; நாமும் அறிவோம்.
   அதையும் விடுங்கள்….

   அந்த ஊழல் புகாரை கொடுக்கும்போது,
   அவர் கூட இருந்தது யார் யார் என்பதை
   செய்தித்தளங்களில் வெளியாகியிருக்கும்
   புகைப்படங்களில் பாருங்கள்…
   (இந்த இடத்தில் புகைப்படம் வெளியிட
   வசதி இல்லை;)
   பெயர்களைச் சொல்கிறேன் –
   வலதிலும், இடதிலுமாக -திருவாளர்கள்
   ஆ.ராசா, டி.ஆர்.பாலு, துரைமுருகன்,
   பொன்முடி, தயாநிதி மாறன் ஆகியோர்.
   இத்தனை பேரிலும் ஊழல் வழக்குகள்
   பல்வேறு நீதிமன்றங்களில் நிலுவையில்
   இருக்கின்றன…

   இந்த ஊழல் சக்கரவர்த்திகள்,
   அந்த ஊழல் மன்னர்கள் மீது புகார் பட்டியல்
   தருகிறார்கள்.
   அதில் யாருக்கும் வெட்கமில்லை;

   அந்த புகைப்படத்தைப் பார்த்து,
   தனிமையில் இருந்தும் நான்
   விழுந்து விழுந்து சிரித்தேன்…
   அந்தக் காட்சியை கொஞ்சம் கற்பனை
   செய்து பாருங்கள்… உங்களுக்கும் கூட
   சிரிப்பு வரும்…!
   ———————

   இதையும் ஒரு பக்கம் வையுங்கள் –

   இன்றைய சூழ்நிலையில்- நாளையே
   தேர்தல் நடக்குமானால், திமுக தான்
   ஜெயித்து ஆட்சியை பிடிக்கும் என்பது
   என் அனுமானம்.

   அதிமுக ஜெயிக்க வாய்ப்பில்லை;
   அதற்கு பல காரணங்கள்…

   நீங்கள் யார் ஜெயிக்க வேண்டுமென்று
   விரும்புகிறீர்கள்…?

   திமுக-வா… அல்லது அதிமுக-வா..?

   ஏன்….?

   உங்கள் பதிலைப் பார்த்துக்கொண்டு
   நான் இன்னும் கொஞ்சம் எழுதுகிறேன்..

   .
   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

 2. bandhu சொல்கிறார்:

  இத்தனைக்கும் பிறகு ஆதாரம் இல்லை என்று இவர்கள் விடுவிக்கப் பட்டார்கள்? லஞ்சம் வாங்கும் லைவ் வீடியோ மட்டுமே ஆதாரமாக ஏற்றுக்கொள்ளப் படும் என்று கோர்ட் சொல்லுமோ?

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   bandhu,

   கடைசி அத்தியாயத்தையும் பார்த்து விடுங்கள்…
   விடை கிடைத்து விடும்.

   .
   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

 3. பிங்குபாக்: ஒரு முன்னாள் சப்-இன்ஸ்பெக்டர் கொடுத்த அதிசய தீர்ப்பு….!!!(அத்தியாயம் -13 ) அரிச்சந்திர புத்ரனின் ….

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.