துரைமுருகன் – “யாரையும் போட்டுக் கொடுக்க மாட்டேன்” என்று திமுக-வினர் உறுதிமொழி எடுக்க வேண்டும்…

….
….

….

இது நேற்று அறிவாலயத்தில் நடந்த கூட்டத்திலிருந்து –

————

.
தற்போதைக்கு, தேர்தல் நேரத்தில் கட்சியின் முக்கிய தேவை
என்ன என்பதை நேற்று திரு.ஸ்டாலின் தலைமையில் நடந்த
திமுக கூட்டத்தில் திருவாளர் துரைமுருகன் எடுத்தியம்பி
இருக்கிறார்…..

தலைவர்களை காட்டிக்கொடுக்கும்
உடன்பிறப்புகள் அதிகரித்து விட்டதாக குறைப்பட்டுக்கொள்ளும்
துரைமுருகன், திமுகவினர் முதலில் எடுத்துக்கொள்ள வேண்டிய
உறுதிமொழி என்ன என்பதையும் விளக்கி இருக்கிறார்….

(கடந்த பாராளுமன்ற தேர்தலின்போது, துரைமுருகன் அவர்களின்
மகன் போட்டியிட்டபோது, income tax, enforcement directorate
ஆகியவை அவர் வீடு, அலுவலகங்களில் அதிரடி சோதனை
போட்டு சுமார் 10 கோடி ரூபாய் பணம் கைப்பற்றப்பட்ட சோகம்
அவரது நெஞ்சத்திலிருந்து இந்த வடிவத்தில் வெளிப்பட்டிருக்கலாம்…)

மேற்படி செய்தி ஒன்-இந்தியா தளத்தில்
வெளிவந்திருக்கிறது – கீழே –
—————————————————————————-
https://tamil.oneindia.com/news/chennai/dmk-workers-unity-is-needed-dont-infrom-it-department-says-duraimurugan-406428.html

….

திமுகவில் உள்ள சிலர் வருமான வரித்துறைக்கு
செய்தி சொல்லும் அளவுக்கு வன்நெஞ்சம் படைத்தவர்களாக
இருக்கிறார்கள்.

பணம் கூட நமக்கு இரண்டாவதுதான்.
முதலில் நமக்குள் ஒற்றுமை தேவைப்படுகிறது கூறிய அவர், ஒருவருக்கொருவர் காட்டும் மனக் கசப்பு ஸ்டாலின் உள்பட
முன்னணி தலைவர்களாகிய எங்கள் அனைவருக்கும்
வேதனையைத் தருகிறது என்றார்.

மனக்கசப்பு காட்டாமல் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும்.

“தேர்தல் முடியும் வரை யாரிடமும்
பகைமை காட்ட மாட்டேன் எனவும்,

-யாரையும் போட்டுக்கொடுக்க மாட்டேன் ” என்றும்
நிர்வாகிகள் உறுதியேற்க வேண்டும்

– என்றும் கேட்டுக்கொண்டார் துரைமுருகன்.

———————————————————

முந்தைய ஆட்சிகளின்போது, படாத பாடுபட்டு
சேர்த்த சொத்து பயமுறுத்துகிறது….
எப்போது எவன் காட்டிக் கொடுத்து விடுவானோ…
போட்டுக் கொடுத்து விடுவானோ –
என்று பயமாக இருக்கிறது –
இல்லையா – துரைமுருகன் சார் ….?

கவலைப்படாதீர்கள்
அடுத்து ஆட்சிக்கு வரும்போது –
இழந்ததையெல்லாம் மீண்டும் மீட்டுக் கொள்ளலாம்.

——————————————————–

கூடவே நமது ஆலோசனை –

உறுதிமொழிகள் எல்லாம் எடுத்துப் பயனில்லை;
எல்லாம் காற்றோடு போய் விடும்.

இந்தப் பிரச்சினையின் மூல காரணத்தை
கண்டுபிடித்து சரி செய்ய வேண்டும்.

அடுத்த கட்சியைப் பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும்.
ஆட்சிக்கு வந்து தலைவர்கள் மட்டும் சம்பாதித்தால் போதுமா…?
இவர்கள் அதிகாரத்தில் அமர உழைத்த மற்றவர்களை மறந்து
விட்டால் எப்படி…?

எனவே, மீண்டும் நாம் ஆட்சியை பிடித்தால், முன்பு போல்
நாங்கள் மட்டும் என்றில்லாமல், கட்சியில் அனைவரும்
சம்பாதிக்க வழி செய்வோம், எல்லாருக்கும் பங்கு கொடுப்போம்
என்று இவர் உறுதி கொடுத்தால் அதுவே போதுமானது…!!!

சரி தானே நண்பர்களே….?

.
————————————————————————————————————–

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

3 Responses to துரைமுருகன் – “யாரையும் போட்டுக் கொடுக்க மாட்டேன்” என்று திமுக-வினர் உறுதிமொழி எடுக்க வேண்டும்…

 1. GOPI சொல்கிறார்:

  // எனவே, மீண்டும் நாம் ஆட்சியை பிடித்தால், முன்பு போல்
  நாங்கள் மட்டும் என்றில்லாமல், கட்சியில் அனைவரும்
  சம்பாதிக்க வழி செய்வோம், எல்லாருக்கும் பங்கு கொடுப்போம் …!!! //

  கட்சி 200 சீட்டுகளைப் பிடிக்க கட்சியின்
  புதிய கொள்கை முழக்கம் !

  வெல்க திமுக; அடுத்த முதல்வர் ஸ்டாலின்,
  அடுத்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்,
  அதற்கடுத்த துணை முதல்வர் துரை முருகன்; வெல்க வெல்கவே.

  • புதியவன் சொல்கிறார்:

   //அதற்கடுத்த துணை முதல்வர் துரை முருகன்;// – நீங்கள் நிச்சயம் திமுகவைச் சேர்ந்தவரில்லை. அந்தக் கட்சியை வெறுக்கிறீர்கள் போலிருக்கு. அந்தக் கட்சியைச் சேர்ந்த கொள்கைப்பிடிப்புடைய அடிமைகளில் (Sorry. தொண்/குண்டர்கள்) ஒருவராக இருந்திருந்தீர்கள்னா,

   வெல்க திமுக, அடுத்த முதல்வர் ஸ்டாலின், அடுத்த துணை முதல்வர் உதயநிதி, அதற்கடுத்த துணை முதல்வர் இன்பநிதி, அப்புறம் இன்பநிதியின் குழந்தை…..

   இப்படித்தானே எழுதணும்?

 2. Selvadurai Muthukani சொல்கிறார்:

  நிர்வாகிகள் எடுத்துக்கொள்ளவேண்டிய உறுதிமொழியில் ஒன்று விட்டுப்போய்விட்டது!!!! அது,
  “ஏற்கனவே மக்களின் இடுப்புத்துணிவரை நாம் உள்பட அரசியல்வாதிகள் உருவியாய் விட்டது. பாக்கி இருக்கும் கோவனத்தையும் நாம் உருவிக்கொள்ள அவசியம் நாம் தேர்தலில் ஜெயிக்க வேண்டும். அதற்காக நாம் அரும்பாடுபட்டு உழைக்கவேண்டும்.”

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.