2ஜி-யில், நீரா ராடியா, ரத்தன் டாட்டா பங்கு என்ன …?-( அத்தியாயம் -11 ) -அரிச்சந்திர புத்ரனின் …

….
….

….

அக்டோபர் 2007-ல் ஆ.ராசா அவர்களின் தயவில்
2ஜி ஸ்பெக்ட்ரம் லைசென்சுகள் ஒதுக்கீட்டில், டாட்டா டெலி
சர்வீசஸுக்கும் கொஞ்சம் கிடைத்தது.

9 வருடத்தில் 900 கோடி பண்ணிய நீரா ராடியா -( அத்தியாயம் -10 ) – அரிச்சந்திர புத்ரனின் ….

அதனையொட்டி, ரத்தன் டாட்டா அவர்கள், கலைஞருக்கு
நவம்பர் மாதத்தில் தன் கைப்பட ஒரு கடிதம் எழுதி அதனை,
திருமதி நீரா ராடியா-வின் மூலம் நேரடியாக கொடுக்கச்
செய்தார்… நீரா ராடியாவும் கலைஞரை சென்னைக்கு வந்து,
நேரடியாகச் சந்தித்து அந்த கடிதத்தைக் கொடுத்து விட்டு,
டாட்டா அவர்கள் சொல்லியனுப்பிய செய்தியையும்
சொல்லிவிட்டு சென்றார்.

ஆ.ராசாவை தொலைதொடர்பு அமைச்சராக நியமித்ததற்காக
கலைஞரை பாராட்டி இந்தக் கடிதத்தில் (துண்டுச்சீட்டு) டாட்டா
தன் கைப்பட எழுதி இருக்கிறார்.

கீழே டாட்டாவின் கைப்பட எழுதப்பட்ட கடிதம் –

2ஜி ஸ்பெக்ட்ரம் விஷயமாக ராஜா செய்த உதவிகளைப்
பாராட்டி, நன்றி தெரிவித்து, கலைஞருக்கு ரத்தன் டாட்டா
தன் கைப்படவே கடிதம் எழுதியதும், அதை நீரா ராடியா
மூலமாக நேரடியாக கலைஞரிடம் தரச்சொல்லி அனுப்பியதும்
மீடியாவில் வெளிவந்து பரபரப்பாக பேசப்பட்டது.

அப்போதே கேள்விகள் எழுப்பப்பட்டன.
நன்றி சொல்வது (மட்டும்) தான் நோக்கம் என்றால்,
டாட்டா கலைஞருக்கு ஒரு போன் போட்டு, தானே
நேரடியாக அதை தெரிவித்திருக்கலாமே. ஒரு துண்டுச்சீட்டை
கொடுக்கவா நீரா ராடியா டெல்லியிலிருந்து சென்னை வரை
வர வேண்டும்…? நீரா ராடியா கொடுத்தது கடிதம் மட்டும்
தானா…? என்றெல்லாம் வினாக்கள் எழுப்பப்பட்டன…!!!

ஆனால், அப்படி ஒரு கடிதமும் தனக்கு வரவில்லை என்று
கலைஞர் மறுப்பு தெரிவித்திருந்தார். நீரா ராடியா தன்னைச்
சந்தித்தாரா என்ற கேள்விக்கு கலைஞர் பதிலளிக்கவில்லை.

ஆனால், பிற்பட்ட காலத்தில், ஏப்ரல், 2011-ல் பாராளுமன்ற
பொது கணக்குக் குழு முன்னர் ஆஜராகி விளக்கம் அளித்த
ரத்தன் டாடா, கலைஞருக்கு ராஜா பற்றி தான் கடிதம்
எழுதியது உண்மை தான் என்றும் ஆனால் தனக்கு அது
விஷயத்தில் உள்நோக்கம் எதுவும் இருந்ததில்லை
என்றும் கூறி இருக்கிறார்.

அதற்கு முந்தைய தினம் காலையில் ஆஜரான நீரா ராடியாவும்,
தான் டாடா கொடுத்த கடிதத்தை நேரிடையாக கலைஞர் வசம்
கொடுத்ததாக உறுதி செய்திருக்கிறார்.(ஆனால் கடிதம்
ஒட்டப்பட்டிருந்ததால் (???), அதில் என்ன எழுதி இருந்தது
என்பது பற்றி தனக்கு தெரியாது என்றும் கூறி இருக்கிறார் !!! )

தனக்கு டாடாவிடமிருந்து கடிதம் எதுவும் வரவில்லை
என்று கலைஞர் அப்போது மறுத்தது அப்பட்டமான பொய்
என்பது இந்த வாக்குமூலங்களின் மூலம் உறுதியானது …

கலைஞர் ஏன் அப்படி ஒரு பொய்யை சொன்னார்….?

————————————

பின்னர், சுப்ரீம் கோர்ட் முன்னர் லைசென்சுகள் கேன்சல்
செய்வது குறித்த வழக்கு வந்தபோது, உ.நீ.மன்றம்,
நீரா ராடியா மீது 14 வெவ்வேறு விஷயங்கள் பற்றி
விசாரணை இலாகாக்கள் தெரிவித்திருந்தது குறித்து
சிபிஐ உரிய விசாரணையை மேற்கொள்ள வேண்டுமென்று
உத்திரவு பிறப்பித்திருந்தது….

“The Supreme Court had asked the CBI to probe “criminality”
in 14 issues that were identified by the investigating agency
after going through the transcripts of the Radia tapes
submitted to it by the income tax department ..”

ஒன்றரை ஆண்டுக்கால “விசாரணை”களுக்குப் பிறகு,
சிபிஐ நிறுவனம் நீரா ராடியா மீது “கிரிமினல் குற்றங்கள்”
எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை; எனவே, நீரா ராடியா
சம்பந்தப்பட்ட 14 வழக்கு ஃபைல்களையும் மூடிவிடலாம்
என்று பரிந்துரைத்தது….

”One-and-a-half years after it began investigating whether
Radia provided favours to corporate houses using her alleged
links in government, sources said the agency has concluded that
there was “no criminality” in any matter.

” The probe revealed that no favour was extended to any
company by any official as suggested in the conversations ”
a senior officer said. Top sources said all 14 enquiries would be
closed in the next few weeks…

இப்படியாக, எந்தவித மேல் நடவடிக்கைகளும் இல்லாமல்,
நீரா ராடியா 2ஜி வழக்கிலிருந்து சுகமாகத் தப்பினார்….

அதன் பிறகு நீரா ராடியா என்ன ஆனார்…?

இது பற்றி சில சுவாரஸ்யமான தகவல்கள் இருக்கின்றன.
ஆனால் அவை இந்த தலைப்புடன் சம்பந்தப்பட்டவை அல்ல
என்பதால், அவற்றை, இந்த இடுகைத்தொடர் முடிந்த பிறகு
தனியே எழுதுகிறேன்…

—————–
தொடரும்….

.
——————————————————————————

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.