நையாண்டி மேடை -குடு குடு குடு – ஆட்சி மாறுது -ஆட்சி மாறுது …!!!

….
….

….

தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லையே தவிர, தமிழகத்தில்
தேர்தல் ஜுரம் எல்லா கட்சிகளையும் தீவிரமாக பற்றிக்கொண்டு
விட்டது. அரசியல் தலைவர்கள் அத்தனை பேரும்
(ஒருத்தரைத் தவிர…!!! ) ஊர்வலம் கிளம்பி விட்டார்கள்.

எனவே இன்னும் கொஞ்ச காலத்திற்கு இங்கே
அரசியல் இடுகைகள் நிறைய வரும்… முடிந்த வரை, டென்ஷன்
ஆகாமல், ஆக்காமல் – சொல்லவே விரும்புகிறேன்.

இங்கே நகைச்சுவையாக நிறைய மீம்ஸ்களும் வெளியாகும்.
அவற்றை யாரும், யாரையும் அவமதிப்பதாக நினைக்க வேண்டாம்.
யாரையும் அவமதிக்கும் நோக்கம் நமக்கு கிடையாது.

ஆனால், அதே சமயத்தில் நமது கருத்தை சொல்ல
தயக்கமும் கிடையாது.

கிண்டல், கேலி அடங்கிய நகைச்சுவைச் செய்தியாகவே
இந்த நையாண்டி மேடையை கருத வேண்டும்.

நிச்சயமாக….?
நிச்சயமாக…. !!!

உறுதியாக….?
உறுதியாக …. !!!

…..

….

.
—————————————————————————————————————————

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

6 Responses to நையாண்டி மேடை -குடு குடு குடு – ஆட்சி மாறுது -ஆட்சி மாறுது …!!!

 1. selvam சொல்கிறார்:

  அந்த ஒருவர் ஜனவரியில் இருந்துதானே ஆறு மாத கால்ஷீட் பிஜேபிக்கு கொடுத்து இருக்கிறார். ஆகையால் அவரின் ஷூட்டிங்கை ஜனவரியில் இருந்துதானே பார்க்கமுடியும். .புதியவன் அவர்கள் ஒரு பின்னூடடத்தில், சிவாஜி கணேசன் மிக சாதாரணமாக அரசியல் மேடையில் பேசியதாக குறிப்பிட்டிருந்தார். . எம்ஜியார், சிவாஜி கணேசன், ஜெயலலிதா, விஜயகாந்த் போன்றவர்கள் மக்களுக்காக அரசியலுக்கு வந்தவர்கள். ஆகையால் அவர்கள் மேடைகளில் நடிக்கவில்லை. இயல்பாக பேசினார்கள். ஆனால் அந்த ஒருவர் தனது சுயநலத்திற்காக அரசியலுக்கு வருவதாக நடிக்கிறார். ஆகையினால் அவரின் மேடைகளில் எழுதி கொடுக்கப்பட்ட வசனங்களை வீர தீர மாக முக பாவங்களுடன் முழங்கி நடிப்பார் என்று எதிர்பார்க்கலாம்.

  • புதியவன் சொல்கிறார்:

   பிக் பாஸ் உலக நாயகர், தமிழர்களுக்காகவே அவதரித்த மலையாளி (நாம் தமிழர்), தன்னுடைய குடும்பம் முன்னேறுவதற்காகவே வன்னியர் கட்சியை நடத்திக்கொண்டிருக்கும் இராமதாஸ் அவர்கள், 40% வாக்கிலிருந்து இப்போ 4% வாக்குகளுக்கு வந்திருக்கும் காங்கிரஸ், பணம் வாங்கிக்கொண்டு கூட்டணி வைக்கும் கொள்கையற்ற கம்யூனிஸ்ட் கட்சிகள் (இவங்கதான் அடுத்த பாமக. யார் அதிக பணத்துக்கு ஏலம் எடுக்கறாங்களோ அவங்களோட கூட்டணின்னு இனி பேப்பரில் விளம்பரம் கொடுப்பாங்க) – இவங்களை விமர்சிக்க ஆளே இல்லை. இனித்தான் கட்சி தொடங்கப்போகும் ரஜினி, அரசியலுக்கு வருகிறார் என்ற உடனே,

   “அவர் நடிக்கப்போகிறார்…. பொய் பேசப்போகிறார், வீர தீர முகபாவங்களுடன் முழங்கி நடிப்பார்”

   என்று வேர்த்து விறுவிறுத்து எல்லோரும் நடுங்குவதன், பொய்க் குற்றச்சாட்டுகளைக் கூறுவதன், ‘இதோ…மக்களைச் சந்திக்கப்போகிறோம், கிராம சபைகளைக் கூட்டப் போகிறோம்’ என்று பத்து வருடங்கள் தூங்கிவிட்டு இப்போது வீறுகொண்டு எழுவதன் காரணம் என்ன? தாக்கி எழுதுபவர்களைப் பொறுத்தவரையில் ‘ரஜினிக்குத்தான் செல்வாக்கில்லையே, பாஜகவுக்கு பயந்துகொண்டுதானே அரசியலுக்கு வருகிறார், பாஜகவுக்கே 2 சதவிகித வாக்குகளே இல்லையே’… அப்படி இருக்கும்போது ஏன் ரஜினியைப் பார்த்து கலங்கணும் (அந்த பயத்துலதானே அவரைப் பற்றி இழிவாக எழுதத் தோன்றுகிறது)

 2. tamilmani சொல்கிறார்:

  இந்த ஆள் வரமாட்டார் என நினைத்து அடுத்தது நம்ம ஆட்சிதான் என்று
  கொக்கரித்த கூட்டு கொள்ளை கும்பலுக்கு ஜனவரியில் ரஜினி கட்சி தொடங்குவது
  வயிற்றில் புளியை கரைக்க தொடங்கி இருக்கிறது. அதிமுகவுக்கு இழப்பதற்கு
  எதுவுமில்லை. அவர்கள் பத்தாண்டு காலம் சுகபோகமாக
  ஆட்சி நடத்திவிட்டார்கள்.dmk is the only party which is desperate now . ரஜினி அதிகம் பிரச்சாரமே செய்ய தேவையில்லை. தமிழருவி மணியன் பார்த்து கொள்வார்.
  ரஜினி ஒரு சிறந்த பேச்சாளர் என்பதை பல நிகழ்ச்சிகளில் கண்டிருக்கிறேன்.
  பிற மாநிலத்தை சேர்ந்த அவர் தமிழ் நன்றாகத்தான் இருக்கிறது. தமிழ்நாட்டில் பிறந்த
  தமிழறிஞரின் மகன்தான் உளறி கொட்டுகிறார். ரஜினிக்கு யாரும் எழுதி கொடுக்க வேண்டாம்.
  அவரின் சிறு அசைவுக்கு கூட கோடிக்கணக்கில் ரசிகர்கள் இருக்கிறார்கள்.

 3. புவியரசு சொல்கிறார்:

  ஸ்டாலின் போகும் இடங்களில் எல்லாம்
  ஒரு ‘பூம்-பூம்’ மாட்டையும் அழைத்துச் சென்று
  விட்டால், மிகப்பொருத்தமாக இருக்கும்.

  ஆட்சி மாற்றம் ஆட்சி மாற்றம் என்று தானே சொல்கிறார்;
  அடுத்த ஆட்சி இவருடையது தான் என்று
  இவருக்கே நம்பிக்கை இல்லையே !
  காத்திருந்தவன் பெண்டாட்டியை நேத்து வந்தவன்
  கொண்டுபோன கதையாகி விடுமோ ?

 4. புதியவன் சொல்கிறார்:

  இந்த் ஸ்டாலின் மற்றும் திமுக எவ்வளவு பதவிப்பித்தோட அலையறாங்கன்னா, காசு கொடுத்து செய்திகளை வரவைக்கறாங்க. அதான் 1.76 இருக்குல்ல.

  நேற்றைக்கு ஒரு இணையச் செய்தித்தளத்தில், ஸ்டாலின் பரபரப்பான தகவலை அறிவிக்கப்போகிறார் என்று தொடர்ந்து செய்தி சொல்லிக்கிட்டே இருந்தாங்க. என்னடான்னு பார்த்தால், திரும்பவும் முதல்லேர்ந்து, ‘அதாவது அதாவது, அடுத்த சில மாதங்களில் நாமதான் ஆட்சிக்கட்டிலுக்கு வரப்போகிறோம், திமுக காரங்க நம்ம வேட்பாளர்களைக் காட்டிக்கொடுத்துடாதீங்க, துரைமுருகன் பையன் 10 கோடியைப் பதுக்கி வைத்ததை காட்டிக்கொடுத்தது போல’ என்பது மாதிரியான செய்திகள்தான் அடிபடுது. அடுத்து ஆட்சிக்கு வரப்போகிறோம் என்று சொன்னால்தான் கட்சிக்காரங்க காசு செலவு பண்ணுவாங்க என்பதைப் புரிந்து வைத்துள்ளார் ஸ்டாலின். ஆட்சிக்கு வந்தபிறகு யார் யார் சொத்துக்களை ஏப்பம் விடப்போறாங்களோ….

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


   புதியவன்,

   இடையில் அடுத்த இடுகை வெளிவந்து விட்டது.
   இந்த பாயிண்டை அதில் கவர் செய்திருக்கிறேன்
   என்று நினைக்கிறேன். similarity in thoughts…!!!

   .
   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s