9 வருடத்தில் 900 கோடி பண்ணிய நீரா ராடியா -( அத்தியாயம் -10 ) – அரிச்சந்திர புத்ரனின் ….

….
….

….

நீரா ராடியா சம்பந்தப்பட்ட பரபரப்பான பல ஒலிப்பதிவு
நாடாக்கள் ஒரு காலத்தில் மீடியாக்களில் பெரும் அளவில்
உலா வந்தன. ஆனால்,

ஆனால்,அவை எங்கே, எப்படி, யாரால் பதிவு செய்யப்பட்டு,
எப்படி வெளியிடப்பட்டன என்பது தான்
யாருக்கும் தெரியவில்லை;

நீரா ராடியா என்கிற உத்தமப் பெண்மணி -(அத்தியாயம் -9) – அரிச்சந்திர புத்ரனின் ….

தான், நீராவுடன் பேசிய விஷயங்களும் லீக் ஆனதால்,
ரத்தன் டாட்டா – தான், நீரா ராடியா வுடன்
பேசிய ஒலிப்பதிவு நாடாக்களை வெளியிட்டது
பெருங்குற்றம் என்று தொலைக்காட்சி பேட்டி
ஒன்றில் கூறி- இது தொடர்பாக விரைவில் தான் உச்ச நீதி
மன்றத்தில் வழக்கு தொடுக்கப்போவதாகவும் கூறி இருந்தார்.

இவர்கள் இருவரும் பேசியதாக வெளிவந்திருக்கும்
அந்த ஒலிப்பதிவில் என்ன இருக்கிறது ?
அவர்கள் அப்படி எதைப்பற்றி பேசி இருக்கிறார்கள் ?
————————————–

ஏர் இந்தியாவின் ஆலோசனைக்குழுவிற்கு
ரத்தன் டாட்டாவை தலைவராகப் போட
நீரா முயற்சி செய்வதைப்பற்றி –

விமான போக்குவரத்துத்துறை அமைச்சர்
பிரபுல் படேலிடம் இதைப்பற்றிக் கூறி
மேற்கொண்டு ஆவன செய்வதைப்பற்றி –

அனில் அம்பானி முதல் போடாமல்
லாபம் சம்பாதிப்பது பற்றி –

ராஜா கனிமொழி இருவரும் வழிவதைப் பற்றி –

ராஜா ஸ்பெக்ட்ரம் விஷயத்தில் எப்படி
சிவாவை (ஷிவ் நாடார் ?) ஏமாற்றப் போகிறார்
என்பதைப் பற்றி –

——————————————-

– இவ்வளவு தான் வெளி வந்திருக்கிறது !
பெரிய இடங்களில் என்ன நடக்கிறது,
அவர்கள் தங்களுக்குள் காரியங்களை
எப்படி நடத்திக்கொள்கிறார்கள்,
இதற்காக அவர்கள் என்னென்ன வழிகளைப்
பின் பற்றுகிறார்கள் –

இந்த பெரிய மனிதர்களின் அந்தரங்கம் உண்மையில்
எப்படி இருக்கிறது …

என்பதைப் பற்றி எல்லாம் சிறிது – சிறிதே சிறிது –
கோடிட்டு காட்டுகிறது இந்த உரையாடல் நாடா.

ஆனால் – காரணம் எதுவாக இருந்தாலும் கூட,
இந்த பதிவுகளை வெளியிட்டவர்,
வெளியுலகுக்கு வெளிச்சம் போட்டு காட்டியவர்,
யாராக இருந்தாலும் சரி -நாமெல்லாரும் அவருக்கு
பெரும் கடன் பட்டிருக்கிறோம்….

அது யாராக இருக்குமென்று நினைக்கிறீர்கள் ….?
———————–

நாட்டில் உள்ள இத்தனை அரசியல்வாதிகளிலும்
ஸ்பெக்ட்ரம் ஊழலைப்பற்றியோ, ராஜாவைப் பற்றியோ
எந்த கருத்தையும் சொல்லாத ஒரே தலைவர்
திருவாளர் ப.சிதம்பரம் மட்டும் தான்.

அதே சமயம் இது பற்றிய அனைத்து விவரங்களையும்
அறியக்கூடிய நிலையில் இருந்தவரும் அவரே….
(ஒரு காலத்தில் மத்திய உள்துறை அமைச்சராகவும்
பொறுப்பு வகித்ததால்….!!!)

“உன் அப்பா எங்கே…?” என்று கேட்ட ஒரு கடன்காரரிடம் –
“என் அப்பா குதிருக்குள் இல்லை” -என்று அறியாத
வயதுச் சிறுவன் ஒருவன் சொல்வதாக தமிழில் தமாஷாகச்
சொல்வதுண்டு.

“நீரா ராடியா தொலைபேசி உரையாடல்களைப்
பதிவு பண்ண அனுமதி மட்டும் தான் நாங்கள்
(மத்திய உள் துறை அமைச்சகம்) கொடுத்தோம்.

மற்றபடி உள்துறை அமைச்சர்
(ப.சிதம்பரம் அவர்கள் ) கூறி நான் தான்
இந்த உரையாடல்கள் ஊடகங்களில்
கசியும்படி செய்தோம் என்று சிலர் கூறுவது தவறு –”

– என்று ஒரு சனிக்கிழமை) மாலைவேளையில் உள்துறை
செயலாளர் ஜிகே பிள்ளை அவர்கள் பத்திரிகைகளுக்கு
செய்தி வெளியிட்டார்.

இதைவிடவும் தெளிவாக ஒரு அரசு அதிகாரியால் எப்படிச்
சொல்ல முடியும்….?
—————————

பிற்காலத்தில், ( டிசம்பர், 2010 ) உச்சநீதிமன்றத்தில்,
மத்திய அரசு, நீரா ராடியா சம்பந்தப்பட்ட உரையாடல்களை
பதிவு செய்ததற்கு பொறுப்பேற்றுக் கொண்டது….
(ஆனால் வெளியிட்டதற்கு பொறுப்பேற்கவில்லை…!!!)

ஏன் ஒட்டுக்கேட்கப்பட்டது என்பதற்கான
கீழ்க்கண்ட விளக்கங்களை அளித்தது –

9ஆண்டுகளில் 900 கோடி ரூபாய் அளவிற்கு
நீரா ராடியா பணம் சேர்த்திருப்பதாகவும்,

அந்நிய நாடுகள் சிலவற்றிற்கு
அவர் உளவாளியாக பணி புரிவதாகவும்,
இந்திய தேசத்தின் இறையாண்மைக்கு எதிரான
செயல்களில் ஈடுபடுவதாகவும் –

நவம்பர் 16, 2007 -ல்
நிதியமைச்சருக்கு ஒரு புகார் வந்ததாகவும்
அதையொட்டியே அவரது 14 தொலைபேசிகளையும்
ஒட்டுக்கேட்கவும், ரகசியமாகப் பதிவு செய்யவும்
மத்திய அரசு ஒப்புதல் கொடுத்ததாகவும்
தெரிவித்துள்ளது.

அவரது அனைத்து பதிவு செய்யப்பட்ட உரையாடல்களும்
உச்சநீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு அதன்
பாதுகாப்பில் உள்ளது.

அந்த சமயத்தில், இத்தகைய பெண்மணி ஒருவரிடம் –
தமிழ் நாட்டின் ஆளும் கட்சியைச் சேர்ந்த
கனிமொழி, ராஜா ஆகியோர் வைத்திருந்த தொடர்புகள்
ஆச்சரியத்தையும், ஆத்திரத்தையும் கிளப்பின…

இந்த உரையாடல்களில் வெளியாகிய ஒரு வித்தியாசமான,
இந்த இடுகைக்கு தொடர்புள்ள தகவல் –

ராசாவுக்கு தொலைத்தொடர்பு அமைச்சர் பதவி வாங்கிக்
கொடுக்கவில்லையென்றால், தற்கொலை செய்து கொள்வேன்
என்று கலைஞரை அவரது மகள் ஒருபக்கமும்,

தயாநிதி மாறனுக்கு தான் அந்த பதவியை வாங்கிக்கொடுக்க
வேண்டுமென்று, கலைஞரின் மனைவி தயாளு அம்மாள்
இன்னொரு பக்கமும் வலியுறுத்திய விதம்….!!!
(தயாளு அம்மாளுக்கு சன் குழுமம் செட்டில்மெண்ட்
தொகையாக 100 கோடி ரூபாய் கொடுத்திருந்ததாக
அதிகாரபூர்வமாகவே செய்திகள் வெளியாகியிருந்த சமயம் அது…
எனவே அவர்கள் மீது அவருக்கு நிச்சயம் பாசம் இருக்கும்…! )

————————–
நாட்டின் சர்வ சக்தி மிகுந்த இடங்களில்
இந்த நீரா ராடியா சர்வ சகஜமாகப் போய் வருவதும்,
எவரிடம் வேண்டுமானாலும், எதைப்பற்றி வேண்டுமானாலும்
பேசும் வாய்ப்பை அவர் உருவாக்கி வைத்திருந்ததும் –
பிரமிப்பைத் தருகிறது.

தொழில் அதிபர்கள் ஆனாலும் சரி –
அரசியல்வாதிகள் ஆனாலும் சரி –
டில்லி தொலைக்காட்சி அரசியல்-செய்தி
நிகழ்ச்சி தயாரிப்பாளர்களானாலும் சரி
இவரிடம் அப்படியே வழிகிறார்கள் !
இவர் சொல்வதை எல்லாம் கேட்கிறார்கள்.

ஏன் ? எப்படி ?

உயர் மட்டங்களில் இருந்தவர்களின் பலவீனங்களை
மிகச்சரியாக கண்டறிந்து அவரவர்க்கு தேவைப்படுவதை
தேடித்தந்து –
தனக்கு வேண்டிய சலுகைகளைப் பெற வேண்டிய விதத்தில்
பெற்று – வேண்டியதை சாதித்துக் கொள்ளும்
வித்தை நீராவுக்கு நன்கு தெரிந்திருந்தது….

இவ்வளவு தானா …?

—————–
தொடரும்…..

.
————————————————————————————————————–

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

15 Responses to 9 வருடத்தில் 900 கோடி பண்ணிய நீரா ராடியா -( அத்தியாயம் -10 ) – அரிச்சந்திர புத்ரனின் ….

 1. Mani balan சொல்கிறார்:

  காவிரிமைந்தன் என்ன எழுதுகிறார் என்பது அவரது உரிமை. ஆனால் நடுநிலைமை போர்வை போர்த்தாமல் எழுத வேண்டும். உங்கள் இடுகையில் யூகங்களே அதிகம் உள்ளன என்பது எலகேஜி பொடியனுக்கு கூட கண்கூடு. இதை சொல்வதால் நான் திருட்டு முன்னேற்ற கழகத்தை சேர்ந்தவன் என பட்டம் கட்ட வருபவர்கள் வரிசையில் வரவும். இங்கே எவனுக்கும் வெட்கம் இல்லை.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


   மணிபாலன்,

   உங்களின் சென்ற பின்னூட்டத்திற்கு நான்
   எழுதிய பதில் இது –

   // நான் எழுதுவதை எதிர்ப்பதற்கு பதிலாக,
   நான் இங்கே தொகுத்து தரும் செய்திகளில்
   எதாவது உண்மைக்கு மாறாக இருப்பின்
   நீங்கள் தாராளமாக தெரிவிக்கலாம்.
   அது உங்கள் நோக்கத்தை ஓரளவு
   நிறைவேற்றக்கூடும்…! //

   நான் எழுதியுள்ளவற்றில் எது
   தவறான தகவல் என்று உங்களால்
   கூற முடியாமல், பொத்தாம்பொதுவாக
   ஏன் எழுதுகிறீர்கள்…?

   நான் இங்கே எழுதி இருக்கும் ஒவ்வொரு
   செய்திக்கும், தகுந்த அதாரம் இருக்கிறது.
   அவற்றை வைத்துக்கொண்டு தான்
   நான் எழுதுகிறேன். தகுந்த ஆதாரமின்றி
   எதையும் எழுதுவது என் பழக்கமல்ல.

   ஆ.ராசாவை அல்லது திமுகவை
   விமரிசனம் செய்வது உங்களுக்குப்
   பிடிக்கவில்லையென்றால் – நான்
   ஒன்றும் செய்வதற்கில்லை.

   .
   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

 2. RajiniSenthil சொல்கிறார்:

  KM sir – please also write about how Rajinikanth is arm twisted and blackmailed by rss gundas to get into politics. Since you admire rajini, this is the least thing you can do for him

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   RajiniSenthil – என்று அழைத்துக்கொள்பவரே,
   முதலில் உங்கள் உண்மைப்பெயருடன்
   வெளிவந்து, நேர்மையான முறையில்
   கேள்விகளைக் கேளுங்கள்.

   உங்கள் விருப்பப்படி எழுதுவதற்காக நான்
   இந்த வலைத்தளத்தை உருவாக்கவில்லை;

   .
   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

   • arul சொல்கிறார்:

    well said sir. No one can blackmailed Mr. Rajinikanth and what is the purpose Rajinikanth agree that?.. Mr RajniSenthil??? you are not even come with your original name and you are already confirmed yourself Rajinikanth was blackmailed by RSS gundas!! then why don’t you share the concreate information which made you come for the conclusion..

   • RajiniSenthil சொல்கிறார்:

    I am senthil saravanan from ramnad district thirupullani and member of rajini fan club. I am is US now. Here are reasons why i think rajini is driven by rss.
    1. He knows he can get Max of 12% vote (from survey by creaxis). Rajini kept saying he wanted to see people revolution before he comes. Everyone knows it didn’t happen. So, the vote division will help but alliance.
    2. In spite his own party members, he appointed an RSS guy arjunamurthy for party senior most post. My friend selva is ramnad dist rajini club secertary. He and many dist secretaries have confirmed they are very surprised by this.
    3. There of ED inquiries on rajini and relatives were withdrawn days after his announcement ( nakkeran investigation). We know usually do that.

    Now i have given details. My concern is rajini want to take rest in his final days and be in peace. But rss spoils him for political interests.

    • புதியவன் சொல்கிறார்:

     ரஜினி இன்னும் கட்சி ஆரம்பிக்கவில்லை என்பது பாவம் செந்திலுக்குத் தெரியவில்லை. கட்சிக்கு PR மற்றும் Adminக்கு சரியான நபர்கள் வேண்டும். எனக்கும் ஆச்சர்யம்தான் பாஜகவிலிருந்து தன் இயக்கத்துக்கு வரச் சொல்லி ஒரு பொறுப்பைக் கொடுத்திருக்கிறாரே என்று. அவர் மனத்தில் இவரும், தமிழருவியும் able persons என்ற எண்ணம் இருந்திருக்கலாம். நீங்கள் இதே கேள்வியை ஸ்டாலினைப் பார்த்தோ (ஏம்பா… உங்க கட்சில உருப்படியா ஒரு தலைவரும் இல்லையா? எதுக்கு எல்லோரையும் உதயநிதி, இன்பநிதி போன்றவர்களுக்கு அடிமையாக வைத்திருக்கிறீங்க? பழுத்த திமுக அரசியல்வாதிகள்ல ஒருத்தர், அடுத்த தலைவராகக்கூடாதா என்று.. அதுபோல அன்புமணியைப் பற்றியும்) இராமதாஸைப் பார்த்தோ கேட்டிருக்கலாமே?

     ஆனால் ரஜினிக்கு திமுக ஸ்டாலின் கூட்டம் போலோ, காங்கிரஸ் அழகிரி போலோ அல்லது திமுக கட்சியைச் சேர்ந்த (பின்ன.. சின்னம் கூட இல்லாமல் திமுக சின்னத்தில் எம்பி சீட்டை விரும்பித் தன் கட்சிக்குப் பெற்ற திருமாவுக்கு தனி கட்சி எதுக்கு) தொல் திருமாவளவன் மற்றும் திமுகவிடமிருந்து 25 கோடி பெற்றுக்கொண்டு, அதற்குப் பதிலாக ஏழைகளை முன்னேற்றுவதற்காக திமுகவை ஆதரித்த கம்யூனிஸ்டுகள் போலோ, அரசியலில் சம்பாதிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. திறமை உள்ளவர்களுக்கு பொறுப்பு கொடுக்க நினைத்திருக்கிறார் என்றுதான் எனக்குத் தோன்றுகிறது (என் எண்ணம் இன்னும் மாறவில்லை. மதிய உணவு நேரம் முடிந்த பிறகு, கஸ்டமர்களெல்லாம் அவங்க அவங்க வேலையைப் பார்க்கக் கிளம்பியபிறகு புதிதாக மதிய உணவுக்கு சமையல் செய்ய ஆரம்பித்திருக்கிறார் ரஜினி என்ற எண்ணம் மாறவில்லை)

     He can get max 12 percent votes – அதனால என்ன? காங்கிரஸ், முஸ்லீம் கட்சிகள், விசிக, பாமக, மதிமுக, கம்யூனிஸ்டுகள் என்று ஒரு கட்சிக்கும் 5 சதவிகித வாக்குகளுக்கு மேல் கிடையாது. அப்புறம் அவங்க கட்சியை கலைத்துவிட வேண்டியதுதானே. எதற்கு வெட்டியாக கட்சி நடத்திக்கொண்டிருக்கிறார்கள்? அரசியல் களத்துக்குப் புதியவரான ரஜினிக்கு 12 சதவிகிதம் வாக்கு கிடைக்கும் என்று சரியாகவோ தவறாகவோ ஒரு கணிப்பு வந்திருந்தால், வெட்கப்படவேண்டியது இந்த அனைத்து லெட்டர் பேட் கட்சிகளும் அல்லவா?

     ED Inquiries – காங்கிரஸுக்கு பங்கு கொடுத்ததனால் லட்சத்து 76 ஆயிரம் கோடிகள் சுருட்டிய திமுக, 60 சதவிகிதம் பங்குகள் வைத்திருந்த தயாளுவை திகார் ஜெயிலுக்குப் போகவிடாமல் தப்பித்தது என்று பத்திரிகைகள் எழுதியது உண்மைதான் என்று ஒத்துக்கொள்கிறீர்களா? காங்கிரஸ், தங்களுக்கு ஊழலில் பங்கு கிடைத்ததனாலோ இல்லை, அதிக சீட்டுகள் கிடைப்பதற்காகவோ அரசுத் துறைகளை திமுகவுக்கு எதிராக, பிறகு ஆதரவாக உபயோகித்தது என்பது உங்கள் எண்ணமா? இப்படி அரசுத் துறைகள் எப்போதும் ஆளும் கட்சிக்கு அடிமை வேலை செய்கிறது, தேர்தல் கமிஷன் உட்பட, என்பது உங்கள் எண்ணமா? எனக்கு அப்படித் தோன்றவில்லை.

     • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      புதியவன்,

      // இப்படி அரசுத் துறைகள் எப்போதும்
      ஆளும் கட்சிக்கு அடிமை வேலை செய்கிறது,
      தேர்தல் கமிஷன் உட்பட, என்பது
      உங்கள் எண்ணமா? எனக்கு அப்படித்
      தோன்றவில்லை.//

      சில நேரங்களில் –
      நீங்கள் சொன்ன துறைகள் மட்டுமல்ல –
      நீதித்துறையும் கூட …என்பது
      என் அபிப்பிராயம்…

      I repeat – சில நேரங்களில்…!!!

      இன்னும் கொஞ்சம் பொறுத்துக்
      கொள்ளுங்கள். இந்த இடுகைத்தொடரின்
      கடைசி அத்தியாயத்தை பார்த்த பிறகு
      நீங்களே கூட உங்கள் அபிப்பிராயத்தை
      மாற்றிக்கொள்ளக்கூடும்…!!!

      .
      -வாழ்த்துகளுடன்,
      காவிரிமைந்தன்

     • arul சொல்கிறார்:

      Well Said Puthiyavan sir. Mr Senthil Sir, me too in US, I’m from Madurai and I know couple of RMM people and no one have any objection on Arjuna Moorthy. Are you taking seriously about Nakkheeran as the evidence? why don’t you tell about arjunamorrthy link to DMK and Maaran family. Now VP durai samy former DMKian as VP of Tamil Nadu BJP and Mr. PT Arasakumar who is fomer VP in BJP and now in DMK as Spoke person (Kolgai Parappu Cheyalalar??) then how about them sir?.How do you categorize them? ED enquires against Rajini?? great joke..Then why dont they ask Rajini to join BJP instead of Rajini Starting a party? Do you think Rajini as like as Stalin? DMK was forced by Congress in 2G case then make them to alliance with them in 2014 election. If you wanted to blame Rajini do it directly and don’t put you as a Rajini fan.. please..

 3. GOPI சொல்கிறார்:

  கே.எம்.சார், இந்த வீடியோவை
  யூ ட்யூபில் பார்த்தேன். உதவும் என்பதால்
  இங்கே போடுகிறேன்.

  ஸ்டாலினும், சாஹித் பால்வா என்கிற
  2ஜி குற்றவாளியும் சந்தித்தை சிபியையிடம்
  வாக்குமூலமாகக் கொடுத்ததால் –
  சாதிக் பாட்சா கொலை செய்யப்பட்டார்.

 4. Ravi Kumar சொல்கிறார்:

  இந்த மணிமாலன் ரஜினிசெந்தில் போன்றோர்கள் விபரம் தெரியாமலேயே KM சாரிடம் பேசுகிறார்கள். இவர் எப்போதுமே அதிமுகவையோ ரஜினியையோ விமர்சித்து ஏழுதியதில்லை
  ஏதோ ஒரு பாசம்.

  • புதியவன் சொல்கிறார்:

   ஹ.ஹா.ஹா. இன்றைக்கு எதற்கு கா.மை. சார், ரஜினியை விமர்சித்து எழுதவேண்டும்? ஏதேனும் ஒரு காரணம் சொல்லுங்க. அதிமுகவை விமர்சித்தும் இங்கு இடுகைகள் எழுதப்பட்டிருக்கின்றன. அரசியலில் புத்தர்கள் இல்லாதபோது, decoits, rowdies வந்துவிடக்கூடாது என்ற நல்லெண்ணம் காரணமாக, அல்லது ஊழல்வாதிகள், அடுத்தவர்கள் சொத்தை ஆட்டையைப் போடுபவர்கள், சமூகச் சீர்கேடுகள், சமூக நல்லிணத்துக்குக் கேடு விளைவிப்பவர்கள், ஒட்டுவாரொட்டிகள்-அதாவது கொள்கை என்று ஒன்று இல்லாமல், எங்கு ஒட்டிக்கொண்டால் தங்கள் அரசியல் வாழ்க்கையை ஓட்டலாம், வாக்களிப்பவரைக் கவர எப்படியெல்லாம் ஹிந்து மதத்தைப் பற்றிக் குறைகூறலாம் அல்லது சாதியைத் தாங்கிப்பிடிக்கலாம் என்று இருப்பவர்கள் கூட்டத்தில் கொஞ்சம் பெட்டராக இருப்பவரையோ இல்லை களத்தில் புதிதாக கறை இல்லாமல் இறங்குபவரையோ எதற்கு விமர்சிக்கவேண்டும்? ஏதேனும் நல்ல காரணம் ஒன்று எழுதுங்களேன்…

 5. GOPI சொல்கிறார்:

  கே.எம்.சார்,

  வேறு வேறு பெயர்களில் வந்து நாடகமாடும்
  இந்த மாதிரி போலி ஆசாமிகளுக்கெல்லாம்
  நீங்கள் மதித்து பதிலளிக்க வேண்டிய அவசியமே
  இல்லை; இதெல்லாம்வேண்டுமென்றே
  திமுகவினரால் எழுதப்படுபவை. ரஜினி அரசியலில்
  நுழைவது அவர்களுக்கு பெரும் கலக்கத்தை
  உண்டு பண்ணி இருக்கிறது. எப்போது ஆட்சியை
  பிடிக்கப்போகிறோம் என்று காத்திருந்தவர்களுக்கு
  இப்போது அவர் வருவது அதிர்ச்சியாக இருக்கிறது.
  விட்டு ஒதுக்குங்கள். இதையெல்லாம் நீங்கல்
  அனுமதிக்கவே தேவையில்லை என்பது என்
  கருத்து.

 6. மெய்ப்பொருள் சொல்கிறார்:

  ஆனால் – காரணம் எதுவாக இருந்தாலும் கூட,
  இந்த பதிவுகளை வெளியிட்டவர்,
  வெளியுலகுக்கு வெளிச்சம் போட்டு காட்டியவர்,
  யாராக இருந்தாலும் சரி -நாமெல்லாரும் அவருக்கு
  பெரும் கடன் பட்டிருக்கிறோம்….

  அது யாராக இருக்குமென்று நினைக்கிறீர்கள் ….?

  நீரா ராடியா பேசுவதை வருமானவரி துறை டேப் செய்தது .
  அப்போது ப சி அமைச்சராக இருந்தார் .
  டேப்பை வெளியிட்டது அவர் இல்லை .

  நீரா ராடியா ரத்தன் டாடா , முகேஷ் அம்பானி
  மற்றும் பலருக்கும் வேலை பார்த்தவர் .

  ராடியா டேப்பை வெளியிட்டது வேறு ஒருவர் .
  2 ஜி வழக்கு ஊற்றி மூடப்பட்டதற்கு அவரே காரணம் .

  ஸ்வான் போன்ற நிறுவனங்கள் அவருடைய
  பினாமி . பணம் பட்டுவாடா என்பதை சி பி ஐ
  விசாரிக்க தயக்கம் காட்டியது இதனால்தான் .

 7. GOPI சொல்கிறார்:

  பேரைச் சொல்லலாமே –
  திருடன் பேரைச் சொல்லலாமே –
  நேரடியாக சொல்ல முடியாவிட்டாலும்
  மறைமுகமாக சொல்லலாமே
  திருடன் பேரைச் சொல்லலாமே

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.