நீரா ராடியா என்கிற உத்தமப் பெண்மணி -(அத்தியாயம் -9) – அரிச்சந்திர புத்ரனின் ….

….
….

….

2009-ஆம் ஆண்டு, திருமதி கனிமொழி
-திருமதி நீரா ராடியா என்கிற டெல்லியைச் சேர்ந்த
பெண்மணியோடு தொடர்பு கொண்டு, தொலைபேசியில்
பேசியவை பதிவு செய்யப்பட்டு, பத்திரிகைகளில்
வெளிவந்து சிரிப்பாய்ச்சிரித்த “அந்தக் காலம்” –
இன்றைய பல இளைஞர்களுக்கு தெரியாத விஷயம்.
அன்றைய பல மனிதர்களுக்கு மறந்து விட்ட விஷயம்….

தெரியாதவர்கள் புதிதாக தெரிந்து கொள்ளவும்,
மறந்து விட்டவர்கள் மீண்டும் நினைவுபடுத்திக் கொள்ளவும்
அந்த உரையாடல்களின் பதிவு கீழே –

வாங்கியது லஞ்சமா – கடனா ?கலைஞர் டிவி+கனிமொழி -(அத்தியாயம் -8) – அரிச்சந்திர புத்ரனின் ….

——————————————————————————

2ஜி.. திருமதி கனிமொழி- நீரா ராடியா உரையாடல் பதிவு –

அவுட்லுக் இதழ் வெளியிட்ட அந்த டேப் விவரங்களில்,
நீரா ராடியா – கனிமொழி இடையிலான உரையாடலின்
முக்கியப் பகுதிகளின் தமிழ் எழுத்து வடிவம் கீழே…

———————————————————-

மே 22, 2009, நேரம் – 10:45:06

கனிமொழி : ஹலோ.

நீரா ராடியா : கனி, உங்கள் அப்பாவிடம் அவர்கள் நேற்று
தெளிவாக விவரித்தார்களே…

கனி: ம்-ம்.

நீரா : எந்த கட்டுமானத் துறையையும் பாலுவுக்கோ அல்லது
மாறனுக்கோ கொடுக்கக் கூடாது என்று அவர்கள்
விரும்புகிறார்கள்…

கனி : ஆமாம். ஆனால் யார் சொன்னார்கள்?

நீரா : இல்லை. இல்லை. அவரிடம் மிக மிகத் தெளிவாகவும்
விவரமாகவும் சொல்லப்பட்டது…

கனி: இல்லை. அவரிடம் அப்படிச் சொல்லப்படவில்லை.
அதுதான் பிரச்னையே. யார் வந்து அவரிடம் சொன்னது?

நீரா : அவர்கள் தான் வந்து அவரிடம் சொல்லியிருக்க
வேண்டும். மேலும், அவரிடம் பிரதமர் பேசியிருக்கிறார்.

கனி: இல்லை. பிரதமர் பேசவில்லை. பிரதமருடன் நான் தான்
பேசிக் கொண்டிருந்தேன். பிரதமருடன் தொலைபேசியில்
நான் தான் பேசினேன். அவர் ஒரு சில வார்த்தைகள் மட்டும்
சொன்னார். அவ்வளவுதான்.

அப்பாவிடம் பிரதமரால் தொலைபேசியில் தகவலைச்
சொல்லியிருக்க முடியாது. ஏனென்றால், அவரோ மெள்ளப்
பேசுவார்; அப்பாவுக்கோ காது சரியாக கேட்காது.

நீரா : ம்-ம்.

கனி: உரையாடலும் நீண்ட நேரம் இல்லை என்பதால்
எல்லாவற்றையும் தெரிவித்திருக்க முடியாது.

நீரா : ம்-ம். ம்-ம். ம்-ம்.

கனி : வேறு யாரிடமாவது சொல்லப்பட்டிருக்க வேண்டும்,
அந்த நபர் பகிர்ந்துகொண்டாரா என்பது உங்களுக்குத்
தெரியாது. (இரைச்சல்) (0:01:02)

நீரா : ரைட். ரைட். ரைட். ரைட். ரைட். ஓகே. யார் சொன்னது
என்று தெரிந்துகொள்கிறேன். இதில் எவ்வளவு பேர்
இயங்குகிறார்கள், நம்பவே முடியவில்லை.

கனி : ஆம். பாருங்க சிலர் கூட (இரைச்சல்).. கீழ் மட்டத்தில்
இருப்பவர்கள் கூட பகிர்ந்திருக்கக் கூடும், அவர்களால் வந்து
தகவல் சொல்லியிருக்க முடியாது.

நீரா : ஓகே. ஓகே.

கனி : தகவல் சொல்லும் நபரின் நம்பகத்தன்மையைப்
பொருத்தே தகவல் நம்பப்படுகிறது.

நீரா : ரைட். ரைட். ரைட்.

கனி : நான் கூட இதுபோல செய்தியை கேட்டறிந்தேன் –
மூத்தவர்கள் எவரேனும் சொல்லியிருக்கக் கூடும், இல்லையா?

நீரா : அதான் சரி. அதான் சரி. ஆமாம் ஆமாம். ஓகே. சரி.
அவர்களிடம் மீண்டும் சொல்கிறேன். அதன் பிறகு,
உங்களை அழைக்கிறேன்.

கனி : அப்புறம், இன்னொரு விஷயம். அவர்களில் யாரேனும்
ஒருவர் குலாமை அழைத்து, என்னை அழைக்கலாம்.
சொல்லுங்கள்.

நீரா : அது சரி.

கனி : மேலும், நான் போய் அப்பாவிடம் சொல்லலாம்.
ஆனால், யாராவது வந்து அதை ஆமோதிக்க வேண்டும்.
இல்லையேல், அது எனக்கு பாதகமாகிவிடும்.

நீரா : ரைட். ரைட். ஓகே. ஓகே. கேட்டுக்கொள்ளுங்கள்,
உங்கள் அம்மாவை நாளை மதியம் 12:30க்கு சந்திப்பேன்
என்று நம்புகிறேன்.

கனி : ஓகே. நானும் இங்கேயேதான் இருப்பேன்.

நீரா : ஓகே.

கனி : இதை தயவு செய்து அம்மாவிடம் சொல்லிவிட
வேண்டாம். அப்புறம், அவர் குழப்பிக்கொண்டு போய்
எதையாவது தேவையில்லாததைச் சொல்லிவிடுவார்.

நீரா : இல்லை. இல்லை. இல்லை. இல்லை.

கனி : அப்படி நடக்காது, குலாமை என்னை அழைக்கச்
சொல்லுங்கள். பிறகு, என்னுடன் பேசுங்கள். நான் இங்கே
தான் இருப்பேன்.

நீரா : சரி. சரி.

******* ***

மே 22, 2009, 14:46:15

கனி : ஹலோ.

நீரா : ஹாய். கேளுங்கள், அவர்கள் மீட்டிங்கில் இருக்கிறார்கள்.
உங்களிடம் அவர்கள் பேசுவார்கள்.

கனி : மன்னிக்கவும்.

நீரா : அந்தச் செய்தி அவர்களுக்கு சென்று சேர்ந்துவிட்டது,
உங்களிடம் அவர்கள் பேசுவார்கள். நீங்கள் இல்லை,
ராசா மட்டுமே பதவியேற்பார் என்று சற்று நேரத்துக்கு
முன்பு தான் அவர்களிடம் சொன்னேன்.

கனி : சரி.

நீரா :அவர்களிடம் (இரைச்சல்) (0:00:49.0) ஒரு குழப்பம்
இருந்து கொண்டே இருக்கிறது. என்ன நடக்கிறது என்பதையே
அவர்களால் புரிந்துகொள்ள முடியவில்லை. ஆகவே,
நான் அவர்களிடம் சொன்னேன்…

கனி : இல்லை, அவர்கள் வந்து, என்ன நடந்தாலும் நான்
உங்கள் பக்கம் இருப்பேன் என்று சொல்ல வேண்டும்.

நீரா : யார் சொல்ல வேண்டும்?

கனி : யார் வேண்டுமானாலும்… அந்த நபர்…
தயா போகிறார், இல்லையா?

நீரா : அகமது படேலிடம் தயா பேசவில்லை. அகமது
படேலிடம் தயா பேசவில்லை, யாரிடம் தயா பேசுகிறார்
என்பது எனக்குத் தெரியாது.

கனி : ஓகே. இல்லை, இல்லை, பதவியேற்புக்காக தயா
போகிறார், இல்லையா?

நீரா : இல்லை, அவர் தனது பெயரைக் கொடுத்திருக்கிறார்,
அவர் பதவியேற்புக்குப் போகப் போகிறார் என்றே
காங்கிரஸிடம் இருந்து கேட்டறிந்தேன்.

கனி: அவர், என்னுடன் திரும்பிவிடுவதாக திட்டம், எனக்குத்
தெரியவில்லை. ஆகவே, நான் என்ன சொல்கிறேன் என்றால்,
தலைவர்கள் சொன்னதற்கு மாறாக, அவர் என்னென்னவெல்லாம்

சொல்லப்போகிறார், நான் (இரைச்சல்) (0:01:32.4)

நீரா : ஆம், ஆனால், உங்கள் அப்பாவிடம் சொல்லியாக
வேண்டும், இல்லையா?

கனி : அதான். அவர் வந்து அப்பாவிடம் சேவல்-எருது கதைகளை
அளப்பார். அகமது படேல் சொன்னார் என்று அவர் –
இல்லை. இல்லை. அகமது படேல் அவரை அழைத்ததாகவும்,
நீங்களாவது வரவேண்டும், நீங்கள் மட்டுமே திமுகவின் முகம் –
பிரதிநிதி. நீங்கள் இல்லையென்றால், நன்றாக இருக்காது
என்று கதை விடுவார்.

நீரா : ராசாவுக்கு தான் போவதற்கு அதிகாரம் தந்திருக்கிறேன்
என்று உங்கள் அப்பா சொல்லலாம் இல்லையா? உங்கள் அப்பா அப்படிச்

சொன்னால், ராசாவுக்கு மட்டுமே அதிகாரம், உனக்கு இல்லை
என்று மாறனிடம் சொன்னால்.

கனி : இல்லை. அப்பா அப்படிச் சொல்ல மாட்டார்,
அதற்கு வழியே இல்லை. (இரைச்சல்) (0:02:09.5) அப்பாவை
அழைத்துச் சொல்ல வேண்டும், அது என்னால் முடியாது.

நீரா : உங்களுக்கு மிகவும் அலுப்பு ஏற்பட்டு விட்டது என்பது
எனக்குத் தெரிகிறது. ஆனால், இது ஆரம்பம் மட்டும் தான்,
இல்லையா?

கனி : ஆமாம், ஆமாம்.

நீரா : அரசியல், மை டியர்.

கனி : மற்றவர்களுடன் அரசியல் செய்வது பற்றி
கவலையில்லை, ஆம், (இரைச்சல்)

நீரா : எனக்குத் தெரியும். ஆனால், பரவாயில்லை. பரவாயில்லை,
உனக்கு அவருடன் வெறுத்துவிட்டது என்பது எனக்குத் தெரியும்.
அவரை புறந்தள்ளுங்கள். அவர் விரைவில் தேவையில்லாதவராகி
விடுவார். ஆனால், நீங்கள் தான்…

கனி : (இரைச்சல்) (0:02:38:6) அப்படியில்லை. இல்லை, இல்லை,
அது அப்படி இல்லை. பாருங்கள் (இரைச்சல்) தனது சொந்த
கட்சிக்கும் தலைவருக்கும் எதிராக சிலர், அதனால் தான்…

நீரா : ஆம், ஆனால் உங்கள் அப்பா இதை புரிந்துகொள்ள
வேண்டும். அப்படி புரிந்துகொள்ளவில்லை என்றால், நீங்கள் தான்
அவரிடம் எடுத்துச் சொல்ல வேண்டும்.

கனி : நான் எப்படி அவருக்குப் புரிய வைப்பது, தொடர்ந்து
சொன்னாலும், அவர் புரிந்துகொள்ள மாட்டார்…

நீரா : வேறு யார் அவருக்கு புரியவைப்பது? உங்களைத் தவிர
வேறு யாரால் முடியும், கனி. உங்களைத் தவிர வேறு
யார் பேச்சையும் அவர் கேட்கமாட்டார். எல்லாரும் அவரிடம்
நெருங்கவே பயப்படுகிறார்கள். நீங்கள் அவருடைய மகள்,
அதனால் நீங்கள் சொல்வதை அவர் கேட்கலாம். உங்கள்
நிலையை நீங்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும், கனி.
கட்சியை காப்பாற்ற வேண்டும் என்றால், உங்கள் உரிமையைப்

பயன்படுத்தியே ஆக வேண்டும்.

கனி : என்னால் முடிந்த வரையில் செய்கிறேன்.

நீரா : சரி, டேக் கேர், நான் பிறகு அழைக்கிறேன்…

கனி : எது எப்படியோ, 4 மணிக்கு விமான
நிலையத்துக்கு கிளம்புவேன்…

நீரா : சரி, அது பிரச்னை இல்லை, அவர்கள் உங்களை
சென்னையில் அழைப்பார்கள், ஆனால் உங்களிடம் அவர்கள்
பேச வேண்டும் என்பது அவர்களுக்குத் தெரியும்.

கனி : பிறகு, முடிந்தால் சுமார் 7.30க்கு எல்லாம்
சென்னையை அடைவேன்.

நீரா : பிறகு, அவர்கள் அழைக்கும் போது, தேவையெனில்
சென்னைக்கு வந்து பேசலாம் என்று அவர்களிடம் சொல்லுங்கள்.

******

மே 22, 2009, 20:04:19

நீரா : ஹலோ. இது உண்மை இல்லை கனி. ஆகவே,
நாம் ஏன் அவருக்கு சொல்ல வேண்டும்.
அதற்கு அவசியமில்லை.

கனி : இல்லை, இல்லை, அந்த விஷயத்தை அவர் பரப்ப
முயற்சிக்கிறார் என்பதால் தான்.

நீரா : இல்லை, இல்லை, இல்லை. உடன்பாடு முடிந்துவிட
வில்லை… நாங்கள் விவாதத்த்ன் நடுவில் தான் இருக்கிறோம்
என்று பிரதமரே விளக்கிவிட்டார்…

கனி : எங்களுக்கு அவர்கள் தொலைத்தொடர்பு கொடுப்பதாக

உறுதியளித்தார்கள், ஆனால் அது இப்போது… (இரைச்சல்)
(0:00:34.7) தொலைத்தொடர்பு கொடுப்பதாக அவர்கள்
ஏற்கெனவே சொல்லிவிட்டார்கள், இப்போது அதை அவருக்கு

கொடுக்கக்கூடாது. ஏனென்றால், அவர் கண்ட கதைகளை
எல்லா இடத்திலும் விதைத்து வருகிறார்…

நீரா : ஆனால் அதை விடுங்கள். நீங்கள் விமானத்தில்
இருந்தபோது, அவர் சேனல்களிடம் பேசியிருந்தார்.

கனி : ஆம், ஆம் எனக்கு தெரியும்.

நீரா : ஆம், எனக்குத் தெரியும், ராசாவிடம் பேசினேன்.
சென்னையிலும் பேசினேன். என்ன நடந்தது என்பதை
தெரிந்துகொள்ள முடிந்தது. உடன்பாடு முடிந்துவிடவில்லை
என்று சேனல்களிடம் சொன்னேன். திமுகவுடன் உடன்பாடு

ஏற்பட்டுவிட்டதாகவும், நாங்கள் சென்னைக்கு பயணிக்க
வேண்டியதில்லை என்றும் ஜனார்தன் த்விவேதி தான்
அறிவித்தார். பிறகே, பிரதமரிடம் சேனல்கள் கேட்டன.

கனி : ஆமாம், ஆமாம், அது எனக்குத் தெரியும்.
இல்லை, இல்லை. நான் அதைச் சொல்லவில்லை.
கவனமாக இருக்க வேண்டும் என்றே நான் சொல்கிறேன்.
ஏனென்றால், ராசாவுக்கு எதிராக காங்கிரஸில் இருந்து
அப்பாவிடம் சொல்வதற்கு யாராவது கிடைப்பார்களா
என்று அவர் முயற்சிக்கிறார்.

நீரா : எதையும் யாரும் சொல்லவில்லை; பிரதமரும்
எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.

கனி : பிரதமர் அல்ல.
அப்பாவை அவர்கள் சந்திக்க வரும்போது…

நீரா : ஒப்புக்கொள்கிறேன். ஆனால் கனி, ராசாவும் பாலுவும்
தனது மதிப்புக்குரிய சகாக்கள் என்றும், அவர்களுடன் தனக்கு
எந்த பிரச்னையும் இல்லை என்றும் இப்போது தான் பிரதமர்
ஒரு அறிவிப்பில் தெரிவித்திருக்கிறார். சற்று முன் தான்
பிரதமர் அறிவித்திருக்கிறார்.

கனி : அவர் அறிவிக்கலாம், ஆனால், அப்பாவை வந்து
சந்தித்துப் பேசுபவர்கள் அதற்கு மாறாகச் சொல்லலாம்.
ஏனெனில், மக்கள் வெளியயே சொல்லிக் கொள்வதற்கும்,
உள்ளுக்குள் கருதப்படும் அர்த்தமும் வெவ்வேறானது.
உங்களை நண்பர் என்று சொல்லிக் கொண்டு எவரேனும்
எப்போது வேண்டுமானாலும் வந்து விவாதிக்கலாம், பிறகு,
இந்த நபர் வேண்டாம் என்று அவர்களே சொல்லலாம்.

பொதுத் தோற்றத்துக்காக நாங்கள் பல விஷயங்களையும்
செய்கிறோம். ஆகவே, எவர் வந்து சந்தித்துப் பேசினாலும்,
இவருக்கு எதிராகப் பேசக்கூடாது. ஏன் சொல்கிறேன் என்றால்,
நான் வேறொரு வட்டாரத்தில் இருந்து தெரிந்துகொண்டேன்…

நீரா : நல்லது. ஆமாம், சரி, நான் ராசாவுடனும் பேசினேன்.

கனி : பாருங்கள், எல்லாமே பிரனையில்லை; எல்லாமே
சரிதான் என்று சொல்பவர், ராசா.

நீரா : ஆமாம், ஆமாம், ஆமாம். இரண்டு தரப்பில் இருந்தும்
கேட்டதில் இருந்து… இலாகா பற்றி காங்கிரஸ் பேசும்
மனநிலையில் இல்லை. உங்கள் அப்பாவிடமே அதை
விட்டுவிடுவார்கள்.

கனி : இல்லை. இல்லை. எல்லாம் நல்லபடி நடக்கும் என்றே
சொல்கிறேன். ஆனால், அவர்கள் வந்து எதிராகப் பேசக் கூடாது
என்றே சொல்கிறேன். ஏனென்றால், அவர்கள் கண்டிப்பாக பாலுவுக்கு

எதிராக பேசுவார்கள் என்பது உறுதி.

நீரா : ஆம், பாலு, அவர்கள் சொல்கிறார்கள். அவர்கள் பாலுவுக்கு
எதிராகச் சொல்கிறார்கள்.

கனி : இல்லை, ஆனால் ராசாவுக்கு எதிராகவும் அவர்கள்
சொல்வார் என்றே நினைக்கிறேன்.

நீரா : அப்படி சொல்லமாட்டோம் என்று அவர்கள் சொல்கிறார்கள்.

கனி : இவரைப் பற்றி எதிராக ஒரு வரிச் சொன்னாலும் அது

பெரிதாகிவிடும்.

உண்மையில், ராசா நன்றாக பணிகளைச் செய்துள்ளார்
என்பதால் நாங்கள் அவருக்கு கொடுப்பதில் மிக்க மகிழ்ச்சி
என்றே அவர்கள் சொல்கிறார்கள். இது, அவருக்கு சாதகமாக
இருக்கும். அவர்கள் பின்வாங்கவில்லை என்றால் கூட
பரவாயில்லை தான். ஆனால், ஒரு வரியில் கூட அவருக்கு
எதிராகப் போய்விடக் கூடாது.(இரைச்சல்) (0:03:28.3)

நீரா : உங்கள் கூட்டம் நாளை எப்போது வேண்டுமானாலும்
நடக்கலாம் என திமுகவினர் சொல்வதை கேட்டீர்களா?

கனி : ஆமாம்.

******

மே 23, 2009, 09:59:02

கனி : ஹலோ.

நீரா : ஹலோ கனி.

கனி : ஹாய், நீரா

நீரா : முதல்வருடன் பேசி சில தகவல்களை சொல்லிவிட்டார்களா

இல்லையா என்பதை கேட்பதற்காக அவர்களிடம் பேசினேன்.
ஆனால், அவர்கள் அழைப்பை எடுக்கவில்லை. இப்போது
என்ன செய்தி பரவி இருக்கிறது என்றால், கட்டுமானத் துறை
பாலுவுக்கோ அல்லது ராசாவுக்கோ கூடாது என்பதுதான்.

உண்மையில், மாறனுக்கோ அல்லது பாலுவுக்கோ
கொடுக்கக் கூடாது என்றுதான் சொல்லப்பட்டிருக்கிறது.
சோனியாவை அவர் சந்திக்கவில்லை என்பதாகவும்
ஒரு தகவல் கசிந்தது. நானும் அதை உறுதி செய்துவிட்டேன்.

கனி : ஆம், எனக்கு கூட தெரியும்.

நீரா : அவர் சந்திக்கவில்லை. ஆனால், உங்கள் அப்பாவை
அவர் தனியாக சந்தித்ததாகவும், டெல்லி பயணம் பற்றி
விளக்கியதாகவும், அப்போது டெல்லியில் தொடர்பில்
இருக்குமாறு அப்பா கூறியதாகவும் சொல்லக் கேட்டேன்.

கனி : இல்லை. அது தவறு. ஏனெனில், அப்பா எல்லாரையும்
அனுப்பிவிட்டு தனிமையில் சிலதை சொல்ல விரும்பினார்.
அது பற்றி அறியாத என் அம்மா, அப்பாவுக்கு டம்ளரில் மோர்
எடுத்துச் சென்று கொடுத்தார்.

முழு விவாதத்தின்போது அம்மா அங்குதான் இருந்தார். அவர்

(இரைச்சல்)…ஐ அவருக்கு கொடுக்க முயன்றார். ஏனெனில்,
அது மிகவும் முக்கிய, அங்கே நாம் இருக்க வேண்டும்,
என்ன, சரியா… இதைத் தான் அவர் சொன்னார். அவர் எதையும்

தனிமையில் சொல்லவில்லை. அமைச்சரவையில் இடம்பெற
விரும்பாத எவரும் பேச்சுவார்த்தை நடத்தலாம் என
அப்பாவிடம் இன்று சொல்லப்பட்டிருக்கிறது.

நீரா : கரெக்ட். கரெக்ட். மிகச் சரி.

கனி : அவர் (மாறன்) வெறும் பொய்களை பரப்பி வருகிறார்…

நீரா : இல்லை, அப்படித்தான் அவர் சொன்னதாத தகவல் வந்தது…

காங்கிரஸ் வட்டத்திடம் மீண்டும் பேசினேன். அமைச்சரவையில்
இடம் தருவது உறுதி, ஆனால் வேறு எதையும் சொல்லவில்லை
என்று அவர்கள் கூறினார்கள்.

கனி : பாருங்கள், தொலைத்தொடர்பை பொருத்தவரை,
நாங்கள் ராசாவுக்கு தொலைத்தொடர்பை கேட்கிறோம்.

நீரா : கரெக்ட், கரெக்ட்.

கனி : அவர்களுக்கு பிரச்னை இருந்தால், எங்களுக்கு
அவர்கள் திருப்பித் தர மாட்டார்கள்.

நீரா: அவர்கள் (காங்கிரஸ்) அதைத்தான் சொன்னார்கள்.
அதைத்தான் சொன்னார்கள். நான் தான் தொலைத்தொடர்புக்கு

பொருத்தமானவர் என்று அவர் சொல்கிறார். ஏனென்றால்,
தொழிலாளர் துறை அல்லது உரத் துறை தனக்கு வேண்டாம்
என்று அவர் சொல்லியிருக்கிறார்.

கனி : அவர் தனது இமேஜுக்கு நன்றாக இருக்காது என்பதால்
அப்படிச் சொல்கிறார்.

நீரா : அது சரி. அதுதான் சரி. அவர் அப்படித்தான்
புத்திசாலித்தனமாக அதைப் பயன்படுத்திக் கொண்டார்…
காங்கிரஸ்…

கனி: நீங்கள் கண்டிப்பாக (இரைச்சல்). நீங்கள் கண்டிப்பாக
செய்ய வேண்டும் நீரா. பாதி பிரச்னைகளை கிளப்புவதே
அவர் (மாறன்) மட்டும் தான்.

நீரா : நான் அதை செய்துவிட்டேன். ஆம். அவர் மட்டும் தான்
என இன்று காலையே எல்லாருக்கும் என் தகவலை
அனுப்பிவிட்டேன். அழகிரி எதிர்பார்ப்பு குறித்த மொத்த
விஷயங்களையும் விவரித்து விட்டேன். அவர் மக்கள் தலைவர்
என்பதை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்றும்
சொன்னேன். எந்தச் சுழலிலும், எந்தக் கட்சியாக இருந்தாலும்
மக்கள் தலைவருக்கு தான் முக்கியத்துவம் கொடுக்கப்படும்.

கனி : மிகச் சரி.

நீரா: ஆம், ஆகவே, அவர் மக்கள் தலைவர் இல்லை.
ஆகையால், அவருக்கு முக்கியத்துவம் இருக்காது, அவர்
முயற்சி செய்து வருகிறார்.

கனி : எங்களுக்கு மற்ற தேர்தல்கள் வருகின்றன (இரைச்சல்)
(0:04:06:6). அவரது அனைத்து தொண்டர்களையும் நாங்கள்
பகைத்துக் கொள்ள விரும்பவில்லை.

நீரா : ஆம், கரெக்ட்.

கனி : ஆனால், ஒன்று மட்டும் சொல்கிறேன். அவர்களிடமும்
நீங்கள் சொல்லலாம். அவர்களுக்கு திருப்தி இல்லாத
பட்சத்திலும் கூட, லாலு செய்ததை நீங்கள் செய்யலாம்.
அவருக்கு (அழகிரிக்கு) கீழே, யாருடனும் அணுகக் கூடிய,
பதிலளிக்கக் கூடிய நல்ல இணை அமைச்சரை கிடைக்கச்
செய்யலாம்.

நீரா : கரெக்ட். மிகச் சரி, முழுமையாகச் சரி. ஆம், ஆம்,
அவருடன் அவர்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை என்று
தெரிகிறது. அழகிரியுடன் அவர்களுக்கு ஒரு பிரச்னையும் இல்லை.

அவருடன் காங்கிரஸுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை.

கனி : இல்லை, இல்லை. அதுதான் பிரச்னையே. ஆனால்,
அந்த நபருக்கு தொலைத்தொடர்பு வேண்டும். அதற்காகத்தான்
அவர் வதந்திகளைப் பரப்பி வருகிறார். ஆனால், அவருக்கு

தொலைத்தொடர்பு கொடுப்பதில் திமுகவுக்கும் விருப்பம்
இல்லை என்றே நினைக்கிறேன்.

நீரா : நான் அப்படி நினைக்கவில்லை.

*****

மே 24, 2009, 09:27:31

கனி : ஹலோ.

நீரா : ஹாய். குட் மார்னிங்.

கனி : உங்களை எழுப்பியதற்கு மன்னிக்கவும்.

நீரா : இல்லை, இல்லை. (இரைச்சல்) (0:00:17) ஆம்,
சில நிமிடம் முன்பு தான் எழுந்தேன்.

கனி. நான் ஒரு விஷயத்தைத் தெரிந்துகொள்ளவே அழைத்தேன்.
அதாவது, எனக்கு என்ன ஒதுக்குவதற்கு அவர்கள் (காங்கிரஸ்)

திட்டமிட்டிருக்கிறார்கள்.?

நீரா : ம்-ம்?

கனி : எனக்கு என்ன கொடுக்க அவர்கள் திட்டமிட்டுள்ளனர்?

நீரா : நான் நேற்றிரவு உங்களிடம் சொன்னேன். நாம் பேசிய
பிறகு நான் அழைத்துப் பேசினேன். சுகாதாரத் துறை வாய்ப்பு
குறித்து கேட்டேன். சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை,
சிவில் விமானப் போக்குவரத்து. இந்த மூன்று துறை தான்
சொன்னேன். வேறு என்ன அங்கே இருக்கிறது. ஆகையால்,
அவர்களுக்கு உறுதியாக தெரியவில்லை. (இரைச்சல்)
(0:00:52) தகவலை அனுப்புங்கள். அவர்கள் உங்களிடம்
பேசுவார்கள். அவர்களுக்கு..

கனி : சுற்றுலாத் துறை கூட மதிப்பு மிக்கது தானே.

நீரா : அது தனிப் பொறுப்பு. அதை உங்களிடம் கொடுக்க
மாட்டார்கள். குலாம் நபி ஆசாத்துக்கு இன்னும்
ஒதுக்கப்படவில்லை. அவரிடம் நாடாளுமன்ற விவகாரம்
மட்டும்தான் இருக்கிறது, தெரியுமா.

கனி : ஓகே.

நீரா : அதைத் தவிர எம்.பி.க்கு அதிகமாக அவர்கள்
தரமாட்டார்கள்.

கனி : சரி.

நீரா : அதனால் தான் சுற்றுலாத் துறையைக் குறிப்பிட்டேன்.

கனி : சரி

நீரா : அவர்கள் முன்வருவார்களா என்று… (இரைச்சல்) (0:01:22)
ஏனென்றால், சுற்றுலாவும் கலாசாரமும் ஒன்றாக இருந்தால்..

கனி : ஆம்.

நீரா : இது இரண்டும் (இரைச்சல்) (0:01:35) உங்களுக்கு விருப்பம்
இருந்தால் அவர்களிடம் இப்போது சொல்லுங்களேன். ஆனால்,
அவர்களிடம் நான் தெரிவிக்கவில்லை…

கனி : இல்லை, இல்லை, நான் ஒரு பட்டியல் அவர்களிடம்

கொடுத்துள்ளேன்…

நீரா : பட்டியலை ஏன் கொடுத்தீர்கள், அவர்களிடம்
என்ன சொன்னீர்கள்?

கனி : நான் சுற்றுச்சூழல், சுகாதாரம், சுற்றுலா மற்றும்
கலாசாரம் மட்டும் தான் குறிப்பிட்டிருந்தேன். அவர்கள்
பார்ப்பதாகச் சொன்னார்கள்.

நீரா : ம்-ம்.

கனி : சுற்றுச்சூழலை நான் கேட்டாலும், அவர்கள்
சுற்றுச்சூழலைத் தரமாட்டார்கள், சுகாதாரமும் கொடுக்க
மாட்டார்கள் தெரியுமா.

நீரா : சுகாதாரத்தை ஏற்கெனவே அவர்கள் ஒதுக்கிவிட்டார்கள்.
அப்படித்தான் நான் உணர்கிறேன்.

கனி : சுற்றுச்சூழல் தருவார்களா, உங்களுக்குத் தெரியுமா?

நீரா : தனிப் பொறுப்பு? ஆமாம், இன்று காலை தான்
பட்டியலைக் கொடுத்தீர்கள் இல்லையா.

கனி : ஆம், பட்டியலை கொடுத்தேன்.

நீரா : சிவில் விமானப் போக்குவரத்தை நீங்கள்
குறிப்பிடவில்லையா, கனி.

கனி : உங்களுக்கு தெரியுமா, சிவில் விமானப் போக்குவரத்து
கிடைத்தாலும் பரவாயில்லை.

நீரா : ம்-ம். ம்-ம். வேறு ஏதாவது சொன்னார்களா?

கனி : ஒன்றுமில்லை. அவர்கள் மீண்டும் வந்து சொல்வதாகச்

சொன்னார்கள்.

நீரா : அவர்களால் என்ன தர முடியும்?

கனி : சரி, சரி, பார்ப்போம்.

————————————–
கனிமொழி நடத்திய கூறியவற்றில் முக்கிய அம்சங்கள்….!!!

ராசாவுக்குத் தான் தொலைதொடர்புத்துறை மீண்டும்
தரப்பட வேண்டும்…

மு.க.அழகிரி படித்தவர் இல்லையென்றாலும் கூட
மக்கள் தலைவர்… தகுந்த துணை அமைச்சரை கூடவே போட்டு,
சரிசெய்து கொள்ளலாம்.

தயாநிதி மாறனுக்கு அமைச்சர் பதவியே கொடுக்கக்கூடாது.

தனக்கு(கனிமொழி) எந்த அமைச்சரவை கொடுத்தாலும் சரி…..

——————————————

யார் இந்த நீரா ராடியா…?
அவருடன் கனிமொழி பேசியதற்கு ஏன் இவ்வளவு
முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும்….?

ஆ.ராசாவுக்குத்தான் தொலைதொடர்பு அமைச்சர் பதவி
மீண்டும் கொடுக்கப்பட வேண்டும் என்று திருமதி கனிமொழி
திரும்பத் திரும்ப வற்புறுத்தி, சிபாரிசு செய்வது ஏன்…?

யோசித்தால் புரியும்…..!!!

அடுத்தடுத்த இடுகைகளை தொடர்ந்து படித்தால் தெரியும்…!!!
————————————————————–

தொடரும் ……

.
—————————————————————————————————-

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

2 Responses to நீரா ராடியா என்கிற உத்தமப் பெண்மணி -(அத்தியாயம் -9) – அரிச்சந்திர புத்ரனின் ….

  1. bandhu சொல்கிறார்:

    இந்த வழக்கில் பெரிய அதிசயம் என்னவென்றால், தனித்தனியாக ஆதாரமுள்ள நீங்கள் தொகுத்தளிக்கும் தகவல்களை படித்தாலே ஊழல் எப்படி நடந்தது எவ்வளவு பணம் கை மாறி இருக்கும் யார் யாருக்கு இதில் பங்கு யார் சூத்திரதாரி என்பது தெளிவாக தெரிகிறது.

    ஆனாலும் ஆதாரம் கிடைக்கவில்லை என்பதால் வெறுத்துப் போய் எல்லோரையும் விடுதலை செய்கிறார் நீதிபதி என்றால் எந்த அளவு நீதிமன்றம் பின் தங்கி இருக்கிறது என்று நம்ப முடியவில்லை! அவர்கள் பணம் வாங்கும்போது எடுக்கப்பட்ட புகைப்படம், cctv பதிவு போன்றவை கிடைத்தால் மட்டுமே ஆதாரமாக எடுத்துக்கொள்வார்களோ என்னவோ!

  2. பிங்குபாக்: 9 வருடத்தில் 900 கோடி பண்ணிய நீரா ராடியா -( அத்தியாயம் -10 ) – அரிச்சந்திர புத்ரனின் …. | வி ம ரி ச ன ம் R

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.