வாங்கியது லஞ்சமா – கடனா ?கலைஞர் டிவி+கனிமொழி -(அத்தியாயம் -8) – அரிச்சந்திர புத்ரனின் ….

….
….


….

வாங்கியது கடன் –
வட்டியுடன் சேர்த்து திரும்பக் கொடுத்தாகி விட்டது !
பிறகு லஞ்சம் எங்கே – ஊழல் எங்கே ?

48 பக்க குற்றச்சாட்டை சிபிஐ கோர்ட்டில் தாக்கல்
செய்த பிறகும் வரும் குற்றம் சாட்டப்பட்டவர்களிடமிருந்து
வந்த வார்த்தை இது.

கலைஞர் டிவி + திருமதி கனிமொழி – 2-ஜி-யில் கிடைத்தது என்ன…? (அத்தியாயம் -7) -அரிச்சந்திர புத்ரனின் கிசு-கிசு –

சிபிஐ குற்றச்சாட்டுகளின் சாரம் –

தொலைக்காட்சிக்கு தரப்பட்ட 200+ கோடி கடன் அல்ல –

2ஜி அலைக்கற்றை கிடைக்கச்செய்ததற்காக டிபி ரியல்டி
நிறுவனத்தால் ராசாவிற்கு கொடுக்கப்பட வேண்டிய
லஞ்சப்பணத்தின் ஒரு பகுதி, அவரது ஆலோசனைப்படி
அவரது கூட்டாளி(கனிமொழி)யின் தொலைக்காட்சி
நிறுவனத்திற்கு –

டிசம்பர் 2008க்கும் ஆகஸ்டு 2009க்கும்
இடைப்பட்ட காலகட்டத்தில் கொடுக்கப்பட்டது –
என்று கூறி இதற்கு ஆதாரமாக 14 வித சான்றுகளையும்
காட்டியுள்ளது சிபிஐ.

அதன்படி கலைஞர் டிவி துவங்கப்பட்டது 2007ல்.
அதன் மொத்த மதிப்பு ரூபாய் 10 கோடியே ஒரு லட்சம்.

இதில் திருமதி கனிமொழியின் பங்கு 20% (அதாவது 2 கோடி)
கலைஞரின் துணைவி தயாளு அம்மையாரின் பங்கு
60 % (அதாவது 6 கோடி). நிர்வாகி சரத்குமாரின் பங்கு
20% (அதாவது 2 கோடி).

இந்த டிவி நிறுவனத்தின் 2008-2009ஆம் ஆண்டுக்கான
மொத்த வரவு-செலவுத் தொகையே (டர்ன் ஓவர் )
47 கோடியே 54 லட்சம் தான்.

இந்த நிலையில் கலைஞர் டிவிக்கு டிபி ரியல்டியால்
சுற்றி வளைத்து வெவ்வேறு நிறுவனங்கள் மூலம்,
ராசாவின் யோசனைப்படி கொடுக்கப்பட்ட 200+ கோடி ரூபாயை

கலைஞர் டிவி நிறுவனத்தின் 30 % பங்குகளை
(அதாவது 3 கோடி ரூபாய் பெறுமானம் உள்ள பங்குகளை)
வாங்குவதற்காக கொடுக்கப்பட்ட முன்பணம் என்று
கூறுவது அண்டப் புளுகா… ஆகாசப்புளுகா…?

3 கோடி ரூபாய் மதிப்புள்ள பங்குகளை வாங்க
200+ கோடி ரூபாய் அட்வான்சாம்… அதுவும்
எந்தவித ஒப்பந்தமும் இல்லாமல்…!!!

அதே போல் பங்கு விலை பேரம் ஒத்து வராததால் –
இந்த பணப்பரிமாற்றம் பின்னர் கடனாகக் கருதப்பட்டு
வட்டியுடன் திரும்பக்கொடுக்கப்பட்டது என்கிற வாதமும்
ஏற்கக்கூடியதல்ல. ஏனெனில் இது கடன் என்று கூறப்பட
ஆரம்பித்தது ராஜா மீது சிபிஐ நடவடிக்கைகள்
துவங்கிய பிறகு தான்.

ராஜா மீது 2010 டிசம்பர் 24ஆம் தேதி சிபிஐ
நடவடிக்கையைத் துவங்கிய பிறகே இந்த பணம் கடன்
என்று கூறப்பட்டு, திரும்பக் கொடுக்க ஆரம்பிக்கப்பட்டது.

2011 ஜனவரி – 24-ம் தேதி 65 கோடி ரூபாயும்,
2011 ஜனவரி 29-ம் தேதி 25 கோடியும்,
2011 பிப்ரவரி 2-ம் தேதி 50 கோடியும்
திரும்பக் கொடுக்கப்பட்டது.
மிச்சம் மீதி – சிமெண்ட்/ கிரிக்கெட் கடவுள் மூலம்
பின்னால் கொடுக்கப்பட்டது…

இந்த கால கட்டத்தில் தான் ராஜாவின் கைது நடவடிக்கைகள்
பற்றி மீடியாவில் பெரிய அளவில் செய்திகள் வர ஆரம்பித்தன !

மேலும் இவ்வளவு பெரிய பணப்பரிமாற்றம் ஏற்பட்டதற்கு
ஆதாரமாக, சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு இடையே
ஒப்பந்தங்கள் எதுவும் செய்து கொண்டதற்கான
ஆதாரங்கள் எதுவும் இல்லை.

இவ்வளவு பெரிய தொகையை கடன் கொடுக்க
எந்த வித உத்தரவாதமும்
(தகுந்த ஜாமீன் -அடமானம் போன்றவை)
கொடுக்கப்படவில்லை.

இன்னும் சில நெருடலான விஷயங்கள் –

கலைஞர் டிவிக்கு கிடைத்த 200+ கோடி ரூபாய் பணம்
எப்படி, யாரால், எந்த விதத்தில் – பயன்படுத்தப்பட்டது
என்பது பற்றிய விவரங்கள் இல்லை.

அதே போல் – கடன் என்று சொல்லி வாங்கிய பணத்தை
திரும்பக் கொடுக்கும்போது கலைஞர் டிவிக்கு –
இந்தப் பணத்தை அஞ்சுகம் பிலிம்ஸ் என்கிற
நிறுவனம் கொடுத்து உதவியுள்ளது.

இந்த அஞ்சுகம் பிலிம்ஸ் எப்படி உள்ளே வந்தது ?
யார் இதன் உரிமையாளர்கள் ?
கலைஞர் டிவிக்கும்
அஞ்சுகம் பிலிம்ஸுக்கும் உள்ள தொடர்பு என்ன ?

அந்த நிறுவனத்திடம் இவ்வளவு பணம் எப்படி வந்தது ?
அந்த நிறுவனம் கடந்த 20 ஆண்டுகளில் படம் எதுவும்
எடுத்ததாகத் தெரியவில்லையே – திடீரென்று வந்தது எப்படி ?
இப்போது அஞ்சுகம் பிலிம்ஸ்
கலைஞர் டிவிக்கு கொடுத்திருக்கும்
பணம் கடனா ? இல்லை தானமா ?

இவ்வளவு முக்கியமான கேள்வி எழுகிறது. ஆனால்,
சாமர்த்தியமாக திசை திருப்பி விட்டார்கள்.

ஒரு எதார்த்தமான கேள்வி –
கலைஞரின் பெயருக்கு ஒரு விளம்பர மதிப்பு இருக்கிறது.
எனவே அவரது மனைவியும், மகளும் 10 கோடி ரூபாய்
முதல் போட்டு அவர் பெயரில் ஒரு கம்பெனி
துவங்குகிறார்கள்.

கம்பெனியின் வியாபாரத்திற்கு கலைஞரின் பெயர்
பயன்படுத்தப்படுவதாலும், சம்பந்தப்பட்டவர்கள்
அவரது மனைவியும் மகளும் என்பதாலும்
அவர் நிச்சயம் அதன் நடவடிக்கைகளை கவனித்துக் கொண்டு
தானே வருவார் …?

அந்த நிலையில், கலைஞருக்கு தெரியாமல்
அவரது மனைவியும் மகளும் அந்த 10 கோடி ரூபாய்
கம்பெனிக்காக 200+ கோடி ரூபாய் கடன் வாங்கினார்கள்
என்றால் அதை நீங்கள் யாராவது நம்புவீர்களா ?

கலைஞரின் மனைவியும், மகளும் வாங்கிய 200+ கோடி
பற்றிய விவரமே கலைஞருக்குத் தெரியாது என்று
யாராவது சொன்னால் – அது அரிச்சந்திரனாகவே
இருந்தாலும் – நீங்கள் நம்புவீர்களா…?

ஒன்றாகவே, ஒரே வீட்டில் வசித்து வந்தாலும் –
என் மனைவியோ மகளோ கோடிக்கணக்கில் பணம்
சம்பாதித்தாலோ, கடன் வாங்கினாலோ அதற்கும்
எனக்கும் எந்தவித சம்பந்தமும் கிடையாது என்று
சொன்னால் நம்புவீர்களா ?

ஆனால் கலைஞர் அதைத்தானே சொன்னார்…?

ஆங்கிலம் எழுதப்படிக்கத் தெரியாத வயது முதிர்ந்த
மனைவியை ஒரு தொலைக்காட்சி நிறுவனத்தில்
60% பங்குதாரராக்க நடந்த ஒரு முயற்சிக்கு கலைஞர்
கருணாநிதி எப்படி ஒப்பினார்…?

கலைஞர் மட்டுமா…?
அதே வீட்டில் இருந்துகொண்டு, திமுகவில் 2-ம் இடத்தில்
இருந்துகொண்டு, ஊர் வலம் வந்துகொண்டிருந்த
மகனும் கூட அல்லவா ஒன்றுமே அறியாதவராக
நடிக்கிறார்…? அப்பாவிற்கு இருக்கும் அதே பொறுப்பு,
உடனிருக்கும் பிள்ளைக்கும் இருக்கிறதல்லவா…?

இன்றும் கூட, சுயநினைவு இல்லாமல் இருக்கும் தன்
அன்னையின் 60 சதவீத பங்குகளைக் கொண்ட கலைஞர் டிவி
எப்படி இயங்குகிறது என்று கூட அறியாதவர் போலவே
இயங்கிக் கொண்டிருக்கிறாரே – இன்றைய திமுக தலைவர்,
நாளைய முதல்வர்…!!!

அவருக்கு இதில் பொறுப்பு இல்லையா ?
தன்னுடைய அம்மாவின் நிறுவனத்தில், தங்கை 200+ கோடி
ரூபாயை கடன் வாங்குவது இவருக்கு தெரியாமலா
இருந்திருக்கும்…..?

அரிச்சந்திர புத்ரன், இந்த 200+ கோடி ரூபாயை யாருக்காக
கொடுத்தார்…? திருமதி கனிமொழிக்காக மட்டும் தானா…?
அவரது அப்பாவுக்கும், அண்ணனுக்கும் சேர்த்து இல்லையா…?

அன்று அந்தப் பணத்தை வாங்காமல் இருந்திருந்தால் –
இன்று அரிச்சந்திர புத்ரன், அறிவாலயத்திலேயே உட்கார்ந்து
கொண்டு போடும் ஆட்டங்களையெல்லாம் பார்த்து,
சகித்துக் கொண்டிருக்க வேண்டிய பரிதாபம் ஏற்பட்டிருக்காதே…!

திருவாளர் ஸ்டாலின் இப்போது ராசா சொல்லும், செய்யும்
எதையாவது கண்ட்ரோல் செய்யும் நிலையில் இருக்கிறாரா…?
இல்லையென்றால், அதன் காரணம் என்ன ….?
2ஜி பாவத்தில் அவருக்கும் உள்ள பங்கு தானே…?

—————–
தொடரும்…

.
—————————————————————————————————————————–

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

3 Responses to வாங்கியது லஞ்சமா – கடனா ?கலைஞர் டிவி+கனிமொழி -(அத்தியாயம் -8) – அரிச்சந்திர புத்ரனின் ….

 1. Mani balan சொல்கிறார்:

  திமுக காரனுங்க திருடனுங்க ரவுடிங்க என்பது உண்மையே!

  ஆனால் அவர்கள் மட்டுமே அப்படி என்பது போல, அதையே தினம் தினம் அரைத்து ஊற்றும் உங்களின் கடும் வெறி உங்களுக்கே குமட்டல் தரவில்லையா?

  குரூர நாஜிகளிடம் சிக்கி இந்த நாடு உள்நாட்டு போரை நோக்கி போகிறது என்கிற அக்கறையோ நாட்டுப்பற்றோ காணாமல் போய் விட்டது போல…

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


   மணி பாலன்,

   நான் பாஜகவை எதிர்த்து எழுதவில்லையே
   என்பது உங்கள் கேள்வியா அல்லது
   திமுக தலைவர் குடும்பம் செய்த ஊழல்களை
   நினைவுபடுத்துவதை தடுப்பது உங்கள்
   நோக்கமா…. ?

   பாஜகவைப் பற்றி நான் தொடர்ந்து
   எழுதிக்கொண்டு தான் இருக்கிறேன் என்பது
   இந்த தளத்தின் வாசக நண்பர்கள்
   அனைவருக்குமே தெரிந்த விஷயம்.

   எனவே, திமுக-வின் ஊழல் கதைகளை
   இங்கே தொடர்ந்து எழுதக்கூடாது என்பது
   தான் உங்கள் நோக்கமோ ?

   நான் எழுதுவதை எதிர்ப்பதற்கு பதிலாக,
   நான் இங்கே தொகுத்து தரும் செய்திகளில்
   எதாவது உண்மைக்கு மாறாக இருப்பின்
   நீங்கள் தாராளமாக தெரிவிக்கலாம்.
   அது உங்கள் நோக்கத்தை ஓரளவு
   நிறைவேற்றக்கூடும்…!

   .
   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

 2. GOP{I சொல்கிறார்:

  Mani balan
  //ஆனால் அவர்கள் மட்டுமே அப்படி என்பது போல,
  அதையே தினம் தினம் அரைத்து ஊற்றும்
  உங்களின் கடும் வெறி உங்களுக்கே குமட்டல்
  தரவில்லையா?//
  கே.எம்.சார் மாதத்தில் பாதி நாட்கள்
  பாஜகவை துவைத்து தொங்கப்போடுவது
  எதுவும் உங்கள் கண்களுக்குப் புலப்படாதது ஏன்?
  அவர் இந்த தொடரில் தொட்டிருக்கும்
  விஷயங்கள் உங்கள் தானைத்தலைவரின்
  மானத்தை வாங்குவது போல் இருப்பது தானே
  காரணம் ? தந்தை, மகள், மகன் என்று குடும்பம்
  முழுவதுமே ஊழலில் சிக்கித்திளைத்த
  சமாச்சாரங்கள் எல்லாம் வெளிவருவதை
  பொறுத்துக் கொள்ள முடியவில்லையா
  உங்களால். தொடரில் வரும் எந்த
  விஷயத்தையாவது மறுக்க முடியுமா
  உங்களால் ?
  ராசா உத்தமர் போல் சவால் விட்டதை
  கண்டிக்காத நீங்கள், தொடர் தொடர்வதை கண்டு
  மட்டும் ஏன் ?

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.