….
….
….
3 நாட்களுக்கு முன் தினமலர் நாளிதழில் பார்த்த
ஒரு செய்தியிலிருந்து –
—————————————————–
………….
மதுரை: ‘ பிரதமரின் திட்டங்களை ஏழைகளிடம் கொண்டு
சேர்க்கும் எங்கள் அமைப்பில் 22 லட்சம் உறுப்பினர்கள்
உள்ளனர். மேலும் பல உறுப்பினர்களை சேர்க்கவுள்ளோம்
என, மதுரையில் பிரதமர் மோடியின் சகோதரரும்,
பிரதான் மந்திரி ஜன் கல்யாண்கரி யோஜ்னா அமைப்பின்
தேசிய தலைவருமான பிரகலாத் மோடி தெரிவித்தார்.
——————————————————
இரண்டு விஷயங்கள்….
1) பாஜக குடும்பக்கட்சி அல்ல என்று எல்லாரும்
சொல்லி வருகின்ற சமயத்தில்
பிரதமரின் தமையனாரும் பாஜகவில் ஒரு
முக்கியமான பதவியில் இருக்கிறார் ….
என்று வேலைமெனக்கெட்டு ஒரு செய்தியை
தினமலர் வெளியிட்டிருக்கிறது…
தினமலருக்கு ஏன் இந்த வேண்டாத வேலை…?
2) “ஜன் கல்யாண்கரி யோஜ்னா’ என்று ஒரு
திட்டத்தைப்பற்றி பேசுகிறார்கள்…
“ஜன் கல்யாண்கரி” என்றால் என்ன அர்த்தம்…?
“எல்லா ஜனங்களுக்கும்
கல்யாணம் பண்ணி வைப்போம்” என்றா…?
-“கல்யாண்” என்றால் கல்யாணம்.
“கரி” என்றால் “செய்வோம்” என்று தானே அர்த்தம்…???
அப்படியானால், ஏற்கெனவே கல்யாணம் ஆனவர்களை
இதில் சேர்க்க மாட்டார்களா…??? !!!
————————————-
பின் குறிப்பு- பாஜக நண்பர்கள் இதை சீரியசாக
எடுத்துக் கொள்ள வேண்டாம்… சும்மா ஜோக் தான்.
திட்டங்களுக்கு உருப்படியாக எல்லாருக்கும் புரியும்படி
பெயர் வையுங்கள் என்று தலையாய் அடித்துக் கொள்கிறோம்..
கேட்டால் தானே….? கறீ, கூட்டு, பொரியல் என்றெல்லாம்
பெயர் வைத்தால் – இப்படித்தானே அனர்த்தமாக
புரிந்துகொள்வார்கள்.
நீங்களாவது உங்கள் “தலை”களிடம் யிடம் கொஞ்சம்
சொல்லக்கூடாதா…? இந்த தலை’கள் இந்த மாதிரியே
ஹிந்தி வெறி பிடித்து போய்க்கொண்டிருந்தால்,
நீங்கள் எல்லாம் எந்நாளில் இங்கே ‘கால்’ ஊன்றுவது….?
.
———————————————————————————————————-
” பாஜக குடும்பக்கட்சி அல்ல என்று எல்லாரும்
சொல்லி வருகின்ற சமயத்தில் ”
oorukku dhaan ubathesam; unakku illaiyadi penney !