கலைஞர் டிவி + திருமதி கனிமொழி – 2-ஜி-யில் கிடைத்தது என்ன…? (அத்தியாயம் -7) -அரிச்சந்திர புத்ரனின் கிசு-கிசு –

….
….


….

2-ஜி ஏலம் முடிந்த அதே நேரத்தில்…
கலைஞர் தொலைக்காட்சியின் அக்கவுண்டில் 200+ கோடி ரூபாய்
மொத்தமாக வந்து விழுகிறது.

அதுவும் யாரிடம் இருந்து?
எந்த நிறுவனங்கள் 2ஜி அலைக்கற்றையை ஏலம் எடுத்ததோ…
அந்த நிறுவனங்களிடம் இருந்து வருகிறது. எந்தவிதமான
வியாபார ஒப்பந்தமும் இல்லாமல் 200+ கோடி ரூபாய்
பணத்தை 23 டிசம்பர் 2008-ல் கலைஞர் தொலைக்காட்சியில்
சினியூக் நிறுவனம் முதலீடு செய்கிறது. கலைஞர்
தொலைக்காட்சியின் முதலீடு செய்த சினியூக் நிறுவனத்துக்கு
அவ்வளவு பணம் எங்கிருந்து வந்தது என தேடிப்பார்த்தால்…

(அத்தியாயம் -6) – அரிச்சந்திர புத்ரனின் கிசு-கிசு -ராசாவின் முடிவுக்கென்ன காரணம்….?

டைனமிக்ஸ் ரியலிட்டி, குஷேகான் புருட்ஸ் என்ற
நிறுவனங்களிடம் இருந்து வந்தது தெரிந்தது.
டைனமிக்ஸ் ரியாலிட்டிக்கு அவ்வளவு பணம் எங்கிருந்து
வந்தது என்று தேடிப்பார்த்தால்… அந்த நிறுவனத்துக்கு
டி.பி ரியாலிட்டி என்ற நிறுவனத்திடம் இருந்து வந்தது
தெரிந்தது.

டி.பி.ரியாலிட்டி யாருடைய நிறுவனம் என்று பார்த்தால்,
அது ஸ்வான் டெலிகாம் நிறுவத்தினத்தின் ஒரு அங்கம்
என்பது புரிந்தது. ஸ்வான் டெலிகாம் நிறுவனம் யாரென்று
பார்த்தால்…

மத்திய அமைச்சர் ராசா மூலம், 2ஜி அலைக்கற்றையை
வாங்கி, வெளிநாட்டு நிறுவனத்துக்கு கைமாற்றிவிட்டதில்
லம்ப்பாக சம்பாதித்த நிறுவனம்தான் அது.

ஆக, ஸ்வான் டெலிகாம் நிறுவனம்,
2ஜி விற்பனையில் கிடைத்த லாபத்தில்,
200+ கோடி ரூபாயை கலைஞர் தொலைக்காட்சிக்கு
கொடுத்துள்ளது என்கிற தகவல் வெளியானது;

அலைக்கற்றையை தங்களுக்கே கிடைக்கும்படி செய்த
அரிச்சந்திர புத்ரன் செய்த உதவிக்காக, அந்த நிறுவனம்
அவர் கை காட்டியவர்களுக்கு பணம் அனுப்பி
இந்த பதில் மரியாதையை செலுத்தியுள்ளது என்று
குற்றம் சாட்டப்பட்டது.

தலைவருக்கும், அவரது மகளுக்கும் பங்கு கொடுத்து விட்டால்,
அவர்களையும் இதில் ஈடுபட வைத்து விட்டால்,
எதிர்காலத்தில் உதவியாக இருக்குமல்லவா…?
எப்பேற்பட்ட யோசனைகள், ஏற்பாடுகள்…?
யாருக்கு வரும் இந்த சாமர்த்தியம்…?
——————

……………….

02/04/2011 அன்று சிபிஐ –
கோர்ட்டில் 2ஜி ஸ்பெக்ட்ரம் தொடர்பான முதல்
குற்றச்சாட்டை (சார்ஜ் ஷீட்) பதிவு செய்தது.

The chargesheet states:

“Dynamix Realty, a partnership firm of
DB Realty, paid Rs 200 crore to
Kalaignar TV from December 2008
to August 2009, following a
circuitous route through
Kusegaon Fruits & Vegetables
Pvt Ltd (a DB Group company) and
Cineyug Films Pvt Ltd….

————–
டிபி ரியல்டி நிறுவனத்தின் இன்னொரு
பிரிவு தான் (தொலை தொடர்பு
பிரிவு நிறுவனம்) ராசாவால் முறைகேடாக
2ஜி அலைக்கற்றை அளிக்கப்பட்டதாகச் சொல்லப்படும்
ஸ்வான் நிறுவனம்.

தொலை தொடர்பு துறையில்
எந்தவித முன் அனுபவமும் இல்லாத
இந்த ஸ்வான் நிறுவனம் 1600 கோடி ரூபாய்க்கு
2ஜி அலைக்கற்றையை வாங்கி விட்டு

– உடனடியாக

அதில் 45 % பங்கை மட்டுமே 4500 கோடிக்கு
துபாயைச் சேர்ந்த எடிசலாட் என்கிற ஒரு
நிறுவனத்திற்கு விற்று கொள்ளை லாபம்
சம்பாதித்தது.

இந்த நிலையில் சினியுக் நிறுவனம் மூலமாக
டிபி ரியல்டார் ( ஸ்வான் நிறுவனம் )
எதற்காக கலைஞர் தொலைக்காட்சிக்கு இந்த அளவு
பணம் கொடுக்க வேண்டும் என்று நடத்தப்பட்ட
விசாரணையில் குற்றம் சாட்டப்பட்டவர்களின் சார்பாக –

முதலில் சொல்லப்பட்ட காரணங்களில் ஒன்று –
கலைஞர் தொலைக்காட்சியில் 30 % பங்கு
வாங்குவதற்காக இந்தப் பணம் அட்வான்சாக கொடுக்கப்பட்டது.

சொல்லப்பட்ட மற்றோர் காரணம் –
பங்கு வாங்கும் விவகாரம்/பேரம் சரிவர ஒத்து வராததால்
பிற்பாடு, இந்தப் பணம் கடனாகக் தந்ததாக கருதப்பட்டு
வட்டியுடன் திரும்பத் தரப்பட்டு விட்டதாகவும்
சம்பந்தப்பட்டவர்களால் கூறப்பட்டது.

(எப்போது திருப்பித் தரப்பட்டது என்பது கேள்விக்குறியானது…!!!)

கலைஞர் தொலைக்காட்சி உண்மையில் யாருக்கு சொந்தமானது …?

60 % பங்கு தயாளு அம்மாளுடையது.
20 % பங்கு கனிமொழியுடையது.
20 % பங்கு கலைஞர் தொலைக்காட்சியின்
சியிஓ சரத்குமாருடையது !

——
ராஜீவ் அகர்வால் என்பவருக்கு ஜாமீன் கொடுப்பது பற்றி
சிபிஐ கோர்ட்டில் வாதாடும்போது, முக்கியத்துவம்
கொடுக்கப்படாமல், சந்தடி சாக்கில் சிபிஐ யால்
வெளியிடப்பட்ட செய்தி ஒன்று –

“கலைஞர் டிவிக்கு 214 கோடி கொடுத்தது சம்பந்தமான –
ஒப்பந்தத்தை காணோம் !”

04/04/2011 அன்று, சிபிஐ, 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் பற்றி
விசாரித்து வரும் நீதிமன்றத்தில் ஒரு விசித்திரமான
தகவலைத் தந்தது.

டிசம்பர் 19, 2008 அன்று செய்துகொண்டதாகச் சொல்லப்படும்
ஒப்பந்தப்படி, டிபி ரியல்டி நிறுவனத்திலிருந்து கலைஞர் டிவிக்கு –
டிசம்பர் 2008 க்கும் -ஆகஸ்டு 2009 க்கும்
இடைப்பட்ட காலத்தில் சுமார் 200 கோடி ரூபாய் பரிமாற்றம்
செய்யப்பட்டுள்ளது.

இந்த கொடுக்கல் -வாங்கல் நிகழ்ந்தது எப்போது….?

சிபிஐ 2ஜி வழக்கில் FIR – (முதல் தகவல் அறிக்கை)
பதிவு செய்த நாளான அக்டோபர் 21, 2009 தேதிக்கு முன்னர்.

(அதாவது சிபிஐ 2 ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தை தீவிரமாக
விசாரிக்க ஆரம்பிப்பதற்கு முன்னர்…)

வழக்கு (எப்.ஐ.ஆர்) பதிவு செய்யப்பட்டு 3 மாதங்களுக்குப் பின்னர்,
அதாவது -ஜனவரி 27,2010 அன்று தான் (2ஜி வழக்கில் தீவிரமாக
விசாரிக்கும்போது, இந்த பரிவர்த்தனையும் சிக்கும் என்பதால்…)

இந்த பணப்பறிமாற்றத்தை கடனாகக் கருதுவது என்று
மற்றொரு ஒப்பந்தம் போட்டுக்கொள்ளப்பட்டதாம் !

ஜனவரி 27,2010ல் கடனாகக் கருதுவது என்று போடப்பட்டுள்ள
ஒப்பந்தம் கிடைத்துள்ள நிலையில்,
பங்கு வாங்க அட்வான்ஸ் என்று முதலில் போடப்பட்டதாக
சொல்லப்படும் டிசம்பர் 19, 2008 தேதியிட்ட
ஒப்பந்தத்தை காணவில்லையாம் !

அதாவது, 200+ கோடி ரூபாய் பரிமாற்றம் செய்யப்படுவதற்கு
முன்னால் போடப்பட்டதாகச் சொல்லப்படும் ஒப்பந்தம் சிபிஐ
வசம் கிடைக்கவில்லையாம் !

( அப்படி ஒரு ஒப்பந்தம் போடப்பட்டிருந்தால் தானே
கிடைப்பதற்கு என்கிறீர்களா ? )

கொடுக்கப்பட்ட 200+ கோடி பணம் உண்மையில் கடனா –
அல்லது லஞ்சத்தில் பங்கா ….?

விவரங்கள் அடுத்த அத்தியாயத்தில் –

—————
தொடரும் ….

.
—————————————————————————————————————————–

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

6 Responses to கலைஞர் டிவி + திருமதி கனிமொழி – 2-ஜி-யில் கிடைத்தது என்ன…? (அத்தியாயம் -7) -அரிச்சந்திர புத்ரனின் கிசு-கிசு –

 1. vellaivaranan thirugnanasambandan சொல்கிறார்:

  mr raja and ms kanimozhi are 100% culprits.both dmk and admk are worst in scams, illegal money making.

 2. புதியவன் சொல்கிறார்:

  பழையவற்றை நினைவுபடுத்துவது தப்பாச்சே…. அவசர அவசரமாக பல டாகுமெண்டுகள் கிழித்தெறியப்பட்டன, அறிவாலயத்தில் என்றெல்லாம் அப்போது புலனாய்வுப் பத்திரிகைகள் செய்திகள் வெளியிட்டனவே…

  நம் அதிகார அமைப்புகள், நீதி மன்றங்கள் நியாயமாக நடந்துகொண்டார்களா? 60% வைத்திருந்த தயாளு அம்மையாருக்கு திகார் ஜெயிலைக் காண்பிக்க வில்லையே. நியாயமா? 220 கோடி லஞ்சம் பெற்றதை அப்படியே கிடப்பில் போட்டது தவறா இல்லையா? லாலு பிரசாத்தைப் போல ஆயிரம் மடங்கு கொள்ளையடித்த கருணாநிதி கும்பலை விட்டுவைத்தது நியாயமா?

 3. புதியவன் சொல்கிறார்:

  //எடப்பாடி பழனிசாமி முதல்வர் வேட்பாளரா? பாஜக தேசிய தலைமையே முடிவு செய்யும்.. எல் முருகன் பேட்டி//

  //நேர்மைதான் எனது கொள்கை – கமல்//

  இன்று காலைல இந்த இரண்டு செய்திகளைப் பார்த்ததும் நான் அடைந்த கோபத்துக்கு எல்லையே இல்லை…. பாருங்க நம்ம தமிழ்நாட்டு நிலைமையை.
  2 சதவிகிதம் வாக்கு கூட இல்லாத (அல்லது நிரூபிக்காத) பாஜக, தங்கள் தலைமை யார் தமிழக முதலமைச்சர் என்று முடிவு செய்யுமாம். நான் எடப்பாடி இடத்தில் இருந்தால், பாஜகவை கூட்டணியிலேயே சேர்க்கமாட்டேன்.

  அடுத்து கமல். சொந்த வாழ்க்கையை ஒழுங்காக நடத்தாதவர், தன் ராஜ்கமல் பிலிம்ஸ் கம்பெனியை ஒழுங்காக நடத்தாதவர், ராயப்பேட்டை பெனெஃபிட் பண்ட் போண்டியாக காரணமாக இருந்தவர், பிக் பாஸ்/அதன் வருமானம் , விளம்பர வருமானம் என்று பலவித டூபியஸ் டீல்களில் இருப்பதாக செய்திகளில் அடிபட்டவர்…. தமிழகத்துக்கு நேர்மையைப் பரிசளிக்கப்போகிறாராம்.

  இதுக்கு இடைல ஸ்டாலின் வேறு…. ‘ஊழல் செய்யும் அரசு…லஞ்சம்’ என்றெல்லாம் கொஞ்சம்கூட வெட்கம் இல்லாமல் பேசுகிறார். ஊழலில் அவர்களை மிஞ்சி இனி ஒருவர் பிறக்க முடியுமா? 220 கோடி லஞ்சப் பணம் யார் பெற்றுக்கொண்டார்கள் என்பதெல்லாம் வெளியில் இனி வராது என்ற நினைப்பா?

  ‘நாராயணா…இந்தக் கொசுக்கள் தொல்லை தாங்க முடியலப்பா’ என்ற கவுண்டமணி ஜோக்தான் நினைவுக்கு வருது.

  நடப்பு அரசியலை ஒரு இடுகையில் தாளிக்க மறந்துவிடாதீர்கள்.

 4. tamilmani சொல்கிறார்:

  200கோடி லஞ்சப்பணம் கண்டுபிடிக்கப்பட்டவுடன் அது எப்படி
  200 கோடி கடனாக மாறியது. இதை அந்த நீதிபதிக்கு public
  prosecutor சொல்ல வில்லையா அல்லது சொல்லியும் நீதிபதி கவனிக்க
  தவறியது ஏனோ? நீதிபதி சைனி அவர்கள் பின்புலத்தை பற்றியும்
  எழுதலாம் சார் .

  • புதியவன் சொல்கிறார்:

   இந்தச் சம்பவங்களின்போது என்ன என்ன நடந்தது என்று பார்த்தால் நமக்கு உண்மையைப் புரிந்துகொள்ள முடியும். நீதிபதிகள் (பெரும்பாலும்) அவர்கள் முன் உள்ள ஆவணங்களின்படித்தான் தீர்ப்பளிக்க முடியும் (அதனால் செலெக்டெட் ஆவணங்கள் வந்தால் அதற்கேற்றபடி தீர்ப்பு எழுதுவார்கள்). அதுபோல, ‘அனுமானம்’ செய்யும் இடங்களில் அவர்களின் எண்ணத்திற்கேற்றபடி அனுமானிப்பார்கள்.

   1. 220 கோடி லஞ்சம் – அதாவது தொலைக்காட்சிகளின் பங்குகள் என்ற பெயரில் – ஸ்… அவர்களிடம் கொடுக்கப்படுகிறது.
   2. இது பெரிய விஷயமாக சி.பி.ஐ கவனத்துக்குச் சென்றவுடன், ‘பங்கு விற்பனை இல்லை, கடனாக வாங்கிக்கொண்டோம்’ என்ற நிலைப்பாடு எடுத்து, பிறகு அதிலும் மாட்டிக்கொள்வோம் என்பதால், ஆபத்பாந்தவனான இந்தியா சிமெண்ட்ஸ் ஸ்ரீநிவாசன், தங்கள் அடுத்த ஐந்து வருட விளம்பரத் தொகையாக இந்த ரூபாயைக் கொடுக்கிறார். அதனை வைத்து 220 கோடி ரூபாயை, ‘பங்குகளை விற்க முடியாது’ என்ற பெயரில் திரும்பக் கொடுத்துவிடுகிறார்கள்.
   3. எல்லாமே தயாரிக்கப்பட்ட ஆவணங்கள்.
   4. இதில் சி.பி.ஐ. கண்டுகொள்ளாதது, ஏன் இந்தியா சிமெண்ட்ஸ் இதில் நுழைந்தது, அதன் பங்குகள் எத்தனை சதவிகிதம் கருணாநிதி கும்பலிடம் இருக்கிறது, யார் யார் அதன் பினாமி என்றெல்லாம். இதனைப் பற்றி அப்போது அதிகமாக செய்திகளில் வரவிடவில்லை. குங்குமம் இதழுக்கு மட்டும் அந்த சிமெண்ட் கம்பெனி எத்தனையோ வருடங்களாக தொடர்ந்து ஒரு பக்க கலர் விளம்பரம் கொடுத்துக்கொண்டு வருகிறது. அதன் காரணம் என்ன? எதனால் தன் ‘ஆளுமை’ இருக்கும்போது புதிய கிரிக்கெட் டீம் கேடி பிரதர்ஸுக்குக் கொடுக்கப்பட்டது? இதெல்லாம் யார் ஆராய்கிறார்கள்? ஆராய்ந்தால் ஒருவேளை உண்மைக்கு அருகில் செல்ல முடியும்.

   இந்த இடுகையில் போடப்பட்ட படம் மிக அருமை.

 5. பிங்குபாக்: வாங்கியது லஞ்சமா – கடனா ?கலைஞர் டிவி+கனிமொழி -(அத்தியாயம் -8) – அரிச்சந்திர புத்ரனின் …. | வி ம ரி ச

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.