(அத்தியாயம் -6) – அரிச்சந்திர புத்ரனின் கிசு-கிசு -ராசாவின் முடிவுக்கென்ன காரணம்….?

…..
…..

…..

25 செப்டம்பர் 2007 அன்று வரை பெறப்பட்ட விண்ணப்பங்களை
மட்டுமே பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என ராசா
அறிவித்ததற்குக் காரணம், அப்படிச் செய்தால் தான் டெல்லியில்
உள்ள ஒரே ஒரு நிறுவனத்துக்கு மட்டுமே ஸ்பெக்ட்ரம்
ஒதுக்கப்படும்.

அந்த நிறுவனம் ஸ்வான் டெலிகாம். இந்த நிறுவனமும்
ராசாவும் மிகவும் நெருக்கமானவர்கள். ராசா சுற்றுச்சூழல்
துறை அமைச்சராக இருந்தபோது, ஸ்வான் டெலிகாம் நிறுவனம்
அதற்கேற்ப -ரியல் எஸ்டேட் தொழில் செய்துகொண்டிருந்தது.

அப்போதே அந்த நிறுவனத்துக்கு ஆதரவாகப் பல
தடையில்லாச் சான்றுகளை வழங்கியவர் ராசா.
( எப்படி…? ஆராயப்பட வேண்டிய விஷயம்… ஆனால்
இதுவரை இந்த விஷயம் எடுத்துக்கொள்ளப்படவே
இல்லை.. ஆராய்ந்தால், இங்கும் பல பூதங்கள்
கிளம்ப வாய்ப்பு உண்டு…)

(அத்தியாயம் -5) – அரிச்சந்திர புத்ரனின் –ஏச்சுப் பிழைக்கும் தொழிலே சரிதானா…?

தங்களுக்கு நெருக்கமான ஆ.ராசா தொலைத் தொடர்புத்துறை
அமைச்சராகப் பொறுப்பேற்றதும், ரியல் எஸ்டேட் தொழில்
செய்து வந்த ஸ்வான் நிறுவனம், தொலைபேசி சேவைக்கு
தொழிலை மாற்றியது.

அப்போது ஏற்பட்ட நெருக்கம் காரணமாக ராசா அந்த
நிறுவனத்துக்கு ஆதரவாக 2ஜி அலைக்கற்றையைப்
பெறுவதற்கான தேதியை மாற்றினார் என்பதும்
குற்றச்சாட்டுகளில் ஒன்று.

2007 அக்டோபர் மாதம் டிபி குழும நிறுவனங்கள்,
ஸ்வான் டெலிகாம் நிறுவன பங்குகளை வாங்குகின்றன.
ராசாவுக்கு வேண்டப்பட்ட ஷாகித் உஸ்மான் பல்வா,
வினோத் கோயங்கா ஆகியோர் ஸ்வான் டெலிகாம்
நிறுவனத்தின் இயக்குநர்களாகப் பொறுப்பேற்கின்றனர்.
எனவே அதிகாரபூர்வமாக, ஸ்வான் டெலிகாம் நிறுவனம்,
டிபி குழுமத்தின் கட்டுப்பாட்டுக்குள் வருகின்றன.

2008 ஜனவரி 10-ம் தேதி மத்தியத் தொலைத் தொடர்புத்துறை
அதன் அதிகாரபூர்வ இணையதளத்தில், மதியம் 2.45 மணிக்கு
ஓர் அறிவிப்பை வெளியிட்டது.

2ஜி அலைக்கற்றைக்கான உரிமம் பெற விரும்பும் நிறுவனங்கள்
தங்களின் விண்ணப்பங்களை 45 நிமிடத்துக்குள் தொலைத்
தொடர்புத்துறை தலைமையகத்துக்கு வரவேண்டும் என்று
அதில் குறிப்பிட்டிருந்தது.

முதலில், விண்ணப்பித்தவர்கள் அனைவரும் தொலைதொடர்பு
துறை இணையதளத்தையே பார்த்துக் கொண்டிருப்பார்கள்
என்று எப்படி எதிர்பார்க்கப்பட்டது…?

ஒருவேளை பார்த்திருந்தாலும் கூட, 45 நிமிடங்களுக்குள்
வங்கிகளை அணுகி, டிடி (அதுவும் பெரிய தொகையான
1600 கோடி ரூபாய்க்கு) வாங்கிக்கொண்டு, தொலைதொடர்பு
துறை அலுவலகத்திற்கு வந்து –

விண்ணப்பங்களையும், டிடியையும் நேரில் சமர்ப்பிக்க முடியும்….?

இப்படி ஒரு நடைமுறை சாத்தியமே இல்லாத விதி –
ஏன் விதிக்கப்பட்டது….? இது எப்படி சாத்தியமாகும் என்று
“வெறும் கிசு கிசு” என்று தீர்ப்பு சொன்ன அந்த நீதிமான் தான்
விளக்க வேண்டும்.

அதனால், பல நிறுவனங்கள் விண்ணப்பங்களைக் கொடுக்கவும்,
நேரில் போகவும் முடியவில்லை. ஆனால், ஸ்வான் டெலிகாம்
உள்ளிட்ட 13 நிறுவனங்கள் மட்டும், 2007 அக்டோபர், நவம்பர்,
என்று முன் தேதியிலேயே வாங்கப்பட்டு, தலா ஆயிரத்து
600 கோடி டி.டி.யும் எடுத்து தயாராக வைத்திருந்தன.

இது அவர்களுக்கு மட்டும் எப்படி முடிந்தது…? தொகையும்,
தேதியும் சொல்லும் முன்னரே, இந்த கம்பெனிகள் டி.டி.
வாங்கி தயாராக வைத்திருந்தது எப்படி….?
ராசாவின் ஆகாஷ்வாணி அவர்களுக்கு மட்டும் அட்வான்சாக
செய்தி சொல்லி இருந்ததால் தானே…?

இதன் விளைவாக –

ஸ்வான் டெலிகாம், லூப் டெலிகாம், ஸ்பைஸ், ஐடியா,
டேட்டாகாம்/வீடியோகான், ஷ்யாம் டெலிகாம்,
டாடா டெலி சர்வீஸ், யுனிடெக் நிறுவனங்கள் மட்டும் 2ஜி
அலைக்கற்றையைப் பெற்றன. இந்த விவகாரத்தில்
வில்லங்கத்தின் அடுத்த படி இங்கே நிகழ்கிறது….!!!

அரிச்சந்திர புத்ரனின் புதிய வியாக்கியானப்படி,
2ஜி அலைக்கற்றை ஏலம், ‘முதலில் வருபவருக்கே முன்னுரிமை’
என்ற புதிய விதிப்படி 45 நிமிடங்களில் நடந்து முடிந்தது.

2008 ஜனவரி 10-ம் தேதி இப்படியாகத்தானே அந்த ஏலத்தை
மங்களகரமாக நடத்தி முடித்திருந்தார் தொலைத் தொடர்புத்
துறை அமைச்சர் ஆ.ராசா.

விஷயத்தை மோப்பம் பிடித்த எதிர்கட்சிகள் அரசியல் களத்தை
ரணகளமாக்கின.

அலைக்கற்றை விவகாரத்தில், ‘எதுவுமே சரியாக நடக்கவில்லை’
என எதிர் கட்சிகள் புகார் கிளப்பின; அவசர அவசரமாக
வாங்கப்பட்ட விண்ணப்பங்கள், விண்ணப்பிக்கும் தேதியிலும்,
நேரத்திலும் செய்யப்பட்ட குளறுபடிகள், விதிமுறைகளைத்
தளர்த்தியதில் வில்லங்கம் என அத்தனை விவகாரங்களையும்
எதிர் கட்சிகள் கேள்விக்கு உட்படுத்தின.

பொது ஏலம் நடத்தி இருந்தால், கூடுதல் விலைக்கு விற்பனை
செய்திருக்கலாம் என யூகக் கணக்குகள் போடப்பட்டன;
தொலைத் தொடர்புத்துறை அமைச்சரின் இந்த முடிவு
பிரதமருக்கும், நிதியமைச்சருக்கும் தெரியுமா? என்ற
கேள்விகள் நாடாளுமன்ற அவைகளில் எதிரொலித்தன…

எதிர்க் கட்சிகளின் கேள்விகளுக்கு அரசில் வேறு யாரிடமும்
பதில் இல்லை. ஆனால், அத்தனை கேள்விகளுக்கும்
ஆ.ராசா மட்டும் பதில் சொல்லிக் கொண்டிருந்தார்.
திரைக்கதை, வசனம் எழுதியவர் அவர்தானே…?

2 நவம்பர் 2007-ம் ஆண்டு பிரதமர் மன்மோகன் சிங்,
2ஜி அலைக்கற்றை விற்பனை தொடர்பாக ஆ.ராசாவுக்குக்
எழுதிய கடிதத்தில் ‘2ஜி அலைக்கற்றையை ஏலத்தில்
விடுங்கள்’ என்று குறிப்பிடுகிறார்.

அதற்கு பதில் எழுதிய ராசா, “ ‘முதலில் வருபவருக்கே
முன்னுரிமை’ என்ற அடிப்படையில் 2ஜி-யை விற்பனை
செய்ய உள்ளேன்” எனக் குறிப்பிடுகிறார்.

முதலில் அதற்கு அனுமதி அளிக்காத பிரதமர் மன்மோகன் சிங்,
3 ஜனவரி 2008-ல் ஆ.ராசாவுக்கு எழுதிய acknowledgement
கடிதத்தின் மூலம் மறைமுகமாக அனுமதி அளிக்கிறார்.
அதன்பிறகுதான் 122 வட்டங்களுக்கான 2ஜி லைசென்ஸ்
விற்பனை செய்யப்படுகிறது.

இது தான் மன்மோகன் சிங்ஜி கொடுத்ததாகச் சொல்லப்படும்
அனுமதிக் கடிதம் –
….

….

திருவாளர் ப.சி. தான் 2ஜி ஏலம் நடந்தபோது மத்திய
நிதியமைச்சராக இருந்தார். 2ஜி அலைக்கற்றைக்கான தொகை,
நிதித்துறை மூலம்தான் வசூலிக்கப்படும். அதனால்,
2ஜி விற்பனை கொள்கையில் தொலைத் தொடர்புத்துறை
செய்த மாற்றம் குறித்து நிதித்துறை ஆலோசனை நடத்துகிறது.

ஆரம்பத்தில் தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ராசாவின்
முடிவை நிதித்துறை நிராகரித்தது. அதன்பிறகு என்ன
நடந்ததோ (காங்கிரஸ் தலைமைக்கு “உரிய” முறைப்படி
தெரிவிக்கப்பட்டாகி விட்டது – என்கிற தகவல்…???)

பின்னர், தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ஆ.ராசாவுக்கு,
நிதியமைச்சர் திருவாளர் ப.சி. எழுதிய கடிதத்தில்,
‘‘இந்த முறை உங்கள் யோசனைப்படியே செய்யுங்கள்;
ஆனால், அடுத்தமுறை ஏலத்தில் விற்பனை செய்யுங்கள்”
என்று பட்டும்படாமலும் ஒப்புதல் அளித்து
தன் கையைக் கழுவிக் கொண்டுள்ளார்.

இந்த யு டர்னுக்கு என்ன காரணம்…?
காங்கிரஸ் தலைமைக்கு இதில் என்ன பங்கு…?

2ஜி அலைக்கற்றையை வாங்கிய நிறுவனங்களில்
பெரும்பாலான நிறுவனங்கள், தொலைத் தொடர்புத்துறையில்
எந்தவித முன்அனுபவமும் இல்லாதவை.

ஆனால், அந்த நிறுவனங்கள் தான் 2ஜி அலைக்கற்றையை
வாங்கிக் குவித்தன. வாங்கிய கையோடு, அதை அப்படியே
வெளிநாட்டு நிறுவனங்களுக்கு கைமாற்றிவிட்டன.

ஆயிரத்து 537 கோடிக்கு ரூபாய்க்கு 2ஜி அலைக்கற்றையை
வாங்கிய ஸ்வான் டெலிகாம் நிறுவனம், அதில் பாதியை
அரபு நாட்டு நிறுவனமான ஈடிசாலட்டுக்கு, 4 ஆயிரத்து
200 கோடி ரூபாய்க்கு விற்றது.

இந்தப்பக்கம் வாங்கி, அதில் பாதியை மட்டும்
அந்தப் பக்கம் கொடுத்ததில் அந்த நிறுவனத்துக்கு கிடைத்த
லாபம் மட்டும் 2 ஆயிரத்து 600 கோடி ரூபாய்.

ஷியாம் டெலிகாம் நிறுவனம் ரஷ்யாவைச் சேர்ந்த
எம்.டி.எஸ் பிராண்ட் நிறுவனத்துக்கு 74 சதவிகிதப் பங்குகளை
விற்றது.

யுனிடெக் நிறுவனம் நார்வேயைச் சேர்ந்த யுனிநார்
நிறுவனத்துக்கு 67 சதவிகிதப் பங்குகளை விற்றது.

டாடா டெலிசர்வீஸ் நிறுவனம் ஜப்பானைச் சேர்ந்த
டோகோமோ நிறுவனத்துக்கு அதன் 26 சதவிகிதப் பங்குகளை
விற்றது.

ஆற்றோடு போகும் தண்ணீர்…
அய்யா குடி… அம்மா குடி –
என்று இந்த நாட்டின் சொத்தை இத்தனை பேரும்
அள்ளிச்சென்று கோடி கோடியாக பணம் பண்ணினர்.

ஆயிரம் கோடி ரூபாய்க்குள் 2ஜி அலைக்கற்றையைப்
பெற்ற நிறுவனங்கள், அவற்றில் பாதியை மட்டுமே
பல ஆயிரம் கோடி ரூபாய்க்கு வெளிநாட்டு நிறுவனங்களுக்கு
விற்று கொள்ளை லாபம் அடித்தன.

இதெல்லாம் திட்டம் போட்டு அடித்த
கொள்ளையா-இல்லையா…?
இவ்வளவு நிதானமாக திட்டம் போட்டு கொள்ளையடித்த
கோடீஸ்வரர்களுக்கு, நீதிமன்ற நடவடிக்கைகளிலிருந்து
‘தப்பிக்கும் வழி’ என்ன என்பது மட்டும் தெரியாமலா இருக்கும்..?

இதற்கு பதிலாக அரசாங்கமே நேரடியாக அலைக்கற்றைகளை
விற்றிருந்தால், இத்தனை பணமும் அரசுக்கு தானே வந்திருக்கும்….
அரசு இதை ஏன் இதைச் செய்யவில்லை…? என்பதுதான்
2ஜி அலைக்கற்றை ஊழலுக்கு அடிப்படையான கேள்வியாக
அமைந்தது.

தீர்ப்புக் கூறிய பெரிய மனிதருக்கு, ராசா கொடுத்த “தெம்பில்”
இது “கிசு-கிசு” வாகவும், வதந்தியாகவும் தோன்றி இருக்கக்கூடும்.
ஆனால் – இதையெல்லாம் விவரமாகப் படிக்கும் வாசக
நண்பர்களுக்கு அப்படியா தோன்றும்…?

மக்கள் அத்தனை பேரும் முட்டாள்கள் என்று நினைத்துப்பேச
அந்த அரிச்சந்திர புத்ரனுக்கு துணிச்சல் எப்படி வருகிறது…?

———————-
தொடரும்….

.
——————————————————————————————————–

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

2 Responses to (அத்தியாயம் -6) – அரிச்சந்திர புத்ரனின் கிசு-கிசு -ராசாவின் முடிவுக்கென்ன காரணம்….?

 1. பிங்குபாக்: கலைஞர் டிவி + திருமதி கனிமொழி – 2-ஜி-யில் கிடைத்தது என்ன…? (அத்தியாயம் -7) -அரிச்சந்திர புத்ரனின்

 2. tamilmani சொல்கிறார்:

  அலைக்கற்றை வாங்கிய நிறுவனங்கள் குறைந்தது மூன்று ஆண்டுகள்
  வேறுஎவருக்கும் விற்க கூடாது என்ற சட்டத்தை காங்கிரஸ் அரசு கொண்டு
  வந்திருந்தால் இந்த உலக மஹா ஊழல் கட்டுப்படுத்தப்பட்டு இருக்கலாம்.
  பெருமாள் கோவிலில் சுண்டல் கொடுப்பது போல கையூட்டு வாங்கி
  அவற்றை கொடுத்த கம்பெனிகளை மட்டும் முதலில் வந்தவர்கள் என்று
  சொல்லி ஊழல் செய்தவர் இவ்வளவு தைரியமாக பேசுகிறார் என்றால்
  சட்டமே தன் கடமையை சரியாக செய்யவில்லை என்றுதானே அர்த்தமாகிறது,

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.