(அத்தியாயம் -3) – அரிச்சந்திர புத்ரனின் கிசு-கிசு …..உள்ளே-வெளியே

….
….

….

.
தயாநிதி மாறன் வெளியே –
ஆண்டிமுத்து ராசா உள்ளே –

18 May 2007 – அரிச்சந்திர புத்ரன் சீனுக்குள் வந்து விட்டார்….!!!

(அத்தியாயம் -2) – அரிச்சந்திர புத்ரனின் “கிசு-கிசு” காவியம் ….!!!

அரிச்சந்திர புத்ரனின் அவதார லீலைகளுக்குள் போவதற்கு முன் –

ஆ.ராசா வருவதற்கு முன்னர் இருந்த நிலை என்ன என்பதை –
இதற்கு முன் தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளவும் –
ஏற்கெனவே தெரிந்தவர்கள் மீண்டும் refresh செய்துகொள்ளவும் –

கொஞ்சம் விவரமாக இங்கே பதிவு செய்கிறேன்.
————————————–

உண்மையில் – ஸ்பெக்ட்ரம் என்றால் என்ன ?
மின்காந்த அலைகள் மூலமாக ஒலியை கடத்த முடியும் என்ற
விஞ்ஞான கண்டுபிடிப்பின் விளைவே வானொலி. இதைத் தான்
ஆங்கிலத்தில் ஸ்பெக்ட்ரம் என்று அழைக்கிறார்கள்.

அதே போல, தொலைபேசிச் சேவைகள், தொண்ணூறுகள் வரை,
கம்பி மூலமான இணைப்புகள் வழியாகவே வழங்கப் பட்டு
வந்தன.

அதன் பிறகு ஏற்பட்ட தொழில் நுட்பப் புரட்சி காரணமாக
காற்றின் வழியாக உரையாடல்களை அனுப்ப முடியும் என்ற
நிலை வந்த்து.

இதன் முடிவே, 1ஜி எனப்படும் முதல் தலைமுறை சேவைகள்.
1 என்பது முதல் என்பதற்கும், ஜி என்பது ஜெனரேஷன்
(தலைமுறை) என்பதன் சுருக்கமாகவும் 1ஜி என அழைக்கப்
படுகிறது.

இந்த தொழில்நுட்பம் மிக மிக வசதியாகவும், கம்பிவட
இணைப்பு இல்லாத இடத்திலும் பெரிதும் பயன் பட்டது.
உயரமான மலைகள் மற்றும் பள்ளத்தாக்குகளில் பணிபுரியும்,
எல்லைப் பாதுகாப்புப் படை மற்றும் ராணுவத்தினருக்கு,
இந்த சேவை பெரிய அளவில் பயன்படும் என்பதை உணர்ந்த
அரசு, இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் உரிமையை
தனியார் நிறுவனங்கள் எதற்கும் தராமல், ராணுவம் மற்றும்
காவல்துறை பயன்பாட்டுக்கு மட்டுமே அனுமதித்தது.

முதல் தலைமுறை தொழில்நுட்பத்தில் ஒரு பெரிய
பின்னடைவு என்னவென்றால், ஒரு பக்கம் இருக்கும் நபர்
பேசி முடித்த பிறகே, அடுத்த பக்கத்தில் இருக்கும் நபர்
பேச முடியும். ( அதாவது ஒரு பக்கம் பேசி ‘ஓவர்’ என்று
சொன்ன பிறகு அடுத்த பக்கம் துவங்கும்…)

மேலும், 1ஜி தொழில்நுட்பத்தில் பேசுவதற்காக பயன்படுத்தப்
படும் கருவிகள் அதிக பேட்டரி சக்தியை இழுக்கும். இதனால்
இந்தக் கருவிகள் அளவிலும் பெரிதாக இருக்கும்.

இந்த சூழலில் தான் 2ஜி வருகிறது. 2ஜி அறிமுகப்
படுத்தப்படுவதற்கு முன்பு, தொண்ணூறுகளின் தொடக்கத்தில்
தொலைபேசி என்றாலே லேண்ட்லைன் மட்டும் தான். அதுவும்,
அரசு தொலைபேசி(BSNL) தான். உங்கள் எக்சேஞ்சின் அளவைப்
பொறுத்து, பதிவு செய்து விட்டு காத்திருக்க வேண்டும்.

இணைப்பு வழங்கப் படுவதற்கு, ஒரு ஆண்டு ஆகலாம்,
இரண்டு ஆண்டு ஆகலாம், ஐந்து ஆண்டுகள் கூட ஆகலாம்.
(நான் முதல் முறை டெலிபோன் இணைப்புபெற
பதிவுசெய்துவிட்டு நாலரை ஆண்டுகள் காத்திருந்தேன்…..!)

1991ல் தாராளமய பொருளாதார கொள்கைகள் அமலுக்கு
வந்ததும், தொலைத் தொடர்புத் துறையிலும் பெரும் மாற்றம்
வருகிறது.( பிரதமர் நரசிம்ம ராவ், நிதியமைச்சர் மன்மோகன் சிங்
ஜோடி சேர்ந்த சமயம்…)

இதையொட்டி, இந்த அலைக்கற்றை மற்றும், தொலைபேசி
சேவையை வரைமுறைப் படுத்துவதற்காக, 1994ம் ஆண்டில்,
தேசிய தொலைத் தொடர்பு கொள்கை ஒன்றை வகுக்கிறது
மத்திய அரசு.

அதன் படி, நான்கு மெட்ரோ நகரங்களில் தலா இரண்டு
நிறுவனங்கள் செல்போன் சேவையை தொடங்கலாம் என்று
அனுமதி அளிக்கப் படுகிறது. தொடங்கிய புதிதில், இன்கம்மிங்
16 ரூபாய், அவுட் கோயிங் 16 ரூபாய்.

இந்த அளவுக்கு விலை மிக மிக அதிகமாக இருந்த காரணத்தால்,
பெரும் செல்வந்தர்களைத் தவிர, செல்போன் சேவையை
பயன்படுத்துவதற்கு ஒருவரும் முன்வரவில்லை. இப்படி
இருந்தால் ஒன்றும் சரிப்பட்டு வராது என்ற முடிவுக்கு
மத்திய அரசு வந்தது. அதன் அடிப்படையில், தொலைத்
தொடர்பு கொள்கைகளை மறு பரிசீலனை செய்ய ஒரு குழு
அமைக்கப் பட்டு, அந்தக் குழு புதிய விதிகளை நிர்ணயித்தது.

இந்த புதிய விதியின் படி தான் முதலில் வருபவருக்கே
முன்னுரிமை என்ற கொள்கை அமலுக்கு வருகிறது. 1999ல்
இந்தக் கொள்கையை அமல்படுத்தியதற்கு காரணம், அப்போது
செல்பேசி சேவையை நடத்துவதற்கு எந்த நிறுவனமும்
முன்வரவேயில்லை என்பதுதான்.

லாபமில்லாத தொழில் இறங்க எந்த தொழில் அதிபர்
முன்வருவார் ? போட்டியாளர்களே இல்லாத சூழலில்
ஏலம் விட்டால் மட்டும் யார் ஏலத்தில் பங்கெடுத்திருக்கப்
போகிறார்கள் ?

முதலில் வருபவருக்கே முன்னுரிமை என்ற கொள்கையை
அறிவித்த பிறகும் கூட, ரிலையன்ஸ், டாடா போன்ற
வெகு சில நிறுவனங்களே சேவை நடத்துவதற்கு முன் வந்தன.

2001ல் புதிதாக விண்ணப்பித்த நிறுவனங்களுக்கு லைசென்சுகள்
வழங்கப் பட்டன. அப்போது 22 தொலைத் தொடர்பு வட்டங்களில்
லைசென்சுகள் வழங்கப் பட்டன. இவ்வாறு வழங்கப் பட்ட
லைசென்சுகள் மூலம், அரசுக்கு கிடைத்த மொத்த வருவாய்
1658 கோடி ரூபாய்கள்.

2001ல் இந்த அளவு குறைந்த தொகை
கிடைத்ததற்கு காரணம், ஏராளமான ஸ்பெக்ட்ரம் அரசு வசம்
இருந்ததும், போட்டியிட நிறுவனங்கள் குறைவாக இருந்ததும்.

2002, 2003 ஆண்டுகளில் செல்போன் சேவை ஓரளவுக்கு
பரவலாக மக்களைச் சென்றடைய ஆரம்பித்தது. இதைத்
தொடர்ந்து தனியார் நிறுவனங்களிடையே போட்டியும்
ஆரம்பித்தது. இந்தப் போட்டி தொடங்கிய போது, போதுமான
அளவு ஸ்பெக்ட்ரம் அரசு வசம் இருந்தது.

கொள்கையில் / மார்க்கெட்டில் – திருப்பு முனை –

இதன் நடுவே, 2004-2005 ஆண்டில், தொலைத் தொடர்புத்
துறையில் நேரடி அந்நிய முதலீட்டுக்கான உச்சவரம்பு,
49-லிருந்து 75 சதவிகிதமாக உயர்த்தப் பட்டது.

இதன் அடிப்படையில் பல வெளிநாட்டு நிறுவனங்கள்
செல்போன் சேவையை தொடங்க முன்வரும் என்பதை
உணர்ந்த செல்போன் சேவையை தொடங்க வரும்
நிறுவனங்களுக்கு –

-எவ்வித கட்டுப்பாடும் இல்லாமல் ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ்
வழங்க வேண்டும் என்றும் விதி வகுக்கப் பட்டது.

அதே நேரத்தில், லைசென்ஸை பெற்ற நிறுவனங்கள்
ஸ்பெக்ட்ரத்தை பதுக்கக் கூடாது என்பதற்காக ஒரு ஏரியாவில்,
ஒரு நிறுவனத்துக்கு ஒரு லைசென்ஸுக்கு மேல் வழங்கக்
கூடாது என்றும் நிர்ணயிக்கப் பட்டது.

2007ம் ஆண்டிற்குள், செல்போன் சேவை இந்தியாவில்
உச்சத்தை அடைந்தது. வளர்ந்த நாடுகளை விட, இந்தியாவின்
செல்பேசி எண்ணிக்கை அதிகமானது. இதில் உள்ள வருவாயை
உணர்ந்த பல்வேறு நிறுவனங்கள் செல்போன் சேவையை
தொடங்க போட்டி போட்டன.

(ஆண்டிமுத்து ராசா வருவதற்கு முன்னரே இந்த வளர்ச்சிகள்
அனைத்தும் ஏற்பட்டு விட்டன என்பது குறிப்பிடத்தக்கது…)

அப்போது தொலைதொடர்பு அமைச்சராக இருந்த தயாநிதி மாறன்,
ஏப்ரல் 2007-ல், ட்ராய் என்று அழைக்கப் படும், தொலைத்
தொடர்புத் துறை ஒழுங்கு ஆணையத்துக்கு ஒரு கடிதம்
எழுதுகிறார்.

அந்தக் கடிதத்தில, ஏராளமான லைசென்சுகள்
வழங்கப் பட்டு விட்டன. இது வரை 159 லைசென்சுகள்
கொடுக்கப் பட்டு விட்டன. ஸ்பெக்ட்ரத்தின் தேவையும்
அதிகரித்துள்ளது. அதனால், லைசென்சுகள் வழங்குவதற்கு
உச்சவரம்பு நிர்ணயிக்க வேண்டும் என்று ட்ராய்
பரிந்துரைக்குமாறு கோருகிறார்.

ஆனால், ட்ராய் இந்த பரிந்துரைகளை ஏற்கவில்லை. இன்று
தொலைத்தொடர்பு சந்தை இருக்கும் சூழலில்,
லைசென்சுகளுக்கான உச்சவரம்பு நிர்ணயிக்க வேண்டிய
அவசியம் இல்லை. மேலும், பல்வேறு நிறுவனங்கள்
போட்டியிட்டால் தான், சந்தாதாரர்களுக்கு குறைந்த விலையில்
செல்போன் சேவையை அளிக்க முடியும் என்பதாலேயே ட்ராய்
இந்த முடிவுக்கு வந்தது.

2ஜி பிரிவில், லைசென்சுகளை வழங்குவதற்கு விலை நிர்ணயம்
செய்வது தொடர்பாக ட்ராய் கவனமாகவே பரிந்துரைகளை
வழங்கியிருந்தது.

இது வரை முதலில் வருபவருக்கே முன்னுரிமை என்ற
கொள்கை இருந்தாலும், நிர்ணயிக்கப்படும் நுழைவுக்
கட்டணமானது, இன்றைய சந்தை நிலவரத்தை
ஒத்ததாக இல்லை என்று ட்ராய் முக்கியமாக குறிப்பிட்டது.

முதலில் வருபவருக்கே முன்னுரிமை என்ற கொள்கையை
எப்படி அமல்படுத்த வேண்டும் என்பதற்கும் தெளிவான
விதிமுறைகள் வகுக்கப் பட்டிருந்தன.

செல்போன் சேவையை தொடங்க விரும்பும் நிறுவனங்கள்
முதலில் தொலைத் தொடர்புத் துறைக்கு விண்ணப்பிக்க
வேண்டும். அவ்வாறு பெறப்பட்ட விண்ணப்பங்கள்
தேதி வாரியாக பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப் படும்.

முதலில் வரும் விண்ணப்பத்துக்கு, அனுமதி கடிதம் ஒன்று
கொடுக்கப் படும். முதலில் விண்ணப்பம் அளித்த நிறுவனத்துக்கு
அனுமதி கடிதம் கொடுக்கப் பட்ட பின்னரே அடுத்த நிறுவனத்தின்
விண்ணப்பம் பரிசீலனைக்கே எடுத்துக் கொள்ளப் படும்.

ஒரே நாளில் இரண்டு நிறுவனங்களிடமிருந்து, ஒரே தொலைத்
தொடர்பு வட்டத்துக்கு விண்ணப்பம் பெறப்படுமேயானால்,
முதலில் வந்த விண்ணப்பத்துக்கு அனுமதி கடிதம் வழங்கப்
பட்ட பிறகே, குறைந்தது மறு நாள்தான் அடுத்த நிறுவனத்துக்கு
அனுமதி கடிதம் கொடுக்க வேண்டும். இது போன்ற
விதிமுறைகளை ஏற்படுத்தியதற்கான முக்கிய காரணம்,
அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ஒரு சமநிலையை உருவாக்க
வேண்டும் என்பதே.

தயாநிதி மாறன் ட்ராய்க்கு கடிதம் எழுதியது ஏப்ரல் 2007ல்.
இந்த புதிய விதிமுறைகளை ட்ராய் அனுப்பியது ஆகஸ்ட் 2007-ல்.

இதற்கு நடுவே தான் மிக முக்கியமான அந்த நிகழ்வு நடந்தது.

மதுரை தினகரன் அலுவலகம் கொளுத்தப்பட்டு,
அதன் விளைவாக கலைஞருக்கும்-மாறன் சகோதரர்களுக்கும்
இடையே பெரிய பிளவு ஏற்பட்டு,

———-

தயாநிதி போனார் ….

———-


அவர் இடத்திற்கு ஆ.ராசா வந்தார்

-தயாநிதி மாறன் ராஜினாமா செய்ய வைக்கப்பட்டு –
அவருக்கு பதிலாக அந்த இடத்தில் –
18 மே 2007 – அன்று -அரிச்சந்திர புத்ரன் வந்து விட்டார்….!!!
——————

இதுவரை இங்கே சொல்லப்பட்டிருப்பவை
அனைத்துமே வரலாறு… சரித்திரம்…
கிசு-கிசுவோ வதந்தியோ இல்லை – என்பது குறிப்பிடத்தக்கது.

தொடரும்….

.
————————————————————————————————————

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

4 Responses to (அத்தியாயம் -3) – அரிச்சந்திர புத்ரனின் கிசு-கிசு …..உள்ளே-வெளியே

 1. M.Subramanian சொல்கிறார்:

  கே.எம்.சார்,
  உங்கள் பழைய வேகத்தை மீண்டும்
  இங்கே பார்க்க முடிகிறது. எழுத்தின் அழுத்தம்,
  வேகம், தேர்ந்தெடுக்கப்பட்ட புகைப்படங்கள்
  எல்லாமே அமர்க்களம்.
  “பாதகம் செய்பவரைக் கண்டால் நீ
  பயம் கொள்ளலாகாது பாப்பா
  மோதி மிதித்துவிடு பாப்பா அவர்
  முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா”
  -நேற்று அதைத்தானே சொன்னான் பாரதி !
  தொடருங்கள்; அடுத்தடுத்த அத்தியாயங்களை
  ஆவலோடு எதிர்பார்க்கிறேன்.

 2. பிங்குபாக்: (அத்தியாயம் -4) – அரிச்சந்திர புத்ரனின் “கிசு-கிசு” -நானே ராஜா -நானே மந்திரி ………. | வி ம ரி ச ன ம்

 3. பிங்குபாக்: (அத்தியாயம் -4) – அரிச்சந்திர புத்ரனின் “கிசு-கிசு” -நானே ராஜா -நானே மந்திரி ………. | வி ம ரி ச ன ம்

 4. மெய்ப்பொருள் சொல்கிறார்:

  1G ,2G பற்றி
  1G பேச மட்டும் முடியும் . SMS என்னும் குறுந்தகவல்
  அனுப்ப முடியாது .ஒரே நேரத்தில் பேசவும் ,கேட்கவும் முடியும் .
  இது அமெரிக்காவில் இருந்தது .

  2G இது டிஜிட்டல் முறையில் போனையும் டவரையும்
  இணைக்கிறது . அதனால் DATA வையும் அனுப்ப முடியும் .

  அமெரிக்காவிற்கு முன்னேயே இந்தியாவில் SMS வசதி
  வந்து விட்டது . இதை அமெரிக்கர்கள் நம்பவில்லை .

  நீங்கள் சொன்ன ரேடியோ போன் 0G என சொல்கிறார்கள் .

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.