அரிச்சந்திர புத்ரனின் “கிசு-கிசு” காவியம் ….(அத்தியாயம் -1)

….
….

….

முதலில் தலைப்பிற்கான காரணம் –

வெறும் “கிசு-கிசு” செய்திகளையும்,
வதந்திகளையும் வைத்து போடப்பட்ட வழக்கு என்று
காவிய நாயகன் சொல்கிறார் எனவே – “கிசு-கிசு காவியம் “…

“நான் சொல்வதெல்லாம் உண்மை;
உண்மையைத் தவிர வேறொன்றுமில்லை” –
என்று நீதிமன்றத்தில் குற்றவாளி கூண்டில் நின்றுகொண்டு
பலமுறை சத்தியப் பிரமாணம் எடுத்துக் கொண்டவர் நாயகன் –
எனவே “அரிச்சந்திரனின் வாரிசு – அரிச்சந்திர புத்ரன்” –

—————————————

” என் மீது போடப்பட்ட வழக்கு “கிசு-கிசு” செய்திகளையும்,
வதந்திகளையும் வைத்து போடப்பட்ட வழக்கு என்று நீதிபதியே
தீர்ப்பு சொல்லி விட்டார்….!!!”

– தங்கள் கூட்டணி மத்தியில் ஆட்சியில் இருந்தபோதே,

– தங்கள் கட்சியின் சார்பில் மத்திய அரசில்
4 கேபினட் அமைச்சர்கள் இருந்தபோதே,
———————

-the CBI lodged an FIR on October 21, 2009 against unknown
officers of DoT, unknown private persons and firms and others and –

later the apex court took up the matter leading to resignation of
Raja and his subsequent arrest.

The alleged scam had then rocked the UPA government.
In its charge sheet filed in April 2011 against Raja and others,
the CBI had alleged that there was a loss of Rs 30,984 crore to the
exchequer in allocation of licences for the 2G spectrum which
were scrapped

by the top court on February 2, 2012.

Raja, Kanimozhi and 15 others were tried under provisions of the
IPC and the Prevention of Corruption Act dealing with offences
of criminal conspiracy, cheating, forgery, using as genuine
fake documents, abusing official position, criminal misconduct
by public servant and taking bribe.
———

The second case was lodged by the Enforcement Directorate
with regard to alleged laundering of Rs 200 crore bribe money
against Raja, Kanimozhi and 17 others.

—————————-

– அந்த அரசாலேயே – குற்றம் சாட்டப்பட்டு, கைது செய்யப்பட்டு,
– டெல்லி திகார் சிறையில் 9 மாதங்கள் காராக்கிரவாசம்
செய்துவிட்டு, ஜாமீனில் வெளியே வந்த இந்த காவிய நாயகன்
இன்று கூச்சம் சிறிதுமின்றி சொல்கிறார் மேற்படி வார்த்தைகளை.

சிபிஐ அதிகாரிகள் ஆவணங்களை உரிய முறையில்
அளிக்கத் தவறியதாலேயே, முற்றிலும் அவர்களின்
செயல்படாத தன்மையால் மட்டுமே – மூடப்பட்ட ஒரு
வழக்கை தனக்கு பெருமை தேடிக்கொள்ள பயன்படுத்திக்
கொள்கிறார் இந்த அரிச்சந்திர புத்ரன்.

இந்த வழக்கு உரிய முறையில் விசாரிக்கப்பட்டு இவர்
“குற்றமற்றவர்” என்று தீர்ப்பளிக்கப்படவில்லை. தூங்கிவழிந்த
சி.பி.ஐ. அதிகாரிகளின் மீது எரிச்சல் கொண்ட ஓய்வில் செல்லும்
ஒரு நீதியரசர் அலுப்பில் எடுத்த முடிவு.
தீர்ப்பிற்கு பின்னர் விழித்துக் கொண்டது சிபிஐ…
இப்போது அப்பீலில் இருக்கிறது வழக்கு.

நீதிமன்ற நடைமுறைகளில் அலுத்துப்போய் ஓய்ந்து,
ரிடையர் ஆகும் நிலையில், ரிடையர் ஆன பிறகு எப்படி
ஓரளவாவது சௌகரியமாக வாழ முடியும் என்று யோசித்துக்
கொண்டிருக்கும் ஒரு சாதாரண சின்ன லெவல் நீதிமன்றத்தில்
இருப்பவரிடம் –
தான் அடித்த கோடிகளில் இருந்து ஒன்றோ இரண்டோ
கொடுத்து, தாங்கள் வாங்க விரும்புவதை வாங்க முடியாதா
என்ன இவர்களால்…? 1,76,0000 என்ற எண்ணை பலமுறை
பார்த்தவர்களுக்கு அதற்கான அனுபவம், சாமர்த்தியம்,
திறமை, இல்லாமலா இருக்கும்… ?

குமாரசாமி என்று எங்கேயாவது, யாராவது துவங்கும்போதே,
சொல்பவர் என்ன சொல்ல வருகிறார் என்று கூட கவனிக்காமல்
வாங்கப்பட்ட தீர்ப்பு என்று ரொம்ப அர்ஜெண்டாக சொல்பவர்கள்
இவரும், இவரது கூட்டாளிகளும்.

அப்பேற்பட்டவர்களுக்கு, தாங்கள் விரும்புவதை
வாங்கும் வழி தெரியாமலா இருக்கும்…?
அந்த அனுபவமோ, அறிவோ இல்லாமலா குமாரசாமியைப்
பற்றி சொன்னார்கள்….?

இது என்ன ஜெனீவாவில் இருக்கும்
-International Court of Justice- ஆ…?
ஆப்டர் ஆல் டெல்லி தானே…?
இவர் வழக்கமாக ஆடும் இடம் தானே…?

இவர்களின் சாமர்த்தியம் எட்டும் தூரம் தானே…?

தானாகவே, தனது மண்டைத்திமிரால், வாய்க்கொழுப்பால் –
இந்த சப்ஜெக்டை கிளப்பி விட்டார்…. இனி இதற்கான
எதிர் விளைவுகளை இவர்கள் எதிர்நோக்க வேண்டியிருக்கும்.

தேர்தல் சமயத்தில் இந்த விஷயம் விவாதிக்கப்படுவது
தனது கட்சியின் வெற்றிக்கு பாதகமாக இருக்கும் என்று
உணர்ந்து இவர்களது தானைத்தலைவர், இதை தடுத்திருக்க
வேண்டும்… ஆனால், இதைத் தடுக்க அவருக்கு துணிவு
இருந்திருக்காது. அடித்ததில் ஒரு பங்கு அவருக்கும்
போயிருக்குமே.

பங்கை பிரித்துக்கொடுத்த நேரம், இடம், பொருள் அனைத்தையும்
பதிவு செய்து வைத்திருப்பாரே அரிச்சந்திர புத்ரன்.
இப்போது அவரை அடக்க முயன்றால், அவர்
இவரையே காட்டிக் கொடுத்து விட்டால்…?
வாய் மூடி விளைவுகளை அனுபவிக்க வேண்டியது தான்.

கடந்த 10 ஆண்டுகளில் வாக்காளர் பட்டியலில் புதிதாக
இடம்பெற்ற இளையவர்களுக்கு இந்த புராணம் தெரிந்திருக்காது.
2ஜி என்று எங்கோ கேள்விப்பட்ட நினைவு மட்டுமிருக்கும்.

பழைய வாக்காளர்களுக்கோ –
பலருக்கு இந்த விஷயம் மறந்து போயிருக்கும்.
மீதி உள்ளோருக்கு மரத்துப் போயிருக்கும்….!!!

இந்த அரிச்சந்திர புத்ரனின் மறந்துபோன அற்புத
சாகசங்களையெல்லாம் கண்டுபிடித்து, தோண்டியெடுத்து,
சமூகத்திற்கு நினைவுபடுத்த வேண்டியது –
சமூக நலனில் அக்கறை கொண்டவர்களது கடமை
என்று நினைக்கிறேன். எனவே, இவற்றைத் தொகுத்து தரும்
பணியை இங்கிருந்து துவக்குகிறேன். இது மேலும் சில
அத்தியாயங்களாகத் தொடரலாம்.

புலன் விசாரணை இழுத்தடிப்புகளிலும், நீதிமன்ற
நடவடிக்கைகளிலுமாக, இந்த “குசு-குசு” காவியத்திற்கான
அடிப்படையும், ஆதாரமும் கண்டு ஆண்டுகள் பல ஆகிவிட்டன.
எனவே, நினைவில் இருந்து தொகுத்து தருவது சிரமம்.
இதற்கு வலைத்தளங்களின் உதவியை துணைக்கு
இழுத்துக் கொண்டிருக்கிறேன்…. பல இடங்களிலிருந்தும்
தகவல்களை, கட்டுரைகளை சேகரித்துக் கொண்டிருக்கிறேன்.
எங்கிருந்து, எதை என்பதை இறுதியில் சம்பந்தப்பட்ட
அனைவருக்கும் நன்றியோடு தெரியப்படுத்துகிறேன்.

—————————————-

அமெரிக்காவின் “டைம்ஸ்” இதழின் 2011
-ஆம் ஆண்டுக்கான டாப் 10 அதிகார துஷ்பிரயோகப்
பட்டியலில் அந்த வருடம் 2ஜி அலைக்கற்றை
ஊழல் விவகாரம் இடம்பிடித்திருந்தது.

இந்தியாவில் ஊழல் ஒன்றும் புதிதாக நடந்துவிடவில்லை
என்றாலும் CAG – கணக்காய்வாளர் – காட்டிய இழப்பீட்டு எண்
அதுவரை இல்லாத அளவாக பிரம்மாண்டமாக இருந்தது.
176 என்கிற எண்ணுக்கு அடுத்து 10 பூஜ்யங்கள்.

ஒரு லட்சத்து எழுபத்தாறாயிரம் கோடி என்கிற எண்
ஒரு தோராயமாக, குத்துமதிப்பாக குறிப்பிடப்பட்ட தொகை
என்பது உண்மையே…

இந்த அளவிற்கு வேண்டாம் –
ஒரு லட்சம் கோடி…..? ஊஹூம்.
50,000 கோடி….? ஊஹூம்.
இறுதியாக சி.பி.ஐ. வழக்கில் காட்டிய முப்பத்திரெண்டாயிரத்து
சொச்சம் கோடிகள்…? ஊஹூம்….

சரி வெறும் 10,000 கோடி….? யெஸ்… வெறும் பத்தாயிரம் கோடி
என்றே வைத்துக் கொள்வோமே…

இந்த இடுகையை படிப்பவர்களில் எத்தனை பேர் –
ஒரு கோடியை பார்த்திருப்பீர்கள்…?

இத்தனை கோடியையும் கொள்ளையடித்துவிட்டு,
இன்று தைரியமாக ஒருவர் சவால் விடுகிறாரென்றால் –
அவர் அரிச்சந்திர புத்ரன் தானே….?

அப்படி என்னதான் செய்தார்…?
எப்படித்தான் அடித்தார் அத்தனை பணத்தை…?
பார்ப்போம்… அடுத்து வரும் அத்தியாயங்களில்….!!!

தொடரும் ….

.
—————————————————————————————————————————

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

14 Responses to அரிச்சந்திர புத்ரனின் “கிசு-கிசு” காவியம் ….(அத்தியாயம் -1)

 1. M.Subramanian சொல்கிறார்:

  K.M.Sir,

  Great Job. Need of the hour.
  Go Ahead. We stand with you
  in your CRUSADE.

 2. புதியவன் சொல்கிறார்:

  அப்படியே மறக்காமல், எப்படி, தங்களைக் காட்டிக்கொடுக்க வாய்ப்பிருந்த சாதிக் பாட்சாவை அகற்றினார்கள், கையெழுத்து போடக்கூடத் தெரியாத சகோதரன், அம்மா இவர்கள் பெயரில் தொழில்கள் ஆரம்பித்து நூறு கோடிக்குமேல் கணக்கு காண்பித்தார்கள் என்பதெல்லாம் வருமா? இல்லை, லட்சத்து 70 ஆயிரம் கோடி அடித்தவர்களை, வெறும்ன தொலைக்காட்சிக்காக 200 கோடி லஞ்சம் வாங்கிய ஸ்டாலின் என்பதோடு நின்றுவிடுமா? இதில் இந்தியா சிமெண்ட்ஸ் ஸ்ரீநிவாசன் பெயரும் அடிபடுமா இல்லையா? நிறைய தகவல்கள் அப்போது பத்திரிகைகள் எழுதின… பிறகு எல்லோருமே புத்தர் ஏசு என்று தங்களை அழைத்துக்கொள்ளத் துவங்கிவிட்டனர்.

 3. மெய்ப்பொருள் சொல்கிறார்:

  2ஜி வழக்கு என்பது பெரிதாக பேசப்பட்டு கடைசியில்
  ஊற்றி மூடப்பட்டது . Trial by Media என்று சொல்வதற்கு
  ஒரு உதாரணம் . வழக்கு ஆரம்பிக்கும் முன்
  மீடியாவில் பிரேக்கிங் நியூஸ் என வரும் .

  கேஸ் ஆரம்பித்த பிறகு ஞான உதயம்
  பிறக்கும் – இந்த கேஸை கடைசி வரை
  கொண்டு போனால் என்ன ஆகும் ?
  எதற்கு பெரிய இடத்து பொல்லாப்பு ?

  பேசாமல் வாபஸ் வாங்குவார்கள் .
  2ஜி மற்றுமல்ல , ஐ என் எக்ஸ் மீடியாவும் !

  • புதியவன் சொல்கிறார்:

   ஆனானப்பட்ட அமெரிக்காவிலேயே கென்னடியை யார் சுட்டார்கள், எதனால் என்று கண்டுபிடிக்கவே முடியவில்லை. அதனால், கென்னடி தன்னைத் தானே சுட்டுக்கொண்டார் என்று முடிவு கட்ட முடியுமா? பணத்தைச் சுருட்டியது ஆ.ராசா, கனிமொழி, ஸ்டாலின், தயாளு, கருணாநிதி என்று பத்திரிகைகளில் நிறைய செய்திகள் வந்தது. அந்தச் சமயங்களில் நடந்த அடாவடியான பணம் சுருட்டலுக்கு இன்னொரு உதாரணம் ராஜாத்தி அம்மாள் மவுண்ட் ரோடில் பெரிய சொத்தை (வோல்டாஸ்) சல்லி விலைக்கு வாங்கியதாக கணக்கு காண்பிக்க முடிந்தது என்று எழுதினார்கள். என்னைக்கேட்டால், மத்திய அரசு, மற்ற எல்லாவற்றையும் நிறுத்திவிட்டு, இந்த ஆக்டோபஸ் குடும்ப ஊழல்களை எக்ஸ்போஸ் பண்ணுவதில் முனைந்தால் அது இந்திய அரசியல்வாதிகளுக்கு ஒரு எச்சரிக்கையாகவும் இருக்கும், தமிழகத்துக்கு பெரிய நன்மை செய்ததாகவும் இருக்கும்.

 4. tamilmani சொல்கிறார்:

  The man who swindled crores of rupees speak as a saint . These people want to capture power in Tamilnadu.Please expose these people. Yes it is now or never situation.

  • புதியவன் சொல்கிறார்:

   திருட்டில் தப்பிப்பதற்கான அடிப்படை சூத்திரம், தங்கள் மேலிடத்திற்கும் திருட்டில் அவர்களுக்குள்ள பங்கைக் கொடுப்பது. இதைத்தான் ஆ ராசாவும், ஏன்… பத்திரத்துறை, தாசில்தார் அலுவலகங்களும் செய்கின்றன. அதனால்தான் ஸ்டாலின் கடைசிவரை திருடனுக்கு தேள் கொட்டினதுபோல அமைதியா இருப்பார். அவரால் வெளிப்படையாக பேச முடியாது. ஆதரித்தே தீரவேண்டிய கட்டாயம்

 5. rrscbe சொல்கிறார்:

  காவிரி மைந்தன் சார், 1,75,000 கோடி ரூபாய் இந்த நச்சு கும்பல் ஊழல் மூலம் கொள்ளை அடித்த பணமா அல்லது இவர்களது ஊழலால் அரசுக்கு ஏற்பட்ட இழப்பா? தயவு செய்து தெளிவு படுத்துங்கள.

  • புதியவன் சொல்கிறார்:

   உங்க கடைப் பையனை நம்பி கடைல விட்டுட்டுப் போறீங்க. அவன் 2000 ரூபாய் பெறுமான ஃபேன்களை, இன்னொரு சில்லரை கடைக்கார்ருக்கு 200 ரூபாய்க்கு விற்றுவிட்டு அவன் தனக்கு 100 ரூபாய் பெற்றுக்கொள்கிறான். இப்போ, பையன் திருடியது 2000 ரூபாயா 100 ரூபாயா? உங்களுக்கு நஷ்டம் 1800 ரூபாய் என்று சொன்னால் பையன் இன்டேரக்டா உங்களிடமிருந்து திருடியது 1800 ரூபாய் என்று சொல்வது சரிதானே

   • rrscbe சொல்கிறார்:

    திரு. புதியவன் சார் உதாரணத்துடன் தங்கள் அளித்த விளக்கத்திற்கு மிக்க நன்றி.
    நாட்டுக்கு ஏற்பட்டஇழப்பான 1,75,000 கோடி பணத்தை
    திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அரசியல் தலைவர்கள், அமைச்சர்கள், அவர்கள் கீழ் பணிபுரிந்த அதிகாரிகள், வியாபார பெரும் முதலைகள் அனைவருமாக சேர்ந்து சுருட்டிக்கொண்டார்கள்.
    என் புரிதல் சரிதானே ?

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   rrscbe,

   இரண்டுமே…!!!

   இடுகைத் தொடர்
   முழுவதையும் படியுங்களேன்…
   மிகவும் புத்திசாலித்தனமாக
   அடிக்கப்பட்ட,
   பங்குபோட்டுக்கொள்ளப்பட்ட
   கூட்டுக் கொள்ளை –
   என்பது புரிய வரும்.

   .
   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

   • rrscbe சொல்கிறார்:

    ிரு.காவிரி மைந்தன் சார், தங்களின் விளக்கத்திற்கு மிக்க நன்றி தங்களுடைய இந்த தொடர் பதிவில் இப்பெரும் ஊழலில் பங்கு வகித்த காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பெரும்(கரும்)புள்ளிகளை பற்றியும் எழுத வேண்டும் என்று கேட்டுகொள்கிறேன்.

    • புதியவன் சொல்கிறார்:

     உங்களுக்கு ஏன் காங்கிரஸ் விஷயத்தில் “பசி”? முதலில் மாட்டிக்கொண்ட திமுக தலைகளையும், அப்பா செய்த தவறினால் திகார் அனுபவம் பெற்ற கனிமொழி, வட இந்தியா பக்கம் மறந்தும் திரும்பிப் பார்க்காத கருணாநிதியை, வீல் சேர் சகிதமாக திகார் சிறையின் வாசலில் காத்திருந்தது என்று ஒவ்வொன்றாக வரும்….. அப்போது காங்கிரஸ் தலைகளும் மாட்டுகிறதா என்று பார்க்கலாம்.

     • Selvadurai Muththukkani சொல்கிறார்:

      புதியவன் அவர்கள் கூறியுள்ள உதாரணத்தில் எனக்கு மாற்றுக்கருத்து உள்ளது. அந்தப்பையன் விற்றது ஒரு பொருளல்ல. மாறாக பணம் சம்பாதிக்க வகை செய்யும் ஒரு உரிமை என்று வைத்துக்கொள்ளுவோம். உதாரணமாக அந்த கடை உள்ள கட்டிடத்தின் மீது ஒரு விளம்பர போர்டு வைத்துக்கொள்ளும் உரிமை என்று எடுத்துக்கொண்டால் அந்த கட்டிடத்தின் இருப்பிடத்தைப் பொறுத்து அதன் மதிப்பு வேறுபடும். அந்த இடத்தை பயன்படுத்தி விளம்பரம் மூலம் பணம் சம்பாதிக்கும் ஆற்றல் பெற்றவர்களுக்கு அவர்களின் ஆற்றலுக்கு ஏற்றாற்போல் அந்த மதிப்பீடு கூடும் அல்லது குறையும். எனவே அந்த உரிமையினை விற்கும் பொறுப்பு அந்த பையனிடம் கொடுக்கப்பட்டால் பலபேரிடம் விசாரித்து அதிகம் கொடுப்பவர்களுக்கு அந்த உரிமையை ஒப்படைப்பதே அந்த பையனுடைய கடமை. அதிகபட்சமாக அந்த உரிமையை ரூபாய் ஆயிரம் முதல் ரூபாய் இரண்டாயிரம் வரை விற்கலாம் என்று வைத்துக்கொள்ளுவோம். ஆனால் அந்தப் பையன் அந்த உரிமையை ஒருவருக்கு ரூபாய் இருநூறுக்கு விற்று விட்டான். காரணம் கேட்டால் முதலாளி எந்த முயற்சியும் இன்றி முதலில் வருபவருக்கே விற்றுவிடலாம் என்று கூறியுள்ளதாகக் கூறுகிறான் என்று வைத்துக்கொள்ளுவோம். இதனால் முதலாளிக்கு நிச்சயம் நஷ்டம் தான். இந்த சூழ்நிலையில் கீழ்க்கண்ட கேள்விகள் எழுகின்றன!!
      1. முதலாளி அவ்வாறு உண்மையிலேயே கூறி இருந்தாரா?
      2. முதலாளிக்கு இப்போது ஏற்பட்டது நஷ்டம்தானா? நஷ்டம் என்றால் அதன் அளவு என்ன?
      3. “அந்த உரிமையை ரூபாய் ஆயிரம் முதல் ரூபாய் இரண்டாயிரம் வரை விற்கலாம்” என்பது ஒரு ஹேஷ்யம் தானே!! உண்மையில் அதன் மதிப்பு என்ன? அதை எப்படி தெரிந்துகொள்வது?
      4. தவறு அந்த பையன் மீதா அல்லது முதலாளி மீதா?
      5. முதலாளியை வழிநடத்தும் கடமை அந்த பையனுக்கு உள்ளதா? அவன் சொன்னாலும் அவர் கேட்பாரா?
      இவை போன்ற பல கேள்விகள் எழுகின்றன. இவற்றுக்கெல்லாம் பதில் தெரிந்தால் 2G ஐ பற்றி சரியான புரிதல் உண்டாகும்!!

 6. பிங்குபாக்: (அத்தியாயம் -2) – அரிச்சந்திர புத்ரனின் “கிசு-கிசு” காவியம் ….!!! | வி ம ரி ச ன ம் – காவிரிமைந்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.