ஆ. ராசா’வின் அகால மரணமடைந்த ஆருயிர்த்தோழர், சாதிக் பாட்சா’விற்கு இது சமர்ப்பணம்….

….
….

….

….

ஆ. ராசா’வின் அகால மரணமடைந்த ஆருயிர்த்தோழர், சாதிக்
பாட்சா’விற்கு இது சமர்ப்பணம்….
(அல்லது) –

தலைப்பை இப்படி வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளலாம்….
“கெட்டிக்காரன் பொய்யும் புளுகும் எத்தனை நாளுக்கு….?”
———————–

ஆ.ராசா இந்நாட்களில் வீறுகொண்டெழுந்து, தான் தான்
உலகத்திலேயே பெரிய உத்தமர் என்று பேசி, அனைவரையும்
சவால் விட்டு ஊர்வலம் வந்துகொண்டிருக்கிறார்.

ஆங்கிலத்தில் சொல்வது உண்டு – “the best defense is a
good offense…!!!” அது தான் அவரது கொள்கை என்பது
நமக்குப் புரிகிறது.

2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு இன்னும் முடிவடையவில்லை;
டெல்லி உயர்நீதிமன்றத்தில் அப்பீல் விசாரணை நடந்து
வருகிறது.

இண்டியா டிவி நடத்தும் “ஆப் கீ அதாலத்” (உங்கள் நீதிமன்றம் )
நிகழ்ச்சி மிகவும் புகழ்பெற்ற ஒரு நிகழ்ச்சி. ரஜத் சர்மா நடத்தும்
இந்த நிகழ்ச்சியில் புகழ்(…!!!)பெற்ற மனிதர்களை அழைத்து
பொது பார்வையாளர்களின் முன்னிலையில் விசாரணை
நடத்துவது வழக்கம்.

2014, மே மாதம் நடந்த நிகழ்ச்சியில் 2ஜி புகழ் ஆ.ராசா
விசேஷ விருந்தினராக அழைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டார்.

கேள்விகளும், பதில்களும் மிகவும் சுவாரஸ்யமானவை.
ஹிந்தி தெரிந்தவர்களுக்கு இது இன்னும் கூடுதல் சுவாரஸ்யமாக
இருக்கும்….

ஆனால், ஹிந்தி தெரியாதவர்கள் கூட,
ஆங்கிலத்தில் தரப்படும் பதில்களின் மூலம் கேள்வியை சுலபமாக புரிந்துகொள்ள முடியும் என்பதால் கவலைப்படாமல் பார்க்கலாம் …)

இதில் தமிழக மக்களுக்கு இதுவரை தெரியாத ஒரு புது
விஷயம் –

ஆ.ராசா’விற்கு ஹிந்தி அமர்க்களமாகப் புரிகிறது.

ஹிந்தியின் கடினமான வார்த்தைகளைக்கூட புரிந்துகொண்டு,
உடனடியாக (ஆங்கிலத்தில்) பதில் சொல்கிறார்….

நேரம் இல்லாதவர்களுக்கு ஒரு பகுதியை மட்டும்
சாம்பிளுக்கு கீழே தந்திருக்கிறேன்…. முழு விசாரணையையும்
தாராளமாகப் பார்க்கலாம்… உடனடியாக இல்லையென்றாலும்,
நேரம் கிடைக்கும்போது அவசியம் பாருங்கள் ஆ.ராசாவை
(-திமுகவின் கொள்கை பரப்பு செயலாளரை) – எப்படிப்பட்டவர்
என்பதை – புரிந்து கொள்ள உதவும்…

முதலில் சாம்பிள் –

ஆரம்ப நாட்களில் சைக்கிளில் திமுக ஆபிசுக்கு
சென்று கொண்டிருந்த நீங்கள் இன்று BMW காரில் செல்லும்
அளவிற்கு வளர்ந்த விதம் எப்படி….?

A.Raja in aap ki adalat –
May 5, 2014
——————————————–

—————-
இது முழு விசாரணை –
….

————————————————————————-

பின்சேர்க்கை –

ஆ.ராசாவைப்பற்றி மேலேயுள்ள இடுகையை
நான் எழுதிய பிறகு தான் இதைப் பார்க்கிறேன்….
பிச்சு ஒதறுகிறார் ராஜேந்திர பாலாஜி –
அனைவரும் ரசிக்க இதையும்
பின்சேர்க்கையாக சேர்க்கிறேன்….
(அவரது எல்லா கருத்துகளுடன் நான்
ஒத்துப்போகாவிட்டாலும் கூட ….)

…..

…..

.
——————————————————————————————————————————————–

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

11 Responses to ஆ. ராசா’வின் அகால மரணமடைந்த ஆருயிர்த்தோழர், சாதிக் பாட்சா’விற்கு இது சமர்ப்பணம்….

 1. GOPI சொல்கிறார்:

  நன்றி காவிரிமைந்தன் சார்.

  உடனடியாக ராஜேந்திர பாலாஜி ரசிகர் மன்றம்
  ஆரம்பிக்கலாமா என்று யோசித்துக்
  கொண்டிருக்கிறேன். !

 2. புதியவன் சொல்கிறார்:

  இந்திய நீதிமன்றங்களிலும் சட்டங்களிலும் நான் வெகுவாக நம்பிக்கை இழக்க வைப்பது, ஒரு வேலையும் தெரியாமல், மாதம் ஆயிரம் ரூபாய்க்கு சிங்கி அடித்துக்கொண்டிருந்தவர்களெல்லாம் தொழிலதிபர், பெரிய வியாபாரத்தில் சம்பாதித்தவர்கள் என்று ஆயிரம் கோடிக்கு அதிபதியாகின்றனர். அப்படி ஆகிவிட்டு, வெளியில் புத்தனுக்குத் தம்பி போல பேசுகின்றனர். இதில் திமுக வினரைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். கையெழுத்து போடக்கூடத் தெரியாத இவரின் உறவினர்கள் தொழிலதிபர்கள், நூறு கோடிக்குமேல் சொத்து சேர்த்திருக்கின்றனர். அதை இந்தியாவில் யாராலும் கண்டுபிடித்து கழுத்தைப் பிடிக்க முடியவில்லை. கொள்ளைக்காரர்களெல்லாம் அரசியல் கட்சிகளின் பொறுப்பில் இருந்துகொண்டு மற்றவர்களுக்கு அட்வைஸ் பண்ணுகிறார்கள். திமுகவில் யாரையும் எடுத்துக்கொள்ளுங்கள், பொன்முடி, துரைமுருகன், டி.ஆர்.பாலு, ஜெகத்ரட்சகன்,வீரபாண்டி ஆறுமுகம், பெரியசாமி,நேரு….. அனைவரும் எப்படி இத்தனை ஆயிரம் கோடிகளுக்கு அதிபதி ஆனார்கள் என்பது நம் சட்டங்களால், பல்வேறு துறைகளால் கண்டுபிடிக்க முடியாததுதான் நம் மக்களாட்சியின் வீழ்ச்சி என்று நான் நினைக்கிறேன்.

  ஆனாலும், கடலுள்ளளவும், கார் உள்ளளவும், 1 லட்சத்து 76,000 கோடி ரூபாய்கள் யார் சுருட்டினார்கள், யாரை திஹார் சிறையில் அந்தக் குற்றச்சாட்டிற்காக உள்ளே வைத்திருந்தார்கள் என்பதை ஒரு இந்தியனும் மறக்க மாட்டான், ராஜீவ் காந்தியின் போபர்ஸ் ஊழல் போல.

 3. கார்த்திகேயன் பழனிசாமி சொல்கிறார்:

  சாதியின் பெயரைச் சொல்லி சுலபமாக தப்பித்துவிடுவார்கள்.

 4. புதியவன் சொல்கிறார்:

  அமைச்சர் இராஜேந்திர பாலாஜி ….. கட்சியில் படிப்படியாக முன்னேறியவர். அவருடைய பேச்சுகளை முன்னமேயே படித்திருக்கிறேன். மிக நல்லா பேசியிருக்கிறார். ரசித்த பேச்சு.

 5. மெய்ப்பொருள் சொல்கிறார்:

  அரசியலில் ஒருவரை ஒருவர் தூற்றுவதும் , மட்டம்
  தட்டி பேசுவதும் இயல்பு . இதற்கென்றே ஆட்கள்
  இருக்கிறார்கள் . எம் ஜி ஆர் காலத்தில் குமாரி
  வளர்மதி (அப்போது அவர் குமாரி ) பேசிய
  பேச்சை மதுரைப்பக்கம் இன்று கூட ஞாபகம்.
  Hint ஒத்தைக்கு ஒத்தை வரியா ? என்று etc etc

  கலைஞர் , எம் ஜி ஆர் இருவருமே யாரையுமே திட்டி
  பேசியதில்லை . அதற்கெனவே தனியாக ஒரு
  டிபார்ட்மெண்ட் !

  அண்ணன் மதுரை முத்து ,தம்பி தருமலிங்கம் ,
  குமாரி வளர்மதி என பல பீரங்கிகள் இருந்தன .

  திரு பாலாஜி உணர்ச்சி வசப்பட்டு பேசுகின்றார்.
  ஆனால் இன்றும் அவர் சொந்த ஊரான
  ஸ்ரீவில்லிபுத்தூரில் நல்ல பெயர் உண்டு .

  கருணாநிதி , ஜெயா என்று இருவருமே இல்லை .
  இந்நேரத்தில் இருவரையும் இழிவாக பேசமுடியாது .

  ராசா ஜெயா பெயரை ரிப்பேர் செய்கின்றார் .
  அம்மா நல்லவரு என்பதை விடுத்து அம்மா A -1 என்கிறார் .

 6. tamilmani சொல்கிறார்:

  ஸ்டாலின் , ரஜினி பிரஸ் பிரஸ் மீட் வைத்த அன்று எல்லா
  தொலைக்காட்சிகளும் அவரை கவர்செய்ய துவங்க அதை தடுக்கும்
  விதமாக அறிவாலயத்தில் ராசாவை தமிழக முதல்வர் அவர்களை
  பற்றி ஆபாசமாக பேச வைத்தார் . ராஜேந்திர பாலாஜி சும்மா விடுவாரா ,
  பிய்த்து உதறி விட்டார். TIT FOR TAT . 2ஜி வழக்கு ,சுப்ரீம் கோர்ட்
  நிர்ப்பந்தனையால் காங்கிரஸ் அரசு நடவடிக்கை எடுத்தது . காங்கிரஸ் தலையீட்டால் CBI
  வேண்டுமென்றே தேவையான சாட்சியங்களை தராமல் காங்கிரஸ்
  ஆதரவு பெற்ற சைனியால் ராஜாவும் கனிமொழியும் விடுதலை செய்யப்பட்டனர்.
  மேல் முறையிட்டு விசாரணை முடிவுற்றால் மீண்டும் இருவரும் சிறை செல்ல
  வாய்ப்புண்டு. காலங்கள் மாறினால் ,காட்சிகளும் மாறும்.

 7. மெய்ப்பொருள் சொல்கிறார்:

  2ஜி வழக்கில் தி மு க பெயர் நாசமானது – கூடவே
  மன்மோகன் சிங் அரசும் கெட்ட பெயர் வாங்கியது .

  ‘1,76,000 இலட்சம் கோடி’ ப்பு என்றெல்லாம் CAG
  சொன்னது -ஆனால் சிபிஐ நிரூபிக்கவில்லை .

  இந்த வழக்கு முதலில் காங்கிரஸ் காலத்திலும்
  பின் பா ஜ க காலத்திலும் நடந்தது .

  ஆ ராசா வாய்தா வாங்காமல் வழக்கை சந்தித்தார் .
  சிபிஐ வாய்தா மேல் வாய்தா வாங்கியது .

  முதலில் கடுமையாக நடந்த நீதிபதியும் குற்றம்
  சாட்டப்பட்டவர்களுக்கு பெயில் கொடுத்தார் .

  நான் ஆண்டுக்கணக்காக காத்திருந்தேன் .
  சிபிஐ ருசு அளிக்க தவறிவிட்டது என்றார் .

  சிபிஐ பின் வாங்கியதற்கு காரணம் காங்கிரஸ் அல்ல .
  அவர்களிடம் பேப்பர் இல்லை ! ஆர்வக்கோளாறு !

  இப்போது ப சிதம்பரம் மேல் வழக்கு இருக்கின்றது .
  இதுவும் புஸ்வானம்தான் என சொல்கிறார்கள் .

 8. GOPI சொல்கிறார்:

  கே.எம்.சார்,

  ராசாவைப்பற்றீ இன்னும் கொஞ்சம்:
  பாண்டே ‘சிறப்பாக’ செய்திருக்கிறார்;

 9. shiva சொல்கிறார்:

  Mr Raja talks as if he’s innocent and everything was done as per procedure. Is it true.
  Pl go thru the following (from a telecom industry expert) immediately after 2012 auction:

  In 2007, there were 575 applicants. In the just-concluded auction, (2012), the number of applicants didn’t even cross the double-figure mark. In 2007, there were 240 million existing subscribers with at least 750 million Indians who had yet not switched to mobile phones up for grabs. By 2012 the potential new customers number came down between 40 and 100 million. Because between 2007 and 2012, more than 600 million untapped subscribers have already bought the mobile connections. More than 90 percent of them have gone to the incumbent operators, i.e. those who were in existence before Raja distributed the 122 licences (a majority of the new licencees only hoarded the spectrum and never rolled out the services, thus forcing the new customers to go to the incumbents). In 2007, the average monthly revenue per mobile user was approximately Rs 300. Today, it is less than Rs 100. In other words, the revenue margins for telecom companies have sharply declined

  The question now (2012) is, who in his right mind would pay Rs 40,000 crore for 5 MHZ pan-India spectrum and then invest another $6-7 billion to set up shop in India? At least five major global players were eager to start operations in India in 2007, and willing to pay the market price for the spectrum by participating in an open and transparent bidding. Their CEOs were making the rounds of New Delhi to explore the investment possibilities. Those were also the days when the global recession had yet not set in, the Indian stock markets were at an all-time high, the country’s GDP was growing at more than 9 percent per annum and India was a preferred investment destination.

  But what did Raja do? He turned these companies away. He told them that they would have to stand in the first-come first-served queue, which the companies knew they would never be able to beat and which, by the way, was already rigged in favour of Raja’s cronies. A few international players such as Telenor and Etisalat made a backdoor entry by buying stakes in companies such as Unitech and Swan that existed only on paper. Four years later, both the companies have written off the billions of dollars they had poured in the Indian telecom market.

  Today, when the corporates are strapped for funds, telecom is no more a sunrise sector and India’s standing as an investment destination lies in tatters, the government bizarrely set the base price of 2G spectrum at Rs 40,000 crore. Sibal and his Cabinet colleagues ignored the industry’s pleas of lowering the base price to Rs 7,000 crore (when the base price for 3G auction was set at Rs 3,500 crore and still generated record revenue). Also, no tangible efforts were made to reassure or woo foreign telecom majors, who alone are in a position to invest more than $10 billion. Instead, the government placed only a little more than 40 percent of the total spectrum vacated from the cancellation of the licences given by Raja and thus created an artificial scarcity.

  Given these circumstances, the auction was doomed to collapse. But what is more disturbing is that this government was more keen on proving the CAG and the SC wrong, than putting key sectors such as telecom back on track. The failure of the 2G bidding does not prove the CAG wrong. Nor does it prove the government right. Nobody would know the revenue that could have been realised had Raja adopted a just and fair policy. The loss to the exchequer would always remain in the realm of conjecture. But what we do know is that one of the key triggers for the crisis in India’s economy and democracy was the 2G scam.

  My comments (contd)
  As a layman the basic question is that why was the last date changed. Was it indicated in the tender documents that the department has the right to change(pre-pone) the last date if enough responses have been received, as the spectrum availability is limited.
  Mr Raja definitely brought in revolution but not the one which he’s claiming but of a different kind.

  Mr Raja also tries to put the strained relations between DMK & Congress to Srilanka Tamil issue, which happened in 2009, whereas the arrests in spectrum case was in 2011.

  • புதியவன் சொல்கிறார்:

   அரசியல் கொள்ளையர்களின் ஒரே நம்பிக்கை நம் நீதிமன்ற நடைமுறைகள் மற்றும் அரசு அதிகாரிகளின் நேர்மை. என்னென்ன தகிடுதத்த வாதங்களில் கனிமொழி ஈடுபட்டார்? அவர் கணவன் சிங்கப்பூர்லதான் எப்போதும் இருக்கார். பையனை தான் கவனித்துக்கொள்ள வேண்டும், அதற்காகவாவது ஜாமீன் தரணும் என்றெல்லாம் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு நாடகம் ஆடினாங்க. அப்படித்தான் இந்த இருவரும் திகார்லேர்ந்து வெளில வந்தாங்க. இப்போ நேர்மையானவங்க மாதிரி வேடம் போடறாங்க.. காரணம், அடிச்சதில் பெரும்பகுதி யாரிடம் இருக்கோ அவங்க காப்பாத்துவாங்க என்ற நம்பிக்கைதான்.

   சர்க்காரியா கமிஷன் மிகச் சரியாகச் சொன்னது. இவங்க விஞ்ஞான ரீதியாக கொள்ளையடிக்கறவங்க என்று.

 10. மெய்ப்பொருள் சொல்கிறார்:

  2G வழக்கு மலையை குடைந்து எலியை பிடித்த
  கதை மாதிரி ஆனது . ஆண்டி ராசா பிராடாக
  இருக்கலாம் . ஆனால் ரூ 176000 கோடி
  கொள்ளையடிச்சார் என்பது ஓவர் !

  வழக்கு விசாரணை உச்ச நீதி மன்றத்தின்
  மேற்பார்வையில் நடைபெற்றது . ராசா மற்றும்
  பலருக்கும் பெயில் வழங்கப்படவில்லை .
  கனிமொழி 9 மாதம் , ராசா 15 மாதம் திஹார்
  சிறையில் இருந்தார்கள் .

  திரு சிவா குறிப்பிடும் ஏலம் 2012 ம் ஆண்டு
  நடைபெற்றது . அவ்வளவு பணம் வராது என்று
  தெரிந்தே ஏலம் நடந்தது . அப்போதிய அமைச்சர்
  திரு கபில் சிபலுக்கு வேறு வழியில்லை .
  உச்ச நீதி மன்றம் கண்டிப்பு காட்டியதில்
  ராசா அளித்த எல்லா லைசென்சுகளும் கான்சல்
  செய்து மறுபடியும் ஏலம் விடப்பட்டது .

  2 G CAG என்றழைக்கப்படும் தணிக்கை
  அதிகாரியை கேலிக்கூத்தாக்கிவிட்டது .
  CAG ஜனாதிபதியால் நியமிக்கப்படும் ஒரு
  தணிக்கை அதிகாரி – பாராளுமன்றத்திற்கு விவரங்கள்
  வரவேண்டும் என்பதற்காக ஏற்பட்டது .

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.