டெல்லியின் நடுங்கும் குளிரில் – இன்னொரு “ஜல்லிக்கட்டு” போராட்டம்

….

….


….

முக்கியமாக பஞ்சாப், ஹரியானா, ஆகிய மாநிலங்களைச்
சேர்ந்த விவசாயிகள் டெல்லி எல்லையில், நுழைவு
வாயில்களில் டிராக்டர்களில் தங்கியிருந்து, 3 புதிய விவசாய
சட்டங்களை எதிர்த்து போராட்டம் நடத்துகின்றனர்.

அவர்களே கொண்டு வந்துள்ள, ஆட்டா, டால்டா, மிளகாய்,
வெங்காயம், உருளைக்கிழங்கு போன்ற பொருட்களைக் கொண்டு
அவர்களில் சிலரே சுடச்சுட உணவு தயாரிக்க, அனைவரும்
பகிர்ந்து கொள்கிறார்கள்.

12-13 டிகிரி குளிரில், வீசும் கடும் குளிர்க்காற்றில்,
இரவில் டிராக்டர்களின் அடியில் படுத்து உறங்குகிறார்கள்….

சென்னையின் “ஜல்லிக்கட்டு” -க்குப் பிறகு இந்தியாவும்,
உலகமும் இன்னொரு வித அமைதி வழி போராட்டத்தை
பார்த்துக்கொண்டிருக்கின்றன….

வன்முறை இல்லாத, வலிமையான மக்கள் போராட்டத்திற்கு
இது ஒரு எடுத்துக்காட்டு.

போரட்ட களத்திலிருந்து சில காணொலிகள் கீழே –

——————————————————-

பேச்சு வார்த்தைக்கு அழைத்த அரசு கொடுத்த டீ, உணவை
ஏற்றுக்கொள்ள மறுத்து விட்டு, அவர்களே கொண்டு வந்த உணவை
பகிர்ந்து கொள்ளும் காட்சிகள் ….பலர் தரையில் உட்கார்ந்து
சாப்பிடுவதையும் பார்க்கலாம்.

…..

…..

…..

…..
இது டெல்லி குருத்வாரா ( சீக்கிய வழிபாட்டுத் தலம்) ஒன்றில்
ரொட்டியும், டால் வகையறாவும் தயாரிக்கப்பட்டு
போரட்ட களத்திற்கு அனுப்பப்படும் காட்சி –

……

.
————————————————————————————————————

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

8 Responses to டெல்லியின் நடுங்கும் குளிரில் – இன்னொரு “ஜல்லிக்கட்டு” போராட்டம்

 1. புவியரசு சொல்கிறார்:

  விவசாயத்தையும் பெரும் வியாபாரமாக்கி
  கோடிக்கணக்கில் பணம் பண்ணத் துடிக்கும்
  அடானி, அம்பானி போன்ற பண முதலைகள்
  ஒரு பக்கம்

  விவசாயமே உயிர்நாடியாக வாழ்ந்து
  உயிர் வாழ்ந்து கொண்டிருக்கும் ஏழை
  குறு விவசாயிகள் இன்னொரு பக்கம்

  பணத்தைக் கொட்டித்தர காத்திருக்கும்
  அடானி, அம்பானிகளுக்காக கொண்டு வரப்பட்ட
  புதிய விவசாய சட்டங்களை வாபஸ் பெற
  எப்படி மனம் வரும் ?

  பேச்சு வார்த்தை என்கிற பெயரில் இழுத்தடித்து
  காலம் தாழ்த்தி, போராட்டக்காரர்களின்
  மனோதிடத்தை உடைக்கும் பரிசோதனை
  நடக்கிறது.

  மிருக பலமாக மெஜாரிடியை வைத்துக்கொண்டு
  மக்கள் விரோத சட்டங்களை கொண்டு வந்தால்
  மக்கள் எப்படி ஒருங்கிணைந்து போராடுவார்கள்
  என்பதற்கு மிகச்சிறந்த உதாரணம் இது.

  எது வெல்லப்போகிறது ?

 2. rramanisankar சொல்கிறார்:

  Indian_abroad in Twitter:

  Adani, Ambani & other corporates had an eye on massive food grain market of India.They had few problems:

  Problem 1 :
  States had different rules & regulations to buy food grains from farmers. It was difficult for the corporates to handle so many states with so many different regulations and taxes
  Modi Solution:
  Took control from states and made one act for the whole country. Corporates happy now.

  Problem 2:
  Corporates will buy crops and store them. But Essential Commodity act will stop them for storing crops for long time, as it increase prices in market.
  Modi Solution:
  Food crops will not come under Essential Commodity act and can be stored for longer period. Corporates again happy.

  Problem 3
  It was hard to determine that what type of crop will be grown by farmers.
  Modi Solution:
  Contract farming for farmers where they will be told by corporates to grow what kind of crop. Corporates again happy.

  Problem 4 :
  How Corporates will handle court cases if anything goes wrong against farmers.
  Modi Solution:
  Farmers can not go to courts. They will go to SDM and DC.
  Corporates again happy as they can bribe them
  They say bills are in favor of farmers. ….

  Whoever wrote this please tell us so that we can give deserve credit.

  • புதியவன் சொல்கிறார்:

   உங்களுடய summary ஓரளவு சரியாகத்தான் இருக்கிறது. விவசாயச் சட்டங்கள், விவசாயிகளுக்கோ இல்லை பொதுமக்களுக்கோ எப்படி உபயோகமாக இருக்கும் என்றும் தெரியவில்லை.

   எல்லோரும் சொல்றாங்க, மிடில் மென், அதாவது ஏஜெண்ட்கள் 8 சதவிகித கமிஷன் போகுது என்பதால் அவங்கதான் இந்தப் போராட்டங்களை ஏற்பாடு செய்கிறாங்கன்னு. அப்படியே இருந்தால்தான் என்ன தவறு (அதை நான் முழுவதுமா நம்பவில்லை என்றாலும்). அந்த மிடில் மென் என்று சொல்பவர்கள், பெரிய கூட்டம், அவங்களும் மிடில் கிளாஸ்தான். அவங்களோட வாழ்வாதாரமும் இருக்கு. நமக்கு ரிலையன்ஸ், மோர் போன்ற சில பணக்காரங்க மட்டும் முக்கியம் கிடையாது.

   Two things are very disturbing.
   1. மிகச் சமீபத்துல ஒரு கிலோ 22 ரூபாய் வீதம் ப்ரீமியம் அரிசி, சைனாவுக்கு சில டன்கள் ஏற்றுமதி செய்யும் காண்டிராக்ட் கிடைத்தது (சீனா நம்மிடம் இருந்து சோர்ஸ் பண்ணுது). நம் கையில் அந்த அரிசி வரும்போது அதன் விலை கிலோ 70க்கும் மேல்.
   2. சமீபத்தில் அமெரிக்க விவசாயப் பண்ணைகள் பற்றிப் பார்த்த டாகுமெண்டரி மற்றும் செய்திகள். When corporate becomes bosses, they will dictate what should be grown, where it should be diverted. They won’t think about the nation or nationals.

   பிரதமர் அவர்கள் இது சட்டமாகிடுச்சு, யாரும் எதையும் பதுக்க முடியாது என்று சொன்னதன் பிறகுதான் வெங்காயம் கிலோ 100 ரூபாயைத் தாண்டியது (அதற்கு சில வாரங்களுக்கு முன் 6 கிலோ 100 ரூபாயாக இருந்தது)

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


   rramanisankar,

   அழகான, அர்த்தமுள்ள பின்னூட்டம்.
   எழுதியவருக்கும், அதை இங்கு
   கொண்டு வந்து தந்த உங்களுக்கும்
   எனது நன்றியும் பாராட்டுகளும்.

   NOW – there is PROBLEM 5 –

   which is very peculiar,
   unseen and unexpected by those
   in power.

   சட்டங்கள் என்பவை மனிதருக்காகத்தான்.
   அதுவும் இந்த மாதிரி விவசாயிகள் ஸ்பெஷல்
   சட்டங்கள் எல்லாம் – விவசாயிகளை
   கலந்துபேசி, அவர்களுக்கு எது நல்லதோ,
   அதைத்தான் சட்டமாக கொண்டு வந்திருக்க
   வேண்டும்.

   மெஜாரிடி இருந்தால், எதை
   வேண்டுமானாலும் சட்டமாக்கி விடலாம்
   என்பதற்கு முதல்முறையாக விடப்பட்டுள்ள
   மிகப்பெரிய சவால் இந்த போராட்டம்.

   சீக்கியர்கள் இயல்பிலேயே முரடர்கள்.
   அவர்கள் கோபம் கொண்டால், எதிர்கொள்வது
   மிகவும் சிரமம்… இப்போது கட்சிவேறுபாடின்றி
   அனைத்து சீக்கியர்களும் ஒன்று
   சேர்ந்திருக்கிறார்கள்.

   அதனால் தான் அரசு திணறுகிறது.
   விலைக்கு யாராவது கிடைப்பார்களா…?
   உடைக்க எதாவது வழியுண்டா…?
   அதற்கான கால அவகாசம் தான்
   இப்போது உண்டாக்கப்படுகிறது.

   நல்லதே – அதாவது நாட்டிற்கு – நடக்க
   வேண்டுவோம்.

   .
   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

 3. GOPI சொல்கிறார்:

  அன்புமணி அய்யாவுக்கு
  “ஒரு டெல்லி ரிடர்ன் டிக்கெட்
  பார்சல்”.
  “அறவழி” போராட்டத்தை
  அறிந்து வர !

 4. மெய்ப்பொருள் சொல்கிறார்:

  பா ஜ க இந்த விவசாய சட்டங்களை கொண்டு வந்த விதம்
  சரியில்லை . லோக்சபாவில் விவாதம் செய்ய விடவில்லை .
  ராஜயசபையில் குரல் மூலம் ஓட்டெடுப்பு நடந்தது .
  பாராளுமன்றத்தில் மிருக பலம் இருப்பதால் இது
  போல கலந்து ஆலோசிக்காமல் நடக்க முடிந்தது .

  தப்புக் கணக்கு போட்டுவிட்டார்கள் என தோன்றுகிறது .
  பஞ்சாபில் நீர் வளம் இருப்பதால் கோதுமை ,அரிசி
  போன்றவை விளைகின்றன . அவற்றை மண்டி மூலம்
  கொள்முதல் நடக்கின்றது .சுமார் 90 சதம் நெல் இங்கே
  விற்கப்படுகின்றது . நெல்லை விற்றவுடன் பணமும்
  கொடுக்கிறார்கள் .நம்ம ஊர் மாதிரி சுற்ற விடுவதில்லை .

  இப்போது அவர்கள் கேள்வி எம் எஸ் பி என்ற குறைந்த
  பட்ச விலை தொடருமா ? மண்டி என்ன ஆகும் ?
  சட்டத்தில் இது பற்றி ஒன்றும் இல்லை .

  காண்ட்ராக்ட் விவசாயம் அனுமதிக்கபடும் . அதே போல்
  கம்பெனிகள் நேரடியாக கொள்முதல் செய்ய முடியும் .
  விவசாயி மண்டிக்கு போகாமல் நேரடியாக விற்க முடியும் .
  பணம் வரவில்லை என்றால் கோர்ட்க்கு போக முடியாது .
  கலெக்டர் ஆபிஸ் போய் மனு செய்யலாம் .

  கோர்ட்க்கு போக முடியாது என சட்டம் போட முடியுமா ?
  இது செல்லுமா என கோர்ட்தான் சொல்ல வேண்டும் .
  அதே போல் விவசாயம் மாநில அரசின் கீழ் வரும் .
  அதில் மத்திய அரசு சட்டம் போட முடியுமா ?

  இனி உணவு பதுக்கல் சட்டம் கிடையாது !
  எல்லாம் இனி கம்பெனிகள் தீர்மானிக்கும் . இந்த
  சட்டங்களை யாரும் நம்பவில்லை – செய்த விதம் அப்படி .

  பஞ்சாபில் BJP /RSS பிரச்சாரம் எடுபடவில்லை
  ஏனென்றால் அங்கு முஸ்லிம்கள் அதிகம் இல்லை .
  எடுத்தெறிந்து பேசினால் அங்கு காரியம் நடக்காது .
  யாருகிட்ட ? என்று சண்டைக்கு வருவார்கள்

  கொஞ்ச நாளைக்கு BJP IT விங் வாயை மூடிக்கொண்டு
  இருந்தால் நல்லது .

 5. மெய்ப்பொருள் சொல்கிறார்:

  r ramanisankar please add to this :
  உழவர்கள் தங்கள் பொருட்களை நேரடியாக விற்க
  முடியாது .காய்கறி போன்றவை ஒழுங்கு முறை
  விற்பனை கூடத்தில்தான் (APMC ) விற்க முடியும் .
  வயலில் ஐந்து ரூபாவிற்கு வாங்கி நகரத்தில்
  இருபது ன்று விற்பனை ஆகும் .

  இதற்கு மாற்றாக மு க உழவர் சந்தை என்று
  கொண்டு வந்தார் . கிராமத்திற்கு ” டவுன் பஸ்”
  வசதியும் உண்டு .

  நெல் போன்றவை அரசால் கொள்முதல்
  செய்யப்படும் . இதில் குறைந்த பட்ச விலை MSP
  கிடைக்கும் .தமிழ் நாட்டில் இது போல
  நெல் கொள்முதல் மையம் எல்லா இடத்திலும் இல்லை .
  எல்லோருக்கும் MSP கிடைப்பது இல்லை .

  பஞ்சாப்பில் கிட்டத்தட்ட 90 சதம் மண்டி எனப்படும்
  கொள்முதல் நடக்கின்றது .இதில் ஆதார விலை உண்டு .
  மண்டியில் விற்க 2 சதம் வரி உண்டு .

  கம்பெனிகள் நேரடியாக கொள்முதல் செய்தால்
  ஆதார விலையும் , மண்டி வரியும் வராது .

  MSP என்ன ஆகும் ? இது ஒரு கேள்வி .
  பதுக்கல் சட்டம் கிடையாது – விலை வாசி என்ன ஆகும் ?

  ஏற்கனவே பருப்பு விலை தாறுமாறாக ஏற
  கம்பெனிகள் ஒரு காரணம் .எண்ணெய் விலை
  போன்றவை உழவர்களால் அல்ல , கம்பெனிகள்
  தீர்மானிக்கின்றன .

 6. சாமானியன் சொல்கிறார்:

  rramanisankar,

  இங்கு நீங்கள் தொகுத்துள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தும், கார்ப்பரேட்டுகளுக்கு தங்களது விவசாய பொருட்களை விற்க முன்வரும், மற்றும் அவர்களுடன் ஒப்பந்தம் செய்யும் பெரும் விவசாயிகளின் பிரச்சினைகளையே குறிக்கிறது.ஆனால் எனக்கு புரிந்த வரையில், விவசாயம் செய்யும் அனைத்து விவசாயிகளும், தங்களது அரிசியையும், கத்தரிக்காய்,தக்காளிகளையும் இது போல் முறையில் விற்பதில்லை. அவர்கள் நேரடியாகவே தங்களது பொருட்களை மக்களிடம் விற்று வருகிறார்கள். அவர்களுக்கு இந்த சட்டத்தால் ஏதேனும் பாதிப்பு உள்ளதா?
  இல்லையென்றால் இந்த சட்டம் ,இது கார்போரேட்டுக்கும் , அவர்களுடன் மட்டுமே வியாபார ஒப்பந்தம் செய்யும் விவாசாயிகளுக்கு மட்டும் தான் பிரச்சினையாக உள்ளதா.
  உங்களை போன்றவர்கள் விளக்கினால் எங்களுக்கு புரிந்து கொள்ள இயலும்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.