….
….
….
ரஜினிகாந்த் அவர்கள் அரசியலுக்கு வருவதாக
அறிவித்ததையொட்டி, துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி
அவர்களிடம் ஒரு பேட்டி காணப்பட்டிருக்கிறது.
செய்தியாளர்கள் கேட்கும் கேள்விகள் அனைத்திற்கும்
திரு.குருமூர்த்தி விளக்கம் அளிக்கிறார்… அவர் சொல்லும்
பதில்கள் ஏற்றுக்கொள்ளக்கூடியவையோ -இல்லையோ,
ஆனால் அவர் எந்த கேள்விக்கும் பதில் சொல்லாமல்
நழுவவில்லை என்பது திருப்தி அளிக்கிறது.
நமது தள வாசகர்களுக்கும் இத்தகைய கேள்விகள்
இருக்கலாம் என்பதால், அவர்களும் விளக்கம் பெற அந்த
காணொலியை இங்கே பதிப்பிக்கிறேன்.
……
…….
பின் குறிப்பு – வீடியோவில் 3.52 நிமிடத்தில் ஒரு தடங்கல்
ஏற்படுகிறது. அப்படி ஏற்பட்டால், 4.10 நிமிடத்திற்கு
நகர்த்தி வைத்தால், மீண்டும் தொடர்கிறது. இந்த
தடங்கல் ஒரிஜினல் வீடியோவிலேயே இருக்கிறது.
பார்ப்பவர்கள் தகுந்தமாதிரி நகர்த்திக் கொள்ளவும்.
.
—————————————————————————————————————————
I could see Mr.Gurumurthy’s clarity of thought. நம்ம ஊர் அரசியல்வாதிகள் யாருமே இந்த மாதிரி பேசுவது கடினம்.
ரஜினியால் மிகப்பெரும் தாக்கம் ஏற்படுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கணும். At the same time, சிங்கத்தின் குகைக்குள் சென்று அதன் பிடரியை உலுக்கியதுபோல, விஜயகாந்த், பாமக பெல்டில் நின்று சர்வ சாதாரணமாக வெற்றிபெற்றதை மறக்க முடியாது. அதுதான், ‘நல்லவங்க வரணும்’ என்று எதிர்பார்க்கும் மக்கள் நிறைய இருப்பதைக் காண்பித்தது (அதே ஊர்ல இப்போ விஜயகாந்த் நின்னால் வெற்றிபெற முடியாது, காரணம் மக்களுக்குத் தெரிந்துவிட்டது, ‘இவர் நாம் நினைத்தவர் இல்லை’ என்பது)