ரஜினியின் நேரடி அரசியல் Entry….!!!

….
….

….
முதல் விளைவு …!!!!!!!!!!!!!!!!!!!!!

….

( ரொம்ப அவசரம்…

பேட்டி முடிந்து அரை மணி நேரம் போனால், அர்ஜுன் மூர்த்தியே
ராஜினாமா செய்திருப்பார். இந்த ஃபார்மாலிடி கூட அவருக்கு
தெரியாதா என்ன… த-பாஜக தங்களை மிகுந்த சுயமரியாதை
உள்ளவர்களாக காட்டிக் கொள்ள முயன்று அவசரமாக அறிவிக்கிறது …

( த-பாஜக துவக்கத்திலிருந்தே வெறுப்பில் தான் இருக்கிறது;
அதிமுகவுடனான தங்கள் கூட்டணியை ரஜினியின் நுழைவு
பாழ்படுத்தி விடும் என்று அவர்களுக்கு கடுப்பு. சில விவாதங்களில்
அவை ஏற்கெனவே வெளிப்பட்டு விட்டன….)

………………

நேற்றிரவு சுகி சிவம் அவர்களின் மிக அண்மைய
தன்னம்பிக்கைச் செய்தி ஒன்றை யூ-ட்யூபில் பார்த்தேன்…

நடக்காது என்றிருந்த பல விஷயங்கள் நடந்திருக்கின்றன.
தன்னம்பிக்கையையும், மனோதிடத்தையும் எப்போதும்
கைவிடக்கூடாது என்பது அதன் முக்கிய அம்சம்.

அதை விமரிசனம் தளத்தில் வெளியிட வேண்டும் என்று
நினைத்து, நேற்றிரவே தளத்தில் ஏற்றி விட்டேன்.

“அதிசயங்கள் – அற்புதங்கள்
நிகழ்ந்திருக்கின்றன – சுகி சிவம்….!!!”

என்கிற தலைப்பில் இன்று காலையில்
upload செய்து விட்டேன்.

ரஜினி அவர்கள் இன்று தனது அரசியல் entry பற்றிய
முடிவை அறிவிப்பார் என்று அப்போது நான்
எதிர்பார்க்கவில்லை.

பதிவை வெளியிட்ட சில மணி நேரத்திற்குப்பிறகு
ரஜினியின் செய்தி வெளிவந்தது.
அந்த செய்தியில் என் தலைப்பில் குறிப்பிட்ட
அதே வார்த்தைகள் இடம் பெற்றிருந்தது எனக்கு மட்டற்ற
மகிழ்ச்சியை உண்டு பண்ணியது….

தமிழக அரசியலில் மட்டுமல்ல –
அகில இந்திய அளவிலேயே கூட ஒரு மாற்றம் அவசியம்
தேவைப்படுகிறது… ஆனால் அதற்கான வாய்ப்பெல்லாம்
இப்போது இல்லை என்பதால், குறைந்த பட்சம்
தமிழகத்திலேயாவது இது துவங்கட்டும் என்பது நமது ஆசை.

“வருக ரஜினி… உங்கள் வரவு தமிழகத்திற்கு
நல்வரவு ஆகுக…. ”

என்று கூறி இந்த தளத்தின் சார்பாக வரவேற்போம்.

——————————————————————————

ரஜினி அரசியல் entry குறித்த பிபிசி செய்தி கீழே –
https://www.bbc.com/tamil/india-55170983

தமிழ்நாட்டில் அரசியல் மாற்றம் நிச்சயம் வரும், தமிழக
மக்களுக்காக உயிரைக் கொடுக்கவும் தயார் என்று நடிகர்
ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

அரசியலுக்கு வரும் அறிவிப்பை தமது ட்விட்டர் பக்கத்தில்

வியாழக்கிழமை காலையில் நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டார்.
பிறகு தனது போயஸ் கார்ன் இல்லத்தில் அவர்
செய்தியாளர்களிடம் பேசினார்.

“சட்டமன்ற தேர்தல் வரும்போது, அதற்கு முன்னால்
234 தொகுதிகளிலும் நான் போட்டியிடும் முடிவை அறிவிப்பதாக
முன்பே கூறியிருந்தேன். அதன் பிறகு லீலா பேலஸ் ஹோட்டல்

கூட்டத்தில் மக்கள் மத்தியில் ஒரு எழுச்சி வரட்டும். அந்த
எழுச்சி உண்டாகட்டும். தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம்
செய்ய விரும்புகிறேன் என கூறினேன்.”

ரஜினி கட்சி ஜனவரியில் தொடக்கம்: டிசம்பர் 31ல் தேதி
அறிவிப்பு;

“ஆனால், கொரோனா வந்து விட்டதால் அப்படி செய்ய
முடியவில்லை. உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக
இருந்தால் அவர்களை கொரோனா எளிதாக தாக்கும்.
அதனால், மருத்துவர்கள் என்னிடம், நீங்கள் பொதுமக்கள்
மத்தியில் சென்று பிரசாரம் செய்ய உடல்நிலை
ஒத்துழைக்காது என்று அறிவுறுத்தினார்கள்.”

“அதன் பிறகு தமிழக மக்கள், ரசிகர்களின் பிரார்த்தனையால்
உடல்நிலை மீண்டு வந்திருக்கிறேன். தமிழக மக்களுக்காக
என் உயிரே போனாலும் பரவாயில்லை. அதில் எனக்கு
மகிழ்ச்சியே. கொடுத்த வாக்கை திரும்பப்பெறும் வழக்கம்
எனக்கு இல்லை.”

“தமிழ்நாட்டில் அரசியல் மாற்றம் தேவை என்பது காலத்தின்
கட்டாயம். அது வந்தே தீர வேண்டும். மாற்ற வேண்டும்,

எல்லாவற்றையும் மாற்ற வேண்டும்.
நான் என்பது நீங்கள்தான், மக்கள்தான் எல்லாம்.
நான் வந்த பிறகு வெற்றி அடைந்தாலும்
அது மக்களின் வெற்றி. தோல்வி அடைந்தாலும்
அது மக்களின் தோல்வி. எனவே, இந்த நாட்டு மக்கள்
எனக்கு துணையாக நிற்க வேண்டும்.”

“எனக்கு அண்ணாத்த பட ஷூட்டிங் இன்னும் 40 சதவீதம்
பாக்கி உள்ளது. அதை முடிக்க வேண்டியது எனது கடமை.
அதை முடித்துக் கொண்டு கட்சி வேலைகளில் கவனம்
செலுத்துவேன். ஏற்கெனவே கட்சி வேலைகளை
தொடங்கிவிட்டோம். எனது கட்சி பணிகளின்
மேற்பார்வையாராக தமிழருவி மணியனை
நியமித்திருக்கிறேன். என்னுடன் பணியாற்ற அவர் ஒப்புக்

கொண்டிருக்கிறார், தலைமை ஒருங்கிணைப்பாளராக
அர்ஜுனமூர்த்தியை நியமித்திருக்கிறேன்.”

“இந்த பாதையில் நான் வெற்றி அடைவேன். அதில்
வெற்றி அடைவேன் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.
தமிழ்நாட்டின் தலையெழுத்தை மாற்ற வேண்டிய நாள்
வந்து விட்டது. அரசியல் மாற்றம், ஆட்சி மாற்றம்
நிச்சயம் நடக்கும்,” என்று ரஜினிகாந்த் தெரிவித்தார்.

———————————————-
பின் சேர்க்கை –
rajini speech – full video … for record –

…..

…..

.
———————————————————————————————————————–

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

11 Responses to ரஜினியின் நேரடி அரசியல் Entry….!!!

 1. புதியவன் சொல்கிறார்:

  சுகி சிவம் அவர்களின் காணொளி கேட்டேன். அதற்கு, Easier Said Than Done என்று எழுதணும்னு நினைத்தேன். ஞானிகளுக்கே முடியாதது அஞ்ஞானிகளுக்கு சாத்தியமா? அவர் சொன்ன சமீபத்தைய உதாரணங்களைவிட நிறைய உதாரணங்கள் வரலாற்றில் இருக்கின்றன. ஆனால் இவை சாமானியர்களுக்குச் சுலபமல்ல.

  ரஜினி வருகையைப் பற்றி நான் எதுவும் புதிதாக எழுத ஒன்றும் இல்லை. நம்பிக்கையாளர்களின் நம்பிக்கையைக் கெடுப்பதும் பாவம் என்று எண்ணி அமைகிறேன்.

  இப்போது திமுக, காங்கிரஸ் கூட்டணிகள் புத்திசாலிகளாக இருந்தால், ரஜினியைப் பற்றி ஒன்றுமே சொல்லாமல் கடந்துவிடவேண்டும். அவர்கள், மற்ற கட்சியினர் ரஜினியைப் பற்றி அவதூறாக நிறையப் பேசினால், நிச்சயம் ரஜினிக்கு வாக்குகள் அதிகரிக்கும். ஒருவேளை ரஜினி கட்சி தேர்தலில் நின்றால், அது எத்தகைய விளைவை யாருக்கு உண்டாக்கும் என்று பார்க்கவேண்டும். May be, core AIADMKவினர் ரஜினிக்கு வாக்களிக்கலாம், தங்கள் வாக்கு பாஜகவுக்குச் சென்றுவிடக்கூடாது என்று எண்ணி.

 2. arul சொல்கிறார்:

  Rajini velvaar..

 3. R.Gopalakrishnan சொல்கிறார்:

  why Rajini & Amit shah prefer Leela palace hotel. Is there any specific reason Sir?

 4. Ezhil சொல்கிறார்:

  எல்லாம் திட்டமிட்டே நடத்தப்பட்டிருப்பதால் தான் த-பாஜக அவரை நீக்கியிருக்கிறது. அதனாலேயே தங்களுக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று காட்டிக்கொள்ளலாம்.

  கமல் கூட தன்னை சுற்றி இருந்த வெளி ஆட்களை நம்பி அவர்களுக்கு கட்சிப்பொறுப்பைக் கொடுத்தார். இதில் ரஜினி, தமிழருவி மணியனை நம்பியதைக்கூட ஏற்கலாம். ஆனால் பாஜகவின் அறிவுசார் பிரிவு தலைவராக இருந்தவரான அர்ஜுன்மூர்த்தியை கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக நியமனம் செய்யப்பட்டதை எப்படி பார்ப்பது என்றே எனக்கு தெரியவில்லை.

  எனக்குத்தோன்றியது – அர்ஜுன் மூர்த்தி அவர்களுக்கு பதவி உயர்வு கொடுக்கப்பட்டு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

  கூடுதல் தகவல் – இப்போதைக்கு ரஜினியின் ட்விட்டர் பக்கம் உட்பட அவரது அனைத்து தொழில்நுட்பப் பிரிவுகளையும் அர்ஜுன்மூர்த்தியின் குழுதான் கவனித்துவருகிறது. முன்னதாக இருந்த பாஜக தொடங்கிய வேல் யாத்திரையில் இவரது பங்கும் அளப்பரியது.

  • GOPI சொல்கிறார்:

   So What ?

  • Karthikeyan Palanisamy சொல்கிறார்:

   உங்களால எவ்வள முடியுமோ அவ்வளவு தூரம் அவர்மேல காவிசாயம் பூசிக்கோங்க

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   எழில்,

   ரஜினிக்கு நிச்சயமாக அவருடன் நீண்ட
   நாட்களாகப் பழக்கம் இருக்கும். நேற்று,
   முந்தாநாள் தெரிந்தவர்களையெல்லாம்
   தலைமை ஒருங்கிணைப்பாளராக
   நியமிக்க மாட்டார்.

   தனக்கு நம்பிக்கையானவரை,
   அவர் தனது லட்சியத்திற்கு பயன்படுவார்
   என்று நினைத்து தான் கூடச் சேர்த்துக்
   கொண்டிருக்கிறார். யோசிக்காமல்
   செயல்படக்கூடியவரா ரஜினி…?
   உங்களுக்கு தோன்றுவது அவருக்கு தோன்றாதா…?

   இதைக்குறித்து அநாவசியமாக
   நாம் கவலைப்பட வேண்டியதில்லை
   என்றே நினைக்கிறேன்.

   .
   -வாழ்த்துகளுடன்,
   காவிரிமைந்தன்

   • Ezhil சொல்கிறார்:

    இதைக்குறித்து நிச்சயமாக நாம் கவலைப்பட வேண்டியதில்லை சார். ஆனால் தன் மீது ஏற்கனவே காவிச்சாயம் பூசப்பட்டுக்கொண்டிருக்கும் இந்த வேளையில், அந்த கட்சியிலிருந்தே ஒருவரை (தன் கட்சியில்) இணைத்திருப்பது எந்த விதமான அவநம்பிக்கையை விதைக்கும் என்றும் தெரிந்திருப்பார் அல்லவா. ஆக தெரிந்தே இப்படி ஒருவரை முக்கிய பொறுப்பில் சேர்க்கிறாரென்றால், கண்டிப்பாக ஏதோ ஒரு அழுத்தம் இருந்திருக்கும் என்பது எனது எண்ணம்.

 5. Rajs சொல்கிறார்:

  Rajini is a comic relief in TN politics and social circle – taking seriously is injurious to your social life.

 6. tamilmani சொல்கிறார்:

  2016ல் விஜயகாந்தால் திமுகவுக்கு வடை போச்சு.
  2021ல் ரஜினிகாந்தால் அதே கதிதான். அதிமுக 10
  வருடம் ஆட்சி செய்து “திருப்தி” ஆக இருக்கிறார்கள்.
  There is nothing to lose for them . ஆனால் திமுக 10வருட “பசி ” யுடன்
  காத்திருக்கிறது. ஆட்சிக்கு வந்தால் காய்ந்த மாடு கம்பங்கொல்லையில்
  விழுந்த கதைதான். ரஜினியை பார்த்து எரிச்சல் அதிகம் அடைபவர்கள்
  அவர்களே. அரசியலுக்கு அவர் வர மாட்டார் என்றவர்கள் வந்தவுடன்
  அவரது பொறுப்பாளரை பற்றி, அவரது ரிஷிமூலத்தை பற்றி பேசுகிறார்கள்.
  என்னை போன்ற நடுநிலையாளர்கள் ஒரு 25 சதவீதம் வாக்களித்தால் போதும்
  ஒரு மாற்றம் நிச்சயம் வரும். வரவேண்டும்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.