மிஸ்டர் அன்புமணி – இது “அறவழி” யா இல்லை ரவுடித்தனமா….?

….
….

….

….


….

….


….

….

ஒரு காலத்தில் கண்ணியமான தோற்றத்தில் எல்லாருக்கும்
பொதுவான முதல்வர் வேட்பாளராக களம் இறங்கிய Gentleman
Mister அன்புமணி –

இனி வெறும் ஜாதித்தலைவராக மட்டுமே இருக்க முடியும்.
அவர் போட்ட பொதுமனிதர் வேடம் நேற்று மிக அசிங்கமாக
கலைந்தது…

நேற்று சென்னையை ஒட்டிய புறநகர் பகுதிகளில் பாமக-வினர்
நடத்திய போராட்டம் – அயோக்கியத்தனமானது…
வெறும் ரவுடித்தனம்…

இவர்கள் போராட்டம் நடத்தியது அரசுக்கு எதிராகவா அல்லது
பொது மக்களுக்கு எதிராகவா…?

அரசுக்கு எதிரானது என்றால், அதற்கேற்ற வழிமுறைகளை
தேர்ந்தெடுத்திருக்க வேண்டும்.

இவர்கள் போராட்டத்தால் பாதிக்கப்பட்டது
முழுக்க முழுக்க பொது மக்களே…

அதுவும் பயணத்தில் இருந்த அப்பாவிப் பொதுமக்களே…
கொரோனா காலத்தில் –
மணிக்கணக்காக நடுவழியில் நிறுத்தப்பட்டனர்….

————

இது பற்றி வெளியான வீடியோவிலிருந்து
கொஞ்சம் கீழே –

வன்னியர்களுக்கு 20 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கவேண்டும்
என்று முதல்வரை சந்தித்து பேசி, கோரிக்கை வைக்க பாமக
இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமை
செயலகம் வந்திருந்தார்.. பிறகு, இடஒதுக்கீடு வழங்குவது
தொடர்பாக முதல்வரிடம் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை
மனுவையும் அளித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி, “20 சதவீத
இடஒதுக்கீடு தொடர்பாக முதல்வரை சந்தித்து வலியுறுத்தி
யுள்ளோம்.. நல்ல முடிவு எடுப்பதாக முதல்வர்
தெரிவித்துள்ளார். பாமக தொண்டர்கள் அறவழியில் தான்
போராட்டம் நடத்தினர்” என்றார்.

அப்போது செய்தியாளர்கள், பாமகவினர் ரயிலில் கல்லெறிந்து
வன்முறையில் செய்துள்ளனரே, என்று அதை பற்றி கேட்டனர்..
அதற்கு அன்புமணி, “அது பாமகவினர் இல்லை.. வேறு யாரோ
செய்தனர்” செய்தனர் என்றார்..

உடனே செய்தியாளர்கள், காலையில் ரயில் மீது பாமகவினர்
கல்லெறிந்தது தொடர்பான போட்டோ, வீடியோக்களில்
பாமகவினரின் கொடி இருந்தது.. டி-சர்ட் அணிந்திருந்தனரே
என்று மறுபடியும் கேள்வி எழுப்பினர்.

——————-
சான்று –
….

….

ஆனால், இதற்கு அன்புமணி பதில் சொல்லாமல் கோபமாக
கிளம்பிவிட்டார்.. செய்தியாளர் சந்திப்பும் பாதியிலேயே
முடிவடைந்தது. பிறகு அன்புமணியுடன் வந்திருந்த ஒரு
தொண்டர், இனிமேல் இப்படியெல்லாம் கேள்வி கேட்காதீங்க
என்று செய்தியாளர்களை மிரட்டிகொண்டிருந்தார்..

————————–

கூட்டணிக்காக தங்கள் தயவை, நம்பியிருக்கும் அதிமுக அரசு
தங்கள் மீது நிச்சயமாக நடவடிக்கை எடுக்காது என்கிற
தைரியத்தில் பாமக-வினர்

– சாலைகளில் தடுப்புகளை போட்டதும்,

– ரெயில்வே தண்டவாளத்தில் கும்பலாக நின்றுகொண்டு
ஓடும் ரெயில் மீது கற்களை எறிந்ததும்

-போக்குவரத்தை தடைசெய்து பொதுமக்களுக்கு கடுமையான
இடைஞ்சல்களை ஏற்படுத்தியதும்-

– வடிகட்டிய அயோக்கியத்தனம்… ரவுடித்தனம்.

இவர்களின் வன்முறைகளுக்கு வீடியோ சான்றுகள் வெளியாகி
இருக்கின்றன. இவர்கள் மீது கடுமையான நடவடிக்கை
எடுக்கவில்லையென்றால் – அதற்கு காரணமானவர்களையும்

– மக்கள் நிச்சயம் மன்னிக்க மாட்டார்கள்…

– தேர்தல் நேரம் மிக அருகிலேயே இருப்பதால்,
மறக்கவும் மாட்டார்கள்.

————————————–

மிஸ்டர் அன்புமணி தங்களது
“அறவழி” போராட்டம், மற்றும் வளர்ச்சி -development issue -(???)
குறித்து விளக்கும் இந்த வீடியோ அவர் முதல்வரை சந்தித்துவிட்டு
வெளிவந்ததும் எடுக்கப்பட்டது –

….

….

.
———————————————————————————————————————-

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

9 Responses to மிஸ்டர் அன்புமணி – இது “அறவழி” யா இல்லை ரவுடித்தனமா….?

 1. GOPI சொல்கிறார்:

  மாற்றம், முன்னேற்றத்திற்கான தலைவர் –
  ரவுடிகளின் தலைவராக மாறி விட்டார்.

 2. புதியவன் சொல்கிறார்:

  சாலைகளில் மரங்களை வெட்டி போராட்டம் செய்து அதனால் புகழ்பெற்ற டாக்டர் இராமதாஸின் அடிப்பொடிகள் – அதன் பிறகு பாமக வன்னியர் சமூகத்தின் வாக்கு வங்கியாக மாறியது (பிறகு போற வர்ற கட்சிகளோடு பேரம் பேசி கூட்டு வச்சிக்கிட்டு, கல்லூரி கட்டி தன் சொத்துக்களை விரிவுபடுத்திக்கொண்டதால் நிறைய செல்வாக்கிழந்தார் அவர்).

  அந்தக் கட்சியின் தொண்டர்களில் ஒரு பகுதி இப்படித்தானே ரௌவுடித்தனம் செய்யும். இந்த மாதிரி ரவுடித்தனம்தானே தமிழகத்தில் ஒவ்வொரு போராட்டத்தின்போதும் நாம் பார்த்திருக்கிறோம்.

  தன் கட்சி ஆட்கள் மீதே எப்படி கட்சித்தலைவர் நடவடிக்கை எடுப்பார்? இருக்கும் வாக்குகளையும் குறைத்துக்கொள்ளவா? அதனால் மற்ற கட்சித் தலைவர்கள் இதற்கு முன் நடந்துகொண்டதைப்போலவே, எங்கள் கட்சியைச் சேராத, எங்கள் பெயரைக் கெடுக்க சிலர் இப்படி நடந்துகொண்டார்கள் என்று அரசியல் ஸ்டேட்மெண்ட் விட்டு இதனைக் கடந்துசென்றுவிடுவார்.

  இதை நான் செய்தால் முச்சந்தியில் என்னை அடியுங்கள், இவரோடு நான் கூட்டணி சேர்ந்தால் தாயை மணம் புரிந்துகொண்டதற்குச் சமானம், ‘என் பிணம் கூட காங்கிரஸோடு கூட்டுச் சேராது’ போன்ற பலப் பல ஸ்டேட்மெண்டுகளையும் நாம் கேட்டிருக்கிறோமே.

  இந்தப் போராட்டத்தால் ஒன்று மட்டும் தெளிவாகப் புரியவைத்துவிட்டார். அன்புமணி, பாமக என்ற கட்சியின் போர்வையில் வன்னியர் ஜாதி வாக்குகளைக் (மட்டும்) குறிவைக்கும் தலைவர்தான் என்று.

 3. Raghuraman சொல்கிறார்:

  Sir, my views.

  Some one in the party would have told him that he is not developing the party like his dad. So he checked old dairies and started the way it was done in 80’s.

 4. வண்ணக்கம் தமிழா சொல்கிறார்:

  வன்னியர் மக்கள் கீழ்த்தட்டு மக்களாக கடந்த ஐம்பத்தைந்து ஆண்டுகளாக ஆண்ட ஆளுகிற அரசால் திட்டமிட்டு பிரதிநித்துவம் மறுக்கப்பட்டது. அதன் விளைவு தான் நடப்பைவகள் எல்லாம். “தாலியை அடமானம் வைத்து சாராயக்கடை சகவாசம் , சினிமா கொட்டாயில் கட்டவுட்டுக்கு பாலாபிஷேகம், போஸ்டர் ஓட்ட அடிதடி” இப்படிப்பட்ட இனம் எப்படி ஒழுங்காக படித்து எப்படி முன்னேறும்?சாராயக்கடை, சினிமா அரசியல் மூலம் வறுமையில் வாழும் விவசாய வன்னிய மக்களிடம் இயற்கையாகவே கோபம் அதிகம் வரும் அதை தூண்டி(இரவு முழுவதும் பயணம் செய்து போராட்ட காலமான TNPSC நெருங்க விடாமல் பெருங்கலத்தோரிலேயே பல மணி நேரம் காக்க வைத்தும்) உணாச்சி வயப்படுத்தி வன்முறையாளர் களாக சித்தரிப்பது எல்லாம் ஆட்சியாளர்களின் மற்றும் ஊடகவிளர்களின் (வன்னியா போபியா ) வன்னிய எதிர்ப்பு ஒட்டு அரசியல் என்பது வன்னிய மக்கள் நன்கு அறிவர். அவர்களை முன்னாற்றாமல் தமிழ் நாடு முன்னேறாது அவர்கள் ஓட்டு இல்லாமல் ஆட்சியும் இல்லை. இப்போ சொல்லுங்கள் ஜாதி வெறி இல்லாமல், அவர்களுக்கு கல்வியில் வேலைவாய்ப்பில் அவர்கள் போராடி/உயிர் நீத்து வாங்கிய 20% இடஒதுக்கீடை அவர்களுக்கான தனி இடஒதுக்கீடு செய்வதில் என்ன தவறு? அப்படி செய்தால் அவன் அரசாங்க, தனியார் வேலையை விட்டுவிட்டு இதுபோல போராட்டம் செய்வார்களா?.
  என்ன கத்தி படத்துல தண்ணீர் குழாயை அடைச்சு போரட்டம் பண்ணா ஆஹா ஓஹோ, சூரரைபோற்று படைத்துல சூர்யா ரயில்ல கல்ல எரிஞ்சி போராட்டம் பண்ணா பலே பலே? ஏன் என்றால் அரசு செவி சாய்க்கவில்லை , மடைமாற்றி அரசியல் செய்கிறது என்பதால் தானே?
  இதை போராட்டம் இல்லாமலும் அரசு அவர்களுக்கு உண்டான உள் ஒதுக்கீடு செய்யலாமே. அருந்தியர் உள் ஒதுக்கீடு, சிறுபான்மையினருக்கான இட ஒதுக்கீடு, EWS 10% ஒதுக்கீடு இதுவெல்லாம் எந்த அடிப்படையில் நடைபெற்றது?
  ஒன்றும் வேண்டாம் TNPSC மூலம் வன்னியர்கள் இதுவரை அவர்களுக்கான(20%) வேலை வாய்ப்பில் எவ்வளவு பேர் பயனாளிகள் என்பதற்கான அரசு வெள்ளை அறிக்கை வெளியிடலாமே? அதன் மூலம் சமூக நீதி கிடைத்ததா இல்லையா என்பதை அனைவரும் தெரிந்து கொள்ளலாமே? அரசு செய்யுமா?
  காவிரி மேலாண்மை, ஆறுமுகசாமி கமிஷன், தேய்வந்திர மக்களின் பட்டியல் வெளியேற்ற கமிசன், ஜாதிவாரி கணக்கீடு (கடந்த 45 ஆண்டு முதல்). கமிசன் போல போட்டு காலதாமதம் ஏன்?.
  போராடாத மானும் போராடாத சமூகமும் வாழ்ந்ததாக வரலாறு இல்லை. அன்று பெரியாரின் சமூக நீதி, ஹிந்தி திணிப்பு…. இன்றும் தொடர்கிறது….

 5. GOPI சொல்கிறார்:

  ஸூப்பர் வண்ண்ண்ண்ண்ணக்கம் தமிழா.
  இன்னும் 100 மரங்களையும் வெட்டிப் போட்டு விட்டு,
  தண்டவாளங்களையும் பெயர்த்து விட்டு,
  கல்லெறிந்து அத்தனை பஸ், லாரி, போக்குவரத்தையும்
  நிறுத்தி போராட்டம் நடத்தினால்
  இன்னும் ஸூப்பராக இருக்கும்.

  • வணக்கம் தமிழா சொல்கிறார்:

   “இன்னும் 100 மரங்களையும் வெட்டிப் போட்டு விட்டு,
   தண்டவாளங்களையும் பெயர்த்து விட்டு,
   கல்லெறிந்து அத்தனை பஸ், லாரி, போக்குவரத்தையும்
   நிறுத்தி போராட்டம் நடத்தினால்” அதாவது வன்னியர்கள் இதை செய்ய வேண்டும், அவர்கள் வழக்கு வாங்கி அலைய வேண்டும். ஆகா என்ன ஒரு ஆனந்தம். இது வெல்லாம் கூடாது என்பதே அறவழி போராட்டத்தின் நோக்கம்.

   எப்படி போராட்டம் செய்ய வேண்டும் தமிழ்நாட்டில், தங்களுக்கு தெரிந்த
   வெற்றி பெற்ற போராட்டங்கள் சொல்லுங்களேன்(இரண்டு மணி நேரம் உண்ணாவிரதம் போர் முடிந்தது எல்லாரும் சாப்பிடலாம், மண்டை ஓடு , எலிக்கறி….?). ஜல்லிக்கட்டு தவிர.

   பொது சொத்தின் மீது அவ்வளவு அக்கறை. நீங்கள் யோகா என்ற பயிரில் பல ஏக்கர் மரங்களை அழிப்பீர்கள், 8 வழி சாலை என்று மக்கள் வைத்த மரங்களை எடுப்பீர்கள், கோயில் நிலங்களை சத்தம் போடாமல் எடுப்பீர்கள், பொது சொத்தன ஏரியை அக்கராமப்பீர்கள், பொறம்போக்கு இடங்களில் கட்சி அலுவலகம் கட்டுவீர்கள், பல ஆயிரம் மக்கள் பணத்தை வாரா கடனாக மிகபெரிய பணக்கார்ரகளுக்கு அளிப்பீர்கள்….

   “ரயிலில் கல்லரிந்த சம்பவம் தவறானது, நியா யப்படுத்த முடியாது. அறவழி போராட்டத்தை காக்க வைத்து(அனுமதி பெற்று வாங்கியதை) அடக்குமுறை செய்வதும் திசை திரும்புவதும் ஜனநாயக உரிமை அல்ல.” “வன்முறையும் தீர்வல்ல, அடக்குமுறையும் தீர்வல்ல”

   அவர்களை விட்டால் கொஞ்சம் நேரம் ஆர்ப்பாட்டம் செய்து விட்டு கலைந்து சென்று விடுவார்கள். வீண்விளம்பரம்மாக்கி விட்டது.

 6. மெய்ப்பொருள் சொல்கிறார்:

  தமிழகத்தில் BC /OBC /MBC என இட ஒதுக்கீடு உண்டு .
  மற்ற மாநிலங்களில் கிடையாது . மண்டல்
  கமிஷன் இதைப்பற்றி பேசிய பிறகு மத்தியஅரசு
  வேலைகளில் ஒதுக்கீடு உருவானது .

  தமிழகத்தில் இதன் காரணமாக சிலர் படிப்பு ,
  வேலை , வசதி என்று முன்னேறியுள்ளனர் .
  இவர்கள் முதல் தலைமுறையாக படித்தவர்கள் .
  ஆனால் இன்னும் நிறைய பேர் முன்னுக்கு வரவில்லை .

  வசதி இல்லாதவர் குலப்பெருமை பேசுவதை கேட்கலாம் .
  கிராமங்களில் நிலம் இல்லாதவர் பாடு திண்டாட்டம் .
  மற்றவர்கள் ஓரளவு வசதியாக இருப்பது பொருக்காது .
  ஆண்ட பரம்பரை என்று பேசி விட்டு மேய்ப்பது எருமை !

  ஒரு காலத்தில் இவர்கள் படிப்பு அதிகம் இல்லை
  வசதி இல்லை , ஏழை என ஒடுக்கப்பட்டவர்கள் .

  சமூக நீதி என்று இட ஒதுக்கீடு மூலமாக
  அரசு வேலையில் இருப்பவர்களும் தாங்கள்
  ஒரு காலத்தில் கஷ்டப்பட்டோம் என்பதை
  சுத்தமாக மறந்து விடுகிறார்கள் .

  அதே போல் மற்ற சாதிகளை மட்டம் தட்டி , ஆதிக்க சாதி
  என்று சொல்லி கலவரம் செய்வது பழக்கம் ஆகிவிட்டது .

 7. selvam சொல்கிறார்:

  “ஆண்ட பரம்பரை என்று பேசி விட்டு மேய்ப்பது எருமை”

  Super sir

 8. வண்ணக்கம் தமிழா சொல்கிறார்:

  “தமிழகத்தில் BC /OBC /MBC என இட ஒதுக்கீடு உண்டு .
  மற்ற மாநிலங்களில் கிடையாது ” ஆமாம் உண்மை தான் “மெய்ப்பொருள்” .
  ஆனால் அந்த 69% இட ஒதுக்கீடு என்பது முறையாக செயல் வடிவம் பெற்றதா?
  தென்னிந்திய மாநிலங்களில் கேரளா, கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திராவில் தொகுப்பு முறையில் 5 – 8 வகையாக இடஒதுக்கீடு முறை பின்பற்றுகிறார்கள். அங்கே அது பிரச்னை இல்லை.
  சட்டநாதன் கமிஷன், அம்பாசங்கர் கமிசன் ஆகியவற்றை முறையாக செயல் படுத்தினாலேயே அனைவரும் பயன் பெறலாம். ஆனால் நடந்தது வேறு.
  “ஆண்ட பரம்பரை என்று பேசி விட்டு மேய்ப்பது எருமை” இது அவர்களின் அறியாமை தவிர வேறொன்றும் இல்லை. அதற்காக சமூக நீதியை வழங்காமல் ஏளனம் செய்வது எந்தவகையில் நியாயம்? பெரியார் பெற்று கொடுத்தது 50% இடஒதுக்கீடு பிறப்படுத்த பட்ட மக்களுக்காக. ஆனால் அவர் கடைசி வரை போராடிய வகுப்புவாரி பிரதிநித்துவம் அனைத்து சாதியினருக்கும் கிடைத்ததா?
  வன்னியர்கள் போராடி உயிர் தியாகம் செய்து பல ஆயிரம் பேர் வழக்கு வாங்கி பெற்ற இடஒதுக்கீடை 108 சாதியினருக்கு 50% இருந்து பிரித்து 20% ஆக வழங்கினார் கலைஞர்(தான் சாதியைம் சேர்த்து, அதாவது மிகப்பெரிய பணக்காரர்கள் மாறன் குடும்பமும் அடங்கும்). ஆனால் போராட்டத்தால் பாதிக்கப்பட்ட வன்னியர் மக்களுக்கு பட்டை நாமமும் மரம் வெட்டி,கேட்டது ஒன்று கிடைத்தது ஒன்று.
  அதன் பிறகு வன்னியர் உள் ஒதுக்கீடு நீதி மன்றம் மூலம் ஆணை பெற்று இன்னமும் நிலுவை உள்ளதற்கு என்ன காரணம்?அரசியல் தானே? அதனால் தான் இந்த அறவழி போராட்டம். உணர்ச்சி வயப்படும் ஒரு சில வன்னிய மக்களால் போராட்டத்தை கொச்சை படுத்த வேண்டாம்.இது நடந்தால் அதை பின் பற்றி இன்னும் பல கல்வியில்/அரசு பணிகளே பார்க்காத எண்ணற்ற சாதிகள் பயன் பெரும். உதாரண மாக முத்தரையர், வேட்டுவகவுண்டர், பிறமலை கள்ளர்கள்,…இன்னும் பல பிறப்படுத்தப்பட்ட மக்கள் தங்களுக்கு போதுமான பிரதிநித்துவம் இல்லாமல் தான் இருக்கிறார்கள்(“நல்லவாயன் சம்பாதிக்க நாரவாயன் திங்கற கதை”).

  “மேலும் தமிழநாட்டில் அணைத்து சாதியினருக்கும் இடஒதுக்கீட்டில் அடங்குபவர்கள் தான். அதனால் யாரையும் அடக்கவும் முடியாது சாதி ஆதிக்கம் செய்யவும் முடியாது. சட்டம் அப்படி.”

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.